இந்தியாவிலேயே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மாநகரங்களில் முதல் இடத்தில் இருப்பது சென்னை. சென்னை பேருந்து எண்ணிக்கை எந்த நகரத்திலும் கிடையாது. Image Credit
சென்னையில் நடுத்தர மக்கள் அதிகம் என்பதால், பொதுப் போக்குவரத்தையே நம்பி உள்ளார்கள், குறிப்பாகப் பேருந்துகள்.
பச்சை வண்ணப் பேருந்து
பச்சை வண்ண பேருந்தாக இருந்த போது நன்கு அகலமாகவும், உட்கார வசதியாகவும் இருந்தது.
ஆனால், மாற்றம் செய்கிறேன் என்று பேருந்து அளவை குறைத்து, இருக்கையின் இட வசதியைக் குறுக்கி பலரின் முட்டியை பெயர்த்து விட்டார்கள்.
வழக்கமாக எல்லோரும் புதுப் பேருந்தில் ஏறவே விருப்பப்படுவார்கள் ஆனால், சென்னையில் எப்பாவது பழைய பச்சை வண்டி உடன் வந்தால், அதில் ஏறவே பலரும் விரும்புவார்கள்.
பொதுப் போக்குரவத்தை அதிகம் பயன்படுத்தியவன், பயன்படுத்துகிறவன் என்ற முறையில் பேருந்து பற்றி அக்குவேறு ஆணி வேறாக எனக்குத் தெரியும்.
பேருந்து கட்டண உயர்வு, சொகுசு பேருந்து என்ற பெயரில் மனசாட்சியே இல்லாமல் ஓடும் டப்பா பேருந்து, விரைவு பேருந்து என்று மிகப்பெரிய கொள்ளை தற்போது நடைபெறுகிறது.
சாதாரணக் கட்டண பேருந்துகள் கண்களில் படுவதில்லை.
கட்டண உயர்வு
கட்டண உயர்வு வந்தவுடனே மக்கள் கூட்டம் டமால் என்று குறைந்து விட்டது.
பலர் ரயில், ஷேர் ஆட்டோ, Cab, இரு சக்கர வாகனங்கள் என்று மாற ஆரம்பித்து விட்டனர்.
ரயிலில் கூட்டம் அள்ளுகிறது, பேருந்து கட்டண உயர்வுக்குப் பிறகு 30% பயணியர் கூட்டம் ரயிலில் அதிகரித்ததாகச் செய்திகளில் வந்தது.
என் குடும்பத்தில் (4) ஒரு இடத்துக்குச் செல்ல, நேரடி பேருந்து இல்லையென்று இரண்டு பேருந்து மாற வேண்டும் என்றால், குறைந்த பட்சம் ₹100 முதல் ₹120.
இதையே காரில் சென்றால் எனக்கு ₹130 முதல் ₹140 தான் ஆகும். வீட்டிலேயே ஏறி, நான் செல்பவரின் வீட்டின் அருகேயே இறங்க முடியும்.
இதோடு கூட்ட நெரிசல் இல்லை, குளிர் சாதன வசதி, அடிதடி இல்லாமல் சென்று விட முடியும்.
இது போலக் குடும்பமாகச் செல்பவர்கள் பலர் காரையே தேர்வு செய்கிறார்கள். வருவதெல்லாம் சொகுசு பேருந்து என்றால் அப்புறம் என்ன செய்வது?!
சொகுசு பேருந்தில் கண்ணகி சிலையில் இருந்து கலங்கரை விளக்கத்துக்கு ₹13.
கோபியில் இருந்து ஈரோடு செல்வதற்கே ₹22 தான் ஆகிறது. மூன்று கிலோமீட்டர் கூட இல்லாத இடத்துக்கு ₹13 என்றால் எப்படிங்க!
நியாயமே இல்லை. என்னைப் போலத்தான் பலரின் நிலை.
இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு
இரு சக்கர வாகனம் இருந்தாலும், நெரிசல் காரணமாக, தூரமான இடங்களுக்குப் பேருந்தில் தான் செல்வேன் ஆனால், நானே தற்போது கணக்கு போட்டுப் பார்த்து, அதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு வாகனத்தில் செல்கிறேன்.
ஓட்டுநர், நடத்துனர்கள் எல்லாம் கமிஷன் குறைந்து விட்டது என்று புலம்புகிறார்கள். பல வழித்தடங்கள் கூட்டம் இல்லாமல் பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன.
அதோடு பலர் ₹1000 பயண அட்டை வைத்து இருப்பதால், நடத்துநர் பயணிகளிடம் போனாலே இதை எடுத்துக் காட்டி விடுகிறார்கள்.
அரசு ₹1000 பயண அட்டை வசதியை நீக்கினால், கூட்டம் கடுமையாகக் குறையும்.
பேருந்தே சாய்ந்து விடுவது போலச் செல்லும் நிலை மாறி, காலி பேருந்துகளாகச் சென்று கொண்டு இருக்கின்றன.
காலை மாலை நெரிசல் நேரங்களில் மட்டுமே சில வழித்தடங்களில் கூட்டமுள்ளது மற்ற நேரங்களில் கடை காற்று வாங்கிக்கொண்டுள்ளது.
குறைக்கப்பட்ட குறைந்த பட்ச கட்டணம்
கூட்டம் குறைந்த காரணத்தால், குறைந்த பட்ச கட்டணமான ₹6 யை ₹5 என அரசு மாற்றியுள்ளது ஆனாலும், கூட்டம் கூடியபாடில்லை.
சாதாரணக் கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளனர் ஆனால், மக்கள் இன்னும் கட்டண உயர்வு மன நிலையில் இருந்து மீளவில்லை என்பதையே காட்டுகிறது.
முன்னரே கூறியபடி கட்டண உயர்வு பிரச்சனையைத் தீர்க்காது.
ஊழலை ஒழிக்காமல் கட்டணத்தை மட்டும் உயர்த்திக் கொண்டே செல்வது கடும் நட்டத்தையே ஏற்படுத்தும்.
மாற்று போக்குவரத்துக்கு மக்கள் பழகி விட்டால், கட்டணத்தைக் குறைத்தும், தரமான பேருந்துகளை மாற்றினாலும் திரும்ப மக்களைப் பேருந்துப் பக்கம் இழுப்பது கடினம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்கப்பூரில் 2 அல்லது 3 பஸ் இல் முழுமையாக பயணம் செய்தாலே சிங்கப்பூரின் பெரும்பான்மையான பகுதிகளை பார்க்கலாம்
அதே போல் சென்னையை சுற்றி பார்க்க ஏதாவது பஸ் நம்பர்கள் உண்டா ?
பள்ளி பருவத்தில் எங்க ஊரிலிருந்து பள்ளிக்கு செல்ல ( 3 கி.மி) கட்டணம் 1 ரூபாய்.. தற்போது 8 ரூபாய்.. நினைச்சாலே தலையை சுத்துது!!! கோவையில் பணிபுரிந்த நாட்களில் 110 ரூபாய் இருந்தால் போய் விட்டு திரும்பி வரலாம்.. தற்போது நிலை, சொல்ல வேண்டியதில்லை..
1 / 2 தனியார் பேருந்து வைத்து இருக்கும் முதலாளிகள் பல வருடம் அதே தொழிலை சிறப்பாக நடத்தி குறிப்பிட்ட சில வருடங்களில் அவர்களது வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருக்கிறது.. ( சில நலிவடைந்த தொழிலதிபர்களும் உண்டு).. ஆனால் பெரும்பான்மை வெற்றி தான்…
ஆனால் பல வருடங்களாக நமது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த துறையை இலாபகரமாக இயக்க முடியாததன் காரணம் என்ன????? சாதாரண நடுத்தர குடுபத்தினரும் / வறுமையில் வாடுபவர்களும் நிலை பரிதாபமானது… என்றாவது அரசின் உயர் பதவியில் இருப்பவரும் / இந்த துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் / அவர்களது குடுபத்தினரும் அரசு பேருந்தில் பயணித்திருப்பர்களா????? நான்கு அறைகளுக்குள் உட்கார்ந்து சட்டம் இயற்றுபவர்களுக்கு சாமானிய மக்களின் நிலை எவ்வாறு புரியும்????
@ஜெயராம் சென்னை பரந்து விரிந்த நகரம். நாலைந்து பேருந்துகளில் சுற்றி பார்ப்பது என்பது கடினம்.
10 பேருந்துகளாவது குறைந்தது ஆகும் ஓரளவு சுற்றி பார்க்க.
@யாசின் கால மாற்றத்தில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாது ஆனால், இவர்கள் செய்யும் தவறுக்கு எல்லாம் கட்டண உயர்வு என்பது தான் அநியாயம்.
இவர்கள் செய்யும் ஊழலுக்கும், நிர்வாக திறமையின்மைக்கும் மக்கள் சிரமப்படுகிறார்கள் 🙁
மற்ற நகரங்களை காட்டிலும், சென்னை பேருந்து சேவை சிறப்பாகத்தான் இருக்கிறது ஆனால் கட்டணம் திடீரென்று ஏற்றியது தான் கொடுமை நீங்கள் சொன்னது போல் குடும்பத்துடன் செல்வது என்றாலே ஓலா உபேர் தான் அவர்களும் பல சமயங்களில் டிமாண்ட் என்று கட்டணத்தை ஏற்றி விடுகிறார்கள் சில சமயங்களில் கொஞ்சம் பல்லை கடித்து கொண்டால் 3 லக்ஷத்திருக்கு ஆல்டோ , கவிட போன்ற கார் வாங்கி விடலாம் போல தோன்றுகிறது யாசின் அவர்கள் சொல்வது போல ஏழை நடுத்தர மக்கள் தான் மிகவும் பாதிக்க பட்டுள்ளார்கள் .
நான்கு பேர் செல்கிறோம் என்றால் பேருந்து தவிர்க்கலாம். சாதாரண பேருந்து என்றால் பரவாயில்லை, வருவது எல்லாம் சொகுசு பேருந்து என்ற பெயரில் டப்பா பேருந்துகள்.