இந்தியாவை அதிரவைத்த இறுதிப்போட்டி | 2011

26
இந்தியாவை அதிரவைத்த இறுதிப்போட்டி!

கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்பார்ப்புகள் பிரார்த்தனைகளை ஈடுகட்டி மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற்று விட்டது. Image Credit

ஏகப்பட்ட மன அழுத்தங்கள் இருந்தும் இவ்வளவு சிறப்பாக விளையாடியதை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இந்தியாவை அதிரவைத்த இறுதிப்போட்டி

முதலிலேயே டாஸ் போடும் போது குழப்பம் இரண்டாவது முறையாக சங்ககாரா டாஸ் வெற்றி பெற்று எதிர்பார்த்ததுபோலப் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதுவே இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமானது.

இருப்பினும் ஆட்டத்துவக்கதில் கட்டுக்கோப்பாக நம்மவர்கள் வீசிய பந்துகளாலும் சிறப்பான ஃபீல்டிங்காலும் இலங்கை அணியினர் எடுக்கத் திணறினர்.

ஆனால், அதிக விக்கெட் இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள். ஜாகிர் சிறப்பாக பந்து வீசி மூன்று மெய்டன் ஓவர்கள் போட்டுக் கலக்கினார்.

எப்போதும் கலக்கலாக விளையாடும் சங்ககாரா இதில் நன்றாக விளையாடினாலும் தொடர முடியாமல் ஆட்டம் இழந்தார்.

ஆனால், ஜெயவர்தனே தொடர்ந்து சிறப்பாக விளையாடிச் சதமடித்து இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.

ஸ்ரீசாந்த் பந்தை வெளுத்து வாங்கினார்கள். 45 வது ஓவர் வரை ஒழுங்காக விளையாடிக்கொண்டு இருந்த அணிக்கு அதன் பிறகு சனி ஆரம்பித்தது.

அனைத்து பந்தையும் செம்ம அடி அடித்தார்கள்.

சூப்பர் பந்து வீச்சாளராக இருந்த ஜாகிரை டப்பா பந்து வீச்சாளர் ரேஞ்சுக்கு ஆக்கி விட்டார்கள்.

ஸ்ரீசாந்த்தே பரவாயில்லை என்கிற அளவிற்கு 4, 6 ஆக வாரி வழங்கினார். கடைசி ஐந்து ஓவரில் மட்டும் 63 ரன்கள்.

இந்திய ரசிகர்கள் பலர் சுத்தமாக நம்பிக்கை இழந்து விட்டனர்.

274 ஓட்டங்கள்

இரவு ஆட்டத்தில் 274 ஓட்டங்கள் என்பது சவாலான இலக்கு தான் அதுவும் இதைப்போல டென்ஷன் மிகுந்த இறுதி ஆட்டத்தில். அதனால் இந்தியா ஜெயிப்பது கஷ்டம் என்றே பலரும் முடிவு செய்து விட்டார்கள்.

தாறுமாறான டென்ஷன் உடன் நமது ஆட்டம் துவங்கிய போது சேவாக் 4 அடித்து ஆட்டத்தைத் துவக்குவார் என்று பார்த்தால் டக் அவுட் ஆகி வெளியேறிக் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களை உடையச்செய்தார்.

அதன் பிறகு நூறாவது சதம் அடிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சச்சினும் விரைவிலேயே வெளியேற அனைவரும் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டனர்.

நானெல்லாம் டென்ஷனில் போட்டியே பார்க்கவில்லை.

சச்சினுக்கேல்லாம் நிச்சயம் கடுமையான மன அழுத்தம் இருந்து இருக்கும் அதனால் அவுட் ஆனதில் எனக்கு வியப்பில்லை.

இருப்பினும் 21 வருட கிரிக்கெட் அனுபவமுள்ளவர் பதட்டப்படுவது கொஞ்சம் ஏமாற்றம் தான்.

காம்பிர்

எதிர் அணியினர் உட்பட அனைவரும் சச்சினை குறி வைப்பதால் நிச்சயம் யாராக இருந்தாலும் இயல்பாக இருக்க முடியாது.

இதன் பிறகு காம்பிரும் கோலியும் நின்று விளையாடி மெதுவாக ரன்னை உயர்த்தினர் அதிலும் காம்பிர் மிக அருமையாக விளையாடினார்.

அவர் விளையாடிய ஆட்டம் தான் இந்திய ரசிகர்களிடையே இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்தது.

இதன் பிறகு காம்பிருடன் ஜோடி சேர்ந்த அணி கேப்டன் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த உலகக்கோப்பை போட்டிகளில் இவர் அடித்த அதிகபட்ச ரன்களே 34 ஆகும்.

சுத்தமாக ஃபார்மே இல்லாமல் இருந்தார்.

இந்த முறை யுவராஜ் க்கு பதிலாக தோனி களம் இறங்கி தான் எடுத்த முடிவு சரியானது தான் என்பதை அட்டகாசமாக நிரூபித்தார்.

ஒவ்வொரு பந்தையும் இருவரும் சிறப்பாக விளையாடி 100 ரன்கள் சேர்த்தனர்.

100 அடிக்க மூன்று ரன்களே இருக்கையில் பரிதாபமாக காம்பிர் ஆட்டம் இழந்தார். இதன் பிறகு வந்த யுவராஜ் க்கு அதிக வாய்ப்பில்லை.

விளையாடத் தோனியே முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

இலங்கை அணியைப்போலக் கடைசி பந்தில் 6 அடித்து அணியை வெற்றிபெறச் செய்து 121 கோடி மக்களின் எதிபார்ப்பை ஒரு பொறுப்பான கேப்டனாக நிறைவு செய்தார்.

இக்கட்டான நேரத்தில் ஒரு கேப்டன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தது நேற்றைய ஆட்டம்.

இலங்கை அணிக்கு இரண்டு முறை இறுதி ஆட்டத்தில் தோற்றது நிச்சயம் இலங்கை ரசிகர்களுக்கு கடும் மன வருத்தத்தைத் தந்து இருக்கும்.

நேற்றைய போட்டி முரளிதரனுக்கு கடைசிப்போட்டி. சச்சினுக்கு கடைசி உலகக்கோப்பைபோட்டி.

இதில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 100 வது சதத்தைச் சச்சினால் அடிக்க முடியவில்லை குறைந்த பட்சம் 50 கூட.

இதை விடக்கொடுமையாக முரளிதரன் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. சச்சினைப் போலவே எனக்கு பிடித்தமானவர் முரளிதரன்.

மிகவும் அமைதி, எளிமை, எந்த பந்தாவும் செய்யாதவர்.

அவருக்கும் இது ஒரு சோகமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து இருக்கும். சச்சின் பரவாயில்லை அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றி விட்டது.

தோனி

யுவராஜ், தோனி மற்றும் அணியில் உள்ள அனைவரும் அணியை வெற்றி பெறச் செய்து இந்த வெற்றியைச் சச்சினுக்கு அளிப்போம் என்று கூறி இருந்தனர்.

சொன்னது போலவே சிறப்பாக விளையாடி வெற்றியைச் சச்சினுக்கு அளித்தனர்.

வெற்றி பெற பிறகு தோனி கூறியதாவது “ஒருவேளை இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தால் அஸ்வின் எடுக்கப்படாதது, ஸ்ரீசாந்த்தை எடுத்தது, யுவராஜை இறக்காமல் நான் இறங்கியது ஆகியவை பெரிய பிரச்சனை ஆகி இருக்கும் ஆனால், அவை எதுவும் நடக்காமல் போய் விட்டது” என்று கூறினார்.

உண்மை தானே!

ஹை வோல்டேஜ்

இந்திய அணி மட்டுமே மூன்று கடுமையான போட்டிகளைச் சந்தித்தது. ஆஸி யுடன் முதல்போட்டி அதன் பிறகு ஹை வோல்டேஜ் பாகிஸ்தானுடன் அதன் பிறகு மூன்றாவதாக இலங்கை அணியுடன்.

இலங்கை அணிக்கு இறுதிப்போட்டியைத் தவிர வேறு எதுவும் சிரமமாக இருக்கவில்லை.

ஆனால், இறுதிப்போட்டியில் அதனுடைய விளையாட்டு தான் இறுதிப்போட்டிக்கு முழு தகுதியானது என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்ததை மறுக்க முடியாது.

இலங்கை அணி வீரர் ஜெயவர்தனே சதம் அடித்த போதெல்லாம் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது இந்த 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியைத் தவிர.

முன்பு எனக்கு பிடிக்காத அணியாக பாக் இருந்தது தற்போது ஆஸி உள்ளது. இதில் நிச்சயம் இலங்கை அணி இல்லை 🙂 .

இந்த வெற்றிக்கு இந்தியா முழுத்தகுதியான அணியே!

ஆஸியுடன் 2003 ல் மிகக்கேவலமாக தோற்ற காயத்தை இந்தப்போட்டியின் சிறப்பான இந்திய அணியின் ஆட்டம் சரி செய்தது.

உலகில் நேற்று [02-04-2011] அதிக சந்தோசமாக இருந்து இருக்கும் ஒரு நபர் என்றால் அது நிச்சயம் சச்சினாகத் தான் இருக்கும்.

அணியினர் அனைவரும் ஒருவர் விடாமல் இந்த வெற்றி சச்சினுக்கு என்று கூறி அவரை பெருமைபடுத்தி விட்டார்கள்.

தன் மகன் மற்றும் மகளுடன் மிகுந்த சந்தோசமாக உலா வந்தார் சதம் அடிக்க முடியாத சிறு வருத்தத்துடன்.

உலகில் எதிரணியாக இருந்தாலும் நேசிக்கப்படுவர் சச்சின் ஒருவரே.

Gary Kirsten

அணிவீரர்கள் பலரின் உழைப்பு இருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட இந்தச் சாதனைக்கு மிக முக்கியமான நபர் மிக அமைதியாக இருந்து வாய்ச்சொல் வீரராக இல்லாமல் செயலில் காட்டிய பயிற்சியாளர் Gary Kirsten (தென் ஆப்ரிக்கா).

இவரையும் அணி வீரர்கள் தூக்கிச் சென்றது மனதுக்கு நிறைவாக இருந்தது.

சச்சின் 100 அடிக்கவில்லை என்றாலும் அதிக ரன்களை எடுக்கவில்லை என்றாலும் நேற்று அவரே கதாநாயகனாக இருந்தார்.

தோனி டென்ஷன் ஆகாமல் மிக கூலாக விளையாடினார்.

அவர் அடித்த கடைசி 6 ல் இந்தியாவே அதிர்ந்தது. இந்தியா முழுக்க அனைத்து மக்களும் வெடி வெடித்து ஆட்டம் போட்டு சந்தோசமாக கொண்டாடினர்.

கிரிக்கெட்டை வெறுப்பவர்களும் இந்த நேரத்தில் சந்தோசமாகவே இருந்து இருப்பார்கள் 😉 .

சுமக்க வேண்டிய நேரம்

21 வருடமாக கிரிகெட்டை தன் தோளில் சுமந்து வந்தார் இப்போது நாங்கள் சச்சினை எங்கள் தோளில் சுமக்க வேண்டிய நேரம் – கோலி

உலகக்கோப்பை நடத்திய நாடுகள் தங்களது நாட்டில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியதில்லை அது இந்தியா விசயத்தில் மாறியுள்ளது.

1983 ல் கபில் தலைமையில் உலககோப்பையை வெற்றி பெற்ற இந்திய அணி அதன் பிறகு 28 வருடம் கழித்து இந்த வெற்றியை பெற்று இருக்கிறது.

போட்டியின் நாயகனாக தோனியும் தொடர் நாயகனாக யுவராஜும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடந்த முறை இந்திய அணி கேவலமாக விளையாடித் தோற்றதால் வீரர்கள் வீட்டில் கல்லெறி சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக தோனி வீட்டில்.

இந்த வெற்றி அந்தக்காயத்தை ஆற்றும் என்று நம்புகிறேன்.

பேரன்பும் பெருங்கோபமும்

இந்திய ரசிகர்கள் கோபம் கொண்டால் கொடுமையாக இருக்கும் அன்பு கொண்டால் ஜீரணிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர்கள். இவர்களைச் சமாளிப்பது என்பது ஒரு போருக்கு நிகரானது.

போராடி தோற்றால் பெரிதாக பாதிப்பு இருக்காது கேவலமாக தோற்றால் இதைப்போலத் தர்மசங்கடங்கள் தவிர்க்க முடியாதது காரணம் கிரிக்கெட் இந்தியாவில் எவற்றையும் விட அதிகமாக நேசிக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள பெரிய மதம் இந்து மதமல்ல அதன் பெயர் “கிரிக்கெட்” அதன் கடவுள் சச்சின்

கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்காமல் பொறுப்புணர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு குறிப்பாக கம்பீர் தோனிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கடும் போட்டியைக் கொடுத்த இலங்கை அணிக்கும் பாராட்டுகள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

26 COMMENTS

  1. எங்க ஊர் மாரியம்மன் கோயில்ல இந்தியா ஜெய்கனும்னு சிறப்பு பூஜை பண்ணாங்க.
    அந்த மாரியம்மன் அருள் தான் இந்தியா ஜெய்க்க காரணமோ எண்ணவோ..!?!

  2. மிக அருமையான பதிவு .. போட்டியின் நாயகனாக கம்பீர் தேர்வு செய்து இருக்கலாம்..

  3. பலவருடங்களுக்குப் பிறகு ஆர்வம் ஏற்பட்டு நேற்றைய மேட்சைப் பார்த்தேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்:)!

  4. Hi.. winning the world cup is the special moments of world cricket and it’s a dream of 121 crores of peoples.. thanks for Indian team… this want to continue in the near future also….

  5. கிரிக்கெட்டை வெறுப்பவர்களும் இந்த நேரத்தில் சந்தோசமாகவே இருந்து இருப்பார்கள்

    உண்மை 🙂

  6. இங்க வந்து நொண்ண பேச்சு பேசுறவங்க ..,சங்கு சச்சின் சத்தியமா அறுக்கப்படும்

  7. /////// உலகில் எதிரணியாக இருந்தாலும் நேசிக்கப்படுவர் சச்சின் ஒருவரே.
    /////////

    உண்மை

    உண்மை

  8. //// 21 வருடமாக கிரிகெட்டை தன் தோளில் சுமந்து வந்தார் இப்போது நாங்கள் சச்சினை எங்கள் தோளில் சுமக்க வேண்டிய நேரம் – கோலி /////

    என்ன ஒருத்தி வேண்டாம்னு சொல்லும் போது கூட நான் அழுவல இத சொல்லும் போது ..
    அழுதுட்டேன் கிரி ..,

  9. //////// இந்தியாவில் உள்ள பெரிய மதம் இந்து மதமல்ல ///////

    ஹி ஹி ஹி ..,அதுக்கு பேரு சச்சிந்து ,,மதம் கிரி!!! ஒரு இந்தியாவ தாக்குறதும் ஒன்னு தான் ..,சச்சின தாக்குறதும் ஒன்னு தான்

  10. \\நானெல்லாம் டென்ஷனில் போட்டியே பார்க்கவில்லை. \\

    சேம் பிளட். நானும்தான் ஹா. ஹா…ஹா…

    \\சச்சின் 100 அடிக்கவில்லை என்றாலும் அதிக ரன்களை எடுக்கவில்லை என்றாலும் நேற்று அவரே கதாநாயகனாக இருந்தார்.\\

    மற்ற மேட்சுகளில் விளையாடி அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறாரே. 482 ரன்ககளை மறுக்க முடியுமா !!

  11. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர்கள். //////

    ஹி ஹி ஹி ஹி …….,வுடு வுடு பாஸ்

  12. பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன் ..////

    இத லோக வா ஒருத்தரு ப்ளோக்ல வச்சிருக்காரு ..,அவரு கண்டிப்பா நாளைக்கி ஒரு பதிவு போடுவாரு ( கிரி…, நீங்க ரத்த பொரியல் சாப்ட்டு இருக்கீங்க ,,,இல்ல சும்மா தான் கேட்டேன் )

  13. கலக்கல் கிரி

    “21 வருடமாக கிரிகெட்டை தன் தோளில் சுமந்து வந்தார் இப்போது நாங்கள் சச்சினை எங்கள் தோளில் சுமக்க வேண்டிய நேரம் – கோலி” – இது செமையா இருக்கு

  14. உலக கோப்பை 2011 வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள்….

    //இலங்கை அணியைப்போல கடைசி பந்தில் 6 அடித்து அணியை வெற்றிபெறச் செய்து //

    தோனி சிக்ஸர் அடித்தது எந்த கடைசி பந்து கிரி?

  15. இறுதிப்போட்டியை பார்த்து விட்டு அமிதாப் பச்சன் கமெண்டியது :

    //ஒரே இடத்தில் ரஜினி, கஜினி (ஆமிர்கான்), டோணி ஆகியோர் இருந்தால், சாதிக்க முடியாதது என்று எதுவுமே கிடையாதே! – அமிதாப் பச்சன்…..//

  16. Why you are hating Australian team.
    They got talents and they won HAT-TRICK World Cups.
    Their selectors are giving importance to TALENT and not like INDIAN team selectors.
    Please justify

    • Hi..Shanmugam,

      I like your comment and I am a great fan of Australia. Victory only not determines the team strength and players capacity. No team can compare with Australia…. Even India also….

      • Thanks Yasin. You are correct. No one can beat their records in World Cup.. 34 Consecutive Wins, Hat-trick World cup wins, etc etc… If India beats Aussies when they are in PEAK (2003 and 2007 World Cup), i would accept India is Great … Lets see India’s performance in the forth coming matches

  17. விடாமுயற்சி . இது இந்தியர்களுக்கான பாடம் . நடத்தியது இந்திய அணி .

    சச்சின் போனால் தோற்பது அந்த காலம். கடைசிவரை போராடுவோம் அது இந்த generation காலம்.

    இந்த பாடத்தை நாடே படித்து புது இந்தியாவை உருவாக்குவோம். தன்னம்பிக்கையோடு.

    தோனியின் தலைமை , தலைமைக்கு ஒரு உதாரணம் . தலைவர்களுக்கு ஒரு பாடம்.

    ஜெய் ஹிந்த்

  18. நண்பன் ஒருவன் சொன்னது எனக்கு கிரிக்கெட் பற்றி ஒன்னும் தெரியாது , அப்புறம் ஏண்டா நீ பார்க்குற அப்படின்னு சொன்னதுக்கு அவன் சொன்ன பதில் இப்போ கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணிக்கு சப்போர்ட் பண்ணாம போனா என்னை தேச பக்தி இல்லை அப்படின்னு சொல்லிடுவாங்க அப்படின்னு சொன்னான்

    இதுதான் உண்மை ௧௨௧ கோடி இருக்கும் நாட்டில் ஒரே ஒரு விளையாட்டிற்கு மட்டும் இப்படி முக்கியதுவம் கொடுப்பது மட்டுமே எனக்கு பிடிக்க வில்லை மற்றபடி வெற்றி பெற்ற கிரிகெட் அணிக்கு வாழ்த்துகள்

    இதே ஆர்வத்தை புட் பால் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்தால் இந்தியா விளையாட்டில் உலக அளவில் பெருமைப்படும்

  19. ஆர்.சண்முகம், சலீம், ராஜ நடராஜன், ராமலக்ஷ்மி, முஹம்மத் யாசின், ஜமால், சங்கர், ஜெயதேவ் தாஸ், அருண், கோபி, ஷண்முகம், ஆனந்த் மற்றும் அரும்பாவூர் வருகைக்கு நன்றி

    @ஆர் சண்முகம் பிரார்த்தனையும் ஒரு காரணம் அதுவே காரணம் அல்ல.

    @ராமலக்ஷ்மி 🙂

    @சங்கர் அமைதி அமைதி 🙂 அந்த caption க்கு ஒரிஜினல் சொந்தக்காரர் தம்பி பட இயக்குனர் சீமான்.

    @கோபி தோனி அடித்த கடைசி பந்து 😉

    @ஷண்முகம் & யாசின்

    ஆஸி அணி திறமையான அணி என்பதில் எந்த சந்தேகமுமில்லை. நான் மட்டுமல்ல எவருமே மறுக்க முடியாது. திறமை மட்டும் இருந்தால் போதாது கொஞ்சம் அடக்கமும் வேணும். என்னமோ இவங்க தான் பெரிய லபக்கு மாதிரி பேசுவானுக. நம்ம அணி ஆஸி சென்று விளையாடிய போது என்னென்ன மொள்ளமாரித்தனம் பண்ணுனாங்க. இந்த பாண்டிங் ரொம்ப திறமையான ஆளு சொல்லப்போனா சச்சினையே சில நேரங்களில் மிஞ்சக்கூடியவர் சதத்தில் அவரை நெருங்கிக்கொண்டு இருப்பவர் இருப்பினும் சச்சின் போல ஏன் புகழ் பெற முடியவில்லை? வாய் வாய் வாய்.

    ஆஸி பீக் ல இருக்கும் போது வெற்றி பெற சொல்கிறீர்கள் அதை ஏன் மற்ற அணிகளுக்கும் நீங்கள் நினைக்க கூடாது.. ஏன் இப்ப அவங்க வெற்றி பெற முடியலை. அப்ப நாம் தோல்வி அடையும் போது நாம் பீக் ல இல்லாத போது அவங்க வெற்றி பெற்று விட்டார்கள் என்று கூறலாமா!

    இவர்கள் அணியே வார்ன் மெக்ராத் இல்லாம ஆட்டம் கண்டு விட்டது. இவர்கள் இருவரும் என்று விலகினார்களோ அன்றே ஆஸி ஆணி தோல்வி பெற ஆரம்பித்து விட்டது. இவர்கள் இருவரை நம்பித்தான் அந்த அணி இருந்ததா? அப்படிப்பட்ட வார்ன் சச்சின் அடித்த அடியில் மிரண்டு போய் நின்றது உங்கள் நினைவில் உள்ளதா?

    இப்போதும் கடும் சவாலாகவே இருக்கிறார்கள் இருப்பினும் நீங்க கூறும் பீக் இல்லையே! இவங்க பீக் ல இருந்த போது தானே பங்களாதேஷ் அணியிடம் தோல்வி அடைந்தார்கள்.. அது எப்படி?

    இவர்கள் அணியில் திறமையும் அடக்கமும் ஒரே சேர இருந்தவர் ஸ்டீவ் வாக் மட்டுமே. அதனாலே இன்னும் அனைவர் மனதிலும் இருக்கிறார்.. வெற்றி தோல்வி சகஜம் தான் அதுக்காக ரொம்ப ஓவரா ஆட்டம் போட்டால் இப்படித்தான்.

    ஆடுகளத்தில் இவர்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொள்வார்கள் என்று நான் கூற தனியாக கூற வேண்டியதில்லை. கீழ்த்தரமாக இவர்களைப்போல எந்த அணியும் நடந்து கொள்ளாது. மற்ற அணி வீரர்களை அசிங்க அசிங்கமாக திட்டி அவர்கள் மன உறுதியை குலைத்து விளையாடுவது ஒரு விளையாட்டா? அப்படி இருந்தும் நாம் ஆஸி யில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர்களுக்கு தண்ணி காட்டினோமே! அவர்கள் அணியில் “ஸ்டீவ் பக்னர்” என்று கூடுதல் நபர் இருந்தும்.

    இந்தியா ஒன்றும் சூப்பர் அணி என்று கூறவில்லை. நாளைக்கே கூட படு கேவலமாக தோற்பார்கள் ஆனால் அனைவரும் பயப்படும் ஆஸி அணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது இந்திய அணி மட்டும் தான். கேவலமாக தோற்கவும் தெரியும் மரண அடி கொடுக்கவும் தெரியும். இது தான் இந்தியா!

    @அரும்பாவூர் உங்கள் நண்பர் மிகைப்படுத்தி கூறுகிறார் 🙂 நம்ம ஊரில் கிரிக்கெட் அதிகம் பிடிக்கிறது அதற்க்கு என்ன செய்வது? அமெரிக்காவுல பேஸ்கட் பால் பிரபலம்..அங்கே போய் கிரிக்கெட் விளையாடுனா எவனும் பார்க்க மாட்டான்.. நீங்க கிரிக்கெட் ஆதரவு தரனும் என்று கூறினால் எப்படி அது போல தான் இது. இதற்கு அரசியல்வாதிகள் தான் நடவடிக்கை எடுக்கணும் பின் தானாக மக்கள் ஆதரவு தருவார்கள்.

    • Hello Mr.Giri Sir,

      Thanks for your reply sir, I am a new visitor for your site and some times only I have sent one or two commends before tht’s all. I am a true Indian I don’t want to hurt any one’s heart I will never do the same also in my life. But please remember one thing sir, Australia is always a Great team (Still No 1 in ODI format), now they need some changes in the team tht’s all. I will challenge you in 2015, wherever you are I will send a mail about AUSTRALIA VICTORY (2015 world cup)… and I will send CC Mr.Shanmugam also… (Giri sir don’t mistake me for my challenge because without your acceptance I made it)

      Sir, most of your posting very good to read and I am regularly reading your articles. Just for your information please try to visit the below sites if u not visited before…
      http://www.amuttu.com / http://www.sramakrishnan.com / I hope u will like the two sites..

      and don’t forget our challenge…. In 2015.

      Many regards
      Mohamed Yasin.,
      United Arab Emirates

  20. யாசின் நான் தான் என்னோட பதிலிலேயே தெளிவாக கூறி இருக்கிறேனே! 🙂 நம்ம ஆளுங்க தர்ம அடியும் கொடுப்பாங்க உடனே தர்ம அடியும் வாங்குவாங்க என்று. கொஞ்சம் போட்டி விளையாடி வெற்றி பெற்றாலே நம்ம ஆளுங்களுக்கு ஒரு தெனாவெட்டு வந்து விடும் அப்புறம் மொக்கையா தோற்ப்பாங்க. இதெல்லாம் நமக்கு சகஜம்.

    அப்புறம் நானும் கூறி இருக்கிறேன் ஆஸி திறமையான அணி தான் என்று. எனக்கு அவர்களின் திறமை மீது சந்தேகமில்லை அவர்களுடைய ஓவர் வாய் தான் எனக்கு பிடிக்கவில்லை. அனைவரையும் நக்கலாக எண்ணும் அவர்களின் மட்டமான குணம் தான் பிடிக்கவில்லை.

    எத்தனை வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு சிம்ம சொப்பனம் இந்திய அணி தான் 🙂

    என்னுடைய தளத்தை படிப்பதற்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டதில் ராமகிருஷ்ணன் அவர்கள் தளம் படித்து இருக்கிறேன் மற்றது படித்ததில்லை. படிக்கிறேன்.

    என்னை சார் என்று அழைக்கவேண்டாம் கிரி என்றே அழையுங்கள் போதும் 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here