எதுவுமே அளவுக்கு மீறினால், அதற்குண்டான மதிப்பு இருக்காது என்பதற்கு பெரியார் தொடர்பான புகழ்ச்சிகள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. Image Credit
பெரியார்
சாதியை ஒழிக்கப் பெரியார் போராடினார், சம உரிமை, சமூக நீதிக்காக, பெண்கள் உரிமைக்காகப் போராடினார்.
பெரியார் தனது வளர்ப்பு மகளையே திருமணம் செய்து கொண்டதால், கடுப்பான அண்ணா, திமுக என்ற கட்சியை உருவாக்கினார்.
ஆனாலும் தாய் கழகம் நீதிக்கட்சி என்பதையும், பெரியார் தங்கள் முன்னோடி என்பதையும் மறுக்கவில்லை.
எனவே, கட்சி வரலாற்றில் பெரியார் பெயரும், படமும் தவிர்க்க முடியாததானது.
Dravidan Stocks
திமுக 2021 ல் ஆட்சிக்கு வந்த பிறகு பெரியாருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
எந்த அளவுக்கு என்றால், சுதந்திரத்துக்கும் பெரியாருக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில் அவர் சிலையை 2022 குடியரசு தின அணிவகுப்பில் வைத்தது.
பெரியார் வயதானவராக இருந்தாலும், அவரது கொள்கைகளைப் பேசுவது, முற்போக்கு கருத்துகளைக் கூறுவது, தன்னைப் பெரியார் ஆதரவாளனாகக் காட்டிக்கொள்வது Dstocks க்களுக்குப் பெருமையாக இருந்தது.
Dstocks என்று கூறுவது ட்ரெண்டியாக இருந்ததோடு, கூடவே பெரியாரையும் சேர்த்துக்கொள்வது மேலும் கெத்தாக அவர்களுக்குத் தோன்றியது.
எனவே, Dstocks களிடையே பெரியார் பிரபலமாக இருந்தார்.
ஆனால், திமுக என்ற கட்சியாகவும், Dstocks ஆதரவாளர்களும் பெரியாரை அளவுக்கு மீறித் தூக்கிவைத்து பேசி வந்தது, எதிர் வினையைத் தோற்றுவித்து விட்டது.
யார் என்ன செய்தாலும் அதற்குப் பெரியார் தான் காரணம் என்று பேசும் போக்கு 2021 முதல் 2022 வரை கட்டுக்கடங்காமல் சென்று விட்டது.
பெரியாரைப் பிடிக்காதவர்களுக்கு இவை எரிச்சலை ஏற்படுத்தியது.
அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தில் கண்ணதாசன்,
‘அதுவரை கேளாத புதிய விசயமாக இருந்ததால், அதைச் சொல்வதைப் பெருமை என்று நினைத்தேன். எதையும் மறுப்பது அறிவுக்கு அடையாளம் என்று முடிவு கட்டினேன்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
கண்ணதாசனே இந்தப் போலித்தனத்தில் ஏமாந்த போது, தற்போதைய சமூகத் தள லைக்ஸ்க்காகவே பேசுபவர்கள், எழுதுபவர்கள் மயங்கியது வியப்பில்லை.
சமூகத்தளங்கள் காலம்
பெரியார் என்ன பேசினார்? என்ன செய்தார்? என்ன சாதித்தார்? என்று இணையத்தில் தோண்ட ஆரம்பித்துப் பல சம்பவங்கள் வெளியே வந்து விட்டன.
பெரியாருக்கென்று இருந்த பிம்பம் தகர்க்கப்பட்டு வருகிறது.
அதாவது பெரியார் கூறியதை, செய்ததை, போராட்டம் நடத்தியதை ஏற்கனவே பல தலைவர்கள் செய்துள்ளார்கள், செயல்படுத்தியுள்ளார்கள், போராடி உள்ளார்கள்.
ஆனால், அனைத்துக்கும் பெரியார் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விட்டது.
யாரோ கூறியதையெல்லாம் பெரியார் கூறினார் என்று ஊடகங்களே ஸ்டிக்கர் ஒட்டியது அம்பலமாகி அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.
அதோடு பெரியார் இளம் வயதில் பாலியல் தொழிலாளியிடம் சென்றது, இந்தியாவைப் பிரிட்டிஷாருடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியது, கட்சி சொத்தைக் காப்பாற்ற இளம் பெண்ணைத் திருமணம் செய்தது.
யுனெஸ்க்கோ விருது கொடுத்ததாகக் கூறியது போலி என்று அம்பலமானது, தமிழை தொடர்ந்து இழிவுபடுத்தியது, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைப் படு கேவலமாகப் பேசியது என்று அனைத்தும் வெளியே வந்து விட்டது.
இதையெல்லாம் அறியாமல் பெரியாருக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டு இருந்த திமுகவினரே அதிர்ச்சியானது தனிக்கதை.
இது போதாது என்று லுலு குரூப் என்ற பெரியார் ஆதரவு கும்பல் செய்த வேலைகள் படு கேவலமாக, கண்றாவியாக உள்ளது. பெரியார் குரூப் என்றாலே இப்படித்தான் என்ற முத்திரையைப் பதித்து விட்டார்கள்.
கள்ளக்காதலை திருமணம் கடந்த உறவு என்று கூறுங்கள் என்று புது விளக்கம் கொடுத்து Dstocks புரட்சி செய்தார்கள்.
கலைஞர்
இதையெல்லாம் தெரிந்து தான் என்னவோ கலைஞர் காலத்தில், பெரியார் பற்றி அளவோடு பேசி, முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், மரியாதை தொடர்ந்தது.
அதாவது மாற்றுக்கருத்துக்கள், எதிர்ப்புகள் இருந்தன ஆனால், யாரும் பெரியாரை மிகவும் சிறுமைப்படுத்தவில்லை.
ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு பெரியாருக்கு அதிகப்படியான முக்கியத்துவத்தைக் கொடுத்து, அவர் தான் எல்லாமே! அவர் இல்லையென்றால் தமிழ்நாடே இல்லையெனும் அளவுக்குப் பில்டப் கொடுத்து வந்தார்.
மூச்சுக்கு முன்னூறு முறை சமூகநீதி பேசிவிட்டு, செயலில் அதற்கு எதிராக நடந்ததால், நடப்பதால் இவை கேலிக்கூத்தாகி நம்பகத்தன்மையை இழந்து விட்டன.
யார் படித்தாலும், பதவியை அடைந்தாலும் அது பெரியார் போட்ட பிச்சை என்று பேசியதால் கடுப்பானவர்கள் அனைத்தையும் தோண்ட ஆரம்பித்தார்கள்.
மற்ற மாநிலங்கள் எப்படி முன்னேறியது! சமூகநீதி காப்பாற்றப்படுகிறது! அங்கே எந்தப் பெரியார் இருந்தார்? என்று கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.
கைமீறிய நிலைமை
2022 இறுதியிலிருந்தே பெரியாரை அனைவரும் புரட்டி எடுத்து வருகிறார்கள். இது நாளுக்கு நாள் அதிகரித்துத் தற்போது மீம் மெட்டீரியலாகவே மாறி விட்டது.
தற்போது பெரியாரைப் பற்றிக் கூறுங்கள் என்று கேள்வி கேட்டால், கருத்துப்பகுதியில் கொடுமையான உண்மை கருத்துகளே வருகின்றன.
BBC Tamil இது போன்ற ஒரு கேள்வியைக்கேட்டதில் கருத்துப்பகுதியை ரணகளமாக்கி விட்டார்கள். இதைப்படிப்பவர்களுக்குப் பெரியார் மீது என்ன மதிப்பு வரும்?
தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் திராவிட மாடல் அரசு 2023 ம் ஆண்டிலிருந்து பெரியார் புகழ் பாடுவதைக் குறைத்து வருவதை உணரலாம்.
தற்போது நடந்த பெரியார் 145 பிறந்த நாள் விழாவில் கூட வழக்கமான பரபரப்பு இல்லை. ட்ரெண்டிங் கூடப் பெரியளவில் முன்பு போல இல்லை. வழக்கமான பெரியார் புகழ் பாடும் சம்பவங்கள் குறைவு.
அளவுக்கு மீறிப் புகழ்ந்து, தூக்கி வைத்துப்பேசி, போலி ஸ்டிக்கர் ஒட்டி திராவிட மாடலும், Dstocks ம் பெரியாரை டோட்டல் டேமேஜ் செய்து விட்டார்கள்.
இனி இதைச் சரி செய்வது கடினம். வழக்கம் போலக் ‘கிழவன் இன்னும் இவனுகளைத் தூங்க விடாமல்…‘ எனப் பேசித் திருப்திபட்டுக்கொள்ளலாம்.
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி.. பள்ளி பருவத்தில் பாட புத்தகங்களில் பெரியாரை குறித்து படித்தது மட்டும் தான்.. அதற்கு பிறகு பெரியாரை குறித்து அதிக தகவல்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லை. ஆனால் கல்லூரி பருவத்தில் காரல் மார்ஸ் மற்றும் ஹிட்லர் குறித்து நிறைய தகவல்களை தேடி,தேடி படித்தேன்.
பொதுவாக இங்கு அரசியல் கட்சிகள் (தலைவர்களை வைத்து) தங்களுக்கு என்ன தேவைப்படுகிறதோ, அதை எந்த நேரம் பயன்படுத்த வேண்டுமோ அதை மட்டும் சரியாக செய்து கொள்வார்கள். அது எல்லா கட்சிகளுக்கும் பொதுவானது. சுருக்கமாக சொன்னால் ” கவுண்டமணி சார் ஸ்டைல ” அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் கிரி” .
@யாசின்
“பெரியாரை குறித்து அதிக தகவல்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லை.”
எனக்கு ஆர்வம் இல்லை.. ஆனால், எழுத ஆரம்பித்த பிறகு பெரியார் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினேன். இதற்காக ஒரு புத்தகமும் படித்து விமர்சனமும் எழுதினேன்.
ஆனால், திமுக 2021 ல் வந்த பிறகு அவர்கள் செய்த அட்ராசிட்டியால் பெரியார் மீதே வெறுப்பாகி விட்டது.
அதோடு பலரும் நடந்த சம்பவங்களைத் தோண்ட ஆரம்பித்த பிறகு சப்புன்னு ஆகி விட்டது.
பின்னர் பெரியார் செய்த மாற்றங்கள் என்ன? என்ற கட்டுரையை எழுதத் திட்டமிட்டுள்ளேன் 🙂 .
“கல்லூரி பருவத்தில் காரல் மார்ஸ் மற்றும் ஹிட்லர் குறித்து நிறைய தகவல்களை தேடி,தேடி படித்தேன்.”
ஏற்கனவே கூறி இருக்கீங்க.
காரல்மார்க்ஸ் புரிந்து கொள்ள முடிகிறது. ஹிட்லர் குறித்து தெரிந்து கொள்ள எதனால் ஆர்வம் வந்தது?
“” கவுண்டமணி சார் ஸ்டைல ” அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் கிரி” .”
😀 😀 😀
கிரி, ஆறாவது / ஏழாவது பாட புத்தகம் படிக்கும் போதே உலக வரலாற்று மீது ஒரு தனி ஆர்வம்.. அதிலும் குறிப்பாக ஜெர்மனி மீது ஒரு காதல்.. பசங்க கூட நாடு பிடிக்கும் ஒரு விளையாட்டை சிறு வயதில் குச்சை வைத்து கொண்டு விளையாடுவோம், அப்போதும் எனது விருப்ப நாடு ஜெர்மனி..
கல்லுரி படிக்கும் போது உலக வரலாற்றை மிகவும் தீவிரமாக படிக்க ஆரம்பித்த போது தான் ஜெர்மனியும் , முதல் உலக போரையும் குறித்து படிக்க படிக்க ஹிட்லரை பிடித்தது. அவர் செய்ததை நான் எப்போதும் நியாய படுத்த மாட்டேன். அன்றைக்கு மற்ற நாடுகளை பிடிக்கும் ஆசையில் மேற்கத்திய நாடுகளின் அனைத்து தலைவர்களும் இவரை போன்று தான் செயல்பட்டு கொண்டிருந்தார்கள்..
தனிப்பட்ட முறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும்.. அவரின் வாழ்க்கை வரலாறு எனக்கு பிடிக்கும்.. எந்த நிலையிலிருந்து அவர் ஜெர்மனிக்கு அதிபரானது சாத்தியமில்லாத ஒன்று.. சுருக்கமாக சொன்னா அவரோட ஆளுமை எனக்கு மிகவும் பிடித்து போனது..
கிரி,எப்படி இருக்கிறீங்க? நீண்ட காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சி, பெரியாரை மட்டுமில்லை எவரை வேண்டுமானாலும் வரலாற்றில் நிற்க வைக்க முடியும். அவர்களிடம் ஆட்சி அதிகாரமும், கருத்துக்களை பரப்ப வலுவான அமைப்பும் இருக்கிறது.
பெரியாரை பற்றி கட்டி எழுப்ப பட்ட பிம்பங்கள் பெரும்பாலும் பொது வெளியில் விவாதிக்கப்பட்டு, உடை பட்டுவிட்டது. அவர் வைக்கம் ஆலய நுழைவு போராட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை, அதை வெற்றிகரமாக முடிக்கவும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் சார்பாக கலந்து கொண்டார் அவ்வளவே. தமிழ்நாட்டிலே, அவர் ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. யுனெஸ்கோ விருதும் அவருக்கு அளிக்க படவில்லை.
இவர்கள் இந்திய விடுதலைக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள். காந்தி அவர்கள்,1920 களில் சென்னை வந்தபோது கருப்பு கொடி காட்டியவர்கள். ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக கோஷம் போட்டவர்கள். அவர் காமராஜரை அண்ணாவை அநாகரிகமாக பேசியதை பொது வெளியில் விவாதிக்க முடியாத நிலையில் தான் இருக்கிறது.
என்னிடம் ஒரு நண்பர் சொன்னார், தமிழர்கள் கல்வி கற்றதே பெரியாரினால் தான் என்றார், நான் கேட்டேன், அவர் அரசாங்கத்தில் பங்கெடுத்தாரா அல்லது கல்வி அமைச்சராக இருந்து, கல்வி கட்டாயம் என்று சட்டம் போட்டாரா என்று கேட்டேன். கடும் கோபம் அடைந்து என்னிடம் பேசுவதையே குறைத்து கொண்டார்.
சிறந்த தலைவர்கள் வரலாற்றில் இடம் பிடிப்பது, நிகழ்காலத்தில் வாழ்வது, அவர்களின் கருத்துக்கள் மற்றும் அவரை குருவாக ஏற்று கொண்ட சீடர்களால் தான். சீடர்கள் செய்யும் நற்செயல்கள் தான் தலைவரை நிகழ்காலத்தில் உயிர்ப்புடன் இருக்க வைக்கிறது . எனக்கு தெரிந்து பெரியாரின் கருத்துக்களை உள்வாங்கி, சமூகத்துக்கு பெரும்பணி ஆற்றும் சீடர்களை நான் கண்டதில்லை. தி க அமைப்பு, அடையாள போராட்டம் நடத்தவும், அரசாங்க வேலைகளுக்கு பரிந்துரைக்கு ஆள் பிடிக்கவும், சாதி மறுத்து காதல் செய்தவர்களின் குடும்பத்தில் கட்ட பஞ்சாயத்து செய்வதும், minority மக்களின் ஆதரவை தி மு க பக்கம் திருப்ப ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்துவதும் தான் இவர்கள் வேலை. திராவிட கட்சிகள் பலம் இழக்கும் போது, இவர் தானாகவே வரலாற்றில் இருந்து காணாமல் போய்விடுவார், மக்களால் புறக்கணிக்கப்படுவார்.
@யாசின்
“ஆறாவது / ஏழாவது பாட புத்தகம் படிக்கும் போதே உலக வரலாற்று மீது ஒரு தனி ஆர்வம்.. அதிலும் குறிப்பாக ஜெர்மனி மீது ஒரு காதல்.. ”
பெரியாளா இருக்கீங்க.. இந்த காலத்தில் இவை பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது.
“தனிப்பட்ட முறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும்.. அவரின் வாழ்க்கை வரலாறு எனக்கு பிடிக்கும்.”
படித்துப்பார்க்க முயல்கிறேன். சரியான புத்தகம் இருந்தால் பரிந்துரைக்கவும்.
கிரி, திரு.சொக்கன் அவர்கள் ஹிட்லர் குறித்து தமிழில் எழுதிய புத்தகத்தை நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு படித்து இருக்கிறேன். புத்தகத்தின் தலைப்பு சரியாக நினைவில் இல்லை. இவர் எழுதிய வேறு சில புத்தகமும் படித்து இருக்கிறேன்..உரைநடை நன்றாக இருக்கும்.
@மணிகண்டன்
வாங்க மணிகண்டன் 🙂 ரொம்ப நாளா ஆளைக்காணோம்.
“நீண்ட காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சி, பெரியாரை மட்டுமில்லை எவரை வேண்டுமானாலும் வரலாற்றில் நிற்க வைக்க முடியும். அவர்களிடம் ஆட்சி அதிகாரமும், கருத்துக்களை பரப்ப வலுவான அமைப்பும் இருக்கிறது.”
100% சரி.
“தமிழர்கள் கல்வி கற்றதே பெரியாரினால் தான் என்றார்”
பலர் மற்றவர்கள் கூறியதை நம்பி, அதை வைத்து அது தான் உண்மை என்று நம்பிக்கொண்டுள்ளார்கள். நானும் சிலவற்றை நம்பி விட்டேன் என்ற மனக்குறை உண்டு.
தொடர்ச்சியாக கூறும் போதும், நீங்க மேற்குறிப்பிட்டது போல பெரிய அமைப்பாக செயல்படும் போது பொய்யும் உண்மையாகி விடுகிறது.
காலமாற்றத்தில் ஒரு நாள் உடைகிறது.
“கடும் கோபம் அடைந்து என்னிடம் பேசுவதையே குறைத்து கொண்டார்.”
ஒருநாள் அவருக்கு உண்மை தெரியும் போது புரிந்து கொள்வார்.
“தி க அமைப்பு, அடையாள போராட்டம் நடத்தவும், அரசாங்க வேலைகளுக்கு பரிந்துரைக்கு ஆள் பிடிக்கவும், சாதி மறுத்து காதல் செய்தவர்களின் குடும்பத்தில் கட்ட பஞ்சாயத்து செய்வதும், minority மக்களின் ஆதரவை தி மு க பக்கம் திருப்ப ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்துவதும் தான் இவர்கள் வேலை”
சரியாகக் கூறினீர்கள். அதோடு மூட நம்பிக்கை ஒழிப்பு என்பதை இந்து மதத்துக்கும் மட்டுமாக சுருக்கி கொண்டதிலேயே இவர்களுடைய எண்ணம் புரிந்து கொள்ள முடியும்.
தமிழகத்தின் பெரிய கட்சியின் ஆதரவு இருப்பதாலும், மக்களுக்கு இன்னும் பல உண்மைகள் தெரியாததாலும் இவர்கள் பேசி வருகிறார்கள்.
மக்கள் உணரும் போது இவை அனைத்தும் உடையும்.
“திராவிட கட்சிகள் பலம் இழக்கும் போது, இவர் தானாகவே வரலாற்றில் இருந்து காணாமல் போய்விடுவார், மக்களால் புறக்கணிக்கப்படுவார்.”
அதே!