தோனி (2012) | கிரிக்கெட்டர் ஆகணும்

11
தோனி

ண்பன் படம் போல ஒரு கருத்தை வலியுறுத்தும் படமாக தோனி வந்துள்ளது.

நண்பன் படம் ரிச்சாக எடுக்கப்பட்டுள்ளது என்றால் தோனி நடுத்தர மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வந்துள்ளது. Image Credit

தோனி 

தோனி போல ஆக வேண்டும் என்று கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமாக இருக்கும் பிரகாஷ்ராஜ் பையன் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை.

இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை நம்ம பக்கத்து வீடுகளில் நடக்கும் கதை போலக் கூறி இருக்கிறார் இந்தப்படத்தின் நடிகரும் இயக்குனரும் ஆகிய பிரகாஷ்ராஜ்.

பிரகாஷ்ராஜ் க்கு இது முதல் இயக்கம் என்று நம்ப முடியவில்லை.

பிரகாஷ்ராஜ்

சமீபமாக வந்த படங்களில் ஒரு நடுத்தர வருமான குடும்பஸ்தனின் உணர்வுகளை இவ்வளவு எதார்த்தமாக ஏதாவது பிரதிபலித்து இருக்கிறதா என்று நினைவில்லை.

பிரகாஷ்ராஜ் போலத் தெருவுக்கு ஐந்து பேர் நிச்சயம் இருப்பார்கள். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களையே பார்ப்பது போல இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

மாத செலவைச் சமாளிக்க அவர் படும் சிரமங்களில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை என்றே கருதுகிறேன். சில நேரங்களில் இவருடைய மிகைப்பட்ட நடிப்பு (Over Acting) தவிர்த்து.

கதை இவருடைய பையனை வைத்து இருந்தாலும் படம் முழுவதும் கலக்கி இருப்பவர் பிரகாஷ்ராஜ் தான்.

இவருக்கு ஏதாவது பிரச்சனை வரும் போது நம்மை அறியாமல் இவர் செலவுக்கு என்ன செய்வார் என்றே மனது கணக்கு போடுகிறது.

நடுத்தரக் குடும்பம்

படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றால் நிச்சயம் இது பற்றிப் பிரகாஷ்ராஜ் என்ன நினைக்கிறார் என்று காட்டப்படுவதற்கு முன்பே நீங்கள் கணக்கு போட்டு விடுவீர்கள்.

இதுவே படத்தின் வெற்றி என்று நினைக்கிறேன். இவர் பெண் பூபெய்தியவுடன் எனக்கு வந்த முதல் எண்ணம் அடுத்த செலவா! என்று தான் 🙂

பையன் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்பதை அறிந்து பள்ளியில் முதல்வரிடமும் ஆசிரியர்களிடமும் “சார் சார் என் பையன் நல்ல பையன் சார் எப்படியாவது படிச்சுடுவான் சார்” என்று கெஞ்சுவது எத்தனை அப்பாக்கள் வாழ்க்கையில் தினமும் நடக்கும் ஒரு செயல்!

பிரகாஷ்ராஜ் பையன் படிப்பில் ஆர்வம் காட்டாமல் இருப்பதை பார்த்துக் கடுப்பாகி உனக்கு என்ன தாண்டா தெரியும்? என்று கேட்கும் போது..

“கிரிக்கெட்” என்று கூறி தொடர்ந்து நான் ரஞ்சி ல விளையாடப்போகிறேன் என்று கூறியதும் கோபத்தின் உச்சிக்கே சென்று “டேய் இங்க கஞ்சிக்கே வழியில்ல இதுல உனக்கு ரஞ்சி கேட்குதா” என்று கூறுவதும் கோபத்தில் கிரிக்கெட் மட்டையை அடித்து உடைப்பதும் என்று ஒரு சராசரி அப்பாவாக நடிப்பில் தூள் கிளப்புகிறார்.

சாத்தியமில்லாதது

முக்கால்வாசிப் படம் இயல்பாகவும் கடைசியில் சினிமாத்தனமாகவும் உள்ளது. விஜய் டிவி நீயா நானா வில் பேசுவதும் அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும் உண்மையில் சாத்தியமே!

ஆனால் அதன் பிறகு முதல்வர் மற்றும் க்ளைமாக்ஸ் எல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லாதது.

மகிழ்ச்சியான முடிவிற்காக இதை படம் பார்ப்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். பிரகாஷ்ராஜும் இதற்காக கொஞ்சம் சமரசம் செய்து கொண்டுள்ளார்.

கொள்ளை அடிக்கும் பள்ளிகளையும் 100 சதவீதம் தேர்வு பெற அவர்கள் செய்யும் வழி முறைகளையும் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

17 * 8 எவ்வளோ என்று கேட்டு அவர் பொங்குவது படம் முடிந்தும் நமக்கு கணக்கு போட்டுப் பார்க்கத் தோன்றுகிறது. நான் கணக்கில் ரொம்ப மோசம் 🙂 .

இந்த இம்சைக்காகவே +1 வரும் போது கணக்கு இல்லாத பிரிவாக எடுத்தேன்.

இசை இளையராஜா அவர்கள், குறை கூறும் படி எதுவுமில்லை.

தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் அவர் தயாரிக்கும் ஊறுகாய் பாட்டிலை கொடுப்பது ரசிக்கும் படி இருக்கும் 🙂

இதில் கொஞ்சம் விவகாரமான கதாப்பாத்திரத்தில் வந்து இவர்களில் கலந்து விடும் கதாப்பாத்திரமாக வரும் ராதிகா, கந்து வட்டி வாங்கும் நபர், பிரகாஷ் ராஜ் நண்பர்கள், அவரது பெண், அலுவலக நண்பர்கள் என்று பலரும் மனதில் நிற்கும் கதாப்பாத்திரங்கள்.

தோனி நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

கொசுறு

சிங்கப்பூர் முஸ்தபா சென்டர் ரொம்ப பிரபலமானது. தற்போது இங்குக் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் மேலே ஒரு உணவு விடுதி துவங்கி இருக்கிறார்கள்.

ஆனால் இது முஸ்தபா கடையோடது இல்லை என்று கூறினார்கள்.

நண்பர் நன்றாக உள்ளது மற்றும் விலையும் பரவாயில்லை ரகமாக உள்ளது என்று கூறியதால் சென்று இருந்தேன்.

உள்ளே போனதும் பெரும்பாலும் அங்கே இருந்தது வட இந்தியர்கள் தான் (சாப்பிட வந்தவர்களும் பணியில் இருந்தவர்களும்).

எனக்கு இவர்களைக் கண்டாலே பிடிக்காது.. இது பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன் ஆனால் அதற்கான நேரம் அமையவில்லை.

மெனுவை பார்த்தவுடனே கடுப்பாகி விட்டேன்.. காரணம் அதில் இருந்த “வடா தோசா” வைப் பார்த்துத் தான் 🙂

என்கிட்டே வந்து “சார் வடா தோசா” என்றால் செம காண்டாகி விடுவேன்.

நண்பன் ஒருவன் கொஞ்ச மாதம் சிங்கப்பூரில் இருந்தான் நானும் அவனும் சேர்ந்தால் இவர்களை செம ஓட்டு ஓட்டுவோம்.

குறிப்பாக இந்த வடா தோசா மற்றும் இவர்கள் பேசும் கேவலமான ஆங்கிலத்தையும்.

எடுத்துக்காட்டாக Food court என்பதை இவர்கள் fudu court என்று தான் கூறுவார்கள் 🙂 . இந்த லட்சணத்துல நம்மை நக்கலடிப்பாணுக…. இந்த பப்ஸ் மண்டையணுக.

மெனு கார்டில் இருந்த North Indian Thali, South Indian Thali பார்த்ததும் எனக்கு விவேக் காமெடி தான் நினைவுக்கு வந்தது.

“பஞ்சாபி தாளியா!! இங்க தமிழன் தாலியே அந்துடும் போல இருக்கே!!” என்று 😀 .

விலை ரொம்ப இல்லை பரவாயில்லை ரகம் தான் இருப்பினும் இதைப் பார்த்ததும் சிரிப்பாகி விட்டது.

கொண்டு வர பதினைந்து நிமிடம் மேல் ஆகியது அதில் இருந்தது அனைத்துமே ரெடிமேட் ஐட்டம் தான் அதுக்கு எதற்கு இவ்வளோ நேரம் எடுத்தார்கள் என்று தான் புரியவில்லை.

அப்புறம் பொறுமையாக சென்று ஒருநாள் “வடா தோசா” வை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் 🙂 .

இந்த “வடா” மாநில வெண்ணை வெட்டிகளை ஒருநாள் போட்டு நான் தாளிக்கிறேன் பாருங்க! 🙂

தேசிய ஒருமைப்பாடு எல்லாம் இவர்கள் விசயத்தில் என்கிட்டே இல்லவே இல்லை மன்னித்தருள்க. இவனுகளை எனக்கு பிடிக்கவே பிடிக்காது (வெகு சிலர் தவிர்த்து).

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

11 COMMENTS

  1. // அப்புறம் பொறுமையாக சென்று ஒருநாள் “வடா தோசா” வை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் இந்த “வடா” மாநில வெண்ணை வெட்டிகளை ஒருநாள் போட்டு நான் தாளிக்கிறேன் பாருங்க! தேசிய ஒருமைப்பாடு எல்லாம் இவர்கள் விசயத்தில் என்கிட்டே இல்லவே இல்லை மன்னித்தருள்க. இவனுகளை எனக்கு பிடிக்கவே பிடிக்காது (வெகு சிலர் தவிர்த்து). //

    நம்மள சாம்பார்னு சொல்லுற சப்பாத்தி பசங்க , சீக்கிரம் உங்க பதிவில் அவர்களை என்கௌண்டர் பண்ணுங்க

  2. இந்த “வடா” மாநில வெண்ணை வெட்டிகளை ஒருநாள் போட்டு நான் தாளிக்கிறேன் பாருங்க! தேசிய ஒருமைப்பாடு எல்லாம் இவர்கள் விசயத்தில் என்கிட்டே இல்லவே இல்லை மன்னித்தருள்க. இவனுகளை எனக்கு பிடிக்கவே பிடிக்காது (வெகு சிலர் தவிர்த்து).

    ————————————————————————————————
    please write about this. ரொம்ப நாள் என்னை உறுத்துகின்ற விஷயம். ஏன் நம்ம கிரிக்கு north indians கண்டா பிடிக்க மாட்டேங்குது. in three or four post, i noticed this. WHYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYY?

    rajesh.v

  3. தோனி பார்க்கவில்லை, காதலில் சொதப்புவது எப்படி பார்த்து விட்டேன்.
    அப்புறம் வடா மேட்டர் செம…

  4. வணக்கம் பாஸ்.நானும் சிங்கப்பூரில் தான் குப்பை கொட்டி கொண்டு இருக்கிறேன்.
    இந்த வட நாட்டு பசங்க உச்சரிப்ப பத்தி சொல்லியிருந்தீங்க.well said.
    நாம ஸ்டீல் என்போம்,இவனுங்க இஸ்டீல்னு சொல்வானுங்க.
    பல்ப் அப்படீன்னு சொல்ல சொல்லுங்க.”பலப்” இதுதான் அவனுங்க உச்சரிப்பு.
    இந்த லட்சணத்துல நம்மள கிண்டல் வேறயா?

  5. தேசிய ஒருமைப்பாடு முக்கியம் என்று கருதுகிறேன்…. பதிவு அருமை…. நண்பர் பசீர்….! வளவன் அண்ணனின் நண்பரா என்பதை சந்தேகத்துடன் கேட்கிறேன்….

  6. /இந்த “வடா” மாநில வெண்ணை வெட்டிகளை ஒருநாள் போட்டு நான் தாளிக்கிறேன் பாருங்க! / கிரி உங்கள் “வடா” பதிவை சீக்கிரம் எதிர்பார்கிறேன்

  7. முதல் முறை உங்கள் இணைய தளம் கண்டேன். மிக்க மகிழ்ச்சி.
    டோனி இல் இல்லயராஜா வின் இசை மிகவும் அருமை.

    குறை கூறும்படி ஒன்றுமில்லை என்று எழுதி இருக்கிறீர்.
    அவ்வளவு இசை ஞானம் உண்டா? தலைல ஒரு கொட்டு வைக்கணும்.

    மற்றபடி உங்களின் காமெடி கலந்த விமர்சனம் நன்று.
    இசை பற்றிய விமர்சனத்தையும் காமெடி என்றே எடுத்து கொள்கிறேன்,
    அந்த ராஜா பாடிய பாட்ட, இரவினில், மெல்லிய ஒளியில், குறைந்த சப்தத்தில் கேட்டு பாருங்க. அப்புறம் எழுதுங்க.

    அப்புறம் அந்த “வடா” இந்தியன் விஷயம்.
    ” இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நானா நன்னயம் செய்து விடல் ”
    இருந்தாலும் எவ்வளவு நாளைக்குதான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.(!!!!)
    உம்ம்ம் கலக்குங்க.
    நன்றி

  8. @கமலக்கண்ணன், ராஜேஷ், பாலா, பஷீர். அரசுசெல்வம், மணி, காயத்ரி நாகா, நல்ல சிவம் வருகைக்கு நன்றி

    பலர் பேர் என்னை மாதிரியே “வடா” மேல கோபமாக இருக்கீங்க போல 🙂 நான் கொஞ்ச நாள் கழித்து எழுதுகிறேன்.. காரணம் தற்போது எழுதினால் எல்லோரும் சமீபத்திய வட இந்தியர்கள் பிரச்னையை ஒட்டி எழுதியது என்று நினைத்துக்கொள்வார்கள். என்னுடைய கோபம் தற்போது வந்ததல்ல ரொம்ப நாளாக இருப்பது. “வடா” வை நசுக்கிடுவோம் ஹி ஹி 🙂

    @நல்ல சிவம் இளையராஜா பற்றி ஏதாவது கூறினால் கெட்ட சிவம் ஆகிடுவீங்க போல ஹா ஹா இதற்கு நான் விளக்கம் கொடுத்தாலும் உங்க கிட்ட வொர்க் அவுட் ஆகாதுன்னு நினைக்கிறேன் 🙂 .

    தீவிர ரசிகரா இருப்பீங்க போல… அப்புறம் நீங்க கூறிய பாடல் எனக்கும் ரொம்ப பிடித்தது. இளையராஜா பாடல்கள் முன்பு போல இல்லை என்பது என் கருத்து. இது பற்றி ஒரு பதிவு எழுத விருப்பம் உடன் தீவிர இளையராஜா ரசிகர்கள் பற்றியும் ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.

    நான் விரிவாக எழுதாமல் இருந்ததற்கு ஒரு காரணம் ஏற்கனவே பலர் எழுதி விட்டார்கள் அதோடு நான் இரு விமர்சனம் எழுதியதால் அனைத்தையும் விரிவாக கூறவில்லை மற்றும் இது தாமதமான விமர்சனம் கூட.

    எனக்கு இசைஞானம் இல்லை ஆனால் நல்ல இசை ரசிகன் அதனால கொட்டு வைத்துடாதீங்க 🙂

    உங்கள் பாராட்டிற்கு நன்றி 🙂

  9. கிரி இனிமேல் பாக்கணும். பாத்துட்டு சொல்றேன் ஆனா இந்த வடா தோசா கண்டிப்பா எழுதுங்க.. அவங்க சொல்ற உச்சரிப்பே கொடுமையா இருக்கும் இதுல நம்மள வேற கேவலமா பேசுறாங்க… நான் உங்க கட்சில சேர ரெடி 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here