Bala (2019 இந்தி) வழுக்கைத் தலை பிரச்சனையா?

2
Bala moviw

ள்ளியில் தனது அழகான முடியைப் பெருமையாகக் காட்டிக்கொள்ளும் Bala, இளம் வயதில் (20+) முடி கொட்ட ஆரம்பித்துக் கிட்டத்தட்ட முழு வழுக்கையாகி பல அவமானங்களைச் சந்தித்து இறுதியில் என்ன முடிவெடுக்கிறான் என்பதே கதை.

பாலாவாக Ayushmann Khurrana. இவரின் சமீப அனைத்துப் படங்களும் வெற்றிப்படங்களே! ஒவ்வொரு படமும் வித்யாசமான கதையமைப்பில் வெளிவந்துள்ளது. Image Credit

Bala

சொட்டையாவது பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் பிரச்சனை. பெரும்பாலும் 35 – 40 வயதிலும், சிலருக்கு 20+ பின்னரே முடி உதிர்வது துவங்கி விடுவதும் இயல்பு.

அழகு சாதனங்களை விற்பனை செய்யும் மார்க்கெட்டிங் நபராகப் பாலா வருகிறார் ஆனால், சொட்டையை மறைக்கத் தொப்பி அணிந்து. ஒரு சராசரி நபருக்குள்ள கூச்சம், சங்கடத்தை மிக இயல்பாகப் பிரதிபலித்துள்ளார்.

சொட்டையாக உள்ளவர்கள் என்னென்னவெல்லாம் முயற்சிப்பார்களோ அவை எல்லாவற்றையும் முயற்சிக்கிறார்.

அதிலும் செயற்கை முடி வைக்க முயலும் போது அங்குள்ளவர் கூறும் ‘A’ ரக வழியைக் கேட்டு அதிர்வது குபீர் சிரிப்பு 🙂 .

பாலா தந்தை பரிசாக Wig கொடுக்க, அது பாலாவுக்கு அற்புதமாகப் பொருந்தி அவருடைய தன்னம்பிக்கையைக் கூட்டி உற்சாகமான பாலாவாக மாற்றுகிறது.

இந்நிலையில் தன்னுடைய விருப்ப TikTok பிரபலமான பாரியை சந்திக்கும் வாய்ப்புத் தொழில்ரீதியாகக் கிடைக்கிறது.

பாலாவின் நகைச்சுவை உணர்வு மற்றும் மற்ற விஷயங்களால் ஈர்க்கப்படும் பாரி பாலாவை காதலிக்கிறார்.

திருமணம் வரை செல்லும் நிலையில், தன் உண்மை நிலையைப் பாரியிடம் தெரிவிக்கப் பாலா முயற்சிக்க, இறுதியில் என்ன ஆகிறது என்பதைப் பரபரப்பாகப் பதட்டமாகக் கூறியுள்ளார்கள்.

முடிவு இது தான் இருக்கும் என்பதைப் படம் பார்க்கும் முன்பே எவரும் ஊகிக்க முடியும் ஆனால், பாரி விஷயத்தில் நடப்பதை ஊகிப்பது கடினம்.

பாலாவால் கிண்டலடிக்கப்படும் கறுப்பு நிறமுடைய பள்ளி கால நண்பியான லத்திகா கதாப்பாத்திரமும் படம் முழுக்க முக்கியமானதொன்றாக உள்ளது.

மிகப்பெரிய வியாபாரம்

முடி பிரச்சனையை வைத்துப் பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன. இந்தியா என்றில்லை அனைத்து நாடுகளிலும் குறிப்பா ஆசிய நாடுகளில் இத்தொழில் பிரபலம்.

சிங்கப்பூரில் (ஆண்கள், பெண்கள்) முடியை வைத்து மிகப்பெரிய அளவில் வியாபாரம் நடைபெறுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் மொட்டை அடித்து அதைக் கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறார்கள்.

முடி வயதை குறைத்துக் காட்டும். எனவே, அதிக முடி என்பது இயல்பாகவே அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆனால், அதற்காக அதையே நினைத்துத் தாழ்வுமனப்பான்மையில் இருப்பது தவறு.

ஆமாம்.. அப்படித்தான்… என்ன இப்போ?‘ என்ற கேள்விகளில் அனைத்தும் அடித்துச் சென்று விடும்.

எனவே, சொட்டையாவதை பெரும் பிரச்சனையாகக் கருதி தாழ்வுமனப்பான்மையுடன் இருக்க வேண்டாம் என்பதை இப்படம் வலியுறுத்துகிறது.

பிரச்சனை இல்லாத நபர் என்று உலகில் எவருமில்லை. பலரின் நிலை வெளியே தெரிவதில்லை ஆனால், இது முடி என்பதால் வெளியே தெரிகிறது, அவ்வளவே!

எனவே, இதை நினைத்து வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை.

அனைவரையும் Bala பார்க்கப் பரிந்துரைக்கிறேன் குறிப்பாகச் சொட்டையாக உள்ளவர்கள். HotStar ல் உள்ளது.

Directed by Amar Kaushik
Produced by Dinesh Vijan
Written by Niren Bhatt (dialogue)
Screenplay by Niren Bhatt, Ravi Muppa
Story by Niren Bhatt, Pavel Bhattacharjee
Starring Ayushmann Khurrana, Bhumi Pednekar, Yami Gautam
Narrated by Vijay Raaz
Music by Sachin-Jigar Jaani B Praak
Cinematography Anuj Rakesh Dhawan
Edited by Hemanti Sarkar
Release date 8 November 2019
Running time 133 minutes
Country India
Language Hindi

தொடர்புடைய கட்டுரைகள்

Article 15 (இந்தி 2019)

Badhaai Ho (2018 இந்தி) ஆமா.. இப்ப என்னங்குற?

Andhadhun [இந்தி – 2018] ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, இந்த படத்திற்கும் எனக்கும் நிறைய பொருத்தம் இருக்கிறது .. கல்லூரி பருவத்தில் என்னுடைய பிளஸ் ஆக நான் கருதுவது முடியும் , கொஞ்சம் நக்கல் நய்யாண்டி கொண்ட பேச்சும் தான் .. நான் இருக்குற இடம் கலகலன்னு இருக்கும் என்று என்னை சுற்றி நண்பர்கள் கூட்டம் எப்போதும் இருக்கும் ..

    12 படிக்கும் போது செம்மறி ஆட்டு தலைப்போல இருக்கும் , கல்லூரி இரண்டாம் ஆண்டின் போது மிக அழகாக மாறி போனது (மாற்றத்திற்கு காரணம் ஆனந்து அண்ணன் – சிகை அலங்காரம் செய்பவர்). முடியை அவ்வளவு பராமரிப்பு செய்வேன் .. அப்போதெல்லாம் ரெண்டு சீப்பு வைத்திருப்பேன் . ஒன்று நான் சொந்தமாக பயன்படுத்த , மற்றொன்று நண்பர்கள் கேட்டால் கொடுக்க ..

    வேலைக்கு செல்லும் வரை முடியை பற்றி பிரச்சனையில்லை .. 2006 க்கு பின் ஒன்று ரெண்டாக கொட்ட ஆரம்பித்தது தற்போது வரை தொடர்கிறது .. இருப்பினும் மற்ற நண்பர்களை கம்பர் பண்ணும் போது இன்று வரை மகிழ்ச்சியே!!! ஒரு ஐம்பது வயது வரையாவது முடி இருந்தால் மகிழ்ச்சியே!!! படத்தை கண்டிப்பாக பார்க்க முயற்சி செய்கிறேன் .. பகிர்வுக்கு நன்றி கிரி ..

  2. யாசின் உங்க முடிக்கு என்ன? 🙂 அப்படியே தான் இருக்கிறீர்கள்… சின்னப் பையன் மாதிரி.

    எனக்கு நரைத்து விட்டது.. முடி பெரியளவில் போகவில்லை என்பது ஆறுதல் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here