ஏற்கனவே மாற்றத்தைத் திட்டமிட்டு இருந்தாலும், கூகுள்+ செய்த சொதப்பலால் கொஞ்சம் விரைவாகவே அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறது கூகுள்.
Android மொபைல்
Android மொபைல் களில் தற்போது பல செயலிகள் சம்பந்தமே இல்லாமல் தங்களுக்குத் தேவையில்லை என்றாலும் பலதுக்கு அனுமதி கேட்டுக்கொண்டுள்ளது.
பயனாளர்களும் “Allow Allow” என்று அமுக்கித் தள்ளி விடுகிறார்கள், இதனால் ஏற்படும் பிரச்சனைகளை அறியாமல்.
ஒரு சில செயலிகள் கேட்கும் அனுமதியில், சிலதுக்கு தேவை இருக்கும், சிலது வேண்டாம் என்று நினைப்போம்.
ஆனால், ஒட்டு மொத்தமாக அனுமதிக்கலாம், நிராகரிக்கலாம் என்ற வாய்ப்பு மட்டுமே தற்போது உள்ளது.
இனி, தேவையானதுக்கு மட்டும் அனுமதி அளிக்கும்படி வசதியை கூகுள் மாற்றியுள்ளது. இதே வசதியை ஜிமெயிலுக்கும் கொண்டு வந்துள்ளது.
இனி செயலியின் Developer கள் செயலிகளை உருவாக்கும் போது மனம்போன போக்கில் நம் தகவல்களைக் கேட்க முடியாதபடி கட்டுப்பாடு விதிக்கப்போகிறது.
உதாரணத்துக்கு எந்த குறுந்தகவல் / அழைப்புச் செயலியை Default ஆக பயன்படுத்துகிறோமோ அது மட்டுமே Contacts, SMS க்கு அனுமதி பெற முடியும், மற்றவை இருந்தாலும் இத்தகவல்களைக் காண / பெற முடியாது. Image Credit
ஒரு சில செயலிகளின் பயன்பாட்டுக்கும் தேவைக்கும் சம்பந்தமே இருக்காது ஆனாலும், Camera, Contacts, SMS, Images என்று அனைத்துக்கும் அனுமதி கேட்கும், இனி அது முடியாது.
கூகுள் டக்கு
இந்த வசதி ஆப்பிள் நிறுவனத்தின் திறன்பேசிகளில் பக்காவாக உள்ளது.
இதைத்தான் தற்போது கூகுள் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறது. இது தானா கூகுள் உங்க டக்கு?!
நீண்ட காலமாக பலரும் கேட்டுக்கொண்டு இருந்த இந்த கட்டுப்பாடு / மாற்றம் தற்போது ஆடி அசைந்து வரப்போகிறது, வந்த வரையில் மகிழ்ச்சி.
இனி வரும் காலங்களில் புதிய செயலிகளைத் தரவிறக்கம் செய்யும் போது, Gmail, Drive, Calendar போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது படத்தில் இருப்பது போல கேட்டால், பயந்து விடாதீர்கள்.
கூகுள் தான் இவற்றை கேட்க வைக்கப்போகிறது.
தேவையிருப்பின் மட்டும் அனுமதியுங்கள்.
கொசுறு
என் கண்டிப்பான பரிந்துரை ஜிமெயில் என்றில்லை கூகுள் சம்பந்தப்பட்ட எந்தச் சேவையென்றாலும், எந்த Third Party Developer க்கும் அனுமதி கொடுக்காதீர்கள்.
https://myaccount.google.com/security-checkup சென்று Third-party access ல் அனைத்தையும் நீக்கி விடுங்கள். எதெல்லாம் தேவையானது? தேவையில்லாதது?
நீங்கள் புடுங்குவது எல்லாமே தேவையில்லாதது தான்!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, உங்களின் நேர்மைக்கு தலை வணங்குகிறேன்.. உங்களுக்கு கூகுள், விருப்பமான நிறுவனமாக இருந்தாலும் அதன் தவறையும் சுட்டி காட்டியதற்காக!!!! கண்டிப்பாக எல்லாருக்கும் பயனுள்ள தகவல் இது… (பயனாளர்களும் “Allow Allow” என்று அமுக்கித் தள்ளி விடுகிறார்கள், இதனால் ஏற்படும் பிரச்சனைகளை அறியாமல்) சத்தியமான உண்மை… விவரம் தெரிந்தவர்கள் கூட படிப்பதற்கு தயாராக இல்லை… உங்கள் எச்சரிக்கை பதிவிற்கு நன்றி கிரி..
யாசின் கூகுள் எனக்குப் பிடிக்கும் ஆனால், தவறை சுட்டிக்காட்டுவதில் எனக்கு வருத்தமில்லை. உண்மையை தானே சொல்கிறோம் என்பதால்.
நான் மறைத்தால் இன்னொருவர் கூறப்போகிறார் 🙂