அங்காடித்தெரு (2010)

24
அங்காடித்தெரு

ங்காடித்தெரு படத்தில் சென்னை சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளின் நிஜ முகங்களை நார் நாராக கிழித்து தொங்க விட்டு விட்டார் இயக்குனர் வசந்தபாலன். Image Credit

குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னையில் ரங்கநாதன் தெருவில் உள்ள ஸ்டோர்ஸ்ல் வேலைக்குச் சேரும் பலரது நிலையை எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் அப்படியே காண்பித்துள்ளார்கள்.

கதை என்னவோ சுருக்கமானது தான் அதில் கூறப்பட்டுள்ள காட்டப்பட்டுள்ள செய்திகள் கல் நெஞ்சை தவிர மற்ற அனைவரையும் உலுக்கி விடும்.

அங்காடித்தெரு

வியப்பான விஷயம் என்னவென்றால்.. சென்னை எவ்வளவு பெரிய நகரம்! அது எத்தனை கோடி மக்களைக் கொண்டது!! அப்படிப்பட்ட நகரில் மக்கள் கூடும் பொது இடங்களில் பல காட்சிகளை எடுத்து உள்ளார்கள்.

ஒருவர் கூடக் கேமரா பார்க்கவில்லை, அப்படியே இருந்தாலும் இதற்காகத் தேடிக்கண்டு பிடித்தால் தான் உண்டு. நிஜமாவே அசத்தல் தான்.

சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளில் ரொம்ப அநியாயமாக நடந்து கொள்வார்கள் என்று தெரியும் மற்றும் செய்திகளிலும் சரவணா ஸ்டோர்ஸ் பற்றிய சர்ச்சைகள் வந்து அமுங்கி போனதும் தெரிந்தது தான்.

ஆனால் இதைக் காட்சியில் பார்த்த போது மிரண்டு போய் விட்டேன்.

வசந்த பாலன்

இப்படிக்கூட நடக்குமா என்று! வசந்த பாலன் இதில் ஒரு சில காட்சிகளை நடப்பதில் பாதியைத் தான் காட்டியுள்ளேன் என்று கூறியுள்ளது வயிற்றை புரட்டி விட்டது.

இந்தப்படமே ஃப்ளாஷ் பேக்கில் நடப்பதாகத்தான் வருகிறது (வெயில் படம் போல) இந்தப்பட துவக்கத்தில் ஒரு ரணகளமான விபத்து நடப்பதை காட்டி இருப்பார்கள்.

நிஜமாகவே ஒரு விபத்தை நேரில் பார்த்தது போல இருந்தது.

இதில் முக்கிய கதாப்பாத்திரங்களான மகேஷ், அஞ்சலி, பாண்டி (கனாக்காணும் காலங்கள் விஜய் டிவி), A.வெங்கடேஷ் மற்றும் பழ கருப்பையா அனைவருமே நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள்.

குறிப்பாக அஞ்சலியும் கடையின் மூன்றாவது தள சூப்பர்வைசராக வரும் A.வெங்கடேஷும் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள். மகேஷ்க்கு இது முதல் படமாம் நம்ப முடியவில்லை.

பாண்டி வழக்கமான நகைச்சுவையுடன் படத்தை இறுக்கத்தில் இருந்து கொஞ்சம் தளர்த்துகிறார்.

ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் மிகை நடிப்போ என்று எண்ணத்தோன்றியது.

சினேகா அவர்கள் கடைக்கு ஷூட்டிங்கிற்காக வர அதை மற்றவர்களிடம் கூறி அலப்பறை செய்வது குசேலன் படத்தில் வடிவேல் ரஜினியை பார்த்து விட்டுச் செய்யும் காட்சி நினைவிற்கு வந்தது, சிறப்பாக நடித்து இருந்தார்.

அஞ்சலி

அஞ்சலி காட்சிக்குக் காட்சி மிரட்டல் நடிப்பில் அசத்துகிறார். ஒரு துடிப்பான ஏழ்மைக் குடும்பப் பெண்ணின் மன நிலையை முக பாவனையை அப்படியே பிரதிபலித்துள்ளார்.

இவரைப் பாராட்டுவதா அல்லது அவரை அப்படி நடிக்க வைத்த வசந்தபாலனை பாராட்டுவதா என்று தெரியவில்லை. பல இடங்களில் கண்கலங்கவும் வைத்து விடுகிறார்.

அடுத்த டெர்ரர் நடிப்பு A.வெங்கடேஷ் தான், ஒட்டு மொத்த பார்வையாளர்களின் ஏகோபித்த வெறுப்பை சம்பாதித்து தன் நடிப்பிற்கு பெருமை தேடிக்கொண்டார்.

இவரை வெளியே யாராவது பார்த்தால் கூட அடித்து விடுவார்கள் போல.. அந்த அளவிற்கு ரணகளமாக நடித்துள்ளார். அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் சிம்ம சொப்பனம் என்றால் அது இவர் தான்.

இவர் பார்வையிலிருந்து எவரும் தப்ப முடியாது..மாட்டினால் தர்ம அடி தான். பெண்களாக இருந்தால் விசாரிக்கும் முறை!!! வேறு.

பலரின் வயித்தெரிச்சலை கொட்டி இருப்பார் கண்டிப்பாக 🙂 .

மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு அவரைத் திட்டுகிறார்களோ அந்த அளவிற்கு நடிப்பில் வெற்றி பெற்று இருக்கிறார் என்றே அர்த்தம்.

படத் துவக்கத்தில் அங்குப் பணிபுரிபவர்கள் சாப்பிட்டிற்கு அடித்துக் கொள்வதைப் போலக் காட்டி இருப்பார்கள், ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அதுபோல இல்லாமல் அமைதியான முறையில் இருக்கும்.

படத்தின் முடிவு வழக்கமான முடிவாக இல்லாமல் இருந்தாலும் வேறு மாதிரி இருந்து இருக்கலாமோ! என்று தோன்றியது.

இவை மட்டுமே எனக்கு படத்தில் குறைகளாக தென்பட்டது.

ரங்கநாதன் தெரு

படத்தில் இவர்கள் கதை மட்டுமல்லாது ரங்கநாதன் தெருவில் உள்ள பலரின் கதையையும் உறுத்தாமல் காட்சி அமைப்பை மீறாமல் எடுத்துள்ளார்கள்.

வசந்தபாலன் ஒருவராவது நம் கஷ்டத்தை உலகறிய வைத்தாரே! என்று நினைத்து இருப்பார்களோ!

பலர் படத்தின் காட்சியமைப்பைத் தங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கண்ணீர் விட்டு இருப்பார்கள் என்பது உறுதி.

இதில் கூடக் குறைவாக இருக்கலாம் ஆனால் இதைப் போல நடக்கிறது என்பது உண்மை தான் யாராலும் மறுக்க முடியாது. வசந்த பாலன் இதற்காக ஹோம் வொர்க் செய்ததாக கேள்விப்பட்டேன்.

வசந்தபாலன் சார்! உங்களை எத்தனை பாராட்டினாலும் போதாது.. உங்களை அந்தக் கடைகளில் வேலை செய்பவர்கள் பலர் மானசீகமாக நன்றி தெரிவித்து இருப்பார்கள்.

இதுவே நீங்கள் பெற்ற பெரிய விருது. இதை விடவா உங்களுக்கு ஒரு பெரிய விருது கிடைத்து விடப்போகிறது!

இந்தப்படம் எடுக்கப்பட்டு ஒருவருடமாகியும் வெளியிடாமல் வைத்து இருந்து தற்போது தான் வெளியிட்டு இருக்கிறார்கள்

இந்தப்படத்தை அனைவரும் பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன்.

Starring Mahesh, Anjali, Pandi, A. Venkatesh, Pazha Karuppaiah, Sneha (Cameo)

Music by Vijay Antony, G. V. Prakash Kumar

Directed by Vasanthabalan

Written by Vasanthabalan

Cinematography Richard Maria Nathan

Editing by A. Sreekar Prasad

Studio Ayngaran International

Distributed by Ayngaran International

Produced by K. Karunamoorthy C. Arunpandiyan

Release date(s) 26 March 2010

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

24 COMMENTS

  1. //படம் பார்த்து முடித்த போது ம்ம்ம் வசந்த பாலன் போன்ற இயக்குனர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமாவை ஹீரோயிசம் மற்றும் எந்த குத்துபாட்டு மசாலா படங்களாலும் அழித்து விட முடியாது என்றே தோன்றியது. //

    100 கோடியில் தயாராகும் மாஸ்டர் மசாலாவுக்கு இது பொருந்துமா ? அது வெளியாகும் நேரத்தில் இது போன்ற படங்கள் வந்து செல்வதாவது தெரியுமா ?

  2. //என்னால் நம்பவே முடியவில்லை ஒருவர் கூட கேமரா பார்க்கவில்லை,//

    படம் மொபைல் கேமராவில் எடுத்து இருப்பார்களோ !
    🙂

  3. //
    கோவி.கண்ணன் said…
    100 கோடியில் தயாராகும் மாஸ்டர் மசாலாவுக்கு இது பொருந்துமா ?//

    சிறு திருத்தம் அது 150 கோடி. அனைத்து படங்களுக்கும் பொருந்தும். மசாலா படங்களை நான் எதிர்க்கவில்லை அனைத்து படங்களுமே வரவேண்டும் நானும் மசாலா படங்களின் ரசிகன் தான். என்ன! நான் அதை மட்டுமல்லாமல் அனைத்து படங்களையும் ரசிக்கிறேன். பல தரப்பட்ட ரசனை உள்ள மக்களும் இருக்கிறார்கள். ஆனால் இவைகளின் எண்ணிக்கை அதிகமாவது வருத்தம் அளிக்கிறது அவ்வளவே! அங்காடித்தெரு போன்ற படங்கள் மட்டுமே வந்தாலும் அனைவருக்கும் சலிப்பு தட்டி விடும்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள எந்திரன் மசாலாக படமாக இருந்தாலும் பல நாட்டினரை அதன் தொழிநுட்ப விஷயங்கள் கவர்ந்தால் அதுவும் நமக்கு பெருமை தான். கலைப்படமாக இருந்தாலும் உணர்வு படமாக இருந்தாலும் மசாலாக படமாக இருந்தாலும் சரி. அது மற்றவர்களை எப்படி சென்றடைகிறது என்பதே முக்கியம். பெருமை எதில் கிடைத்தாலும் அதில் உள்ள திறமைக்கு தான் மதிப்பு கொடுக்க வேண்டும். மசாலா படம் என்பதால் அதில் உள்ள திறமை எந்த விதத்திலும் குறைந்து விடுவதில்லை.

    எனக்கு ஒரு விளக்கம் கொடுக்க வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி 🙂

    //அது வெளியாகும் நேரத்தில் இது போன்ற படங்கள் வந்து செல்வதாவது தெரியுமா ?//

    இதில் என்ன சந்தேகம்! எந்தப்படம் நல்ல படம் என்றாலும் தெரியும். குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட எந்த ஒரு ஸ்டார் வேல்யுவும் இல்லாத தமிழ்ப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகவில்லையா! படத்தின் கதையின் அளவில் வேண்டும் என்றால் பார்வையாளர்கள் எண்ணிக்கை மாறலாம். அதற்க்கு மக்கள் ரசனை மாற வேண்டும். அதற்க்கு இன்னும் காலம் எடுக்கும்.

    //படம் மொபைல் கேமராவில் எடுத்து இருப்பார்களோ //

    நிஜமாகவே ஆச்சர்யப்பட்டு போனேன்.

  4. நன்றி கிரி உங்கள் பதிவுக்கு
    கண்டிப்பாக தியேட்டர் சென்று பார்க்கிறேன்
    நீங்கள் சொல்வது போல வசந்தபாலன் போன்ற இயக்குனர்கள்
    இருக்கும் வரை நல்ல படங்களுக்கு குறைவு இருக்காது

  5. விமர்சனம் அருமை. ஒப்பனை இல்லாத பாராட்டுக்கள். படத்தை பார்க்க வேண்டுமென்கிற ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்.

  6. கிரி ,

    படம் பார்த்துவிட்டேன் ,அருமையான படம் ,நல்ல விமர்சனம் ,அண்ணாச்சிகளின் மறுபக்கத்தை ரங்கநாதன் தெருவிலேயே கிழித்து தோலுரித்து தொங்கவிட்டுள்ளார் வசந்தபாலன் !!!!!!

  7. நல்ல விமர்சனம், படம் பார்த்து விட்டு பிறகு சொல்கிறேன், படத்தின் trailer மட்டுமே இதுவரை பார்த்து உள்ளேன், ஹீரோவின் தேர்வு பற்றி விஜய் டிவியில் பார்த்த பொழுது விழுந்து விழுந்து சிரித்தேன், நாயகி ஏற்கனவே "தமிழ் MA"வில் இதை போன்றே ஒரு கதாபத்திரத்தை செய்ததால் இன்னும் மிளிர்கிறார்…

  8. Giri,
    naanum padam pathuten romba nalla iruku.. neraiya scena la kann kalangiten..superb review thala

    Sweet Madhumidha,
    Please maintain some basic decency while talking about others. By any chance have u visited "Kovi Kannan"'s site?? He always don't like Rajini but at the same time his writings are always neat and clean. Avoid telling them as "idiot" and all. Infact I am hard core rajini fan but always we dont have any rights to talk rude about others. Hope u will take it in the right sense

    Thanks

  9. // r.v.saravanan kudandhai said…
    நீங்கள் சொல்வது போல வசந்தபாலன் போன்ற இயக்குனர்கள் இருக்கும் வரை நல்ல படங்களுக்கு குறைவு இருக்காது//

    மாறாமல் இருக்கும் வரை 😉

    ==========================================

    // ராமலக்ஷ்மி said…

    விமர்சனம் அருமை. ஒப்பனை இல்லாத பாராட்டுக்கள். படத்தை பார்க்க வேண்டுமென்கிற ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்.//

    நன்றி ராமலக்ஷ்மி

    =================================

    // எம்.எம்.அப்துல்லா said…

    படத்தில் குறையான ஒரே விஷயம் பிண்ணனி இசை. அது மட்டும் சரியா இருந்திருந்தா ஃபீல் இன்னும் ஏறி இருக்கும்//

    இருக்கலாம்.. நான் படத்தில் ஒன்றி இருந்ததால் பின்னணி இசை பற்றி அவ்வளவாக யோசிக்கவில்லை.

    =====================================

    // shankar said…

    கிரி ,
    படம் பார்த்துவிட்டேன் ,அருமையான படம் ,நல்ல விமர்சனம் //

    நன்றி ஷங்கர்

    ==============================

    // Logan said…

    ஹீரோவின் தேர்வு பற்றி விஜய் டிவியில் பார்த்த பொழுது விழுந்து விழுந்து சிரித்தேன்//

    நானும் நேற்று தான் விஜய் டிவி யில் பார்த்தேன்.. நல்லா இருந்தது!

    //நாயகி ஏற்கனவே "தமிழ் MA"வில் இதை போன்றே ஒரு கதாபத்திரத்தை செய்ததால் இன்னும் மிளிர்கிறார்…//

    நான் இன்னும் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை ஆனால் பார்க்க வேண்டும் என்கிற வரிசையில் உள்ளது

    ======================================================================

    // sweet said…

    hi

    ur review was nice…//

    நன்றி மதுமிதா

    //hey don't reply to this idiot govi kannan. he don't know how to argue? //

    மதுமிதா அனைவரும் ஒரே மாதிரி இல்லை ..மாற்றுகருத்துக்கள் வரத்தான் செய்யும். அதற்காக இதைப்போல கூறுவது ஏற்றுகொள்ளத்தக்கதாக இல்லை.

    //but avar kurai solla urimai irukku.. avaroda website-la but inga vandhu en kurai sollanum?//

    கொஞ்சம் பொறுமையா யோசித்து பாருங்க! நாம ஒரு கருத்தை முன்னிறுத்தும் போது நமக்கு ஆதரவாகவே கருத்துக்கள் வந்தால் அதனால் என்ன பயன்! மாற்றுக்கருத்துக்களும் வந்தால் மட்டுமே நம்மிடம் உள்ள குறைகளை கண்டறிய முடியும்.. இல்லை என்றால் நாம் கூறுவது தான் சரி என்கிற ரீதியில் போய்க்கொண்டு இருப்போம். இதை கோபப்படாமல் யோசித்து பாருங்கள்.

    //avarukku pidikkadhu-na engalukkum pidikkama irukkanuma enna? hmmm//

    அதெல்லாம் இல்லை மதுமிதா.. மற்றவங்க சொல்வதால் நமக்கு பிடித்தவை இல்லை என்று ஆகி விடுமா! மற்றவர்கள் அவங்க கருத்தை கூறுகிறார்கள்..நாம நம்ம கருத்தை கூறுகிறோம். அவ்வளவு தான்… மற்றவர்கள் நம் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் நம் கருத்து எந்த விதத்திலும் குறைந்து விடுவதில்லை.

    புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

    ==================

    தீபிகா சரவணன் நன்றி .

    =====================

    // Arun said…

    Giri,
    naanum padam pathuten romba nalla iruku.. neraiya scena la kann kalangiten.//

    அருண் நிஜமாலுமே அனைவரும் போற்றக்கூடிய படம்.

    ===================

    // Senthilkumar Manavalan said…

    கிரி, நேற்று நான் "A girl with dragon tattoo" (http://en.wikipedia.org/wiki/The_Girl_with_the_Dragon_Tattoo) படம் பார்த்தேன். நன்றாக உள்ளது. முடிந்தால் பார்க்கவும்.//

    அப்படியா! பார்த்துடுவோம்.. இணையத்தில் தரவிறக்கம் செய்யணும்.

    ===================

    // Somz said…

    கிரி ரோம்ம்ம்மம்ப பீல் ஆயிட்ட மாதிரி தெரியுது.//

    அப்படியாயாயாயா தெரியுது! 🙂 உண்மை தான் சோம்ஸ்.. கஷ்டப்பட்டவனுக்கு தானே அந்த வலியும் தெரியும். நீ படம் பார் அப்ப தான் நான் சொன்னதன் அர்த்தம் புரியும். Try to watch it in screen 🙂

  10. okey arun

    but avar kurai solla urimai irukku.. avaroda website-la

    but inga vandhu en kurai sollanum?

    avarukku pidikkadhu-na engalukkum pidikkama irukkanuma enna? hmmm

  11. //நீங்கள் குறிப்பிட்டுள்ள எந்திரன் மசாலாக படமாக இருந்தாலும் பல நாட்டினரை அதன் தொழிநுட்ப விஷயங்கள் கவர்ந்தால் அதுவும் நமக்கு பெருமை தான். //

    அடிவிழும். நான் எங்கே எ ந் தி ர ன் . . . என்று குறிப்பிட்டு இருக்கிறேன்……….?

  12. // Sadhasivam said…
    அங்காடி தெரு – ரொம்ப எதிர் பார்த்த படம். அதை வசந்த பாலன் ஒருவர் தான் நன்றாக தந்துள்ளார். //

    நானும் இதை வழிமொழிகிறேன் 🙂

    //மொத்தத்தில் இதை சும்மா விமர்சனம் பண்ண வேண்டும் என்றால் எதையாவது சொல்லலாம். ஆனால் எனக்கு வெயில் இன்னும் பிடித்து இருந்தது காரணம் பசுபதி அதில் வாழ்ந்து இருந்தார்//

    வெயில் படத்தில் பசுபதி கலக்கி இருப்பார்! அதிலும் காட்சி அமைப்புகள் ரொம்ப ரொம்ப இயல்பாக இருக்கும். பசுபதி திருடி விட்டார் என்று கடைசியில் அவர் வீட்டில் அனைவரும் சந்தேகப்பட ..அதை ஜீரணிக்க முடியாமல் அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் அசத்தி இருப்பார். பரத்தை சிலர் வெட்ட வரும் போது அவர்களை அடிக்கும் இடம் சிறப்பாக எடுக்கப்பட்டு இருக்கும்.

    //மிக நிதானமான விமர்சனம் கிரி. வழக்கமா இருக்கற உங்கள் மெல்லிய நகைசுவை சுத்தமா இல்லை. படத்தின் கதை களன் உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள்//

    நீங்கள் கூறுவது சரி தான் சதா. எனக்கு நகைச்சுவை ரொம்ப பிடிக்கும் அதை எனது பதிவுகளில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது சரியாக பயன்படுத்திக்கொள்வேன். இந்தப்படம் உணர்வு பூர்வமான படம் இதில் அவ்வாறு செய்தால் படத்தின் மீதான அழுத்தம் குறைந்து விடும் என்று கருதியே அதைப்போல எழுதவில்லை.

  13. அங்காடி தெரு – ரொம்ப எதிர் பார்த்த படம். அதை வசந்த பாலன் ஒருவர் தான் நன்றாக தந்துள்ளார்.

    மிக அருமையான கதை. கதாபாத்திரங்கள் எல்லாம் நன்றாக நடித்து உள்ளார்கள். பின்னணி இசை சில இடங்களில் முரன்படாக உள்ளது.

    மொத்தத்தில் இதை சும்மா விமர்சனம் பண்ண வேண்டும் என்றால் எதையாவது சொல்லலாம். ஆனால் எனக்கு வெயில் இன்னும் பிடித்து இருந்தது காரணம் பசுபதி அதில் வாழ்ந்து இருந்தார்.

    மிக நிதானமான விமர்சனம் கிரி. வழக்கமா இருக்கற உங்கள் மெல்லிய நகைசுவை சுத்தமா இல்லை.
    படத்தின் கதை களன் உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள்.

  14. நீங்கள் சொல்வது போல வசந்தபாலன் போன்ற இயக்குனர்கள் இருக்கும் வரை நல்ல படங்களுக்கு குறைவு இருக்காது//

    மாறாமல் இருக்கும் வரை 😉

    ha…ha.. correct

  15. ***//
    கோவி.கண்ணன் said…
    100 கோடியில் தயாராகும் மாஸ்டர் மசாலாவுக்கு இது பொருந்துமா ?//

    சிறு திருத்தம் அது 150 கோடி. ***

    சிரிக்கிறேன் :))))

  16. ***நீங்கள் குறிப்பிட்டுள்ள எந்திரன் மசாலாக படமாக இருந்தாலும் பல நாட்டினரை அதன் தொழிநுட்ப விஷயங்கள் கவர்ந்தால் அதுவும் நமக்கு பெருமை தான். ***

    அதாவது, ஸ்டார் வார்ஸ், லார்ட் ஆஃப் த ரிங், அவதார் போன்ற படங்கள் ஹாலிவுட்க்கு பெருமை சேர்க்கவில்லை என்று சொல்லமுடியாது!

    முக்கியமாக சினிமா ஒரு வியாபாரமும்கூட! 🙂 சீர் திருத்தப்பள்ளி அல்ல!

  17. இந்தப் படத்த சென்னையில பாத்தேன், பத்து பெத்தோட என் மச்சானைக் கூட்டிக்கிட்டுப் போயி சரவணா ஸ்டோர் உள்ள இருக்குற அத்தனை மேலாளர் பயல்களையும் சட்டை காலரை பிடித்து “உங்களுக்கெல்லாம் மனிதாபிமானம் மனசாட்சியே இல்லையாடா” என்று கேட்டு விட்டு, அந்தக் கடை முதலாளியை மூஞ்சில காரி துப்பிட்டு வரணும் போல தோணிச்சு. ஆனா செய்ய முடியல.
    150 கோடி ரூபா போட்டு படம் எடுக்குறவன் இதுவரைக்கும் கலை நயமான படம் எதுவும் குடுத்ததா தெரியலீங்கோ! அவனோட சொந்தத் தயாரிப்பு எல்லாம் சீப்பா முடிசுடுவாரு, இயக்கமும் வேறு யாருகிட்டயாவது குடுத்துடுவாரு, நல்லா காசும் பாத்துடுவாரு, இவரு எடுக்குற படமெல்லாம் பணம் போடுறவன் வேற எவனோ, ஊத்திக்கிச்சுன்ன அவன்தான் தலை மேல துண்டு போடணும், இவருக்கு ஒன்னும் கவலை இல்ல. ரொம்ப புத்திசாலி!

  18. வாவ்.சூப்பர் .இது இந்தியாவில் மட்டுமல்ல சிறிலங்காவிலும் நடக்கும் சம்பவங்களை அழகாக கட்டுகிறது .வசந்தபாலனுக்கு தேங்க்ஸ் அண்ட் ஸ்மார்ட் சலுட் பிரோம் வினோஜ்(ஸ்ரீலங்கா,pussellawa )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here