தன்னை யாராவது பாராட்ட மாட்டார்களா? அங்கீகரிக்க மாட்டார்களா? என்று எதிர்பார்க்கும் பெரும்பாலானோர் மற்றவர்களைப் பாராட்டுவதில்லை. எனவே, பாராட்டப் பழகுங்கள்.
பாராட்டை, அங்கீகாரத்தை விரும்பாத எவரும் இவ்வுலகில் இருக்க வாய்ப்பில்லை, அப்படியே இருந்தாலும் அவர்கள் சராசரி மனிதர்களாக இருக்க வாய்ப்பில்லை.
நாம் தினமும் சந்திக்கும் எவ்வளவோ பேர் சிறந்த செயலைச் செய்து இருப்பார்கள் ஆனால், அதைப் பாராட்டாமல் தவிர்த்து இருப்போம்.
மற்றவரைப் பாராட்ட நம் மனம் ஒத்துக்கொள்வதில்லை. Image Credit – https://quotefancy.com/
‘நம்மை எவனும் கண்டுக்க மாட்டேங்குறான், நாம் கூறுவதற்கு மதிப்பு கொடுக்க மாட்டேங்குறான் ஆனால், நாம மற்றவர்களைப் பாராட்டணுமா!‘
என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது.
இதனால், ஒருவரின் திறமையை ரசித்தாலும், அதனால் பயன் பெற்றாலும் அவரைப் பாராட்டாமல் தவிர்த்து விடுகிறோம். பொறாமை, சுய கௌரவம் (EGO) தவிர்த்து வேறில்லை.
பாராட்டுவதில் என்ன பிரச்சனை?
அனைத்துக்கும் பாராட்ட வேண்டியது அவசியமில்லை ஆனால், உண்மையிலேயே ஒருவர் சிறப்பான செயலைச் செய்து இருந்தால், அவரைப் பாராட்டுவதில் என்ன பிரச்சனை?
நம்முடைய பாராட்டு மற்றவர்களுக்குச் சிறு ஊக்கத்தையும் அவர்கள் செய்யும் பணியில் திருப்தியையும் கொடுக்கும். நமக்குச் சாதாரண ஒரு செயலாக இருக்கலாம் ஆனால், சம்பந்தப்பட்டவருக்கு அப்படியல்ல.
குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்
இதைத் தற்போது என்னுடைய பசங்களுக்கும் கற்றுக் கொடுக்கிறேன்.
Cab ல் சென்றால், ஓட்டுநருக்கு டாடா சொல்வதை இவர்களுக்குப் பழக்கப்படுத்தி இருக்கிறேன்.
காரில் செல்கிறோம், இடம் வந்தால் இறங்கிக்கொள்கிறோம். ஓட்டுநர்களும் நாள் முழுக்க ஓட்டிச் சலிப்பாகி இயந்திரம் போலவே மாறி இருப்பார்கள்.
அவர்களுக்கு இது போன்ற சின்ன உற்சாகத்தைக் கொடுக்கும் போது அவர்கள் மனது இளகுகிறது, நம்மையும் மதித்துக் கூறுகிறார்களே என்ற மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள்.
வெளிப்படையான பாராட்டு
பாராட்டுவதை மனதில் மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள். அது மற்றவர்களுக்கு எக்காலத்திலும் தெரியாது. எனவே, வெளிப்படையாகப் பாராட்டப் பழகுங்கள்.
உங்கள் மேலாளர் ‘நீ நல்லா வேலை பண்ணுறேன்னு!‘ சொல்வது சரியா? பொறுமை இழந்து இதைக் குற்றச்சாட்டாக நீங்கள் வைக்கும் போது ‘மனதில் நினைத்துட்டு இருந்தேன்னு‘ சொல்வது சரியா? எதை விரும்புகிறீர்கள்?!
எனவே, வெளிப்படையாகப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள். மனதில் மட்டுமே நினைத்துக்கொண்டு இருந்தால் போதாது. அன்பையும் வெளிப்படுத்தினால் மட்டுமே அதற்கு மதிப்பு, மனதில் நினைத்துக்கொண்டு இருப்பதால் அல்ல.
மனதினுள் மட்டும் நினைக்கும் பாராட்டும், அன்பும் பயனற்றது.
நீங்கள் நீங்களாக இருங்கள்
உண்மையிலேயே சிறப்பாகச் செய்து இருந்தால், மனைவி, கணவர், குழந்தைகள், நண்பர்கள், சக ஊழியர்கள், ஓட்டுநர்கள் என்று அனைவரையும் பாராட்டுங்கள்.
மற்றவர்கள் நம்மைப் பாராட்டவில்லை என்பதால், நாமும் அதே போல இருக்க வேண்டும் என்பதில்லை. கொடுக்கப்பழகுங்கள் பின்னர் நீங்களும் பெறத்துவங்குவீர்கள்.
துவக்கத்தில் சில விஷயங்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், நாம் சரியாக உள்ளோம் என்ற திருப்தியை உங்களுக்குக் கொடுக்கும்.
மற்றவர் குணங்கள் உங்களைக் கட்டுப்படுத்த / மாற்ற அனுமதிக்காதீர்கள்.
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
ஊருக்குச் சென்று வரும் போது, இங்கே சிறிய கடைகளில் பொருட்கள் வாங்கும் போது நிறைய கூத்துக்கள் நடக்கும். மகள்கள் சிரிப்பார்கள். இன்று நேற்றல்ல. எப்போதும் நான் சின்ன காரியம் ஒருவர் செய்தால் அவர்களிடம் ரொம்ப நன்றிப்பா ரொம்ப நன்றிம்மா, நன்றிங்க என்று சொல்வது வழக்கம். ஆனால் அவர்களுக்கு அதன் தாக்கம் புரிவதில்லை. ஏன் என்று முழிப்பார்கள். எழுபது பேர்கள் பயன்படுத்ததாத வார்த்தைகளை ஒரு இடத்தில் நீங்க சொல்லிப் பாருங்கள். அது அந்த இடத்தில் வித்தியாசமாகத் தெரியும். ஆனாலும் விடாமல் இன்று வரையிலும் கடைபிடித்தே வருகிறேன்.
கிரி, இந்த பாராட்டை முதலில் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கவேண்டும் என் எண்ணுகிறேன்.. 90 % வித ஆண்கள் இங்கு யாரும் பெண்களை பாராட்டுவதில்லை.. (என்னையும் சேர்த்து), சாப்பாடு சரியில்லாத போது, உடனடியாக குறைசொல்லும் நாம், சாப்பாடு நன்றாக இருக்கும் போது அதை பற்றி ஏதுவும் பேசுவதிலை!!! ஆனால் மனைவியின் எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும்.. வீட்டு பெண்மணிகளை ஒரே ஒரு முறை பாராட்டிப் பாருங்கள், அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையிருக்காது.. இறைவி படத்தின் இறுதிக்காட்சி ரொம்ப பிடிக்கும் – ஆண் -(நெடில்), பெண் – (குறில்).. வாழ்க்கையின் எதார்த்தம் இதுதான்!!! பகிர்வுக்கு நன்றி கிரி..
இந்த போஸ்டுக்கு நன்றி.
90 % வித ஆண்கள் இங்கு யாரும் பெண்களை பாராட்டுவதில்லை..
யாசின் இங்கே நிலமை தலைகீழ். நான் வீட்டில் பாராட்டத் தொடங்கினால் என்ன இன்றைக்கு எலி அம்மணமாக ஓடுகின்றது. ஏதும் பஞ்சாயத்து வரப் போகுதோ என்று கலாய்க்கின்றார். நான் வாங்கி வந்த வரம் அப்படி.
@ஜோதிஜி 🙂 பலர் எதிர்பார்ப்பதையே நிறுத்தி விட்டதால், இது போல கூறும் போது அவர்களுக்கு வியப்பாக உள்ளது.
@யாசின் நான் என் மனைவியை எப்போதுமே எந்த`செயலை நன்றாகச் செய்து இருந்தாலும் பாராட்டுவேன். சமையல் நன்றாக இருந்தாலும் பாராட்டுவேன் இதுல என்ன பிரச்னை என்றால் அதற்கான வாய்ப்பு அதிகம் கிடைப்பதில்லை 😀
@நவீன் ரைட்டு
@ஜோதிஜி 😀 நல்லதுக்கு காலமில்லை.