இந்த 3D படத்தில் என்ன உள்ளது? கண்டுபிடியுங்கள் :-)

10
3D

3D படங்கள் எனக்கு அறிமுகம் ஆனது ஆனந்த விகடனில் தான். 90 களில் என்று நினைக்கிறேன் அப்போது பின் அட்டைப் படத்தில் வாராவாரம் 3D படம் வெளியிடுவார்கள்.

விகடன்

இதற்காகவே விகடன் விற்பனை வெகுவாக அதிகரித்தது.

புத்தகத்தை வாங்கி அவனவன் பல கோணத்தில் பார்த்துச் சாலையிலேயே காமெடி பண்ணிட்டு இருப்பானுக! பார்க்கவே செம சிரிப்பாக இருக்கும். Image Credit

எனக்கும் இதில் படத்தைக் கண்டு பிடிக்க ஒரு நாளே ஆனது. கண்ணை அப்படி வைத்து இப்படி வைத்துக் கண் வலி வந்தது தான் மிச்சம்.

அப்புறம் எப்படியோ அந்த டெக்னிக்கை கண்டு பிடித்து விட்டேன் 🙂 .

இதில் என்ன சிறப்பு என்றால் ஒரு முறை இதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை அறிந்து கொண்டால் அதன் பிறகு எந்தப் படமாக இருந்தாலும் வெகு சுலபமாக ஐந்து நொடியில் கண்டறிந்து விடலாம்.

இதை எல்லாம் பாதுகாப்பாக எடுத்து வைத்து இருந்தேன் பின் வழக்கம் போல எங்கே வைத்தேன் என்று மறந்து விட்டேன். தற்போது இவை இருக்கிறதா என்றும் தெரியவில்லை 🙁 .

பொக்கிஷம்

விகடன் திரும்ப ஒருமுறை இதை ஒரு ரவுண்டு விடலாம்.. பொக்கிஷம் மாதிரி. மக்களும் ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தப்படத்தை பார்த்தவுடன் என்ன என்று கண்டுபிடித்து விட்டேன்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இதில் உள்ளதை காணும் போது மிகவும் அற்புதமான அனுபவமாக இருக்கும். அட! எப்படி எல்லாம் வடிவமைக்கறாங்க என்று ஆச்சர்யமாக இருக்கும்.

எங்கள் வீட்டில் ஒரு அழகான 3D படத்தை சுவரில் ஃபிரேம் செய்து மாட்டி வைக்க வேண்டும் என்று விருப்பம்.

வீட்டுக்கு வருகிறவர்களை எல்லாம் இதைக் கண்டுபிடிக்கக் கூறி திணறடிக்க வைக்க வேண்டும் என்று ஒரு அல்ப ஆசை 🙂 .

இந்தப்படத்தில் என்ன உள்ளது என்பதற்கு ஒரு சிறு க்ளு நம் முகத்தில் உள்ள ஒரு உறுப்பு 🙂 .

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

10 COMMENTS

  1. //இந்தப்படத்தில் என்ன உள்ளது என்பதற்கு ஒரு சிறு க்ளு நம் முகத்தில் உள்ள ஒரு உறுப்பு //

    கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்குச் சொந்தமில்லை 🙂

  2. கண்…………..

    தொன்னூறுகளில் அண்ணன் வீட்டுக்கு இப்படி மூணு டி படங்கள் உள்ள வாழ்த்து அட்டைகளை அனுப்பி இருந்தேன், வீட்டுக்கு வர்ற மக்கள்ஸ் எல்லாம் ஓடும்படி பண்ணிட்டார்:-)))

    பெரிய புத்தகமாவும் இப்படிப் படங்கள் மட்டும் வந்துருக்கு, என்னிடம் ரெண்டு புத்தகங்கள் இருக்கு. இதேபோல வேர் ஈஸ் வாலி எனக்கு ரொம்பப்பிடிக்கும்:-)

  3. கிரி,

    அது என்ன படமோ, கண்டிப்பா எனக்கு தெரியல.. கண்ணு அப்படின்னு சொல்றாங்க எப்படின்னு தான் தெரியல… இங்கேயும் சன் டி வீ தான்.. ஆனா ஒரு ஆறுதல்.. நம்ம மெட்ராஸ்ல என்ன டைம் ஒலிபரப்பு ஆகுதோ அதே டிமேனு சொல்லிட்டு ஒரு மணி நேரம் பின் தங்கி போட்ரனுங்கோ.. எப்படியும் நான் பாக்கறது இல்ல.. வீட்ல தான்..

    While I used to have my dinner sometimes I am forced to fee thirumathi selvam.. antha latha rao enn thookittangannu theriyala.. pakkarathukku latchanama ore figure athuvum ippa illa.. antha pakkame porathu illa.. ( he he)

    Kamesh

  4. எந்த ஆங்கிள்ள தலைகீழா நின்னு பாத்தாலும் எனக்கு எதுவுமே தெரியல:p

  5. விகடனில் வரும்போது இதைப் பார்க்கும் விதம் தெரிந்திருந்தது. இப்போ மறந்து போச்சு:)! கண்ணாடி போட்டு பார்த்தாலும் மேல் வரிசையில் இருக்கும் கண் வடிவங்கள்தான் தெரியுது.

  6. 3d படத்தில் உள்ளது கண் (அதில் பாப்பா வில் பிஸ்ஸாவை வெட்டியதுபோல ஒரு முக்கோண சைசில் முடிவடையாமல் இருக்கிறது கண்ணின் பாப்பா). இந்த 3d கிராஸ் ஐ வெர்ஷனை சேர்ந்தது. யுடுபிள் எப்படி பார்க்கவேண்டும் என்று சொன்னாலும். ஒரு எளிதான வழி. கிராஸ் ஐயில் பார்க்கும்போது நடு பகுதி தவிர படத்தின் எல்லா பகுதியையும் பேக் கிரவுண்டாக எண்ணிக்கொண்டு நடுபகுதியை பார்த்தால் விளங்கும். (வெளங்குதா ?) சுவராஸ்யம் வேண்டுமெனில் மெதுவாக தலையை பரதநாட்டிய ஸ்டைலில் ஆட்டி பார்த்தால் பேக் கிரௌண்ட் மட்டுமே ஆடும் தவிர நடுவில் உள்ள புதிர் படம் ஆடாது.

  7. இந்த படத்தில் கண் தெரிகிறது…. அதுவும் பளிச்சென்று ”3டி”யில்…

    சூப்பர் புகைப்படம்…….

  8. நன்றி, 1990களின் நினைவலைகள் மீண்டும், do you have any more ? please add
    கண்களின் அருகே படத்தை கொண்டுசென்று படத்தை உற்று பார்த்தபடி பின்னகர்த்த வேண்டும் about 8 cm you can see it.

  9. @சூர்யா அரிஹர செல்வன் ஜோ விவசாயி காமேஷ் ஜீவதர்ஷன் இப்படி எல்லாம் சொல்லப்படாது.. கஷ்டப்பட்டாவது கண்டு பிடிக்க வேண்டும் 🙂

    கரு விழிகளை மூக்கு நுனி பக்கம் பார்க்கும் படி சேர்த்து கொண்டு வந்து பார்த்தால் பல முயற்சிகளுக்கு பிறகு நிச்சயம் தெரியும். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி 😀

    @ஹாஜா மொஹைதீன், உமாகாந்த் நன்றி

    @கோவி கண்ணன் நீங்க தான் கில்லாடி கண்ணன் என்று தெரியுமே! 😉

    @துளசி கோபால் இரண்டு புத்தகமாமாமாமா! வயித்தெரிச்சலை கிளப்புறீங்களே! கிர்ர்ர்ர்

    @காமேஷ் நீங்க தான் நமக்கு சரியான ஆளு ஹி ஹி

    @ராமலக்ஷ்மி எல்லா 🙂

    @அருண் உங்களுக்கு அடுத்த வாட்டி 4D வைக்கிறேன் 🙂

    @ராஜ்குமார் நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க.. ஆனா பலரும் பல்டி போட்டு பார்த்துட்டாங்க ஒன்றும் வொர்க் அவுட் ஆகல 🙂

    @கோபி யுரேகாவா 😉

    @mangeshcar வேறு படம் இல்லை .. ஊரில் இருந்து எடுத்து வரலாம் என்று இருக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!