இந்தியாவில் ஸியோமி திறன்பேசிகளின் “Flash Sale” மிகப்பிரபலம். ஒரு நிமிடத்தில் இத்தனை ஆயிரம் திறன்பேசிகள் விற்றுவிட்டன என்று அறிவிப்பார்கள்.
வாங்க முயற்சிக்கும் பெரும்பாலானவர்களுக்கு “Sold Out” தகவல் தான் கிடைக்கும். அதே சமயம் சிலர் வாங்கியும் இருக்கிறார்கள். எனக்கு இதுவரை கிடைத்ததில்லை. Image Credit
இது உண்மையா பொய்யா என்ற விவாதம் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இதே போலத் தன்னுடைய வியாபார எல்லையை விரிவாக்க இங்கிலாந்தில் 1 பவுண்டுக்கு ஒரு திறன்பேசி என்ற சலுகையை அறிவிக்க, மொத்த பேரும் குவிந்து விட்டார்கள்.
ஆனால், வாங்க முயற்சிக்கும் போது “பிம்பிளிக்கி பிளாப்பி” என்று கூறியதால் கடுப்பாகி ஸியோமி நிறுவனத்தை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதில் “Crazy Sale” என்று அறிவித்துப் பின்னர் ஏனோ “Flash Sale” என்று மாற்றி விட்டார்கள்.
“நாங்க 10 திறன்பேசிகள் தான் தருகிறோம் என்று கூறியிருந்தோம், அதைக் கொடுத்து விடுவோம். மக்கள் இதை மாற்றிப் புரிந்து கொள்வார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை” என்று ஸியோமி மன்னிப்புக் கேட்டது. Image Credit BBC.com
A statement to our Mi Fans: pic.twitter.com/Ij2jmrinaN
— XiaomiUK (@XiaomiUK_) November 12, 2018
ஆனாலும், ஏமாற்றம் அடைந்தவர்கள் “நீங்கள் இது பற்றித் தெளிவாகக் குறிப்பிடவில்லை” என்று காய்ச்சி எடுத்து விட்டார்கள்.
ஸியோமி திறன்பேசிகள்
ஸியோமி திறன்பேசிகள் சரியா 1 வருடம் கழித்துப் பல பிரச்சனைகளைக் கொடுக்கிறது, அதோடு Iron Box யை காதில் வைத்தது போலச் சூடாக உள்ளது. துவக்கத்தில் இதையே பயன்படுத்தினேன், 1 வருடம் முடிந்ததும் TOUCH காலியாகி விட்டது.
இதனுடைய விலை மற்றும் Configuration காகத்தான் பலரும் வாங்குகிறார்கள். சிலருக்கு சிறப்பாக வேலை செய்கிறது, மற்றவர்களுக்கு ஒரு வருடத்தில் பிரச்சனையைக் கொடுக்கிறது.
நான் One Plus 3T கிட்டத்தட்ட இரு வருடங்களாகப் பயன்படுத்துகிறேன்.
Read : Android திறன்பேசி பயன்படுத்துகிறீர்களா?
கொசுறு
உங்களுடைய பரிந்துரை எந்தத் திறன்பேசி?
கிரி, என்னுடைய முதல் கைப்பேசி 2007 இல் நோக்கியா 1100 , பின்பு நோக்கியா C6 , இடையில் ஒரு வருடம் லெனோவா, தற்போது கடந்த ஒரு வருடங்களாக ஜியோமி.. இந்த கட்டுரையை படிக்கும் போது கொஞ்சம் கண்ண கட்டுது!!! ஐபோன் வாங்க வேண்டும் என்ற கனவு முன்பு உண்டு.. ஆனால் இப்போது இல்லை!!! தற்போது மீண்டும் நோக்கியா 1100 படுத்தலாம் என்ற எண்ணம் உண்டு!!! பகிர்வுக்கு நன்றி கிரி..
திரு கிரி ,
நாம் ஏன் சீன பொருளை வாங்க வேண்டும் அதற்கு பதில் நம்ம நாடு பொருள்களை வாங்கலாமே. அப்படி இல்லை என்றாலும் கொரியா, ஜப்பான் நாடு பொருள்களை வாங்கலாமே
உங்கள் கருத்தினை அறிய ஆவல்
@யாசின் சிலருக்கு எந்த பிரச்னையும் வருவதில்லை 🙂
@சரவணன் நிச்சயம் தவிர்க்கலாம்.. போட்டி நாடு என்பதால் மட்டும் கூறவில்லை.. அவர்களின் பொருட்கள் தரமில்லை. குறைந்த விலை என்பதால் வாங்கி குவிக்கப்படுகிறது.
எதையும் முடிந்தவரை தவிர்க்கலாம் ஆனால், மொபைல் சிரமம் என்று கருதுகிறேன்.
நான் OnePlus 3T பயன்படுத்துகிறேன், சீன நிறுவனம் தான். தரமான பொருள் சந்தேகமில்லை.
ஏமாற்றாமல், தரமான, நியாயமான விலையில் கொடுத்தால் பயன்படுத்தலாம். யாராக இருந்தாலும்.