3 Idiots | என்ன படிக்கலாம்?

29
3 Idiots

3 Idiots கதை என்னவென்றால் மூன்று நண்பர்கள் கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்கிறார்கள், அவர்கள் முறையே அமீர், (நம்ம)மாதவன், ஷர்மின்.

இதில் அமீர் மிகப்பெரிய பணக்காரர் மகன், மாதவன் நடுத்தர குடும்பம், ஷர்மின் ரொம்ப கஷ்டப்படும் குடும்பம்.

இதில் அமீர் இயல்பிலேயே நல்ல அறிவுள்ளவர் எதையும் மக்கப் செய்யாமல் புரிந்து படிப்பவர், எதையும் செய்யலாம் மனமிருந்தால் என்று நம்புவர்.

மாதவனுக்கு போட்டோக்ராபி மேல் காதல் ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலால் வேறு வழி இல்லாமல் பிடிக்காமலே இன்ஜினியரிங் படிப்பவர்.

ஷர்மினுக்கு இன்ஜினியரிங் ல் விருப்பம் இருந்தாலும் குடும்ப சூழ்நிலை எதிர்கால பயம் என்ற வழக்கமான குடும்ப மன அழுத்தத்தால் படிக்க முடியாத சூழல்.

இப்படிப்பட்டவர்கள் என்னவாகிறார்கள் என்பதை கொஞ்சம் கூட அலுப்பு இல்லாமல் கூறி இருக்கிறார்கள்.

மையக்கருத்து

கதை என்னவென்று சுருக்கமாக கூற வேண்டும் என்றால் மாணவர்களை அவர்களின் மனதிற்கு பிடித்த படிப்பைப் படிக்க வையுங்கள், பெற்றோர் தங்கள் விருப்பத்தை (நீ டாக்டருக்குத்தான் படிக்க வேண்டும் என்று) திணிக்காதீர்கள்.

கல்லூரியில் படிப்பை எந்திரமாக சொல்லிக்கொடுக்காதீர்கள் என்பது தான்.

அமீர்

கஜினியில் சும்மா கும்முன்னு உடம்பை ஏற்றி அலறவைத்த அமீர் இதில் கல்லூரி மாணவர் கதாப்பாத்திரத்திற்கு உடம்பை குறைத்து அட்டகாசமாக கொஞ்சம் கூடப் பிசிறில்லாமல் பொருந்துகிறார்.

அமீர் கல்லூரியில் நுழையும் போதே ஹாஸ்டலில் ராக்கிங் நடைபெற்று கொண்டு இருக்கிறது நம்ம மாதவன் உட்பட அனைவரும் ஜட்டியுடன் இருக்கிறார்கள் 🙂 .

அமீரையும் இதில் கலந்து கொள்ள சீனியர் அழைக்க அவருக்கு அமீர் கொடுக்கும் “ஷாக்” செம சிரிப்பு

போமன் இராணி & கரீனா

இவர்கள் கல்லூரி பேராசிரியர் போமன் இராணி மிகவும் கண்டிப்பானவர். கண்டிப்புனா கண்டிப்பு அப்படியொரு கண்டிப்பு! சட்டம் என்றால் சட்டம் தான் அதை மீறிக் கொஞ்சம் கூடக் கருணை காட்டாதவர்.

இவரின் மகள் கரீனா, இது போதும் என்று நினைக்கிறேன் அமீருக்கு ஜோடி யார் என்று தெரிய! 😉 அதற்காக வழக்கமான காதலா படம் முழுவதும் இருக்கும் என்று எண்ண வேண்டாம்..கொஞ்சமே கொஞ்சம்.

கரீனா படம் அதிகம் பார்த்தது இல்லை, குறை ஒன்றும் தெரியவில்லை எனக்கு. இவர் சரக்கைப் போட்டுட்டு அமீரை கலாயிக்கும் இடம் கலக்கல்.

அதற்கு இவர் கொடுக்கும் வாய்ஸ் மாடுலேஷன் ரசிக்கும்படி இருக்கும்.

மாதவன் & ஷர்மின்

நம்ம மாதவன் வழக்கம்போல நடித்துள்ளார் இன்னும் கொஞ்சம் அமீரை மாதிரி உடம்பை குறைத்து இருக்கலாம், சிறப்பாக இருந்து இருக்கும். இவர் அறிமுக காட்சியே செம குசும்பாக உள்ளது.

மாதவன் தன் விருப்பத்தை ஆசையைத் தந்தையிடம் விளக்கும் போதும் அதற்க்கு அவர் தந்தையின் செய்கையும் மனதை தொடும் காட்சிகள்.

ஷர்மின் இது தான் முதல் முறை பார்க்கிறேன் இவரும் ஓகே. ஷர்மின் ரொம்ப கஷ்டப்படும் குடும்பமாக காட்டப்படுகிறது.

ஆனால், இவர் அணிந்து இருக்கும் உடைகளைப் பார்த்தால் எவரும் இவர் ஏழை என்று நம்பமாட்டார்கள்.

மக்கப்

இவர்கள் கல்லூரியில் புத்தகப்புழுவா ஓம் வைத்யா நடித்து இருப்பார், எதைக் கொடுத்தாலும் அப்படியே மக்கப் செய்து ஒப்பிப்பார்.

இவரை இவர்கள் மூவரும் ஏடாகூடமா காலாயித்து விட அதனால் இன்னும் 10 வருடம் கழித்து யார் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று சவால் விடுக்கிறார்.

ஆனால், அதில் கொஞ்சம் கூட லாஜிக் இல்லை என்பதை மட்டும் கூறுகிறேன், ஆனால் திரைக்கதை சுவாராசியமாக இருப்பதால் அது பெரிய குறையாக யாருக்கும் தெரியவில்லை.

முன்னாபாய் MBBS ல் கட்டிப்புடி வைத்தியம் போல இதில் All izz (is) Well என்று அமீர் கூறுவார், படம் முழுவதும் இது வரும்.

கரீனாவை திருமணம் செய்துகொள்ளபோகிறவராக வருபவர் ஒவ்வொன்றுக்கும் விலை மதிப்பிடுவது நல்ல காமெடி.

பொருந்துமா?!

குழந்தைகளின் விருப்பங்களுக்கு தடையாக பெற்றோர்கள் இருக்கக் கூடாது, மாணவர்களை இயந்திரம்போல நடத்தக் கூடாது என்பது நல்ல எண்ணம்.

ஆனால், இது அனைத்து குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பொருந்துமா! குறிப்பாக இந்தியாவில்.

ஒரு சிலர் பெற்றோரின் வழிகாட்டுதலாலே நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார்கள், ஒரு சிலர் தன் விருப்பமாக செய்வதாக நினைத்து ஒன்றும் இல்லாமல் போய் இருக்கிறார்கள்.

ஏதாகினும் படம் கூறும் செய்தி ரொம்ப அருமை.

எப்போதுமே கடைசியாக படம் முடியும் போது ரசிக்கும் படி இருந்தால் வெளியே வரும் போது படம் எவ்வளவு தான் முதலில் மொக்கையாக இருந்தாலும் அதன் பாதிப்பை இது குறைத்து இருக்கும்.

ஆனால், படமும் சூப்பராக இருந்து முடியும் போதும் இப்படி காமெடியாக முடிந்தால்…படம் பட்டாசு தானே! என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ.

படம் முடிந்து வெளியே வரும் போது அனைவரின் முகத்திலும் ஒரு திருப்தி பரவி இருந்தது அப்பட்டமாக தெரிந்தது.

3 Idiots படத்தை நம்ம ஊரிலையும் எடுக்கலாம் நன்றாக இருக்கும்.

Directed by :Rajkumar Hirani
Produced by :Vidhu Vinod Chopra
Written by Screenplay : Abhijat Joshi, Rajkumar Hirani
Novel : Chetan Bhagat
Starring :Aamir Khan, R. Madhavan, Sharman , Kareena Kapoor, Boman Irani
Cinematography :Muraleetharana
Music :Shantanu Moitra
Release date :25 December 2009 (India)
Running time :164 minutes
Language :Hindi

பிற்சேர்க்கை – திரைவிமர்சனம் சுருக்கப்பட்டது.

தொடர்புடைய திரை விமர்சனம்

நண்பன் (2012) | A perfect remake

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

29 COMMENTS

  1. பரிசலின் சிபாரிசால் படம் பார்த்து 3 நாளாச்சு.நீங்க இப்பத்தான் டிக்கட் விற்க வந்திருக்கீங்க:)

  2. இந்தியெல்லாம் கத்திகிட்டேங்க போல இருக்குது:)வாழ்த்துக்கள்!

  3. உங்கள் விமர்சனம் படிக்கும் போது எனக்கு பார்க்கவேண்டும் போல் உள்ளது ஆனால் யாழ்ப்பாணத்தில் இது சாத்தியமில்லை, ஆனால் எப்படியும் இன்னும் ஒரு மாதத்திற்குள் D V D யில் 'பா' மற்றும் '3 இடியட்ஸ்' பார்த்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

  4. பகூத் அச்சா ஹை??!!

    இங்கே கூட ஓடுது ஹை!! நோ பைசா ஸ்பெண்டிங் ஃபார் ஹிந்தி ஹை.

    டிவிடி ஹை! 🙂

  5. இந்தி தெரிந்து பார்த்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மொழியின் ஆளுமையிலான சீன்கள் நிறைய இருக்கின்றன. பலாத்கார்- சமத்கார்.. ;-))))))

  6. கிரி,

    சென்ற ஞாயிறன்று மூன்று இடங்களில் முயற்சித்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. முன்னா பாய் , லகேரே என முந்தைய இரு படங்கள்தான் மிக அதிகமுறை திரும்ப திரும்ப பார்த்த இந்தி படங்கள். ஆவலாய் சனிக்காக காத்திருக்கிறேன்.

    ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கிரி.

    பிரபாகர்.

  7. கிரி இன்றுதான் இந்தப் படம் பார்த்தேன். படம் பார்த்தவுடன் நண்பர் எனக்குச் சொன்னார் ஒரு கிழமைக்கு வேறு எந்தப் படமும் பார்க்ககூடாது என்று அப்படிப் படம் பாதித்துவிட்டது. இப்படியான படம் தமிழில் எடுக்க நம்ம நடிகர்கள் ஒன்றாக நடிக்க ஒத்துக்கொள்ளவேண்டுமே இங்கே இவர்களுக்கு இடையில் யார் பெரிது என்ற போட்டிதானே நிலவுகின்றது.

    சில இடங்களில் லாஜிக் பிசகினாலும் திரைக்கதை அதனை நிவர்த்தி செய்துவிடுகின்றது.

  8. நல்லதொரு படத்திற்கு மிக நல்ல விமர்சணம்.

    நானும் பார்த்துட்டேன்.

    நானும் ஆச்சர்ய பட்டது அமீர்கானின் உடலமைப்பு தான்

    முகத்திலும் ஒரு குழந்தைதனம் கொண்டு வந்திருக்கார்(இயல்பே அது தான் போல).

    நன்கு இரசித்து குடும்பத்தோடு பார்க்கலாம்.

    ++

  9. நல்ல படத்துக்கு நல்ல விமர்சனம். முதல் முறையாக பார்த்து விட்ட படத்துக்கு உங்கள் விமர்சனத்தை வாசிக்கும் வாய்ப்பு! ராஜ நடராஜன் சொன்ன மாதிரி கொஞ்சம் நீங்க லேட்:)! படம் எனக்கும் பிடித்திருந்தது.

  10. // ராஜ நடராஜன் said…
    இந்தியெல்லாம் கத்திகிட்டேங்க போல இருக்குது:)வாழ்த்துக்கள்!//

    அப்ப நீங்க விமர்சனத்தை முழுதாக படிக்கலை 😉

    ======================================
    // தமிழ் பிரியன் said…

    இந்தி தெரிந்து பார்த்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மொழியின் ஆளுமையிலான சீன்கள் நிறைய இருக்கின்றன. பலாத்கார்- சமத்கார்.. ;-)))))//

    வழிமொழிகிறேன் .. எனக்கு ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று ரொம்ப ஆசை.. சோம்பேறித்தனத்தாலும் கூச்ச சுபாவத்தாலும் இது தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது 🙁

    ======================================
    சர்வன் வருகைக்கு நன்றி

    ==================================
    பிரபாகர் கண்டிப்பா பாருங்க உங்க பாராட்டிற்கு நன்றி

    ==========================================
    // எப்பூடி … said…

    உங்கள் விமர்சனம் படிக்கும் போது எனக்கு பார்க்கவேண்டும் போல் உள்ளது ஆனால் யாழ்ப்பாணத்தில் இது சாத்தியமில்லை//

    ஏன்! அங்கே ஹிந்தி படம் வெளியாகாதா?

    ======================================================================

    // ஹாலிவுட் பாலா said…

    பகூத் அச்சா ஹை??!!

    இங்கே கூட ஓடுது ஹை!! நோ பைசா ஸ்பெண்டிங் ஃபார் ஹிந்தி ஹை.

    டிவிடி ஹை! :)//

    பாலா இது நெம்ப ஓவர்.. திரையரங்கில் பாருங்க 🙂

    ====================================

    // வந்தியத்தேவன் said…

    இப்படியான படம் தமிழில் எடுக்க நம்ம நடிகர்கள் ஒன்றாக நடிக்க ஒத்துக்கொள்ளவேண்டுமே இங்கே இவர்களுக்கு இடையில் யார் பெரிது என்ற போட்டிதானே நிலவுகின்றது. //

    இது தாங்க இந்த வெண்ணை வெட்டிக கிட்ட பிரச்சனை..

    =====================================
    எட்வின் ஜமால் பாராட்டிற்கு நன்றி.

    ஜமால் நீங்க கூறியது போல குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்

    =================================
    // குறை ஒன்றும் இல்லை !!! said…

    சப் டைட்டிலோட பாத்தீங்களா? //

    ஆமாங்க ராஜ் அதைத்தான் பதிவிலேயே கூறி இருக்கிறேனே..முழுசா படிக்கல 😉 அவசரம் அவசரம் :-))

    ஆமா ரொம்ப நாளா ஆளை காணோமே! பிஸ் பிஸா 😉

  11. இல்லைங்க,தமிழ் படங்களே கொஞ்சம் பெரிய படங்கள்தான் ரிலிஸ் ஆகும்,கொழும்பில் பெரிய ஹிந்தி படங்கள் ரிலிஸ் ஆவதுண்டு.

  12. நான் நேத்து தான் பார்த்தேன்…
    என் மனதை ரொம்ப பாதித்து விட்டது…
    இன்னொரு தடவை போய் பார்க்க வேண்டும்…

  13. அண்ணே உங்க விமர்சனம் படத்தோட ஸ்கிரிப்டை விட பெருசா இருக்குமபோல…ஆனா நல்லாருக்கு… அடுத்தவாரந்தான் பார்க்கபோறேன் ஹை….

  14. நல்ல விமர்சனம்.
    ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

  15. ஜெட்லி, நாஞ்சில் பிரதாப், அனந்த குமார் வருகைக்கு நன்றி

    ======================================================================

    // எப்பூடி … said…
    இல்லைங்க,தமிழ் படங்களே கொஞ்சம் பெரிய படங்கள்தான் ரிலிஸ் ஆகும்,கொழும்பில் பெரிய ஹிந்தி படங்கள் ரிலிஸ் ஆவதுண்டு.//

    பெரிய படங்கள் என்றால் அமீர் படம் எப்படி வெளியாகாமல் உள்ளது என்று தெரியவில்லை

    ======================================================================

    //வம்பன் said…

    நம்ம கேபிளும்,சரவணகுமாரும் ரொம்ப நல்லா எழுதினாங்க, அதை அப்புடியே காபி பேஸ்ட் போட்டாபொல இருக்கே.//

    வந்த வேலை முடிஞ்சுதா 🙂

    //ஆமா நீங்க வெறும் கிரியா?இல்ல சோனகிரியா?//

    ஆமா நீங்க வம்பனா இல்ல தீர்ப்பு சொல்ற நாட்டாமை சொம்பனா!

  16. நம்ம கேபிளும்,சரவணகுமாரும் ரொம்ப நல்லா எழுதினாங்க, அதை அப்புடியே காபி பேஸ்ட் போட்டாபொல இருக்கே.
    ஆமா நீங்க வெறும் கிரியா?இல்ல சோனகிரியா?

  17. //Rajalakshmi Pakkirisamy said…

    உங்களின் இந்த விமர்சனம் பற்றிய ஒரு குறிப்பு எனது பதிவில்//

    உங்கள் பாராட்டிற்கு நன்றி ராஜலக்ஷ்மி

    ======================================================================

    // amaithicchaaral said…

    லாஜிக் பற்றி நீங்க சொன்னது 100 சதவிதம் உண்மை. அதை யோசிச்சிருந்தா படமே இல்லை//

    திரைக்கதை சுவாராசியமாக இருந்ததால் அதை யாரும் பெரிய விசயமாக நினைக்கலை ..இல்லை என்றால் படு சொதப்பலாக இருந்து இருக்கும்.

  18. நானும் படம் பார்த்தேன், மிக அருமை. அந்த அமிரின் முதல் காட்சியில் என்னால் நம்பவே முடியவில்லை. அவ்வளவு slim and trim. படத்தில் மாதவன்-னை விட அமீர் 10 வயது குறைவாக தெரிகிறார். என்ன.. படத்தில் அடிக்கடி Trouser கழட்டி விடுகிறார்கள்.

    அனைவரும் பார்க்க வேண்டிய படம்

  19. மஞ்சள் ஜட்டி அடங்க மாட்டீங்களா! :-))

    ======================================================================

    // Senthilkumar Manavalan said…
    நானும் படம் பார்த்தேன், மிக அருமை. அந்த அமிரின் முதல் காட்சியில் என்னால் நம்பவே முடியவில்லை//

    உண்மை.. ரொம்ப லூசாக உடலை வைத்து கலக்கி இருப்பாரு!

    //படத்தில் மாதவன்-னை விட அமீர் 10 வயது குறைவாக தெரிகிறார்//

    :-))

  20. ஆமாங்க.. அருமையான படம்.
    இதை ஒரு காமெடி படம்னு சிலர் எழுதியிருந்தாங்க. ஆனா… நிச்சயமா காமெடி கலந்த மெசேஜ் ஃபிலிம்.

    நீங்க சொன்னா மாதிரி அந்த ட்விஸ்ட் தேவையில்லாத சினிமாத்தனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here