Joseph (மலையாளம் 2018) | விபத்தா கொலையா?!

3
Joseph Movie

ய்வு பெற்ற அதிகாரியான Joseph (Joju George) தன் குடும்பத்தில் விபத்தால் ஏற்படும் இழப்புகளுக்குக் காரணம் இருப்பதாகக் கருதி தன் நண்பர்களுடனும், இன்னும் காவல்துறையில் தனக்கு இருக்கிற மதிப்பின் மூலமும் விசாரிக்கிறார்.

இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை. Image Credit

Joseph

ஜார்ஜ் தான் படத்தின் மையம், அவரைச் சுற்றித்தான் படமும் நகர்கிறது.

நடந்த கொலையை விசாரிக்க ஓய்வு பெற்ற ஜார்ஜை காவல்துறை அழைக்க, ஜார்ஜ் மேற்கொள்ளும் இயல்பான ஆனால், புத்திசாலித்தனமான விசாரணைகள், லாஜிக்கல் யோசனைகள் இவர் எப்படிப்பட்டவர் என்பதை நமக்கு உணர்த்தி விடுகிறது.

மனைவியுடன் விவாகரத்து ஆனதால், இவருக்கு எல்லாமே நண்பர்கள் தான். நண்பர்களும் இவரின் உணர்வுகளைப் புரிந்து ஜார்ஜுக்கு ஆதரவாகவும், அவருக்கு எல்லாமுமாகவும் இருக்கிறார்கள்.

ஜார்ஜ் தான் அன்பாக நேசித்த மனைவியைப் பிரிய காரணமாக நினைப்பது ஏற்றுகொள்ளுபடியில்லை.

ஏனென்றால், இதுவரை அன்பாக இருந்தவர் ஒரு முடிந்து போன காரணத்தால் பிரிய முடிவெடுக்கிறார்.

குடும்பத்தில் ஏற்பட்ட விபத்துகளுக்குக் காரணங்களைத் தேடிப்போகும் ஜார்ஜுக்கு கிடைக்கும் அதிர்ச்சியான விவரங்களை நிரூபிக்க ஜார்ஜ் அதிரடி முடிவு எடுக்கிறார்.

ஒளிப்பதிவு அட்டகாசமாக உள்ளது, அமைதியான காட்சியிலேயே எதிர்பார்ப்பைக் கொடுத்துள்ளார்கள்.

ஜார்ஜு ஓய்வு பெற்ற அதிகாரி என்பதை நம்பச் சிரமமாக உள்ளது.

மெதுவான நடை, பார்வை, நடவடிக்கைகள் மூலம் தன்னை வயதானவராகக் காட்ட முயற்சித்து இருந்தாலும், அதையும் மீறி அவர் வயது குறைந்தவர் என்பது தெரிகிறது.

Joseph த்ரில்லர் படமாக இருந்தாலும், மெதுவாகச் செல்லும் ஆனால், அடுத்தது என்ன நடக்கும்? என்ற ஆவலை, பயத்தை இறுதிவரை கொண்டு செல்கிறது.

படத்தொகுப்பு

படத்தின் பெரிய குறையாகத் தோன்றுவது படத்தொகுப்பு. காட்சிகள் மாறி மாறி வந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதைச் சரியாக அமைத்து இருக்கலாம்.

மலையாள படங்கள் வேறு லெவெலில் போய்க்கொண்டுள்ளது அதில் ஜோசப் படமும் ஒன்று.

எவ்வளவு வித்யாசமான படங்கள் எடுக்கிறார்கள்! தமிழில் நாம் மிகவும் பின் தங்கியுள்ளோம் என்பது திரை ரசிகனாக வருத்தமளிக்கிறது.

படத்தை ஜார்ஜ் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிப்படமான இதைத் தமிழில் இயக்கப்போவதாகக் கூறியுள்ளார்கள்.

Joseph படத்தை அனைவரும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். Amazon Prime ல் உள்ளது.

பரிந்துரைத்தது நண்பர் விஜய் கிருஷ்ணசாமி

Directed by M. Padmakumar
Produced by Joju George
Written by Shahi Kabir
Starring Joju George, Dileesh Pothan, Athmiya Rajan, Malavika Menon, Madhuri Braganza
Music by Ranjin Raj
Cinematography Manesh Madhavan
Edited by Kiran Das
Release date 16 November 2018
Running time 138 minutes
Country India
Language Malayalam

Read : Evaru (2019 – தெலுங்கு) கொலை நடந்தது எப்படி?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. கிரி, கொஞ்ச நாட்களுக்கு முன்பு இந்த படத்தை பார்த்தேன் .. படம் நீங்க சொல்வது போல சின்ன , சின்ன குறைகள் இருந்தாலும் படம் எனக்கு பிடித்து இருந்தது .. ஜோசப் பாத்திரம், அவரது உடல் மொழி ,அசைவுகள் நன்றாக இருந்தது ..

    எல்லா நேரங்களிலும் நண்பர்களுடன் சரக்கு அடிப்பது கொஞ்சம் உறுத்தலாக இருந்தது .. இந்த கதை தற்போது காலகட்டத்தில் நடைபெற்று கொண்டு இருக்குகின்ற ஒரு நிகழ்வாகவும் .. படத்தில் பாடல்கள் வேறு ரகம் .. செம்ம பாட்டு .. ரொம்ப பிடித்து இருந்தது .. குறிப்பாக காதலில் இருவரும் விழுந்த பாடல் … பகிர்வுக்கு நன்றி கிரி ..

  2. கேர்ளாவில் சரக்கு அடிப்பது வழக்கமானது. அதை அப்படியே எடுத்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

    பாடல்கள் நான் திரும்பக் கேட்கவில்லை.. அதனால், அது பற்றிக் கூற முடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!