Android OS (இயங்குதளம்) ஒவ்வொரு வருடமும் தனது புதிய பதிப்பின் பெயரை ABC என்ற வரிசையில், ஒரு இனிப்பின் பெயரில் வழங்கும். Image Credit
Android OS
சமீப Android பெயர்கள் Marshmallow, Nougat, Oreo, Pie.
தற்போது கூகுள் நிறுவனம் இவ்வழக்கத்தை மாற்ற முடிவு செய்துள்ளது.
பெயரை மாற்ற இரு முக்கியக்காரணங்கள்
1. இதில் கூறப்பட்டுள்ள இனிப்பின் பெயர்கள் பல நாட்டு மக்களுக்கு அறிமுகமில்லை அல்லது அதிகம் புழக்கத்தில் இல்லை.
எடுத்துக்காட்டுக்கு Pie என்பது நம் ஊரில் பலருக்குத் தெரியாது, இது போலவே பல இனிப்புகளின் பெயர்கள் அனைவருக்கும் நினைவில் வைக்கும் அளவில் இல்லை.
2. இதுபோலப் பெயர்கள் இருப்பதால் எந்தப் பதிப்பு புதியது? எது பழையது? என்பதை அறிய சிரமமாக உள்ளது. தொழில்நுட்பப்பதிவுகளை எழுதும் எனக்கே குழப்பம் தான்.
எடுத்துக்காட்டுக்கு ABC வரிசையில், M N O P என்று கூறிப்பார்த்த பிறகே நமக்கு எது புதியது? எது பழையது? என்பதை அறிய முடிகிறது.
இதையே Android 1, 2, 3 என்று குறிப்பிட்டால் அனைவரும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். நினைவிலும் வைத்துக் கொள்ள முடியும்.
எனவே தான், பலரின் கருத்துக்களைக் கேட்டுத் தற்போது Android “Q” ல் வர வேண்டிய இனிப்பு பெயருக்குப் பதிலாக Android 10 என்று மாற்றி விட்டார்கள்.
இனி அடுத்த வரும் பதிப்புகள், Android 11, 12, 13, … என்று வரும்.
இதை எளிதாக நினைவில் கொள்ளவும், அதே சமயத்தில் புரிந்து கொள்ளவும் முடியும்.
Logo

பெயரைப்போலவே Android Logo ல் சிறு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
படிக்கச் சிலருக்கு சிரமமாக உள்ளதால் எழுத்தைப் பச்சை நிறத்திலிருந்து கறுப்பு நிறத்துக்கு மாற்றி உள்ளார்கள். Android பொம்மையையும் மாற்றி விட்டார்கள்.
தற்போது பளிச்சென்று உள்ளது. உங்களுக்கு இந்த மாற்றம் பிடித்துள்ளதா?!
தொடர்புடைய கட்டுரைகள்
சமீப பெயர்கள் Marshmallow, Nougat, Oreo, பயே கண்டிப்பாக குழப்பமாக தான் இருக்கும்.. வடிவேலு ஸ்டைலில் அது ஏதோ வெளிநாட்டுகாரனோட பேரா இருக்குமோனு பாதிபேர் நினைக்க வாய்ப்பிருக்கிறது.. இனி அடுத்த வரும் பதிப்புகள், Android 11, 12, 13, … என்று வந்தால் எளிதாக இருக்கும் என்பதில் துளி கூட ஐயமில்லை.. தகவலுக்கு நன்றி கிரி..
🙂 எனக்கும் இது குழப்பம் தான். இனி அப்பிரச்சனையில்லை.