லோக்சபா ராஜ்யசபா (மக்களவை, மாநிலங்களவை) பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம். அவற்றின் அறியாத விவரங்களைக் காண்போம். Image Credit
லோக்சபா (மக்களவை)
பாராளுமன்ற தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு (Member of Parliament) வருபவர்களுள்ள இடமே லோக்சபா என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக லோக்சபா உள்ளது.
லோக்சபா (மக்களவை) விவரங்கள் என்ன?
- உறுப்பினராவதற்கு 25 வயதும் அதற்கு மேலும் வேண்டும்.
- மொத்த உறுப்பினர்கள் 545. இருவரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கலாம் (நியமன உறுப்பினர்).
- மக்களவை அலுவல் நேரம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் மீண்டும் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையும் நடைபெறுகின்றது.
- மக்களவைக்குச் சபாநாயகர் தலைவராக உள்ளார்.
- மக்களவை நாடாளுமன்றத்தின் கீழ் சபை என்று அழைக்கப்படுகிறது.
- மக்களவையின் மொத்த பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
- மக்களவை உறுப்பினர்கள் நாட்டின் நிதி மசோதாக்கள் மற்றும் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் அமைப்பாகும்.
- லோக்சபா ஏற்கனவே உள்ள மசோதாவை ரத்து செய்யலாம்.
- ராஜ்யசபாவை விட லோக்சபா அனைத்து அம்சங்களிலும் சக்தி வாய்ந்தது.
ராஜ்யசபா (மாநிலங்களவை)
இந்தியச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுள்ள அவையே ராஜ்யசபா.
எளிமையாகக் கூற வேண்டும் என்றால், அதிகச் சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) வைத்துள்ள கட்சி அதிக ராஜ்யசபா உறுப்பினர்களைப் பெறும்.
ராஜ்யசபா (மாநிலங்களவை) விவரங்கள் என்ன?
- உறுப்பினராவதற்கு 30 வயதும் அதற்கு மேலும் இருக்க வேண்டும்.
- மாநிலங்களவையின் மொத்த பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.
- மாநிலங்களவை மேல் சபை என்று அழைக்கப்படுகிறது.
- மாநிலங்களவையின் தலைவர் துணை குடியரசுத்தலைவர் ஆவார்.
- மொத்த உறுப்பினர்கள் 250. 12 உறுப்பினர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
- மாநிலங்களவை மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும்.
- மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும்.
- மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ராஜ்யசபாவுக்கு சிறப்பு உரிமைகள் மற்றும் அதிகாரம் உள்ளது.
- மக்களவையை ஒப்பிடும் போது மாநிலங்களவையின் பலம் குறைவு.
மசோதா
லோக்சபா ராஜ்யசபா இரண்டிலும் பெரும்பான்மை ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே ஒரு சட்டம், மசோதா நிறைவேற்றப்படும்.
காரணம்,
ஒரு கட்சியால் மக்களவையில் பெரும்பான்மை பெற்று மக்களவையை (லோக்சபாவை) தனது கட்டுப்பாட்டினுள் எடுக்க முடியும்.
ஆனால், மாநிலங்களவையில் (ராஜ்யசபா) அது போலப் பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பது இயலாது அல்லது கடினம்.
எனவே, மசோதாவை நிறைவேற்ற மற்ற கட்சிகளின் ஒப்புதலும், ஆதரவும் தேவைப்படுகிறது. காரணம், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களின் உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் இருப்பார்கள்.
எடுத்துக்காட்டுக்கு, பாஜகவால் மக்களவையில் அதிகப் பெரும்பான்மை பெற்று கூட்டணி ஆதரவு இல்லாமலே ஆட்சியமைக்க முடியும், மசோதாக்களுக்கு ஆதரவைப் பெற முடியும்.
ஆனால், அதிக மாநிலங்களில் ஆட்சியமைத்தாலே ராஜ்யசபாவை கட்டுப்பாட்டில் எடுக்க முடியும். இங்கே மாநில ஆட்சி முக்கியத்துவம் பெறுகிறது.
எனவே, லோக்சபாவில் பெரும்பான்மை உள்ளது என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமே அனைத்தையும் ஒரு கட்சி செய்து விட முடியாதபடி அரசியலமைப்புச் சட்டம் வழிவகைச் செய்துள்ளது.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
இந்த பதிவை படிக்கும் போது ” அடடா” என்று சொல்லும் அளவிற்கு ஒரு நேர்த்தியான பதிவாக நான் கருதுகிறேன். காரணம் மிகவும் எளிமையாகவும், தெளிவாகவும் இருக்கிறது.. சொல்ல வந்த செய்திய மிகவும் அழகாக சொல்லி இருக்கீங்க!!! இதை படிச்சா எந்த சந்தேகமும் யார்க்கும் வராது.. பகிர்வுக்கு நன்றி கிரி.
இப்ப எதுக்கு இந்த பதிவு. இத கூகிள் பண்ணாலே வருமே. ஏன் ண்ணே இப்படி பண்றே.
@யாசின்
நன்றி யாசின் 🙂
@கார்த்திக்
இப்படி பச்ச புள்ளையா இருக்கியே கார்த்திக் 🙂
என் தளத்தில் அரசியல் மற்றும் பொது விமர்சனங்களைத் தாண்டி 80% விவரங்கள் கூகுளில் தேடினால் கிடைக்கும்.
தொழில்நுட்ப தகவல்கள் நான் எழுதியது எல்லாமே கூகுளில் தேடினால் கிடைக்கும்.
பின்னர் ஏன் இங்கு எழுத வேண்டும்?
காரணம், எனக்கு எழுதுவது Passion. அதோடு எனக்கென்று தனித்தன்மை இருக்கு. நீ கூறிய கூகுளில் இதே கட்டுரைகளைத் தேடி படித்துப் பார்.
யார் கூறியது விளக்கமாகவும், புரிந்து கொள்ள எளிதாகவும் உள்ளது என்று.
அதோடு முன்பு போல தளத்துக்கு வர தமிழ்மணம், தமிழிஷ் போன்ற தளங்கள் இல்லை. முன்னர் படித்தவர்கள் மட்டுமே வருகிறார்கள்.
பெரும்பான்மையோர் வருவது தேடுதல் மூலமாக. அப்படியென்றால், அது தொடர்பான கட்டுரைகளை எழுத வேண்டும்.
லோக்சபா என்றால் என்ன? என்று கூகுளில் தேடிப்பார். முதல் 10 இடங்களில் என் கட்டுரையும் இருக்கும்.
இதற்காகவும் எழுதுகிறேன். இனிமேலும் இது போல எழுதுவேன்.
நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று தேடி படிப்பவர்களும் சிலர் உள்ளனர். அவர்களுக்கு இவை பயனுள்ளதாக இருக்கும்.
அர்த்தமாயிந்தா? 🙂 .
ராஜ்ய சபா உறுப்பினர்கள் நேரடியாக கட்சிகள் மூலமாக பதவி கிடைக்கிறதா.. அவர்களுக்கு தேர்தல் இல்லையோ?
ராஜ்ய சபா சம்பளம் எவ்வளவு?
அவர்களின் அதிகாரம்? அவர்களுக்கும் தொகுதி உண்டா
நிதி உண்டா