விலை உயர்வு பிரச்னைக்குத் தீர்வாகாது

16
விலை உயர்வு

ஜெ அரசு ஏற்றிய விலை உயர்வு பற்றி விரிவாகப் பலரும் விமர்சித்து விட்டார்கள். தொடர்புடைய சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Image Credit

விலை உயர்வு எதனால் ஏற்படுகிறது?

நாம் பார்க்கப்போவது அரசுத் துறையைப் பற்றி என்பதால் அதோடு சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டும் இங்குக் கூறுகிறேன்.

அரசு என்பது மக்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாங்கிக்கொண்டு ரொம்பவே முடியாத பட்சத்தில் தான் விலை உயர்வை அறிவிக்க வேண்டும்.

விலையேற்றம் செய்யப்பட்ட பேருந்துக்கட்டணம் மற்றும் ஆவின் பற்றி பார்ப்போம்.

அரசுத்துறை என்றாலே அலட்சியம் என்று மக்கள் மனதில் பதிந்து விட்டது. அதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளை அனைவரும் சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

எந்த அரசு அலுவலகம் சென்றாலும் அங்கே அலட்சியமான பதிலே கிடைக்கும் சில நேரங்களில் அதுவும் கிடைக்காது காரணம் நஷ்டம் ஆனாலும் கேட்பாரில்லை.

எப்படி இருந்தாலும் நம்மைத் தாண்டித்தான் போக முடியும் வேறு வாய்ப்பில்லை என்கிற தெனாவெட்டு.

தனியார் பேருந்துகள் எப்படி லாபத்தில் இயங்குகின்றன?

எங்கள் (கோபி – ஈரோடு – கோவை – சத்தி) ஊர்ப் பகுதியில் ஒரு பஸ் ரூட் வைத்து இருந்தாலே அவர் லாபம் சம்பாதிக்கிறார்.

இரண்டு மூன்று தடத்தில் பேருந்து இருக்கிறது என்றால் அவர் மிகப்பெரிய ஆள் தான்.

அரசு லாபம் இல்லாத, கூட்டம் இல்லாத தடங்களிலும் பேருந்தை இயக்கினாலும் கூட ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது நிச்சயம் லாபம் கிடைக்கும்.

லாபம் வராமல் இருப்பதற்கு அதில் பணி புரிபவர்களின் அக்கறை இன்மையே காரணம். எப்படி வேலை செய்தாலும் சம்பளம் உண்டு என்பதால் அதிகாரிகள் முன்னேற்றத்துக்கான எந்த முயற்சியையும் எடுப்பதில்லை.

ஒரு சிலர் நியாயமாக நடந்து கொள்ளலாம் ஆனால் அவர்கள் வெகு சிலரே!

ஏதாவது ஒரு தனியார் பேருந்து முதலாளியைத் தங்கள் தடத்தை விட்டுக்கொடுக்கக் கூறுங்கள் பார்ப்போமே! ஒருத்தர் கூட விட்டுத் தர மாட்டார்கள்.

லாஜிக்காக யோசியுங்கள் இத்தனை வருடமாகப் பேருந்துக் கட்டணம் உயர்த்தவில்லை அதனால் அரசு நஷ்டத்தைச் சமாளிக்கும் ஆனால், தனியார் சமாளிப்பார்களா! சமாளித்து இருக்கிறார்களே!!

டீசல் விலை உயர்ந்தும் பேருந்துக் கட்டணம் உயராமல் இருந்தும் தங்கள் தடத்தை விட்டுத்தராமல் சமாளிக்கிறார்கள் என்றால் லாபம் உள்ளது என்று தானே அர்த்தம்.

இத்தனை வருடமும் ஏற்றாமல் சமாளிக்க முடிகிறது என்றால் ஏற்றி இருந்தால் அவர்கள் எவ்வளவு லாபம் இது வரை பார்த்து இருப்பார்கள்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அப்படி என்றால் தவறு யார் பக்கம் நஷ்டக்கணக்கு காட்டுவது யார் தவறு?

தனியார் பேருந்துத் தடத்தில் உள்ள பேருந்துகளுக்கு ஒரு மேனேஜர் இருப்பார் கலெக்சன் குறைவு என்றால் ஓட்டுனர் நடத்துனர்களிடம் விசாரணை நடைபெறும் அதோடு லாபம் குறைவு என்றால் மேனேஜருக்கு முதலாளியிடம் இருந்து திட்டு விழும்.

பராமரிப்பு

பேருந்துக்கட்டணம் அதிகரிக்க முக்கியக்காரணமாகக் கூறப்படுவது உதிரிப்பாகங்களுக்கு (வாங்குவது மற்றும் மாற்றம் செய்வது) ஆகும் செலவு.

நிர்வாகச் செலவுகள் (ஊழியர் சம்பளம், புதிய பேருந்துகள் வாங்குவது etc etc… ) ஆகியவற்றால் பணப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்பது ஆகும்.

கால மாற்றத்தில் விலை உயர்வு தவிர்க்க முடியாது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான் ஆனால், விலை உயர்வை உயர்த்தும் முன் அரசு எந்தெந்த வழிகளில் இதைத் தவிர்க்க முடியும் என்பதை ஆராய வேண்டும்.

பின் எதுவுமே முடியாத நிலையில் தான் விலை உயர்வை அறிவிக்க வேண்டும். அதுவே ஒரு திறமையான அரசாங்கம் ஆகும்.

ஆனால், தற்போது மட்டுமல்ல கடந்த திமுக ஆட்சியிலும் நடந்தது என்ன என்பதை ஓரளவு இது பற்றி அறிந்தவர்கள் என்ன நடக்கிறது, நடந்து கொண்டு இருந்தது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு பிரிவிலும் வாங்கும் லஞ்சம், புதிய பொருளை வாங்கும் இடத்தில் பழைய பொருளை அதிக விலை கொடுத்துச் சரி செய்வது, பராமரிப்பு இன்மை, தேவையற்ற இடங்களில் அதிக ஊழியர்கள், தேவையான இடங்களில் குறைவான ஊழியர்கள்.

புதிய பேருந்தை வாங்கி அதை சரிவரப் பராமரிக்காமை, அதிகாரிகளின் மெத்தனம், ஊழியர்களின் பொறுப்பற்றத் தன்மை என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

இதைப்போலப் பிரச்சனைகளைக் களைந்தால் மட்டுமே, நிரந்தர தீர்வு கிடைக்கும். இது போல விலையேற்றம் எல்லாம் 100 % நிச்சயம் பிரச்சனையைத் தீர்க்காது.

அதிகாரிகளும் அரசும் செய்யும் தவறுக்கு மக்கள் எதற்குச் சிரமப்பட வேண்டும்?

அதே போல விலையேற்றமும் சீராக இருக்க வேண்டும். ஜெ ஒரே சமயத்தில் இவ்வளவு கட்டணம் ஏற்றியதும்,  கலைஞர் ஏற்றாமல் இருந்ததும் தவறு.

விலையேற்றம் என்பது ஏதாவது ஒரு கட்டத்தில் இருந்தே ஆக வேண்டும் மேற்கூறிய நிர்வாகச் சீர்கேடுகள் இருக்கும் வரையில்.

எவ்வளவு நாள் இதைப்போலத் தவறுகளை வைத்துக்கொண்டு விலையேற்றத்தை தவிர்க்க முடியும்?

கலைஞரே தற்போது ஆட்சியில் இருந்து இருந்தாலும் கட்டண உயர்வு என்பது ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாது தான்.

இதனால் தான் இதைச் சமாளிக்க அப்போதே விரைவு, சொகுசு என்று பேருந்துகளை விட்டு மறைமுகக் கட்டண உயர்வை வசூலித்தார்கள்.

அரசாங்கம் நிர்வாக சீர்கேடு, ஊழல்களைக் களையாத வரை விலையேற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

Read : நடுத்தர வர்க்கம் | செலவு சேமிப்பு

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

16 COMMENTS

 1. நடுநிலையான அலசல்.

  ஒன்று கவனித்தீர்களா, முன்பெல்லாம் சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் அரசு விரைவுப்பேருந்தில் சாதாரண நாட்களில் கூட கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றால் மட்டுமே இடம் கிடைக்கும். பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் பேருந்து நிறுத்தம் வருவதற்குள் பேருந்து முழுவதும் நிரம்பிவிடும், தனியார் ஆம்னி பேருந்தில் மட்டுமே இடம் கிடைக்கும். (இதற்காகவே தாம்பரத்திலிருந்தே கிளம்பும் அரசு விரைவு பேருந்தை இயக்கினார்கள் என்பது வேறு விஷயம்.) காரணம், உதாரணத்திற்கு சென்னை-திருச்சி அரசு பேருந்தில் 175 ரூபாய், தனியார் ஆம்னி பேருந்தில் 300 ரூபாய். ஆனால் இப்பொழுது சென்னை – திருச்சி அரசு விரைவுப்பேருந்தில் ஸ்ரீரங்கம்வரை (?!?) கூவுகிறார்களாம். காரணம் இப்பொழுது சென்னை-திருச்சி அரசு பேருந்தில் 275 ரூபாய், தனியார் ஆம்னி பேருந்தில் அதே 300 ரூபாய்.

  இதில பெருசா பீத்திகிறது வேற, அரசு போக்குவரத்து சேவை சேவை சேவைன்னு, அது என்ன சேவைன்னுதான் எனக்கு புரியல. சேவையெல்லாம் வேணாம், வாங்குற 275 ரூபாய்க்காவது தகுதியானதா அந்த சேவை? சுத்தம்? வசதி? கவனிப்பு? மொதல்ல ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் ஓசில குடுத்த அந்த சீட் உறைய (சொம்பு தூக்கும் தினமணி வைத்திட்ட சொல்லி) தொவச்சு போட சொல்லச்சொல்லுங்க, கப்பு தாங்கமுடியல.

 2. சரியாக சொல்லி இருக்கிறீர்கள். அரசு இயந்திரம் ஒழுங்காக இயங்கினாலே நஷ்டத்தை சமாளிக்க முடியும். விலையேற்றமும் தவிர்க்க முடியாதது. அதற்காக தடால் என்று கல்லை தூக்கி போட்டால் என்ன செய்ய முடியும்?

 3. நீங்கள் சொன்னது அனைத்தும் ஏற்றுக்கொள்ளகூடிய உண்மை… நான் கூட இதை யோசிக்கவில்லை ( //ஏதாவது ஒரு தனியார் பேருந்து முதலாளியை தங்கள் தடத்தை விட்டுக்கொடுக்கக் கூறுங்கள் பார்ப்போமே! ஒருத்தர் கூட விட்டுத் தர மாட்டார்கள். //). ஒரு நல்ல அதிகாரி கூடவா நம்ம அரசு போக்குவரத்து கழகத்துல இல்ல ?? ரொம்ப கஷ்டம் …

 4. இலவசத்தை எதிர்பார்க்கும் மக்கள் தாங்கள் பெறுவதை விட இழப்பதே அதிகம். இதை மக்களும் உணர மாட்டார்கள் அரசியல்வாதிகளும் விட மாட்டார்கள்.

  This is absolutely correct….

  இப்ப கொலைவெறி சிம்புக்கா தனுஷுக்கா இல்ல செல்வி ஜே ஜெயலலிதாவுக்கு!!!

 5. giri anna,

  Correcta sonneninga…! Only few persons were woking sincere to thier duties in all Goverment orgs..Total System needs to change.. Aprt from this they have lot of benefits like pension and other allowances especially the Lecturers & Teachers [ They are earning like IT guys]..

  Governmen will not touch them due to VOTING.. If so they will announce another Strike with thier Unions.. So the change need to come with all of us if goverment take that decisons.. without that nothing happens…
  Next 2 weeks will this topic then we wil move to new movies and Xmas, new year celebrations…

  Yennga poi mudimuna theriyalla… As you said
  //சலிப்பின் காரணமாக தற்போது இது போல் அரசியல் கட்டுரைகளை எழுதுவதைக் குறைத்துக்கொண்டேன்//…

  If we see other countries Goverment & people still all indians thinks oh when our Country will become this? but it’ll not happen in a single day like this kind of poltics & politicans…

 6. “இலவசத்தை எதிர்பார்க்கும் மக்கள் தாங்கள் பெறுவதை விட இழப்பதே அதிகம். இதை மக்களும் உணர மாட்டார்கள் அரசியல்வாதிகளும் விட மாட்டார்கள். ”

  உண்மை 😀

 7. நன்றி திரு கிரி அவர்களே ,

  தாய் எட்டு அடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்’ என்கிற தமிழ் பழமொழிக்கு சரியான இலக்கணமாகத் திகழ்ந்துக் கொண்டிருக்கின்றன தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள்.

  தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் நட்டத்தில் இயங்கி வருகின்றன என்று கூறி, பேருந்துக் கட்டணங்களை 50 முதல் 70 விழுக்காடு வரை உயர்த்தினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அவர் அறிவித்த கட்டணங்களும், நடைமுறையில் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது. பயணக் கட்டணச் சீட்டை பெறுவோர் அதிர்ச்சியால் உரையும் அளவிற்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

  எடுத்துக்காட்டாக, குறைந்த பட்ச கட்டண உயர்வு ரூ.2இல் இருந்து ரூ.3 ஆக உயர்த்தப்படும் என்றுதான் முதல்வர் அறிவித்தார். ஆனால், ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஸ்டேஜ்கள் நீக்கப்பட்டு, கட்டணங்கள் 100 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெரிய ஏமாற்றுச் செயல் என்னவெனில், வெள்ளை போர்ட் பேருந்துகள் முற்றிலுமான சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்பதுதான். எனவே குறைந்த பட்ச கட்டணத்தில் பயணம் செய்யும் பேருந்துகளே இல்லை!

  கட்டணம் உயர்த்தப்பட்ட நாளில் மட்டுமே வெள்ளை பேருந்து இயங்கியது. அடுத்த நாள் அது மஞ்சள் போர்ட் பேருந்தாகி, சைதாப்பேட்டையில் இருந்து சேத்துப்பட்டு வரை செல்ல ஏற்கனவே வசூலித்த ரூ.4.50. நடத்துனர் இரண்டு கட்டணச் சீட்டுகளை அளித்தார், அதாவது ரூ.9! என்னப்பா இது என்று கேட்டால், இது மஞ்சள் போர்ட் சார் என்கிறார்.

  அடுத்த கட்டமாக, பல வெள்ளைப் பேருந்துகள் மஞ்சள் போர்ட் பேருந்துகளாகவும், பச்சை நிற (எக்ஸ்பிரஸ்) பேருந்துகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் என்ற பெயர் கொண்ட தாளை ஒட்டிக்கொண்டு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எமது அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர் வெள்ளைப் பேருந்துக்காக 1 மணி நேரத்திற்கு காத்திருந்தும் அது வரவில்லை. ஆனால், இடைப்பட்ட நேரத்தில் வந்ததெல்லாம் எக்ஸ்பிரஸ் – அதாவது பச்சை போர்ட் பேருந்துகள்தான்! பல வழித் தடங்களில் இயங்கும் பேருந்துகளில் பாதி எக்ஸ்பிரஸ், மீறி வருபவை அனைத்தும் டீலக்ஸ் பேருந்துகள். இந்த டீலக்ஸ் பேருந்துகள் கட்டணம், ஏற்கனவே வெள்ளைப் பேருந்து கட்டணங்களை விட 3 மடங்கு வசூலித்தவை, இப்போது 6 மடங்கு வசூலிக்கின்றன!

  ஆக, அரசு உயர்த்தி அறிவித்ததற்கும் அதிகமாக கலர் போர்ட் காட்டி அதிகாரிகள் கட்டண வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். இராஜ விசுவாசம் என்பது இதுதானோ? – நன்றி தமிழ் வெப்துனியா

 8. வணக்கம் கிரி அவர்களே

  நீங்கள் குறிப்பிட்டவை அனைத்துமே முற்றிலும் உண்மையானவை.

 9. Namallaam ippadi katthu katthu nu katthittu amaithi aiduvom nu antha amma ku nalla therium anna.

  Salippa iruku … Evlo adichalum thanki kolla palakivittom

  Idhuku mela ealudhuna nan yethavadhu antha ammavai patthi asinkama ealuthiduven. So…

 10. வணக்கம் நண்பரே! கடந்த மூன்று வருடங்களாக உங்களின் பதிவை வாசித்து வரும் அன்பர்களில் நானும் ஒருவன். ஒரு மாதமாக முன்பு தான் என் ப்ளாக்கையே ஆரம்பித்துள்ளேன். (இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்) தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

 11. இன்னும் இரு சக்கர வாகனங்களில் பால் விற்பவர்கள் விலையேற்றவில்லை… அப்போ தான் எங்களுக்கு கஷ்டம் தெரியும்… அநேகமாக இன்னும் ஓரிரு வாரங்களில் எதிர்ப்பாக்கலாம் என்று நம்பப்படுகிறது….

  கட்டுரை பாக்க ரொம்ப மலைப்பா இருந்தாலும் படிச்ச டயர்டே தெரியலை… வாழ்த்துக்கள்…

 12. //ஜெ சாதாரண மக்களின் உணர்வுகளை பிரச்சனைகளை புரிந்து கொள்ளத் தெரியாதவர் அல்லது நான் என்ன வேண்டும் என்றாலும் செய்வேன் கேட்க யாரும் இல்லை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதை யாரும் மறுத்தால் தயவு செய்து அதற்கு சரியான விளக்கம் அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறே//

  நீங்க சரியாய் சொன்னிங்க…
  ஜெயலலிதா வேஸ்ட்…

 13. மதிப்பிற்குரிய கிரி அவர்களே! தங்கள் கட்டுரை மிகவும் அருமை..!சில விசயங்களை சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன்…தனியார் பேருந்து உரிமையாளர்கள் லாபம் இல்லாமல் இவ்வளவு காலம் இயக்க முடியாது.. நூறு சதவீதம் உண்மை…!நீங்கள் சொன்ன கோபி – ஈரோடு – கோவை – சத்தி தடங்களில் ஓடும் அரசுப் பேருந்துகள் கூட அளவுக்கதிகமான கூட்டத்தை ஏற்றிக் கொண்டு செல்கின்றன…மாநகராட்சி, நகராட்சி மற்றும் பெரிய பெரிய நகரங்களை மட்டுமே அனைத்து தனியார் பேருந்துகளுமே இணைக்கின்றன..இந்த தடத்தில் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் நீங்கள் வாசற்படியில் நிற்பதற்கு இடம் பிடித்தாலே பெரிய சாதனை தான்…ஆனால் கணக்கில் நகரங்களை விட அதிகமான மக்கள் தொகையை கொண்ட கிராமங்களை மறந்து விட்டீர்கள்…அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதியை தருவது அரசு மட்டும்தான்… கிராமப் பேருந்தில் பெரும்பாலும் பயணிப்பதே ஒரு இனிமையான அனுபவம்! ஏனெனில் காற்று வாங்கிக் கொண்டு போகலாம்…(கூட்டம் இருக்காது..) இன்னொரு விஷயம் ஆந்திராவில் நான் பணி புரிந்த இடத்திற்கும் செகந்திராபாத்திற்கும் வெறும் மூன்று கிலோமீட்டர் தான்.. ஆனால் கட்டணம் 9ரூபாய்… நம் தமிழ்நாட்டில் மட்டும் தான் 2 ரூபாய் கட்டணம் எல்லாம்.. வருமானம் இருந்தால் மட்டுமே சிறப்பாக நிர்வாகம் செய்ய முடியும்..படிப்படியாக ஏற்றாமல் ஒரேடியாக ஏத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் வேறு வழியில்லை!!ஒரே இரவில் செய்திருக்க வேண்டாம்!!! காயத்ரிநாகா

 14. 1958ல் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இத்தனை வருடம் கழித்தும் இந்தப் பாடல் அப்படியே வாழ்வை படம் பிடித்துக் காட்டுகிறதே! ‘என்ன இருந்தாலும் மனுஷன் இப்படி ஆடக் கூடாது’ வரியில் மனுஷன் என்பதற்குப் பதிலாக அவரவர்க்குப் பிடித்த வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளலாம்!
  ஒருவன்: மூளை நெறஞ்சவங்க
  காலம் தெரிசவங்க
  மூத்தவங்க படிச்சவங்க
  வாழுகின்ற நாடு –இது

  மற்றவன்: மூச்சு திணறுதுங்க
  முளியும் பிதுங்குதுங்க
  பாத்துக்குங்க கேட்டுக்குங்க
  ஜனங்கள் படும்பாடு – இது

  ஒருவன்: நெலமை இப்படி இருக்குது
  நீதி கெடந்து தவிக்குது
  கொடுமை மேலே கொடுமை வளர்ந்து
  நெருக்குது – அது
  அருமையான பொறுமையைத்தான்
  கெடுக்குது – ஊர் [நெலமை]

  மற்றவன்: பாதை மாறி நடக்குது,
  பாஞ்சு பாஞ்சு மொறைக்குது
  பழமையான பெருமைகளைக்
  கொறைக்குது – நல்ல
  பழக்கமெல்லாம் பஞ்சு பஞ்சாப்
  பறக்குது – ஊர் [நெலமை]

  ஒருவன்: என்ன இருந்தாலும் மனுஷன்
  இப்படி ஆடக் கூடாது

  மற்றவன்: ஏழைகளை அடிச்சுப் பறிக்கும்
  எண்ணம் உடம்புக்காகாது

  ஒருவன்: காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா
  கவனிக்காமெப் போகாது – ஊர் [நெலமை]

  ஒருவன்: அன்பு வளர்த்த கோட்டைக்குள்ளே
  அகந்தை புகுந்து கலைக்குது

  மற்றவன்: வரம்பு மீறி வலுத்த கைகள்
  மக்கள் கழுத்தை நெரிக்குது

  ஒருவன்: விருப்பம் போல நரிகள் சேர்ந்து
  வேட்டையாடிக் குவிக்குது

  மற்றவன்: வெறிநாய்க்கு உரிமை வந்து
  வீட்டுக்காரனைக் கடிக்குது – ஊர் [நெலமை

  பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம்

 15. அ.இ.அ.தி.மு.க. தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்து 6 மாதங்கள் கடந்துவிட்டன. கடந்த மே மாதம் தேர்தல் நடந்தபோது மீண்டும் தி.மு.க. ஆட்சி வருமா அல்லது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலமருமா என்ற கேள்வி ஊடகங்களில் வலுவாக எழுந்தன. தி.மு.க. தலைமையோ, மீண்டும் தாங்கள் தான் ஆட்சியில் அமர்வோம் என்று நம்பிக்கையோடுதான் இருந்தனர். தங்களது இலவசங்களும், ஒரு சில நலத் திட்டங்களும், திருமங்கலம் பார்முலாவும் தங்களுக்கு கை கொடுக்கும் என்று நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கையைத் தகர்த்து எறிந்த தமிழக மக்கள், தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டினர். அ.இ.அ.தி.மு.க மீண்டும் ஆட் சிக்கு வந்தது. எப்படி இது நிகழ்ந்தது? காரணம் என்ன?

  ஜெயலலிதா நினைப்பதுபோல், அவரைத் திருப்திப்படுத்த அ.தி.மு.க பிரமுகர்கள் கூறுவது போல் ஜெயலலிதாவுக்கு விழுந்த வாக்குகளா? இல்லை. இந்த வெற்றியின் பின்னால் மக்களின் தெளிவான பார்வை இருந்தது. தி.மு.க. ஆட்சி மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி. ஒரு குடும்பம் கோலோச்சிய ஆட்சி. மக்கள் பணத்தை ஒரு சிலர் சேர்ந்து சூறையாடிய ஆட்சி. சட்டம்-ஒழுங்கு சீரழிந்த ஆட்சி. கட்டப்பஞ்சாயத்தும், நிலமோசடியும் மலிந்த ஆட்சி. மத்திய அரசில் அங்கம் வகித்து தி.மு.க.வும், காங்கிரசும் நடத்திய ஊழல்கள் மற்றும் மக்கள் விரோத செயல்கள். மின் வெட்டால் தமிழக மக்கள் இருளில் மூழ்கியது மட்டுமல்ல, தொழில்கள் முடங்கி, உற்பத்தி சரிந்து வேலையின்மையும், பொருளாதார சீரழிவும் மிகுந்த ஆட்சி. எனவே அதற்கு விடை கொடுக்க மக்கள் தயாரான போது, ஒரு வலுவான அணியோடு அ.இ.அ.தி.மு.க. களம் இறங்கியது. தே.மு.தி.க., சிபிஐ(எம்), சி.பி.ஐ, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் அணிவகுப்பாக இந்த அணி மாறியபோது, ஆட்சி மாற்றம் உறுதிபடுத்தப்பட்டது. மக்கள் நம்பிக்கையோடு வாக்களித்தனர்.அதிக பெரும்பான்மையோடு அ.இ. அ.தி.மு.க. அரசு பதவியேற்றது. ஜெயலலிதா முதலமைச்சரானார்.

  தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும் மக்களுக்கு நிவாரணமளிக்கும் பல அறிவிப்புகளை வெளியிட்டார். மாதம் 20 கிலோ அரிசி இலவசமாகக் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்குவது, இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்குவது, இலவச மின்விசிறி வழங்குவது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்து பல்வேறு நோய்களுக்கும், அதிக மருத்துவச் செலவுகள் கிடைக்கும் வகையில் உரிய மாற்றம் செய்வது போன்ற அறிவிப்பு கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. ஊடகங்கள் சில இலவசங்களைக் கொச்சைப் படுத்தினாலும், பெரும் முதலாளிகளுக் கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெருமளவு நிதிச்சலுகை வழங்கும் மத்திய அரசின் செயலை கண்டுகொள்ளாத ஊடகங்கள், ஏழை மக்களுக்கு வழங்கும் சில சலுகைகளை மட்டும் விமர்சிப்பதை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை.

  முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் உள்ள ரவுடிகள், கொள்ளைக்காரர்கள், மோசடி பேர்வழிகள், கொலைகாரர்கள் அனைவரும் ரயிலேறி ஆந்திராவிற்குச் சென்று விட்டனர் என்று அகம்பாவத்துடன் அறிக்கை வெளியிட்டார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சி வந்த பின்னரும் ரவுடிகளின் அட்டூழியம் ஓய்ந்தபாடில்லை. தினசரி கொலை, கொள்ளைகள் தொடர்ந்து நடைபெறும் செய்திகள் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்த வண்ணம் உள்ளன. சட்டம் -ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டிய காவல்துறையினர், ஆளும் கட்சியைத் திருப்திபடுத்தும் பணிகளில்தான் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர். மற்றவர்கள் பந்தாடப்படுகின்றனர். பரமக்குடியில் தேவையற்ற துப்பாக்கிச்சூடு நடத்தி, அப்பாவி தலித் மக்களைச் சுட்டுக் கொன்ற காவல்துறையினரின் செயலை நியாயப்படுத்தும் பணியையே ஜெயலலிதா செய்தார்.மேலும் 3 மாத காலத்திற்குள் மின்வெட்டை சரி செய்து விடுவதாக நம்பிக்கையுடன் கூறினார். ஆனால் நிலைமை மிகவும் பரிதாபம். தினசரி 4 மணிநேரம் முதல் 5 மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்கிறது. நிலைமை தினசரி மோசமாகிக் கொண்டே வருகிறது. மக்கள் மிகவும் அவதிப்படுகின் றனர். தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பும், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் அதிகரித்துக் கொண்டே வரு கிறது. இதற்கெல்லாம் துரித நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நலம் செய்ய வேண்டிய முதல்வரின் கவனமும், முனைப்பும் எங்கு இருக்கிறது?

  கடந்த ஆட்சிக்காலத்தில் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற கட்டடம் கட்டப்பட்டது. சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் அண்ணா சாலையில் அது பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. அப்போதே அதை எதிர்த்தவர் ஜெயலலிதா. இருந்தாலும், ஒரு அரசு தேவையின் அடிப்படையில் மக்கள் பணத்தைச் செலவு செய்து எழுப்பிய அந்த கட்டடத்தைப் பயன்படுத்தமாட்டேன் என்ற அறிவிப்பு வந்தபோது அனைவரும் ஆட்சேபித்தனர். தனிமனித விருப்பு வெறுப்புக்கு ஏற்ப மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது கூடாது என்று அறிவுறுத்தினர். ஆனாலும் பிடிவாதத்தில் யாருமே மிஞ்ச முடியாத ஜெயலலிதா, பழைய சட்டமன்ற கட்டடத்தில், புனித ஜார்ஜ் கோட்டையில் இரவோடு இரவாக சட்டமன்ற கூடத்தையும், தலைமைச் செயலகத்தையும் அமைத்து, அங்கேயே சட்டமன்றத்தைக் கூட்டினார். சந்து பொந்துகளுடன் கூடிய வசதியற்ற, பழமையான அந்த கட்டடத்தில் தான் சட்டமன்றம் கூடும் என்பதிலே எதாவது நியாயமான காரணம் உண்டா? தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டதை தவிர்ப்பது என்பதைத் தவிர. 1989ல் இந்த கட்டுரையாளர் அவை உறுப்பினராக இருந்தபோது, பெருச் சாளிகள் சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கைகளுக்கு இடையில் ஓடி விளையாடியதும், அதை கட்டுரையாளர் சட்டமன்றத்திலேயே எடுத்து கூறியதும் நினைவுக்கு வருகிறது. (ஊழல் பெருச்சாளிகளே இந்த அவையில் இருக்கும் போது, ஒரிஜினல் பெருச்சாளி இருக்கக் கூடாதா என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது.) அத்தகைய வசதியற்ற இடத்தை விட்டு விட்டு வசதியான புதிய இடத்தை மறுப்பது நியாயமா? அந்த வழியாகச் செல்லும் போது புல்லும், புதரும் வளர்ந்து பாழடைந்து வரும் இந்த பெரும் மாளிகையைப் பார்க்கும் நமக்கு பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை. உயர்நீதிமன்ற வழக்கு வந்தவுடன் அங்கு எய்ம்ஸ் போன்ற ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வருவதாகக் கூறுவதை யார்தான் நம்புவது? அதுபோல்தான் அற்புதமான அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகம். லட்சக்கணக்கில் புத்தகங்கள், நூலகத்துக்கான அனைத்து வசதிகளுடன் அதை மாற்றுவது ; அங்கு குழந்தைகள் மருத்துவமனை என்கிறபோது இந்த நோயைக் குணப்படுத்த மருத்துவமனை எதுவும் இல்லையா என்றுதான் எண்ணத்தோன்றும்.

  திடீரென முதல்வர் ஜெயலலிதா ஜெயா தொலைக் காட்சியில் தோன்றுகிறார். அமைச்சரவைக் கூட் டத்தையொட்டி 17.11.2011 பிற்பகலில் அவர் தோன்றியபோது மக்கள் தலையில் இடியாக அறிவிப்புகள் வந்துவிழும் என்று யாராவது எண்ணினோமா? ஆனால் பேருந்து கட்டணம் 60 சதம் முதல் 80 சதம் வரை உயர்த்தப்படுகிறது. பால் விலை ஒரு லிட்டருக்கு ரூ.6.25 உயர்த்தப்படுகிறது . மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என்ற அறிவிப்புகள் மக்களுக்கு, எவ்வளவு பெரிய அதிர்ச்சி. தினசரி பேருந்தில் வேலை பார்க்கும் இடங்களுக்குச் செல்லும் சாதாரண உழைப்பாளிகள் தலையில் எவ்வளவு பெரிய சுமை. வாக்களித்த மக்களுக்கு தரும் பிரதிபலனா இது? மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள விலைஉயர்வில் திணறிக் கொண்டிருக்கும் மக்களுக்கு முதல்வர் தரும் நிவாரணம் இதுதானா? திடீரென 13000 மக்கள் நலப்பணியாளர்கள் கூண்டோடு வேலை நீக்கம். உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது போல், சாதாரண ஊழியர்கள் பந்தாடப்படுவது ஏன்? சமச்சீர் கல்வியை கைவிட எடுத்த முதல்வரின் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த சரியான குட்டுக்குப் பின்னரும், இத்தகைய விளையாட்டுகள் தொடர்கின்றன. ஜெயலலிதா முதல்வராகும் போதெல்லாம் 1991, 2001, 2011 என ஒவ்வொரு தடவையும் இதுதானே அனுபவம். ஒவ்வொரு 5 ஆண்டு களுக்குப் பின்னரும் மக்கள் அந்த ஆட்சியைத் தூக்கியெறிந்ததிலிருந்து உரிய பாடத்தை அவர் கற்கவில்லையே!

  தமிழகம் வகுப்புவாதிகள் நுழைய முடியாத இடமாகவே இருந்து வந்தது. பெரியார் உள்ளிட்ட பகுத்தறிவு கொள்கையாளர்களால் உருவாக்கப்பட்ட வலுவான சமய சார்பற்ற அரசியல் வளர்ந்த பூமி. ஆனால் அ.இ.அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களது சந்தர்ப்பவாத நிலைபாடுகளால் அந்த வகுப்புவாத விஷச் செடியை இங்கு ஊன்றி வளர்த்தனர். எனவேதான் தமிழகத்திலும் சில இடங்களில் வகுப்புவாத பதட்டங்கள் வரத் துவங்கின. பா.ஜ.க.வுடன் தங்களது அரசியல் உறவால் தங்களுக்கு தமிழகத்தில் அரசியல் லாபமில்லை, நஷ்டமே என்பதால், தற்போது பா.ஜ.க.வுடன் தமிழகத்தில் தேர்தல் உறவு வைக்கத் தயாராவதில்லை. கடந்த தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் உறவு கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய ஜெயலலிதா, தனது பதவியேற்பு விழாவிற்கு மதவெறியின் மொத்த உருவமான மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்து பக்கத்தில் அமர்த்திக் கொள்கிறார். மோடியின் பதவியேற்புக்கு தனி விமானத்தில் சென்று அமர்ந்த அவர், அதற்கு கைமாறாக அவரை அழைத்துள்ளாரா? மேலும் பா.ஜ.க. தலைவர் அத்வானி ஊழலுக்கு எதிராக நடத்திய ரத த்திரை நாடகத்தின் கடைசி காட்சியில், நிறைவு விழாவில், அ.இ.அ.தி.மு.க. எம்.பிக்களை அனுப்புகிறார். இது அ.இ.அ.தி.மு.க. தற்போதும் அகில இந்திய அரசியலில் பா.ஜ.க.வுடன் எந்நேரமும் கைகோர்க்க வாய்ப்புள்ளது என்ற சமிக்ஞையைக் கொடுக்காதா?

  தமிழகத்தில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் மாறி மாறி மக்களை ஏமாற்றியே வந்துள்ளன. மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதில் இரண்டும் போட்டியிட்டு வருகின்றன. வாக்களித்தபின் மக்கள் கையறு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களும் வேறு வழி தெரியாமல் மாறி மாறி வாக்களித்தும், கிடைப்பதெல்லாம் மக்கள் விரோத ஆட்சி தான். உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாற்று உருவாக்கப்பட முயற்சி நடந்தபோது மக்கள் பல காரணங்களால் மாற்றை உரிய அளவில் அங்கீகரிக்கவில்லை. விளைவு, கடும் தாக்குதல் மக்கள் மீது உடனடியாகவே. மக்கள் தி.மு.க, அதிமுகவிற்கு உரிய மாற்றை பற்றி யோசிக்க வேண்டும். இடதுசாரி கட்சிகளும், பிற மதச்சார்பற்ற கட்சிகளும் வலுப்படாமல் அது சாத்தியமல்ல. தற்போது தங்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் தாக்குதல்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிட, இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து நின்று தெருவில் இறங்கி போராடுவதே தற்போதுள்ள ஒரே வழி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here