எழுத்தாளர்களில் நமக்கு யாரைத் தெரியவில்லை என்றாலும், நிச்சயம் எழுத்தாளர் சுஜாதா தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. தன் எளிமையான எழுத்துக்களால் பலரைக் கவர்ந்தவர். Image Credit
எழுத்தாளர் சுஜாதா
சுஜாதா கேள்வி பதில்கள் ரொம்ப பிரபலம். அதில் நான் ரசித்த கேள்வி பதில்களைக் கொடுத்துள்ளேன் படித்துப் பாருங்கள். நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
Credit http://balhanuman.wordpress.com/
பல்செட்டில் உள்ள பற்கள் கூசுமா ?
தெரியவில்லையே. உங்களுக்குக் கூசுகிறதா என்ன ?
ஒருவன் எப்போது வயதாகி விட்டது என்பதை அப்பட்டமாக உணர்கிறான் ?
பக்கத்து வீட்டுப் பெண் பதற்றம் இல்லாமல் பக்கத்தில் உட்கார்ந்து பேசும்போது!
பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜென்னிஃபர் லோபஸ் கேட்பதுண்டா ?
அவர்கள் கேட்பதற்கல்ல, பார்ப்பதற்கு.
உங்களுடைய எழுத்து நடையை நீங்களேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்களா?
ஆமாம், நானேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ‘அவன் அங்கே போனான்’ அப்படின்னு எழுதணுமானா’ அவன்’ஐ எடுத்துட்டு ‘அங்கே போனான்’னு எழுதுவேன்.
திரும்பப் படிக்கும்போது எழுதினதைச் சின்னதாக ஆக்குவது. இலக்கணம் ஒழுங்காகத் தெரிஞ்சதனாலே அதைக் கொஞ்சம் மீறலாமேன்னு தோணித்து.
இதுலே ஏற்படுகிற பலன் என்னன்னா படிப்பதிலே வாசகனுக்கும் ஒரு பங்களிப்பைக் கொடுக்கிறது. அவனுடைய புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டு அவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் எழுதுவது. இதுதான் என் வெற்றின்னு நினைக்கிறேன்.
நீங்கள் கற்ற பாடங்கள் ?
நான் எழுதியதை இடைவெளி விட்டுப் படிக்கையில் ஒரு வாசகனின் கோணம் கிடைக்கும்.
எத்தனை முறை திரும்ப எழுதினாலும் ஒவ்வொரு முறையும் எழுதியது மெருகேறுகிறது; என்பதெல்லாம் நாற்பத்தோரு வருஷங்களாய்க் கற்ற பாடங்கள்.
சுஜாதா கூறிய இந்த விஷயம் 100 % உண்மை. எப்போதுமே எழுதியவுடன் பல முறை திரும்பத் திரும்பப் படித்துப் பார்ப்பேன். பின் அதில் திருத்தங்களைச் செய்வேன்.
இதில் என்னவியப்பு என்றால்.. எத்தனை முறை திருத்தங்கள் செய்தாலும் மேலும் மேலும் அதில் நமக்கு ஏதாவது திருத்தங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும், தவறுகளைச் சரி செய்து கொண்டே இருக்க முடியும்.
எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள எதாவது எளிய முறைகள் ?
எழுத்தாற்றலை ஓரளவுக்குப் பயிற்சியால் வளர்த்துக் கொள்ள முடியும். தமிழ் நன்றாகத் தெரிய வேண்டும். தமிழில் நிறையப் படிக்க வேண்டும்.
அதிகம் பேசாமல் நிறையக் கவனிக்க வேண்டும்.
எழுத்து என்பது ‘Memory shaped by art‘ என்று சொல்வார்கள். உண்மை எத்தனை? கற்பனை எத்தனை? அவற்றை எந்த அளவில் கலப்பது? நடந்ததைச் சொல்வதா? நடந்திருக்க வேண்டியதைச் சொல்வதா?
– இந்த ரசாயனம் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நாளாகும். இதற்குக் குறுக்கு வழியே இல்லை. நிறைய எழுதிப் பார்க்க வேண்டும்.
பொன்னியின் செல்வன் என்னுடைய புத்தக ஆர்வத்தை மீட்டெடுத்துள்ளது.
எழுதியதைத் திருத்துவதும், திரும்பத் திரும்ப எழுதுவதும் அவசியமா ?
எழுதியதைச் சில தினங்கள் விட்டுப் படித்துப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு வாசகனின் கோணத்திலிருந்து அதைப் பார்க்க இயலும்.
கொஞ்சம் கூடக் கருணையே காட்டாமல் அநாவசிய வார்த்தைகளையும் வாக்கியங்களையும் சிதைத்து விட வேண்டும்.
நான் எழுதியதெல்லாம் மந்திரம் போல; ஒரு வார்த்தையை நீக்க முடியாது; நீக்கக் கூடாது என்பதெல்லாம் மடத்தனம்.
உங்களுக்கே திருப்தி வரும்வரை திரும்பத் திரும்ப எழுதுவதிலும் திருத்துவதிலும் நீக்குவதிலும் சேர்ப்பதிலும்தான் நல்ல எழுத்து ஜனிக்கிறது.
இதுவும் ஒரு அருமையான ஆலோசனை. எழுதியதை ஓரிரு நாள் கழித்துப் படித்துப்பார்த்தால் அதில் மாற்றங்களைச் செய்யத் தோன்றும்.
தற்போது எழுத்துப் பிழைகளைக் குறைத்து விட்டேன், சந்திப் பிழைகள் இல்லாமல் எழுத முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன். ரொம்ப சிரமமாக உள்ளது.
கூற வருவதை சுருக்கமாக, குழப்பம் இல்லாமல் கூற வேண்டும்.
எனவே, எழுத்தாளர் சுஜாதா கூறியது போலத் திரும்பத் திரும்பத் திருத்துவதன் மூலமே ஒரு நல்ல கட்டுரையைக் கொடுக்க முடியும்.
தொடர்புடைய கட்டுரைகள்
எனக்கு ஒரு சின்ன டவுட்டு……
இந்த சுஜாதா என்பது சினிமாவில் நடிக்கும் நடிகைதானே…?
அவங்க கதையெல்லாம் எழுதுவாங்களா? எனக்கு இதுவரைக்கும் தெரியாது.
ராவணன்,
எனக்கும் ஒரு சின்ன டவுட்டு……
நீங்கள் ராமாயணத்தில் வரும் ராவணன் தானே ? நீங்கள் பின்னூட்டம் எல்லாம் கூட எழுதுவீர்களா ? எனக்கு இதுவரைக்கும் தெரியாது.
– சுஜாதா ஆலோசனைகள்
– அருண்
கிரி,
Malayalam film… ha ha ha… I used to Watch Mohanlal movies before.. now a days and all its only
he he he… sollakkodathu..
@ராவணன் ராவணன்னு பேரு வைத்து இருக்கிறவங்க சந்தேகத்துக்கெல்லாம் பதில் சொல்றதில்ல.. 🙂
@ ஸ்ரீநிவாசன் ஃபுல் ஃபார்ம் ல இருக்கீங்க போல 🙂
@காமேஷ் 🙂 🙂
“ஆனால் போனது இல்லை”
நோட் திஸ் பாயிண்ட் யுவர் honour போனது இல்லை கிரி தல சொல்லுறார் பார்த்தது இல்லை நு சொல்லல 🙂
– அருண்
நன்றி கிரி
புத்தகம் படிக்க நேரமில்லாதவர்கள் இனி திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஒலி நாடா மூலம் அந்த அனுபவத்தை பெற முடியும். இதே பல விசயங்களை தலைப்புகளை வைத்து பேசிய ஒவ்வொன்றையும் ஆவணம் போல வலையேற்றிக் கொண்டுஇருக்கின்றோம்.
http://deviyar-illam.blogspot.com/2013/04/blog-post_14.html