இந்திரா Zeon Cinemas | கோபி

3
Gobi Indira Zeon Cinema இந்திரா Zeon Cinemas | கோபி

கோபி இந்திரா திரையரங்க மறுசீரமைப்பு வெற்றிகரமாக முடிந்து 2018 நவம்பர் 4 கல்வித்துறை அமைச்சரும் எங்கள் தொகுதி MLA வுமான திரு செங்கோட்டையன் அவர்களால் இந்திரா Zeon Cinemas திறந்து வைக்கப்பட்டது.

இந்திரா Zeon Cinemas

மூன்று திரையரங்கங்கள் (Screen 1, 2, 3) இதில் Screen 1 பெரியது மற்ற இரண்டும் 150+ பார்வையாளர்கள் அமரலாம். மூன்றாவது Screen 3D வசதியுடன்.

முதல் நாள் என்பதால், மூன்று திரையரங்கிலும் பழைய திரைப்படங்களின் முன்னோட்டங்கள் ஓடியபடி இருந்தன, பார்க்க அனுமதிக்கப்பட்டது. ஒலி அமைப்பு அட்டகாசமாக இருந்தது.

சென்னை, கோவை திரையரங்குகளுக்குச் சற்றும் குறைந்தது அல்ல, மிகைப்படுத்தவில்லை.

4 முதல் 5 கோடி வரை செலவழிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட புதிதாகவே கட்டியிருக்கிறார்கள். மார்பிள், டைல்ஸ் என்று திரையரங்கு முழுதும் பளபளக்கிறது.

கோபிக்கு இது மிகப்பெரிய வசதியான, ஆடம்பரமான திரையரங்கம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

ஒப்பந்த முறையில் எடுக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளதாகக் கூறினார்கள்.

திரையரங்கம் எப்படியுள்ளது?

கோபி பேருந்து நிலையத்தில் இருந்து நடந்தே ஐந்து நிமிடத்தில் திரையரங்கை அடைந்து விடலாம். பார்வையாளர்களுக்கு மிக வசதியான இடம்.

திரையரங்கு நவீன முறையில் உள்ளது.

இருக்கைகள், நேராக அமர்ந்து பார்க்கும் படியும், சாய்ந்து அமரும் படியும் உள்ளது. சென்னையிலும் உள்ளது என்றாலும், இது போன்ற வித்யாசமான இருக்கை சென்னையில் நான் பார்க்கவில்லை. நானும் முதலில் கவனிக்கவில்லை, அக்கா பையன் கூறிய பிறகே கவனித்தேன்.

திரையரங்கு வெளியே அமர காத்திருக்கும் அறை மற்றும் கூடுதல் இருக்கைகள்.

மூன்று திரையரங்குகளுமே தரை தளத்திலேயே இருப்பது வயதானவர்களுக்கு வசதி.

இணையம் மூலமாக முன்பதிவு செய்ய முடியும் (TicketNew)

வாகனங்கள் நிறுத்துவதற்குப் போதுமான இடம்.

கோபி திரையரங்குகள்

கோபியில் தற்போது நான்கு திரையரங்குகள் உள்ளன. இந்திரா, நாகையா, ஸ்ரீ வள்ளி, ஜெயமாருதி. சரவணா மற்றும் சாந்தி திரையரங்கங்கள் இடிக்கப்பட்டு விட்டன.

நாகையா செயல்பாட்டில் இல்லை. ஜெயமாருதி சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்ரீ வள்ளி மிகப்பெரிய திரையரங்கம் ஆனால், பராமரிப்பில்லை. எனவே, இனி போட்டியால் கூட்டம் ஈர்ப்பது கடினமே! இவர்களும் திரையரங்கைப் புதுப்பித்தே ஆக வேண்டும்.

இதில் இந்திரா மற்றும் ஸ்ரீ வள்ளி இரண்டும் எங்கள் உறவினருடையது.

இந்திரா பெரிய நகரங்களுக்கு இணையான திரையரங்காக உருவாக்கப்பட்டது மகிழ்ச்சி.

இது போலக் கட்டுவது எளிது ஆனால், அதைத் தொடர்ச்சியாகப் பராமரிப்பது தான் மிகச் சிரமம். அதுவும் கோபி போன்ற கிராமங்கள் சூழ்ந்த நகரில்.

ஜெயமாருதி இதில் வெற்றி பெற்று மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வந்துள்ளது, சிறப்பாகவும் பராமரிக்கிறார்கள்.

இதையே இந்திராவும் பின்பற்றினால், மக்களும் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்பலாம். “சத்யம்” திரையரங்கை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு திரையரங்கைப் பராமரித்தால், நிச்சயம் மக்களிடையே வரவேற்பை பெறலாம்.

இந்திரா திரையரங்குக்கு ஒரு திரை ரசிகனாக வாழ்த்துகள். இது போல ஒரு திரையரங்கம் எங்கள் சுற்று வட்டாரத்திலேயே இல்லை என்று பெருமையாகக் கூறலாம்.

மக்களின் ஆதரவைப் பெற்று சிறப்பான வெற்றி பெற வாழ்த்துகள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. புகைப்படங்களை பார்க்கும் போது திரையரங்கம் மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது!!! இவ்வளவு கோடிகள் செலவு செய்து வருமானம் எப்படி ஈட்டுவார்கள் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது!!! மிகவும் கடினமான சூழ்நிலை தான்… சின்ன தொழிலில் ஈடுபடும் போதே பல்வகையான இடர்கள் இருக்கிறது..

    இதுபோல தொழிலில் அதிக அளவில் முதலீடு செய்து வெற்றி பெற வேண்டுமெனில் மிக கடுமையான உழைப்பும் / காலத்திற்கு தக்க தங்களை மெருகேற்றி கொள்வதும் மிக அவசியம்..இலையெனில் 10 / 11 ஆக காணாமல் போக வாய்ப்புண்டு.. இவர்களின் புது முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்… பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின் நீங்க சொன்ன மாதிரி முதலீட்டை எடுக்க சிறிது காலமெடுக்கும்.

    @தமிழ்நெஞ்சம் நல்லா இருக்கீங்களா? 🙂

    சிற்றுண்டி கட்டணம் மற்ற திரையரங்குகளை ஒப்பிடும் போது குறைவே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here