தோனி | The Captain Terrific

8
தோனி

ICC சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை [2013] தோனி தலைமையில் இந்தியா வெற்றி பெற்று அசத்தி விட்டது. Image Credit

பயிற்சி போட்டிகளில் இருந்து எந்தப் போட்டியிலும் தோற்காமல் கடைசி வரை அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய ரசிகர்களுக்கு இரட்டிப்புமகிழ்ச்சியைக்  கொடுத்து விட்டது.

தோனி

தோனி தற்போதைய நிலைக்கு எந்தக் கேப்டனாலும் செய்ய முடியாத சாதனையைச் செய்து கலக்கி இருக்கிறார்.

ஒருநாள் உலகக் கோப்பை, ட்வெண்டி 20 உலகக்கோப்பை, மினி உலகக் கோப்பையான ICC சாம்பியன் ட்ராபி என்று அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியை வெற்றி பெற வைத்து அசத்தி இருக்கிறார்.

Captain Terrific

கிரிக்கெட் “டார்லிங்” கங்குலி, தோனியை “Captain Terrific” என்று வர்ணித்துள்ளார்.

தோனி, கழுத்து வரை புரளும் முடியை வைத்துக் கீப்பர் மற்றும் ஹிட்டராக அறிமுகமான போது அட! யார்ரா இது! என்று கவனயீர்ப்பு ஏற்பட்டது.

ஒரு நல்ல கீப்பர் இந்தியாக்கு இல்லாமல் திணறிக்கொண்டு இருந்த சமயம் அது.

ட்ராவிட் தான் இந்த இடத்தைச் சமாளித்துக்கொண்டு இருந்தார். தோனி கீப்பிங்குடன் சேர்ந்து பேட்டிங்கிலும் பட்டையக் கிளப்பியதால் பலரின் கவனத்தை ஈர்த்தார்.

ஹெலிகாப்டர் ஷாட்

தோனி ஒரு ப்ரொபசனல் கிரிக்கெட் வீரர் என்று கூற முடியாத அளவுக்குத் தான் அவரது பேட்டிங் இருக்கும்.

காட்டடி அடிப்பார் கடைசியில் அதுவே அவரின் அடையாளமாகி விட்டது.

பின்னர், ஹெலிகாப்டர் ஷாட் என்று அனைவரும் கூறும் அளவிற்கு தனி பாணியை உருவாக்கிக் கொண்டார்.

இப்பவும் ஒரு சில போட்டிகளில் பார்த்தால் என்னடா இவர் அடிக்கிறார் கிரிக்கெட் தெரியாதவன் அடிக்கிற மாதிரி கண்டபடி அடிக்கிறாரே! என்று தான் நினைக்கத் தோன்றும் ஆனால், அதற்கும் போல பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

தோனிக்கு கேப்டன் பதவி வெகு விரைவிலேயே கிடைத்து விட்டது என்பது அது இவரது அதிர்ஷ்டமா அல்லது திறமையாலா என்று குழப்பமான நிலை தான்.

அது அதிர்ஷ்டத்தால் விரைவில் கிடைத்து இருந்தாலும், தன் திறமையால் தக்க வைத்து இருக்கிறார் என்பது தற்போது நாம் அனைவரும் அறிந்தது.

தோனி மிகப்பிரபலமாக இருந்த சமயத்தில் தான் இந்தியா, பாகிஸ்தான் சென்று இருந்தது.

அங்கு நடந்த ஆட்டத்தில் தோனி அடி நொறுக்கியதில் பாகிஸ்தான் வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவரும் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டனர்.

பர்வேஷ் முஷரப்

இப்போட்டி நடந்த போதெல்லாம் இந்திய ரசிகர்களின் பொற்காலம் என்று கூறலாம்.

பிரதமர் பர்வேஷ் முஷரப் தோனியின் சிகை அலங்காரத்தைப் பாராட்டியதும் அவருடைய ஆட்டத்தைப் புகழ்ந்ததும் இன்று வரை மறக்க முடியாத நிகழ்வு.

தோனி துவக்கத்தில் அனைத்துப் போட்டிகளிலும் காட்டடி அடித்துக்கொண்டு இருந்தாலும், கேப்டன் ஆன பிறகு ஒரு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

அவருடைய அதிரடி ஆட்டமே குறைந்து விட்டது.

பலர், அப்படி இருந்த தோனியா இது என்று வியப்படையும் அளவுக்கு மந்தமாக விளையாடினார் ஆனாலும் எப்போது வேண்டும் என்றாலும் அவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற பயம் எதிரணியினருக்கு உண்டு.

இன்று வரை தோனியின் சிறப்பான ஆட்டம் என்றால் எனக்கு 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி தான்.

ஒரு கேப்டன் இக்கட்டான சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அந்தப் போட்டி முன்னுதாரணம்.

Mr Cool

தோனியைப் பற்றி அனைவராலும் கூறப்படும் விஷயம் Mr Cool. வெற்றியோ தோல்வியோ எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாதவராக இருப்பார்.

ஒரு கேப்டன் எப்படி தன் அணியை வழி நடத்த வேண்டும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

IPL போட்டிக்கு வந்து இருந்த மேற்கிந்தியத் தீவு வீரர் பிராவோ கூடத் தோனியின் தலைமையில், தான் மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நிறைய கற்றுக்கொண்டதாகவும் கூறி இருந்தார்.

எப்போது ஒருவர் தலைவன் என்ற அகந்தையுடன் இருக்கிறாரோ அவரின் கீழ் பணி புரிபவர்கள் விருப்பமாக இருக்க மாட்டார்கள்.

கிரிக்கெட் என்றில்லை எந்த துறைக்கும் பொருந்தும்.

வேலையும் வாங்க வேண்டும் அதே சமயம் உடன் பணி புரிபவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

இதைக் குறைந்த காலத்தில் அனைத்து உலக அணியினருக்கும் தோனி பாடம் எடுத்து விட்டார் என்பது என் கருத்து.

தங்கள் நாட்டில் இல்லாமல் வேறு நாட்டு கேப்டன் என்றால் யாரை வைத்துக் கொள்வீர்கள் என்று கேட்டால் நிச்சயம் தோனி அதிக வாக்கு பெறுவார்.

எந்தப் போட்டியும் எடுத்துக்கொள்ளுங்கள், வெற்றி பெற்றால் எந்த ஆர்ப்பாட்டமும் அவரிடம் இருக்காது.

முதல் ஓரிரு நொடிகள் மட்டுமே அந்த வித்தியாசத்தைக் காண முடியும்.

கோப்பையைப் பெற்ற உடன் இரு வினாடிகள் மட்டுமே கையில் வைத்து இருப்பார் உடனே அதைத் தனது அணியினரிடம் கொடுத்து விட்டு ஒதுங்கி விடுவார்.

இதை நான் தோனி ரசிகன் என்பதால் கூறவில்லை, நீங்கள் எந்தப் போட்டியில் வேண்டும் என்றாலும் கவனித்துப் பாருங்கள்.

அதோடு நிழல் படக்காரர்களுக்கு போஸ் கொடுக்கும் போது நடுவில் தன்னை முன்னிறுத்தி நிற்கமாட்டார், ஒரு ஓரமாகத் தான் இருப்பார்.

இந்த வெற்றி தன்னால் கிடைத்ததல்ல, அணியின் வெற்றி என்ற உணர்வு இருக்கும்.

உடன் விளையாடியவர்கள் ரொம்பக் கஷ்டப்பட்டார்கள் அவர்கள் தற்போது என்ஜாய் பண்ணட்டுமே! என்ற மன நிலையில் ஒதுங்கிக் கொள்வார்.

தோனி தனக்கு வேண்டியவர்களான ரைனா ஜடேஜா போன்றவர்களுக்கு அதிக வாய்ப்பு தருகிறார் என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. குற்றச்சாட்டு இல்லாத நபர் எவர்.

குறைகள் இருந்தாலும் இந்தியாவை பல நெருக்கடியான சமயங்களில் சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ICC சாம்பியன் ட்ராபி 2013

இங்கிலாந்தில் நடைபெற்ற, மினி உலகக் கோப்பை என்று கூறப்படும் சாம்பியன் ட்ராபி மழையால் பலரை கடுப்படித்து விட்டது.

இரண்டாவது பேட்டிங் செய்பவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற நிலையே காணப்பட்டது.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா பாக் போட்டி மழையால் படு சொதப்பலாகி விட்டது. மழை பெய்யவில்லை என்றாலும் பாக் சிறப்பாக ஆடி இருக்கும் என்று தோன்றவில்லை.

கடைசிப் போட்டி இங்கிலாந்துடன் திரும்ப மழை ஆனாலும் போட்டியை ரத்து செய்யாமல் ட்வெண்டி – 20 வைத்தார்கள்.

இந்தியா விளையாடும் போது மூன்று முறை மழை குறுக்கிட்டது ஆனால், இங்கிலாந்து விளையாடும் போது எந்தத் தடங்கலும் இல்லை.

இருந்தாலும், தோல்வி அடைந்து விட்டது.

17 ஓவர் வரை பார்த்தவர்கள் நிச்சயம் இங்கிலாந்து தான் வெற்றி பெறும் என்று நினைத்து இருப்பார்கள்.

கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இணங்கக் கடைசி மூன்று ஓவர் ஆனது.

இஷாந்த் ஷர்மா, ஜடேஜா எடுத்த விக்கெட்டுகளும், ரோஹித் ஷர்மாவின் ரன் அவுட் ம், அஷ்வினின் அற்புதமான கடைசி ஓவரும் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

ரோஹித் ஷர்மா தவான் இருவரும் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பான தொடக்கம் கொடுத்தது இந்திய அணிக்கு வலிமை சேர்த்தது.

இதில் நான் எதிர்பார்த்த “தினேஷ் கார்த்திக்” சரியாக விளையாடாதது ஏமாற்றம் அளித்தது.

ஜடேஜா

ஒரு காலத்தில் ஃபேஸ்புக்கில், ஜடேஜா படத்தைப் போட்டுக் கிண்டல் அடித்து இருந்தார்கள். தற்போது முக்கிய வீரர் ஆகி விட்டார்.

ஆஸ்திரேலியா உடனான போட்டியில் க்ளார்க் விக்கெட்டை அனைத்துப் போட்டிகளிலும் எடுத்ததால் மிகப் பிரபலமானார்.

பின்னர் அப்படியே அது தொடர்ந்து தன் திறமையை இத்தொடரின் கடைசிப் போட்டி வரை நிரூபித்து விட்டார்.

IPL சண்டைகளை ஒதுக்கி விட்டு அனைவரும் ஒற்றுமையுடன் விளையாடியது மனதிற்கு சந்தோசமாக இருந்தது.

ஒருவேளை காம்பீர் வந்து இருந்தால், கோலி முறுக்கிட்டு இருந்து இருப்பாரோ என்னவோ! 🙂 இருப்பதிலேயே கோலி தான் உற்சாகமாக இருந்தது.

கடைசியில் கெயில் போல கங்ணம் ஸ்டைல் ஆட்டம், புஷப்ஸ் எல்லாம் எடுத்து அலப்பரை செய்து விட்டார்.

இதில் மிகப்பெரிய ஆச்சர்யம் வெற்றி பெற்ற உடன் தோனியின் ஆர்ப்பரிப்பு. நான் தோனி இப்படி குதித்து பார்த்ததே இல்லை :-).

2002 ல இலங்கையுடனான இறுதிப் போட்டி மழையின் காரணமாக இரண்டு முறை நடத்தப்பட்டது.

இரண்டிலுமே இந்தியாவே வெற்றி பெறக்கூடிய நிலையில் இருந்தது. பின்னர் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த முறை வெற்றி பெற்றது அதுவும் கடைசி சாம்பியன் ட்ராபியில் வெற்றி பெற்றது கூடுதல் மகிழ்ச்சி. ஒருவேளை தோனி இதுக்குத் தான் குதித்து இருப்பாரோ!

தோனி மீண்டும் ஒரு முறை இந்தியாக்கு பெருமை தேடித் தந்து விட்டார்.

தோனி சிறந்த கேப்டன் என்றாலும் அதற்காக மற்றவர்களுடன் இவரை ஒப்பிட வேண்டிய அவசியமில்லை.

ஒவ்வொருவரும் இருந்த கால கட்டம், அணி வீரர்கள் என்று அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, அணியை சிறப்பாக வழி நடத்தும் தோனியை பாராட்டுவோம் அதற்காக மற்றவர்களை மட்டம் தட்ட வேண்டும் என்பதில்லை. Images Credit

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். எதனால் சாம்பியன் ட்ராபியை நிறுத்துகிறார்கள் என்று தெரியுமா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. எவ்வளவு உயர்ந்தாலும் இருக்க வேண்டியது பணிவு… அது தோனி அவர்களிடம் நிறையவே உள்ளது… யாராக இருந்தாலும் அரவணைத்துக் கொள்வதிலும், மற்றவர்களை சந்தோசப்படுத்திப் பார்ப்பதில் கிடைக்கும் சந்தோசம் தான் பெரிது… மிகப் பெரிது என்று புரிந்து உணர்ந்து கொண்டவர்… வெற்றிகள் தொடரட்டும்… வாழ்த்துக்கள்…

  2. கிரி… என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கி இந்த பதிவு எழுதியதற்கு நன்றி..

    இறுதி போட்டி முடிந்ததுடன் தோனி கொடுத்த பேட்டியும் சூப்பரா இருந்துச்சி.. திறமையிலோ/அதிஷ்டத்திலோ கிடைத்த வாய்ப்பா இருந்தாலும் அதை இன்று வரை தக்க வைப்பதற்கு தனி திறமை வேண்டும்.. அது தோனியிடம் நிறைய உள்ளது.. அதுவும் இந்திய அணி போல ஒரு அணிய தலைமை ஏற்க தனி தகுதி வேண்டும்.. நம்ம எப்ப ஜெய்போம் / எப்ப தோற்போம் யாருக்குமே தெரியாது… இறுதி போட்டி நம்ம தோல்வி அடைந்து இருந்தாலும் “தல தல தான்”….

    ICC கனவு அணிக்கு தோனிய மீண்டும் கேப்டனா நியமித்ததிலே தெரியிது தோணி தான் பெஸ்ட் என்று… பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. வரும் 2017 ல் ஐ சி சி சார்பில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.. ஏற்கனவே ஐசிசி யால் ட்வென்டி ட்வென்டி, உலக கோப்பை 4 வருடங்களுக்கு ஒருமுறை நடத்துவதால் மினி உலக கோப்பையும் ஒரு பிரச்னையாக உள்ளதால் அதை மட்டும் நிறுத்தி வைப்பதாக முடிவு எடுத்து உள்ளார்கள்…

  4. சூப்பர் போஸ்ட்.நல்ல அலசல்.
    எனக்கும் தோணி மிகவும் பிடிக்கும்.

  5. “தோனிக்கு கேப்டன் பதவி வெகு விரைவிலேயே கிடைத்து விட்டது என்பது அது இவரது அதிர்ஷ்டமா அல்லது திறமையாலா என்று குழப்பமான நிலை தான்”

    – தோனியை கேப்டனாக்க பரித்துரைத்ததே சச்சின்தான் என்ற ஒரு கருத்து இருக்கிறது. இல்லையன்றால் அது தினேஷுக்குதான் போயுருக்கும். அப்போதிருந்த இந்திய டீம் கோச் Greg Chappell தினேஷைதான் பரிந்துரைத்தார்.

  6. தோனி யாருக்கு தான் புடிக்காது செம பதிவு தல

    – அருண்

  7. @தனபாலன் வாங்க எப்படி இருக்கீங்க? 🙂

    @நன்பேண்டா 🙂

    @வரது என்னமோ போங்க!

    @யாசின் தோனி க்கு கண்ணுப்பட்டுடுச்சு போல.. பாதிலேயே வந்துட்டாரே! 🙁

    @Annapushparaja தகவலுக்கு நன்றி

    @கிருஷ்ணா கௌரிஷங்கர் ரைட்டு 🙂

    @அருண் நிறைய பேருக்கு தோனிய பிடிக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here