எது நடந்து விடக் கூடாது என்று நினைத்து இருந்தேனோ அதை முதல்வர் பழனிச்சாமியும் பிரதமர் மோடியும் தரமான சம்பவமாக நடத்தி முடித்து விட்டார்கள். Image Credit
சென்னை சென்ட்ரல் பெயர் மாற்றம்
சென்னை சென்ட்ரல் பெயரை எம் ஜி ஆர் பெயருக்குத் தாரை வார்த்து விட்டார்கள்.
அரசியல்வாதிகளுக்கு ஒரு இடத்தின் பெயரோ சிறப்போ முக்கியமல்ல, அவர்களுக்கு எதைச் செய்தால் வாக்கு வரும் என்பது மட்டுமே சிந்தனை.
எத்தனை பேருக்கு நினைவு இருக்கிறது?
மத்திய அரசு சில வருடங்களுக்கு முன்பு அனைத்து விமான நிலையங்களின் பெயரையும் தலைவர்கள் பெயரில் இருந்து அந்தந்த நகரின் பெயரிலேயே இனி அழைக்கப்படும் முறையைக் கொண்டு வரப்போகிறது என்று அறிவித்தது.
மிகச்சிறந்த அறிவிப்பு! இவ்வறிவிப்பு வந்தபோது பலரைப் போல நானும் மகிழ்ந்தேன். தற்போது அவ்வறிவிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
புதிய கட்டிடத்துக்கு எம் ஜி ஆர் பெயரை வைத்தாலாவது பரவாயில்லை, நூற்றாண்டுக்கும் மேல் சிறப்பு வாய்ந்த சென்ட்ரல் பெயர் மாற்றப்பட்டது, மிக மிக வருத்தமளிக்கிறது.
“சென்ட்ரல்” என்ற பெயர் நம்மோடு இரண்டற கலந்து விட்ட பெயர்.
Its not jus a NAME… Its an EMOTION.
நடிகர்களுக்கு மட்டும் தான் ட்ரெண்டிங்கா!!
நடிகர்களுக்காகக் குப்பையான விசயத்துக்கு எல்லாம் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்பவர்கள், இதற்கு ஆங்காங்கே முணுமுணுப்பை மட்டுமே காட்டியிருக்கிறார்கள்.
The New Indian Express ல் பெயர் மாற்றத்துக்கு மக்களின் எதிர்ப்பு குறித்து பதிவு செய்து இருந்தார்கள், அவர்களுக்கு நன்றி.
“கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம்” மட்டுமே துவக்கத்தில் இருந்து தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்து வந்துள்ளது.
Blog ல் என் எதிர்ப்பைக் காட்டிவிட்டேன். ட்விட்டர் பயன்படுத்துபவர்களுக்கு ரோஷமிருந்தால் ட்ரெண்ட் செய்து எதிர்ப்பைத் தெரிவியுங்கள்.
மத்திய சதுக்கம்
சென்னை சென்ட்ரல், சென்னை மெட்ரோ, பூங்கா நிலையம் (MRTS & suburban) இணைக்கப்பட்டு அந்தப்பகுதி முழுவதும் மேம்படுத்தப்பட்டு மத்திய சதுக்கம் (Central Square) என்ற பெயரில் பெரிய அளவில் மாற்றம் காணப்போகிறது.
இதை அறிவித்தது யார் தெரியுமா? ஜெ அவர்கள். இதை அறிவித்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தப் பெயரே ஒரு கெத்துக் காட்டுகிறது.
தற்போது இதில் எம்ஜி ஆர் பெயர். எம் ஜி ஆர் மிகச்சிறந்த தலைவர், அவரின் சாதனைகள் நான் கூறி யாருக்கும் தெரியவேண்டியதில்லை.
அவரைப் பெருமைப்படுத்த எவ்வளவோ வழிகள் உள்ளன.
அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படிக் கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்பது போலச் செய்து கொண்டு இருப்பது சரியா?
இதனால் யாருக்கு என்ன பயன்?!
கோடிகளை வீணடித்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவை மெரினாவில் அமைத்தார்கள்.
சென்னை புறநகர் பேருந்து நிலையப் பெயரை (CMBT) எம் ஜி ஆர் பெயருக்கு மாற்றினார்கள்.
தற்போது சென்ட்ரல் பெயர் மாற்றம்.
பிரதமர் மோடியும் இதை ஏற்றுக்கொண்டுள்ளார். இப்பெயர் மாற்ற அறிவிப்பு தேர்தலுக்காகத் தானே தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.
ஆணியே புடுங்க வேண்டாம்
தலைவர்கள் பெயராலே பல பிரச்சனைகள் நடைபெறுகிறது. இவர்கள் பெயரை வைப்பதால், அடுத்தக் கூட்டம் “எங்க தலைவர் பெயரை வைக்க வேண்டும்” என்று பிரச்னை செய்கிறது.
மதுரை விமான நிலையத்துக்கு “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்” பெயரை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.
தற்போது எம் ஜி ஆர் பெயர் மாறியதும், தங்கள் கோரிக்கையைத் தீவிரப்படுத்தி விட்டார்கள்.
எழும்பூர் ரயில்நிலையத்துக்கு “கலைஞர்” பெயரை வைக்க, அழகிரி வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஆணியே புடுங்க வேண்டாம் என்று அனைத்துப் பெயர்களையும் அந்தந்த நகரின், இடத்தின் பெயரில் மாற்றுவதே சரி.
தமிழக முதல்வர் பழனிச்சாமி

தமிழகத்தில் எவ்வளவோ முக்கியமான விசயங்கள் நடந்து கொண்டுள்ளன.
ஆனால், அதெல்லாம் கண்டுகொள்ளாமல் பெயரை மாற்றுவதிலும், வளைவை அமைப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளார் தமிழக முதல்வர் பழனிச்சாமி.
ரயில்வே தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.
தமிழே தெரியாத வடமாநிலத்தவர்கள் தமிழில் 100 க்கு 103!!, 105!!! வாங்கி 90% பணிகளைத் தமிழகத்தில் பிடித்து விட்டார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசுப் பணிகளிலும் வடமாநிலத்தவரை பணியமர்த்தும் முக்கியப்பணி அதிதீவிரமாக நடந்து கொண்டுள்ளது.
இதே சம்பவம் அஞ்சலகப்பணியிலும் சில வருடங்களுக்கு முன்பு நடந்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
நான் கூறுவதைக் கிண்டலாக நினைத்தால் அது உங்கள் அறியாமையே! இன்னும் சில வருடங்களில் அனைத்து இடங்களிலும் வடமாநிலத்தவர் மட்டுமே இருப்பார்கள்.
இப்படியொரு மிகப்பெரிய மாற்றம் நடந்துகொண்டுள்ளது.
அதைக் கூறி தமிழக மக்களுக்குப் பணிகளைப் பெற்றுத்தராமல் பெயரை மாற்றுவதில் கவனம் செலுத்திக்கொண்டு இருக்கிறார்.
இதையெல்லாம் பார்க்கும் போது… என்னமோ போங்க!
தொடர்புடைய கட்டுரைகள்
புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல்!
சென்னை மெட்ரோ பயணிகள் அட்ராசிட்டிகள் 🙂
நடிகர் திலகம் சிலையும் சர்ச்சைகளும்!
இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்! [FAQ]
இதையெல்லாம் பார்க்கும் போது… என்னமோ போங்க! (same blood ).. நாட்டில எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது, அதை தீர்க்காமல்.. என்னமோ போங்க!!! என்ன எழுதுவது என்றே தெரியவில்லை!!!
உன்னால் முடியும் தம்பி படத்தில் எவன் குடித்து விட்டு வருகிறானோ அவனுடன் படுக்க மாட்டேன் என்று மனைவி கூறுவதுபோல காட்சி வரும்.
அது போல போராட்டம் செய்தால் இவனுங்க குடித்துவிட்டு வீட்டுக்கே வரமாட்டானுங்க. செத்து தொலையட்டும்.
எப்போ உருப்பட போகுதோ? தண்ணீர் பற்றாக்குறை சாக போகிறோம்.
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
மன்னனின் பணி மக்கள் பசிப்பிணி போக்குவதே
எம்.ஜி.யாரிற்காக வாக்களிக்கும் மக்கள் இன்னமும் தமிழகத்தில் உள்ளார்களா? இருந்து பாருங்கள், அடுத்த திமுக ஆட்சியில் எத்தனை கட்டடங்களுக்கு கலைஞ்ஞரின் பெயர் வருகிறது என்று. முகப்பு புத்தகத்தில் ஆரூர் முனா செந்தில் என்று ஒருவர் உள்ளார். உங்களிற்கு தெரிந்தவராகவும் இருக்கலாம். ரஜினி ரசிகர். ரயில்வேயில்தான் வேலை செய்கிறார். தமிழர்கள் உடல் உழைப்பை கொடுக்கும் புகையிரததுறையில் வேலையில் சேர்வதற்கு வெட்கப்படுவதால்தான் வட நாட்டவர்கள் வருவதற்கு வாய்ப்பாகிறது என்பது அவரது வாதம். ” எந்திரவியல் படித்து விட்டு உணவு வீட்டுக்கு வீடு கொண்டு சென்று கொடுப்பார்களே தவிர புகையிரத துறையில் அடிமட்ட வேலையில் சேர்ந்து முன்னேறமாட்டார்கள். ”
ரயில்வே பரீட்சைகளில் தெரிந்தவர்களை பங்குபெற எப்போதுமே அவருடய முகப்புத்தகத்தில் தகவல்களை பரிமாறுவார்.ரயில்வே பரீட்சைகளில் ஏமாற்றமுடியாது என்பது அவரது வாதம். அவரின் பதிவுகளை படித்தீர்களாயின் சிறிது தெளிவு கிடைக்கும். நான் தமிழ் நாட்டு பத்திரிகைகளை படிப்பதில்லை. உங்களிற்கு என்னிலும் பார்க்க கூடுதலாக தெரிந்திருக்கும்.
முக்கிய தகவல் – மொன்றியல், கனடா விமான நிலையத்தின் பெயர் ரூடோ விமான நிலையம். உங்களின் அபிமான ஜஸ்டீன் ரூடோவின் தந்தையின் பெயரிலே அழைக்கப்படுகிறது.
@யாசின் 🙂
@தமிழ்நெஞ்சம் நலமா? ரொம்ப நாளா ஆளை காணோம்.
@ப்ரியா ஆம். இருக்கிறார்கள்.
கலைஞர் தன்னுடைய பெயரை பதிவு செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவருக்கு பின் தான் ஜெ வருவார். ஜெ முதல் ஆட்சியில் தான் இந்த அட்டகாசம் அதிகம் இருந்தது, அதன் பிறகு குறைந்து விட்டது.
செந்தில் ஒரு Blogger ஆக தெரியும் அவ்வளவே! மற்றபடி எனக்கு பழக்கமில்லை ஆனால், நீ கூறுவது போல அவர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அடிக்கடி ரயில்வே வேலைவாய்ப்புகள் குறித்து தெரிவித்து பதிவு செய்தார். நானே இவருடைய தகவலை பகிர்ந்து இருக்கிறேன்.
அவர் கூறுவது உண்மை தான்.
அதே போல சமீப சர்ச்சையில் கோபம் அடைந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்ததும் உண்மை தான். அதாவது போலியான மதிப்பெண்களை கொடுத்து வட மாநிலத்தவரை எடுத்துள்ளார்கள் என்று.
தமிழில் 100 க்கு 103 எடுத்தால் சரியானதா! நேர்மையான தேர்வா?
என்னது “அபிமான ஜஸ்டீன் ரூடோவா” ஆமா எனக்கு மாசம் 1000 CAD அனுப்பிட்டு இருக்காரு.. அதனால அவர் மீது எனக்கு அபிமானம்.
அவர் கனடால ஜனவரி மாதத்தை “தமிழர்கள் மரபுடைமை மாதமாக” அறிவித்தார், அதற்கு அவரை உதாரணமாக கூறினேன், அவ்வளவு தான்.
சிங்கப்பூர் லீ குவான் யூ சொன்னாலாவது எட்டு வருடங்கள் அங்கே இருந்தேன், அபிமானம் இருக்குதுனு சொல்லலாம். இவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
உனக்கு இவர் மேல காண்டு அதை இப்படி கூறி உன் மனதை தேத்திக்கிறாய் 🙂 .