Apple & Android செயலிகள் வருமானம் தெரியுமா?!

5
Apple & Android

செயலிகள் (App) மூலமாக ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் பெரிய அளவில் சம்பாதிக்கின்றன. Image Credit  

இந்தியாவில் பணம் கொடுத்துச் செயலிகள் வாங்குபவர்கள் மிகக் குறைவு ஆனால், மற்ற நாடுகள் குறிப்பாக அமெரிக்கா & ஐரோப்பா போன்றவை அதிகம்.

இலவச செயலிகள் மூலமாகவே தங்கள் தேவையை இந்தியாவில் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். உண்மையில், வாங்கத்தேவையில்லை என்பதும் நிதசர்னமே!

யார் அதிகம் செலவு செய்கிறார்கள்?

சுருக்கமாக ஆப்பிள் திறன்பேசி பயன்படுத்துபவர்கள் செயலிகளுக்கு அதிகம் செலவு செய்பவர்களாகவும் Android திறன்பேசி பயன்படுத்துபவர்கள் கட்டணம் கொடுக்க தயாராக இல்லையென்பதும் உணர முடிகிறது.

எனவே, Android இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதிகம் இருந்தும், தரவிறக்கம் அதிகம் என்று இருந்தும் வருமானத்தில் குறைவே!

ஆனால், தற்போது செயலிகள் மூலம் பெறும் வருமானத்தில் 2018 மூன்றாம் காலாண்டில் கூகுள் முன்னேற்றம் கண்டுள்ளது.

செயலிகள் மூலம் பெறும் வருமானத்தின் அளவை அதிகரிக்க அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டு வருகிறது.

Apple & Android செயலிகளின் மூன்றாம் காலாண்டின் வருமானத்தைப் பார்ப்போம். Images Credit

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூன்று செயலிகளே தரவிறக்கத்தில் முன்னணியில் உள்ளன. தற்போது Dubsmash பிரபலமாக உள்ளதால், அடுத்தது TikTok உள்ளது. அடுத்தது திரும்ப ஃபேஸ்புக் நிறுவன இன்ஸ்டாக்ராம் செயலி.

க்ரோம், YouTube போன்ற பிரபலமான Android செயலிகள் வரும் போதே Android உடன் இணைந்து வருவதால், தரவிறக்கப் பட்டியலில் இல்லையென்று நினைக்கிறேன்.

Apple & Android செயலிகள் வருமானத்தில் விளையாட்டுச் சம்பந்தப்பட்ட செயலிகள் தான் அதிகளவில் வருமானத்தை இரு நிறுவனங்களுக்கும் பெற்றுத் தருகிறது.

பார்த்தாலே மலைப்பாக உள்ளது.

2018 ம் ஆண்டின் முதல் பாதி Apple & Android வருமானம் இங்கே –> Apple Store Vs Google Play Store

தொடர்புடைய கட்டுரை 

பின்வரும் கட்டுரையின் மூலம் நீங்கள் பணத்தைப் பெற்று பணம் செலுத்தாமலே (Android) கட்டணச் செயலிகளைப் பெற முடியும். நான் பெற்றுக்கொண்டு இருக்கிறேன் 🙂 .

கூகுள் நமக்குப் பணம் தருகிறது என்பது தெரியுமா?!

கொசுறு 

நீங்கள் பணம் கொடுத்து செயலி வாங்கியுள்ளீர்களா? பயன்படுத்துகிறீர்களா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. //நீங்கள் பணம் கொடுத்து செயலி வாங்கியுள்ளீர்களா? பயன்படுத்துகிறீர்களா?//

    No

  2. சில Apps மட்டும் ப்ளே ஸ்டோரில் பணம் கொடுத்து வாங்கி இருக்கிறேன். Nova Launcher. GREENIFY. Etc. அதுவும் 10 ரூபாய்க்கு தரும் போது வாங்கினேன். மொத்தமாக 5 apps பணம் கொடுத்து வாங்கி இருக்கிறேன். நான் மொபைலை ரூட் செய்ததனால் பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை.
    90% apps ஹேக் செய்து விடலாம். அப்படி தான் நான் உபயோகிக்கிறேன்.

  3. ஜூலைக்கும் நவம்பருக்கும்மிடையில் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். ஜீலை வரை7$ கொடுத்த நான் இப்போது மாதம் 15 $ கொடுக்கிறேன். பின்னர் அவர்களின் வருமானம் அதிகரிக்காமல் என்ன செய்யும். எங்களின் நாட்டில் கூகிளில் வாங்கினால் வரியில்லை ஆனால் அப்பிளில் வாங்கினால் வரி உண்டு. . விளையாட்டுக்கு செலவு செய்வதும் மதுவிற்கு செலவு செய்வதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். நிறுத்துவது மிகவும் கடினம். யூடியூப் விளம்பர வருமானத்தில் ஒரு பகுதி அப்பிளிற்கும் போகிறதா? வருமானம் அதிகம் தருவதில் 6 வதாக உள்ளதே. ரிண்டரை பார்த்து இந்திய மணமக்கள் சேவை நிறுவனங்கள் முழிக்கவேண்டும். இல்லை அவர்களே இவர்களின் வருமானத்தை அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். அண்மையில் சில் தமிழ் யூடியூப் சேனல்கள் டிண்டரிற்கு விளம்பரம் செய்கிறார்கள். காமடி பண்ணுவதாகத்தான் நினைத்தேன். வருமானத்தில் உச்சத்தில் இருப்பதால் அவை உண்மையான வீள‌ம்பரங்கள்தான் போல் உள்ளது. நெட்பிளிக்ஸ், ரிண்டர், யூரியூப் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. தெரியாமல் இருப்பதுதான் நல்லதுபோல் உள்ளது

  4. கிரி, உண்மையில் இந்த செய்தியை படிக்கும் போது மலைக்க வைக்கிறது.. நான் இதுவரை ஒரு ரூபாய் செலவு செய்தது கிடையாது.. எந்த APP ம் தரவிறக்கம் செய்வது இல்லை.. கைபேசியில் விளையாட்டும் விளையாடுவது கிடையாது.. செஸ் விளையாட்டு மட்டும் கைபேசியில் வைத்து இருக்கிறேன்.. அரிதான நேரங்களில் விளையாடுவதுண்டு..
    இணையத்தில் ஒரே பொழுதுபோக்கு YOUTUBE இல் இளையராஜா சாரின் பழைய பாடல்கள் கேட்பதுண்டு.. நான் அறிந்து சில நபர்கள் இணையத்தில் இந்த விளையாட்டிற்காக லட்ச கணக்கில் செலவு செய்கின்றனர்.. நினைச்சாலே நமக்கு கண்ண கட்டுது!!! பகிர்வுக்கு நன்றி கிரி…

  5. @வரதராஜுலு 🙂 ரைட்டு

    @ஹரிஷ் Root செய்வதில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டால் அதை நான் முயற்சிப்பதில்லை. அதோட அந்த அளவுக்கு என்னுடைய தேவையும் இல்லை.

    @ப்ரியா எனக்கு ரிண்டர் என்றால் என்னவென்று தெரியாது. நமக்கு எப்போதும் YouTube தான் விருப்பம்.

    @யாசின் நீங்க ஃபோனை சரியா பேச குறுந்தகவல் அனுப்ப மட்டுமே பயன்படுத்துறீங்க என்று நினைக்கிறேன் 🙂 வாழ்த்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here