A Quiet Place [2018] சத்தம் போடாதே!

8
A quiet place

ரமான த்ரில்லர் படம் A Quiet Place. Image Credit

A Quiet Place

வினோதமான ஜந்துகள் ஊரில் புகுந்து சத்தமிடும் மனிதர்கள் விலங்குகள் அனைவரையும் கொல்கின்றன. 

இதில் தப்பித்த ஒரு குடும்பம் எப்படித் தங்கள் வாழ்க்கையைத் தொடர்கின்றனர்? இறுதியில் அவர்கள் பிழைத்தார்களா? என்பதே A Quiet Place.

துவக்கத்தில் 30 நிமிடங்கள் படம் பார்த்து ஒன்றுமே புரியவில்லை, கடுப்பாகி விட்டது. பொறுமை இருக்கும் போது பார்க்கலாம் என்று ஒத்தி வைத்து விட்டேன்.

இப்படத்தைப் பரிந்துரைத்தது நண்பன் பாபு.

ஜி பாருங்க ஜி.. உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும், அதன் பிறகு தான் படம் செமையா இருக்கும்” என்று கூறியதால், சரி என்று அடுத்த நாள் பார்த்தேன்.

உண்மையாகவே செம்ம படம்.

சத்தம் போடக்கூடாது என்பதால், சைகை மொழியில் தான் பேசிக்கொள்வார்கள். சிறு சத்தம் கேட்டால் கூட வந்து அடித்துக் கொன்று விடும்.

எனவே, ஒலி எழுப்பாமல் இருக்க என்ன வழிமுறைகள் உள்ளதோ அதையே பின்பற்றுவார்கள்.

இந்த ஐந்துக்கு பார்வை கிடையாது, சத்தத்தை வைத்தே அனைத்தையும் உணர்ந்து கொள்ளும்.

நடக்கும் போது சத்தமாகும் என்று பாதைகளில் மணலைக் கொட்டி வைத்து இருப்பார்கள்.

இந்தச் சமயத்தில் மனைவி கருவுற்று விடுவார். உங்களுக்கு என்ன தோன்றும்? குழந்தை பிறந்தால் கத்துமே?! என்ன ஆகும் என்று தானே! எனக்கு முதல் யோசனையே இது தான் வந்தது.

இதை ஓரளவுக்கு நம்பும்படி எடுத்துள்ளார்கள், இருப்பினும் “எப்படி?” என்ற சந்தேகம் வந்தது.

பொறியாளர்

கணவர் பொறியாளர் எனவே, பல ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டு இருப்பார்.

அந்த ஐந்துவின் பலம் என்ன? என்னென்ன செய்யும்? என்று அனைத்தையும் கணிக்க முடிந்தாலும் அதனுடைய பலவீனம் என்னவென்று அவரால் கண்டறிய முடியாது.

கடைசி 45 நிமிடங்கள் படம் தாறுமாறாக உள்ளது. ஒலியமைப்பு செம செம 🙂 .

கார்த்திக் சுப்பராஜ் எடுத்த “மெர்க்குரி” படம் இது போல எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். இதே கதையல்ல ஆனால், இது போலத் திரைக்கதையுடன்.

நான் மட்டும் பார்த்துட்டு இருந்தேன், பின்னர் பசங்க வந்து உட்கார்ந்தாங்க.. அப்படியே மெதுவா மனைவி வந்தார்.. அப்புறம் இறுதியில் பக்கத்துவீட்டு பசங்க வந்தாங்க.

எல்லோரும் படு தீவிரமாகப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் 🙂 .

த்ரில்லர் படம் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள், தவறவிடக்கூடாத படம்.

“Emily Blunt” நடிப்பு அட்டகாசம்.  கணவராக நடித்த John Krasinski தான் படத்தின் இயக்குநர் அதோடு நிஜ வாழ்க்கையிலும் Emily க்கு கணவர்.

கணவருக்கு உற்சாகம் கொடுத்துப் படம் இயக்க வைத்த Emily, திரைக்கதையில் ஈர்க்கப்பட்டு தானும் நடித்துள்ளார்.

படத்தின் முதலீடு 20 மில்லியன் USD, வசூலித்தது 340 மில்லியன் USD 😮 .

கொசுறு

படம் முடிந்ததும் “உங்க மூன்று பேரையும் (மனைவி, பசங்க) இது மாதிரி ஊருல ஒரு வருடம் விட்டுட்டு வந்துடனும். அப்பத்தான் சத்தம் போடாம இருக்கப் பழகுவீங்க!” என்றேன் 🙂 .

நாங்க போனா அந்த ஐந்துவே சத்தம் தாங்காம பயந்து ஓடிடும்” என்கிறார்கள் 😀 . எங்கள் வீட்டில் நான் அதிகம் பேசும் வார்த்தையே “சத்தம் போடாதீங்க” என்பது தான்.

ஒரு முறை நான் எதற்கோ “எனக்கு என்னடா கிஃப்ட் தரப்போறீங்க” என்று கேட்டேன். அதற்கு வினய், “நாங்க ஒரு நாள் சத்தம் போடாம இருக்கோம்” என்றான்.

பெஸ்ட் கிஃப்ட் டா! இதை விடப் பெஸ்ட் கிப்ட் எனக்குக் கொடுக்க முடியாது!” என்றேன் 🙂 .

எனக்குப் பிடித்த இசை, இயற்கை ஒலியைத்தவிர வேறு எந்த சத்தமும் பிடிக்காது.

தொடர்புடைய கட்டுரை

ஹா(ர்)ரன் சைக்கோக்கள்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

 1. படம் வந்து ஒரு மாதத்திற்குள் தமிழில் மொழிப்பெயர்த்து வந்தது (படத்துக்குத்தான் மொழியே இல்லையே என நீங்கள் கேட்பது புரிகிறது) ஆனால் எனக்கு தான் அதுபற்றி ஒன்றுமே தெரியாதே அதனால்தான் தமிழில் வந்ததும் subtitle உடன் பார்த்தேன் செம. (குடும்பத்துடன் பார்த்த முதல் ஆங்கில திரைப்படம்)

  இரண்டாம் பாகம் 2020 வெளியாகிறது. முதல் பாகத்தை போல் இருக்காது என நினைக்கிறேன்.

  என் நண்பன் தான் பரிந்துரைத்தான் ஆனால் என் நண்பனுக்கு படம் பிடிக்கவில்லை.
  மிருகம் அடித்துகொள்வது, வேற்றுக்கிரகவாசி,சோம்பி,பேய் போன்ற கதைகள் அவனுக்கு பிடிக்காது.

 2. என் நண்பன் பார்த்து நன்றாக இருக்கு என்று சொன்ன திரைப்படங்கள் இரண்டே இரண்டுதான் வ்ரோங் டர்ன் 1 ,Howl மற்றதெல்லாம் ok ரகம் தான் Stranger ,Purge (தமிழில் நான் பார்த்தேன் எனக்கு பிடித்திருந்தது) the guest,You’re next,jackals,Halloween,Split

 3. கிரி, தற்போது தான் படம் குறித்த தகவலை இணையத்தில் பார்த்தேன்.. 90 நிமிட படம் தான்.. ஆனால் வசூலில் சக்கை போடு போட்டு இருக்கிறது.. நேரம் இருக்கும் போது கண்டிப்பாக பார்ப்பேன்.. அமைதியான சுழலில்.. இதுபோல நேரம் குறைவான படங்கள் தமிழிலும் வரவேண்டும் என்பது எனது நெடுநாள் விருப்பம்.. நேரம் குறைவாக இருக்கும் போது காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும்.. பார்வையாளர்களில் ஆர்வமும் அதிகமாக இருக்கும்.. வெகுவிரைவில் வரலாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்!!!

  கடந்த மாதம் தற்செயலாக War of the Arrows படத்தை பார்த்தேன், கொரியா படம் 2011 இல் வெளிவந்து இருக்கிறது.. மிகவும் அருமையான படம்.. துவக்கம் கொஞ்சம் மெதுவாக சென்றாலும், அதன் பின் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை… படத்தின் நாயகன் நன்றாக நடித்துள்ளார்.. எனக்கு பழைய கால நிகழ்வுகளை கொண்ட எல்லா படங்களும் ரொம்ப பிடிக்கும்..நேரம் இருக்கும் போது இதுவரை பார்க்கவில்லை என்றால் பார்க்கவும்.. நீங்களும் கண்டிப்பாக ரசிப்பீர்கள்!!! பகிர்வுக்கு நன்றி கிரி.

 4. @பிரதீபன் ரசனை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. எனவே, இதற்கு அளவுகோள் கிடையாது.

  ஒருத்தருக்கு பிடித்த படம் மற்றவருக்கு குப்பையாக இருக்கும். மோசமான படங்களையும் ரசிக்கும் எவரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

  எனக்கு Science Fiction படங்கள் சிலவற்றில் ஆர்வமில்லை.

  @யாசின் War of the Arrows பார்க்க முயற்சிக்கிறேன். நீங்க இதற்கு முன்னாடி ஒரு படம் பரிந்துரைத்து இருந்தீர்கள்.. காரிலேயே மெக்காவோ எங்கேயோ ஒரு தந்தையும் மகனும் செல்வது.

  ரொம்ப நல்ல படம்.. ரொம்ப ரசித்துப் பார்த்தேன்.

  • ஆமாம் கிரி.. அந்த படத்தோட பெயர் Le Grand Voyage அது ஒரு பிரெஞ்சு படம்.. இந்த படத்தோட கதைக்களமும், War of Arrows கதைக்களமும் முற்றிலும் வேறு..

 5. விமர்சனத்திற்கு மிகவும் நன்றி . அருமை அருமை.
  நீங்க சொன்ன மாதிரி இந்த அளவு சத்தம் போடாமல் இருக்க முடியுமா என்றால் மிகவும் கடினம்.“Emily Blunt” அசத்தலோ அசத்தல்.

 6. அருமையான விமர்சனம் கிரி. நேற்று தான் இந்தப் படம் பார்த்தேன். பிரமாதம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here