மலையாள சூப்பர்ஸ்டார் ப்ரித்விராஜ். இவருடைய ஓட்டுநர் உரிமம் தொலைந்ததால், ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ஓட்டுநர் உரிமம் பெற முயற்சிக்கிறார்.
RTO வாக இருக்கும் சூரஜ், சூப்பர்ஸ்டார் ப்ரித்விராஜின் அதி தீவிர ரசிகர். ப்ரித்விராஜ் ஓட்டுநர் உரிமம் எடுக்க வருவது ஊடகங்களுக்குத் தெரிய வந்து பிரச்சனையாகி விடுகிறது.
இதனால் சூரஜை, ப்ரித்விராஜ் திட்டிவிட்டு சென்று விடுகிறார்.
இதனால் கடுப்பான சூரஜ், இதுவரை தான் ரசித்த ப்ரித்விராஜையே எதிர்க்க முடிவு செய்கிறார்.
இதன் பின்னர் என்ன ஆகிறது? ப்ரித்விராஜ் ஓட்டுநர் உரிமம் பெற்றாரா! என்பதே Driving Licence கதை.
சுய கௌரவம்
மிக மிகச் சாதாரணக் கதை ஆனால், அதைச் சுவாரசியமாகக் கொடுத்துள்ளார்கள்.
ப்ரித்விராஜ் அற்புதமான நடிகர். மிகை நடிப்பு என்பதே வராது போல.. அவ்வளவு சிறப்பாகச் செய்துள்ளார்.
சூப்பர்ஸ்டாராகப் பேசும் போதும், சூரஜ் இவரிடம் அரசு அதிகாரத்தைக் காட்டும் போது அதே பாணியில் பதிலடி கொடுப்பதும் என்று கெத்து காட்டியுள்ளார்.
தன் மகன் முன்பே தான் ரசித்த பிம்பத்தால் அவமானப்படுத்தப்படும் போது ஏற்படும் வலியை, ஏமாற்றத்தை மிகச்சிறப்பாகச் சூரஜ் வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாம் உயிருக்குயிராக ரசித்த நபர் நம்மை அவமானப்படுத்தினால் எப்படி இருக்கும்?! அது தான் இப்படத்தின் மையக்கருத்து. இருவரின் சுய கௌவரத்துக்கு (EGO) கடும் போட்டி நிலவும்.
சூரஜ் மனைவியாக வரும் மியா ஜார்ஜ் மிகை நடிப்பு, கொஞ்சம் எரிச்சலையும் கிளப்புகிறார்.
தயாரிப்பாளராக வருபவர், தன்னுடைய நிலையை, கடுப்பை, ஏமாற்றத்தை, எதிர்பார்ப்பை, பதட்டத்தை என்று அனைத்தையும் ஒரு நிஜ தயாரிப்பாளர் போலவே பிரதிபலித்துள்ளார்.
ஊடகங்களுக்குத் தெரிந்து விட்டதால், தேர்வை எழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார் ப்ரித்விராஜ்.
தேர்வு நேரத்தில் நடப்பவை சுவாரசியமாகவும் இறுதியில் அதே நிலை உணர்ச்சிகரமாகவும் மாறியது எதிர்பாராதது.
முடிவு இது தான் இருக்கும் என்று எவரும் ஊகிக்க முடியும் ஆனால், அதைச் சலிப்புத் தட்டாமல் கொண்டு சென்று இருக்கிறார்கள்.
Driving Licence அமேசானில் உள்ளது. பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
ப்ரித்விராஜ் நடித்த பல நல்ல படங்களில் எனக்கு ‘மும்பை போலீஸ்’ ரொம்பப் பிடிக்கும். இரு கதாப்பாத்திரங்களை அட்டகாசமாக வித்தியாசப்படுத்தி நடித்து இருப்பார்.
Directed by Lal Jr.
Produced by Supriya Menon, Listin Stephen
Written by Sachy
Starring Prithviraj Sukumaran, Suraj Venjaramoodu, Miya George, Deepti Sati
Music by Yakzan Gary Pereira, Neha Nair
Cinematography Alex J. Pulickal
Edited by Ratheesh Raj
Production company Prithviraj Productions Magic Frames
Release date 20 December 2019
Running time 135 minutes
Country India
Language Malayalam
Read : Virus (மலையாளம் – 2019)
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி நீங்க சொன்ன இந்த படத்தை பார்ப்பேனா என்று தெரியவில்லை.. ஏனென்றால் பிரதிவிராஜ், சித்தார்த் ரெண்டு நடிகர்களின் படங்கள் நான் விரும்பி பார்ப்பதில்லை.. அதிலும் குறிப்பாக சித்தார்த் படங்கள்.. விருப்பமான இயக்குனர் வசந்தபாலனின் காவிய தலைவனின் சித்தார்த் படத்தை பார்த்து தான் இந்த முடிவை எடுத்தேன்.. இதுதான் கடைசி என்று.. பகிர்வுக்கு நன்றி கிரி..
“வசந்தபாலனின் காவிய தலைவனின் சித்தார்த் படத்தை பார்த்து தான் இந்த முடிவை எடுத்தேன்”
ஹா ஹா ஹா 🙂 யாசின் இதை நான் படித்ததும் எனக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.
நீங்க சொல்ற மாதிரி அந்தப்படத்தின் கதாப்பாத்திரத்துக்கு இவர் பொருத்தமாக இல்லை. நன்றாக நடித்து இருந்தார் ஆனால், இவரின் முகம் இக்கதாப்பாத்திரத்துக்கு பொருந்தவில்லை.
இவரோட சிவப்பு மஞ்சள் பச்சை படம் பாருங்க. ரொம்ப நல்லா இருக்கும்.
நேற்று தான் இந்தப் படத்தை பார்த்தோம் கிரி. அருமையான படம். பரிந்துரைக்கு நன்றி. இன்று மும்பை போலீஸ் பார்க்க ஆரம்பித்துள்ளோம்.
உங்கள் ரசனை அபாரம்.
மும்பை போலீஸ் பாருங்க.. Driving Licence ஒன்றுமே இல்லைனு தோன்றும் 🙂 . செம படம்.
நேற்று மும்பை போலீஸ் பார்த்து விட்டோம் கிரி. சூப்பர்! ஏகப்பட்ட ட்விஸ்ட். பிருதிவி ராஜ் கலக்கல். நீங்கள் சிபாரிசு செய்யும் படங்களை கண்ணை மூடிக் கொண்டு பார்க்கலாம் 🙂