ஜிமெயில் ஹேக் செய்யப்பட்டால் 100% திரும்பப் பெற முடியும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை, ஆனால் முயற்சி செய்யலாம் என்று தான் கூகிள் கூறுகிறது.
பிரச்சனை வராமல் உஷாராக இருப்பது ஒரு வகை, அப்படி வந்து விட்டால் என்ன செய்வது அதற்குச் சில முன்னேற்பாடுகளைச் செய்து விடுதல் இன்னும் நலம்.
அதைப் பற்றித் தான் இங்குப் பார்க்கப் போகிறோம்.
கடவுச்சொல் (Password) மறந்து விட்டால் என்ன செய்வது?
உங்களுடைய கூகிள் கணக்கில் My Account or Google mail –> settings –> Accounts and Import –> Google Account Settings உள்ளே சென்று படத்தில் உள்ள Change password recovery options ஐ சொடுக்குங்கள்,
உடன் உங்களை திரும்ப ஒரு முறை உங்கள் கடவுச்சொல்லை பதிய கூறும், உங்கள் கடவுச்சொல்லை பதிந்த பிறகு கீழே உள்ள படத்தில் உள்ள பக்கம் திறக்கும்
Email பகுதியில் நீங்க secondary mail இடத்தில் உங்களின் மற்ற ஒரு முகவரியைக் கொடுங்கள் (முக்கியமாக இரண்டு முகவரிக்கும் ஒரே கடவுச்சொல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்).
SMS பகுதியில் உங்க கைத்தொலைபேசி எண்ணைக் கொடுக்கவும்
இனி உங்கள் கடவுச்சொல் தொலைந்து (மறந்து) விட்டால் மேற்கண்ட முறைப்படி உங்கள் ஜிமெயில் கணக்கை மீண்டும் பெற முடியும்.
உங்கள் கடவுச்சொல் மறந்து விட்டு இதைப் பயன்படுத்தினால் உங்கள் secondary மின்னஞ்சலுக்கு உங்கள் கடவுச்சொல் அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் வரும், எனவே பதட்டத்தில் பலமுறை முயற்சி செய்ய வேண்டாம்.
உங்கள் கடவுச்சொல் மறந்து விட்டால் எப்படி பெறுவது என்பதற்கான வழிமுறைகள் கண்டீர்கள், கடவுச்சொல் ஹேக்கிங் செய்யப்பட்டால்… இது தான் பிரச்சனையானது.
ஜிமெயில் ஹேக் செய்பவர் முதலில் செய்வது உங்கள் பாதுகாப்பு தகவல்களை அழிப்பது தான், அதாவது உங்கள் secondary mail, SMS.
கடைசி வாய்ப்பு
கூகிள் உங்களுக்குக் கொடுக்கும் கடைசி வாய்ப்பு தான் இந்த லிங்க். இங்கே சென்று அவர்கள் கேட்கும் தகவல்களைக் கொடுங்கள்.
தினமும் பயன்படுத்தும் கணிப்பொறி இடத்தில் இருந்தே கொடுங்கள்.
ஏன் என்றால் நீங்கள் submit செய்யும் போது உங்கள் IP கூகிள் நிறுவனத்தாரால் ட்ராக் செய்யப்படும், எனவே, ஒரே IP யாக இருப்பது உங்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும்.
கூகிள் கணக்கு துவங்கியபோது உங்களுக்கு ஒரு Welcome மின்னஞ்சல் வந்து இருக்கும் அதையும், கூகிள் என்னென்ன தகவல்கள் கேட்கிறது என்பதையும் அறிந்து அதைத் தொகுத்து பாதுகாப்பான இடத்துல சேமித்து வைத்துக்குங்க.
எப்படியும் இரண்டு மின்னஞ்சல்கள் வைத்து இருப்பீர்கள், கண்டிப்பா இரண்டுக்கும் ஒரே கடவுச்சொல்லை வைக்க வேண்டாம்.
ஒரு மின்னஞ்சல் கடவுச்சொல் ஹேக் செய்யப்பட்டால் பிறகு அதில் உள்ள secondary மின்னஞ்சலும் ஹேக் செய்ய வசதியாகப் போய் விடும் (ஒரே கடவுச்சொல்லாக இருந்தால்).
உங்கள் மின்னஞ்சலை யாராவது பயன்படுத்துகிறார்களா! என்று உங்களுக்குச் சந்தேகம் வந்தால் உங்கள் கூகிள் மின்னஞ்சல் கீழ் பகுதியில் Last account activity: * hours ago on this computer. Details என்ற ஒரு வரி இருக்கும்.
இதில் நீங்கள் Details தொடுப்பைச் சொடுக்கினால் அதில் நீங்கள் தினமும் பயன்படுத்தும் IP இருக்கும், மாறி இருந்து சந்தேகம் வந்தால், உங்கள் கடவுச்சொல் சம்பந்தமாக உள்ள அனைத்து தகவல்களையும் மாற்றி விடுங்கள்.
அனைத்தையும் செய்து சரிவரவில்லை என்றால், புதிய கணக்கு தான் துவங்க வேண்டும்.
தொடர்புடைய கட்டுரை
ஹேக்கிங் (Hack) பாதுகாப்பு வழிகள் என்ன?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நன்றி கிரி.
மிகவும் அவசியமான தகவல்கள், விரிவான விளக்கங்களுடன். நன்றி கிரி.
தமிழ் மணத்தில் இணைக்க முயன்றேன். புது இடுகைகள் ஏதும் காணப்படவில்லை என அறிவிக்கிறது:(!
சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யுங்கள். வாக்களிக்க பிறகு வருகிறேன், இந்த நல்ல பதிவுக்கு:)!
பாலா சார் வருகைக்கு நன்றி
===================================================================
//தமிழ் மணத்தில் இணைக்க முயன்றேன். புது இடுகைகள் ஏதும் காணப்படவில்லை என அறிவிக்கிறது:(!//
அது feedburner பிரச்சனை! நான் சரி செய்து விட்டேன் ஆனாலும் தமிழ்மணத்தில் இணைய மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது 🙂
//சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யுங்கள். வாக்களிக்க பிறகு வருகிறேன், இந்த நல்ல பதிவுக்கு:)!//
ஹி ஹி ஹி எனக்கு தமிழ்மணத்துல ஓட்டு போடுற ஒரே ஆளு நீங்க மட்டும் தான் :-))) நன்றி
/சரக்கடிக்கிற ஆளா இருந்தா சரக்கு போட்டு மட்டை ஆகிடுங்க, சரக்கடிக்காத ஆளா இருந்தா ஜில்லுனு மோர் குடிச்சுட்டு தூங்கிடுங்க :-))//
ஹிஹி
பயனுள்ள தகவலுங்க கிரி.ஹேக் செய்யாதேன்னு தானே சொல்லனும்.ஆனா அமெரிக்காவுல வருசா வருசம் ஹேக் செய்யறதுக்குன்னே ஒரு போட்டி நடக்கும்(இப்ப நடக்குதான்னு தெரியல).
நம்ம கமல் மாதிரி ஆளுக எந்த மொட்டை மாடிலயிருந்து கம்யூனிகேட் பண்றாங்கன்னு கண்டுபிடிக்கற மாதிரி ஒரு போட்டி.ஜெயிச்சா Hacker of the year பரிசு.இந்த மாதிரி ஆளுகளுக்கு ஜிமெயில் எல்லாம் ஜுஜுபி.இணைய தளம் பொதுதளத்துக்கு வந்தபோது ஹேக்கர்களின் கோசம் என்னன்னா "The real war started now".வைரஸ்,ஹேக் எல்லாம் இன்னும் முறியடிக்காம இருக்கறதைப் பார்த்தால் யுத்தம் இன்னும் முடியவில்லை போல்தான் தெரிகிறது.
நல்ல தகவல் கிரி
பயனுள்ள பதிவு!!
பயனுள்ள தகவல், நன்றி..
தகவலுக்கு நன்றி தல!
இப்படிதான் கார்க்கி அவருடைய ஃப்ளாக்கை ஹேக் செஞ்சதுலயிருந்து மீட்டுயிருப்பாரோ?
என்னா வில்லத்தனம்? ம்….?
/உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது?
மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது./
ஓட்டு போடலாம்னு வந்தா இப்படி சொல்லுது….இதுக்கு ஒரு வழி சொல்லுங்க:)
அவ்வப்போது
உபயோகமான தகவல்களை
எளிமையாக
அள்ளித் தருவதில்
கிரி கில்லாடி..
நன்றி கிரி …
அப்புறம் –
காந்தியாரைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்
அவசியம் பாருங்கள்…
நன்றி தலைவரே..,
விளக்கங்கள் அருமை மேடி!
Shirdi saidasan, ராஜநடராஜன், ஞானசேகரன்,மேனகா, நிஜமா நல்லவன், தீப்பெட்டி, ஈரா அருண்,தேவா மற்றும் சுரேஷ் வருகைக்கு நன்றி.
@ராஜநடராஜன்
நீங்கள் சொல்வது சரி தான். ஒரு சிலர் இதையே வேலையாக வைத்து இருக்கிறார்கள். அதே போல ஹேக் செய்வதை என்றும் தடுக்க முடியாது.
@நிஜமா நல்லவன்
எனக்கு ஒட்டு விழுவதே அதிசயம்..அதுவும் இப்படி ஆகி விட்டதா! என்ன கொடுமை சார் இது.
@ஈரா
நீங்க இதை சொல்லவேண்டிய அவசியமே இல்லை, கண்டிப்பா வரேன்.
மிகவும் உபயோகமான தகவலுக்கு நன்றி
பயனுள்ள தகவலுங்க katthuiruken
மிகவும் அவசியமான தகவல்கள்