அனைத்து நாட்களுமே நல்ல நாட்கள் தான் என்றாலும், குறிப்பிட்ட நாட்களுக்கு எப்பவுமே சிறப்பு / முடிவு இருக்கும், அது போல ஒரு நாள் தான் ஆங்கிலப் புத்தாண்டு.
முடிவு தான் முக்கியம்
சிலர் வழக்கமாக எடுக்கும் முடிவை இந்த வருடமும் எடுப்பார்கள், சிலர் புதியதாக முயற்சிப்பார்கள், சிலர் இந்த வருடத்தில் செய்ய வேண்டிய செயல்களை இறுதி செய்வார்கள், ஜிம்முக்கு போறேன்னு சிலர் முடிவு எடுத்து இருப்பார்கள் 🙂 .
என் வாழ்க்கையில் இதுவரை புத்தாண்டில், 20+ வருடங்களுக்கு முன்பு எடுத்த ஒரே முடிவு கோபப்படக் கூடாது என்பதைத்தான். Image Credit
அதை இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன். கோபப்படுகிறேன் ஆனால், மிக மிகக்குறைவு.
இதன் பிறகு பல முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தி வெற்றியும் பெற்று உள்ளேன் ஆனால், அவையெல்லாம் புத்தாண்டில் எடுத்த முடிவுகள் அல்ல . அவ்வப்போது திடீர் என்று தோன்றும், செயல்படுத்தி விடுவேன்.
எனவே, முடிவுகளை எடுக்க நல்ல நாள் பார்க்க வேண்டிய அவசியமில்லை ஆனால், அப்படி பார்த்தாலும் தவறில்லை. நாம் அவற்றைப் பின்பற்றுகிறோமா! என்பது தான் முக்கியம்.
என்ன முடிவுகள்?!
என்னென்ன முடிவுகளை எடுத்தால், உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று கூறுகிறேன், முடிந்தால் பின்பற்ற முயற்சியுங்கள்.
கோபம், அவசரம், எதிர்பார்ப்பு, சுய கௌரவம் (ஈகோ), கவலை, எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
உங்களுக்குத் தேவை பொறுமை, நேர்மறை எண்ணங்கள் ஆகியவை.
துவக்கத்தில் பின்பற்றுவது சிரமமாக இருக்கும் ஆனால், சில நாட்கள் பழகி விட்டால், பின்தொடர்வது எளிது. இதனால் கிடைக்கும் திருப்தி உங்களால் அளவிட முடியாது.
அனைத்துமே நல்லதாக நடப்பது போல உங்களுக்குத் தோன்றும். பிரச்சனைகளே நமக்கு இல்லையோ! என்ற எண்ணம் வரும். அனைவரும் நன்றாகப் பழகுவார்கள்.
எனவே, இவற்றைப் பின்பற்ற முயற்சியுங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் காணுங்கள்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள் 🙂 . இந்தாண்டு சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துகள்.
நல்லதே நினையுங்கள்! நல்லதே நடக்கும்!
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் … திருப்பதி பயண குறிப்புகள் முழுவதுமாக படிக்கவில்லை அதனால் பின்னர் அதை பற்றி பேசுவோம். வரும் வார இறுதியில் ஏலகிரி பயணம் போக உள்ளேன் … உங்கள் கட்டுரை பார்த்த பின்னால் அந்த இடம் ஞாபகம் வந்தது 25 20 வருடங்கள் முன்னே சென்றது .. இப்பொழுது எப்படி இருக்கிறது என்று பாப்போம்
உண்மைதான்:). முடிவுகளை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். செயல்படுத்துவதற்கான மன உறுதியே முக்கியம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
2020 புத்தாண்டில் எனக்கு நானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு நல்லாருப்போம்… நல்லாருப்போம்… எல்லாரும் நல்லாருப்போம் என்று வலைப்பூவின் முகப்பு பக்கத்தில் பேனர் வைத்து தொடங்கியிருக்கிறேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இனிமேல் முகத்துக்கு பவுடர் போட வேண்டாம் என்று முடிவு செய்து தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்.
இந்த ஆண்டு வேற எதுவும் முடிவுசெய்யவில்லை. நீங்கள் குறிப்பிட்டதைப்போல் எப்போது தோன்றுகிறதோ அப்போதே செயல்படுத்திவிடுவதுதான் சௌகர்யமாக இருக்கிறது.
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் திரைப்படம் தொடர்பாக எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் திரைப்படம் பற்றிய எனது எண்ணங்களை தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து ௨௦௨௦ல் தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.
@சரவணன் உங்கள் ஏலகிரி பயணம் எவ்வாறு இருந்தது? 🙂
@ராமலக்ஷ்மி நன்றி 🙂
@திருவாரூர் சரவணன் வாழ்த்துகள் 🙂 . நமக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போதே செயல்படுத்தி விடுவது நல்லது.
தலைவர் கட்டுரைகளுக்கு வாழ்த்துகள்