சந்தையைக் கலக்கும் கூகுள் மொபைல் “Pixel”

7
சந்தையைக் கலக்கும் கூகுள் மொபைல் "Pixel"

ணையத்தைத் தற்போது கலக்கிக்கொண்டு இருப்பது கூகுளோட Pixel மொபைல் (Smartphone) தான். Image Credit

எதிர்பார்ப்பு இருந்தாலும், ரொம்ப இல்லாமல் வந்து தற்போது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

Pixel – The King of Android

சமூகத்தளங்களில் சொதப்பி இன்று வரை ஃபேஸ்புக்கிடம் கூகுள் தர்ம அடி வாங்குவது போல இல்லாமல், முதல் முயற்சியிலேயே தான் நினைத்ததை இந்த முறை 85% அடைந்து விட்டது.

அது ஏன் 85% என்பதைப் பின்னர் கூறுகிறேன்.

iPhone போலத் தரமான ஒரு திறன்பேசியை வெளியிட வேண்டும் என்றால், தரத்திலும் அதனால் ஏற்படுகிற விலையிலும் எந்தச் சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்று கூகுள் முடிவு செய்தது.

இதுவே இவர்கள் எடுத்த சிறந்த முடிவு.

iPhone இவ்வளவு விலை என்றால், அதற்குண்டான தரம் உள்ளது.

iPhone பயன்படுத்தும் போது எந்த விதமான தொழில்நுட்ப கோளாரையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது.

முன்னரே கூறியபடி விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால், அவை பெரும்பான்மை அல்ல.

தைரியமாக நம்ம iPhone பிரச்சனையே தராது என்று உறுதியாக இருக்கலாம். அந்த அளவுக்கு அதன் தரம் இருக்கும்.

இதை 7 வருடங்கள் பயன்படுத்திப் பார்த்த பிறகே கூறுகிறேன்.

எனவே, கூகுள் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தயாரித்து இருக்கிறது.

சொந்த இயங்குதளம் + சொந்த தொழில்நுட்பத்தின் வன்பொருள் = iPhone / Pixel

iPhone க்கு இருக்கும் அனுகூலம் என்னவென்றால், இயங்குதளம் (OS) மற்றும் வன்பொருள் (Hardware) இரண்டுமே ஆப்பிள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டினுள் உள்ளது.

எனவே, இரண்டுமே பொருந்திச் செல்வது போலத் தனது வடிவமைப்பை அமைக்கிறது.

இரண்டுமே ஆப்பிள் தயாரிப்பு என்பதால், ஆப்பிள் நிறுவனத்தால் மென்பொருள் வன்பொருள் இரண்டுமே இணைந்து சரியாகச் செயல்படும் படி உருவாக்க முடிகிறது.

இதுவே ஆப்பிள் நிறுவனத்தின் iPhone ன் தரத்துக்கு, நிலைத்தன்மைக்குக் (Stability) காரணம்.

Android மென்பொருள் கூகுளுடையது, வன்பொருள் வேறு நிறுவனத்தினுடையது (Samsung, LG, Xiomi, Nexus etc). இதுவே பல்வேறு பிரச்சனைகளுக்கு, செயல் இழப்புகளுக்குக் காரணமாக இருக்கிறது.

தற்போது Pixel ல் மென்பொருள் வன்பொருள் இரண்டுமே கூகுள் நிறுவனத்தினுடையது.

எனவே, தன் விருப்பப்படி திறன்பேசியை Customize செய்து,  என்ன செய்தால், இப்பிரச்சனையைத் தவிர்க்கலாம் என்று உணர்ந்து அதன்படி வடிவமைக்க முடிகிறது.

கூகுளுக்கு வேறு நிறுவனம் தான் (Pixel) வன்பொருளை உருவாக்குகிறது என்றாலும், வடிவமைப்பு, திட்டமிடல், தொழில்நுட்பம் முழுக்க முழுக்கக் கூகுளுடையதாகும்.

எளிதாகக் கூறினால், நீங்களும் உங்கள் நெருங்கிய நண்பரும் ஒரு பணியைச் செய்வதற்கும், நீங்களும் அறிமுகமற்ற நபரும் பணியில் ஈடுபடுவதற்கும் வித்யாசம் இருக்கிறதல்லவா?!

உங்களைப் புரிந்தவர் என்றால், அவரோடு இணைந்து உங்களால் பணியை விரைவில் முடிக்க முடியும், பிரச்சனைகளைக் குறைக்க முடியும்.

இருவருக்கும் இடையே சரியான புரிந்துணர்வு இருக்கும்.

அதே புதிய நபர் என்றால், அவரைப் புரிந்து கொள்ளவே நேரம் எடுக்கும், அதோடு அவர் உங்களுக்குச் சரிப்பட்டு வருவாரா என்றும் கூற முடியாது.

இதுவே மென்பொருள் வன்பொருளுக்கு இடையே இருக்கும் பந்தம்.

தற்போது கூகுள் இது போல மென்பொருள் வன்பொருள் இணைந்த தரமான திறன்பேசியாக Pixel யை கொண்டு வந்து விட்டது. இது கிட்டத்தட்ட iPhone யை நெருங்கி விட்டது.

அது ஏன் கிட்டத்தட்ட? காரணம், இதில் இன்னும் Waterproof போன்ற சில வசதிகள் இல்லை.

இதெல்லாம் கொண்டு வர முடியாத வசதிகள் அல்ல, அடுத்து வரும் பதிப்புகளில் வர வாய்ப்புள்ளது.

அனைத்தையும் முதல் முறையிலேயே கொண்டு வர வேண்டாம் என்று கூகுள் நினைத்து இருக்கலாம்.

மறு விற்பனை மதிப்பு (Resale value)

அதோடு Pixel குழந்தை, உடனே அதை iPhone தரத்துக்கு வந்து விட்டது என்று கூற முடியாது.

கிட்டத்தட்ட வன்பொருள் தரம், விலை எல்லாம் iPhone போல வந்துவிட்டாலும், மறு விற்பனை மதிப்பு என்பது iPhone க்குக் கிடைப்பது போலக் கிடைக்காது.

இரண்டு வருடப் பழைய iPhone யைக் கூட உங்களால் நல்ல விலைக்கு விற்க முடியும் ஆனால், Pixel அது போல ஒரு நிலைக்கு வர காலங்கள் எடுக்கும்.

எப்படி வேலை செய்கிறது? தரம் எப்படி உள்ளது? வன்பொருள் தரம் சிறப்பாக உள்ளதா? இரண்டு வருடங்கள் கழித்தும் அதே தரம் குறையாமல் இருக்கிறதா? இயங்குதளத்தின் தரம் சிறப்பாக உள்ளதா?  என்பதெல்லாம் கணக்கில் கொள்ளப்படும்.

இதற்குக் குறைந்தது, இரண்டு வருடங்கள் முதல் நான்கு வருடங்கள் ஆகலாம்.

இதன் பிறகு பயனாளர்களின் எதிர்பார்ப்பை / நம்பிக்கையை iPhone போல் நிறைவேற்றினால் மட்டுமே Pixel க்கும் மறு விற்பனை மதிப்பு iPhone போலக் கிடைக்கும், அப்போது தான் iPhone உடனே ஒப்பிட முடியும்.

இது நடக்க 3 வருடங்களுக்கு மேல் ஆகும்.

அதுவரை iPhone போல என்று கூறலாமே தவிர, iPhone யை விடச் சிறந்தது என்று போகிற போக்கில் அடித்து விட முடியாது.

Google Assistant

Android இயங்கு தளம் உள்ள எந்தத் திறன்பேசிக்கும் இல்லாத சிறப்பு, இதில் இருக்கும் Google Assistant. என்ன கேட்டாலும் கூறும்.

தட்டச்சு செய்கிற நேரத்தில் இதைக் கேட்டால் கூறி விடும், தகவல்களைத் தந்து விடும்.

உதாரணத்துக்கு Google Photos ல் இருக்கும் உங்களுடைய குறிப்பிட்ட நிழற்படத்தைக் கேட்டால், உடனே நமக்குக் காண்பித்து விடும்.

நாம் சென்று தேடிக்கொண்டு இருக்க வேண்டியதில்லை.

வசதிகள்

Google Photos ல் உயர் தர நிழற்படங்களை (High Resolution Images) இலவசமாகத் தரவேற்றம் செய்ய முடியும். இது Pixel பயனாளர்களுக்கு மட்டுமே உள்ள இலவச வசதி.

Android ன் புதிய பதிப்பு உடனுக்குடன் Pixel திறன்பேசிகளுக்குக் கிடைக்கும், அதாவது மற்ற Android திறன்பேசிகளுக்குக் கிடைக்கும் முன்பே.

நிழற்பட வசதி iPhone தரத்தை விடச் சிறப்பானதாக உள்ளது.

24/7 வாடிக்கையாளர் சேவை. நாம் பிரச்சனைகளைக்  கூறினால் அவர்கள் நம் திறன்பேசியில் remote மூலமாக ஆய்வு செய்து தீர்வு கூறுவார்கள்.

இது போல ஏராளமான வசதிகள் உள்ளது.

நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வரும் Pixel

Pixel பயன்படுத்தியவர்கள் கூகுள் சிறப்பானதொரு திறன்பேசியை அறிமுகப்படுத்தியிருப்பதாகக் கூறி இருக்கிறார்கள்.

மிகவும் சிறப்பாகச் செயல்படுவதாகவும், வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், பயன்படுத்த விருப்பமாக உள்ளதாகவும் கூறி வருகிறார்கள்.

Pixel வெற்றியால் கூகுளின் பங்கு மதிப்பு (824$) உயர்ந்து விட்டது.

விரைவில் 1000$ தொடும் என்று எதிர்பார்க்கிறார்கள், இருப்பினும் தற்போதைய நிலையே கூகுளுக்கு வெற்றி தான்.

Nexus திறன்பேசியின் தயாரிப்பை முற்றிலும் நிறுத்தி விட்டது. இனி கூகுள் திறன்பேசி என்றால் Pixel மட்டுமே!

சமூகத்தளத்தில் விட்டதை, கூகுள் “Pixel” திறன்பேசி பிடித்து விட்டது.

சாம்சங் நிறுவனத்தோட கெட்ட நேரம் மற்றும் கூகுளோட நல்ல நேரம் Note 7 பிரச்சனையால், பலர் Pixel க்கு நகர்ந்து விட்டார்கள்.

இதனால், இழப்பை சந்திக்கப் போவது சாம்சங் தான்.

ஆப்பிள் வாடிக்கையாளர்கள் நிரந்தரமானவர்கள். அவர்கள் அவ்வளவு சீக்கிரம் மாற மாட்டார்கள்.

Pixel விலை கடுமையாக உள்ளது. Android / Google தீவிர ரசிகர்கள் தான் இதை வாங்குவார்கள், மற்றவர்களுக்கு என்னுடைய பரிந்துரை “One Plus”.

கூகுள் ரசிகனாக எனக்கும் Pixel வாங்கும் விருப்பம் உள்ளது ஆனால், தற்போதுள்ள பொருளாதாரச் சூழ்நிலையில் வாங்க முடியாது.

அடுத்த வருடம் வெளியாகும் Pixel முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன்.

Pixel Dual SIM இல்லையென்பதால், வாங்குவேனா என்பதே சந்தேகமே! என் வாக்கு One Plus க்கே! 🙂 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

  1. சொக்கா இது எனக்கில்லை எனக்கில்லை …

    ஒருவழியா கூகுள் கொஞ்சம் மூச்சு விட ஆரம்பிச்சிடுச்சு நல்லது …

    கூகுள் போட்டோஸ் நல்லா இருக்கு அண்ணா ஆனால் ஒரு சில நேரங்களில் சில படங்கள் தரம் தானாகவே குறைந்து விடுகிறது . தவறு பதிவேற்றம் செய்யும் பொது நடை பெறுகிறதா அல்லது கூகுளுடையதா எனது தெரியவில்லை… உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறேன்

  2. நீங்கள் விலை குறைந்த போன் என்று சொல்வது “1+2” அல்லது வேறு போன் . தற்போது க்ஸியோமி ரெட்மி 3s மிகவும் நன்றாக உள்ளது

  3. கிரி, என்னுடைய பின்னுட்டம் இதில் காணவில்லை.???

  4. @கார்த்தி கூகுள் போட்டோஸ் ல Auto Optimization இருந்தது. எனக்கும் நீ கூறுவது போல நடந்து இருக்கு ஆனால், மாற்றிக் கொள்ள முடியும்.

    தற்போது தானாக மாறுவதாக தெரியவில்லை. தற்போது சோதித்துப் பார்க்கலாம்.

    @Ansi நான் விலைகுறைந்த தொலைபேசி என்று எங்கும் கூறவில்லை. Pixel க்கு மாற்றாக OnePlus 3 கூறியிருக்கிறேன்.

    இது விலைகுறைவல்ல Pixel யை ஒப்பிடும் போது Cheap & Best அவ்வளவே!

    @யாசின்.. ஆஹா! என்ன ஆச்சுன்னு தெரியலையே! ஸ்பாம் ல கூட காணோமே! மன்னிக்க யாசின்.

    உங்க பின்னூட்டம் தவறியது எனக்கு ஏமாற்றம் 🙁

  5. பிக்ஸல் இப்படி ஒரு கட்டுரை தமிழ் யாரும் எழுத்து இருக்க முடியாது.செம்ம.இதன் வெற்றி மற்றும் எதிர்மறை கருத்தினை பொறுத்து அடுத்த மொபைல் இன்னும் அருமையாக வரும்.os update எப்போதும் வருவதாய் தெரியவில்லை 2 வருடம் மட்டும் தான் என நினைக்கிறேன்.நான் கூட பிக்ஸல் சும்மா ஒரு கட்டுரை எழுதினேன்.?

  6. பகிர்வுக்கு நன்றி தல
    oneplus 3 வாங்க வாழ்த்துக்கள்
    நான் இப்ப google nexus 6p வெச்சு இருக்கேன் நல்லாவே இருக்கு ஐபோன் ந விட:)

    – அருண் கோவிந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!