முன்குறிப்பு: How much do you love me? அடல்ட் பட விமர்சனம், விரும்பாதவர்கள் இதற்கு மேல் தொடர வேண்டாம். Image Credit
இது ஒரு காமெடி கலந்த, அடல்ட் டிராமா.
மோனிகா பெல்லுச்சி
இந்தப்படம் பார்க்க நினைக்க முக்கியக் காரணம், உலகில் உள்ள அழகான பெண்களில் ஒருவரான மோனிகா பெல்லுச்சி.
மெலினா [Melina] என்ற படம் பற்றிக் கேள்விப் பட்டு இருந்தால், அதில் பலருக்கு நெஞ்சு வலி வரக் காரணமாக இருந்தவர் 😉 .
இன்னும் யார் என்று கேள்விப்பட்டதில்லை என்றால், இதில் சொல்வதைப் படித்தாலே இரு படங்களையும் தேடிப் பார்த்து விடுவீர்கள்.
Irréversible என்ற படத்தின் மூலமும் இவர் பலருக்கு அறிமுகம் ஆனால், இந்தப்படத்தை பார்க்காதீர்கள்
மோனிகா பெல்லுச்சி ஒரு அழகிய சிற்பம்.
கடவுள், தன் படைப்பில் இவருக்கு மட்டும் அதிக நேரம் எடுத்துக்கொண்டாரோ என்று எனக்கு இவரைப் பார்க்கும் போதெல்லாம் சந்தேகம் வரும், பெண்கள் பலருக்கு வயித்தெரிச்சல் வரும்.
நல்ல உயரம், அழகான உடலமைப்பு என்று பார்க்கும் எவரையும் (பெண்கள் உட்பட) அசரடிக்கும் அழகு.
இவர் நடித்த “மெலினா” படம் பார்த்துத் தான் இவருக்கு ரசிகன் ஆனேன் இதன் பிறகு இவர் படங்கள் நிறைய தேடித் பார்த்து விட்டேன்.
படத்தில் இரண்டு விஷயம் ஒன்று செக்ஸ் இன்னொன்று திரைக்கதை. படத்தில் ஒன்றுமே இல்லை ஆனால், கொஞ்சம் கூட சலிக்காமல் கொண்டு செல்கிறார்கள்.
ரொம்ப ரசித்துப் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. ப்ரெஞ்ச் படம் என்பதால் சப்டைட்டில் உடன் தான் பார்க்க வேண்டும்.
வசனங்கள் புரிந்தால் தான் இந்தப்படத்தை உங்களால் ரசிக்க முடியும், இல்லை என்றால் மோனிகாவிற்காகப் பார்க்கலாம் 🙂 .
How much do you love me?
கதை என்னெவென்றால் ஹீரோ Bernard Campan வழக்கமாக, வீடு அலுவலகம் வீடு என்று சென்று வரும் ஒரு சராசரி நபர்.
ஒருநாள் ஒரு பாலியல் விடுதிக்கு வருகிறார் அங்கே பாலியல் தொழிலாளியாக இருக்கும் மோனிகா பெல்லுச்சியை சந்திக்கிறார்.
அவரிடம் தான் 4 மில்லியன் ஈரோ பணம் லாட்டரியில் பெற்று இருப்பதாகவும், இதில் 100,000 ஈரோ தருவதாகவும் ஒரு மாதம் தன்னுடன் இருக்க சம்மதமா? என்று கேட்கிறார்.
தன்னை கண்ணியமாக நடத்த வேண்டும் முரட்டுத் தனமாக நடந்து கொள்ளக் கூடாது என்று பல நிபந்தனைகளுக்கு Bernard Campan ஒப்புக்கொண்ட பிறகு சரி என்கிறார்.
வீட்டுக்கு வந்த பிறகு (Bernard Campan க்கு மனைவி, குழந்தைகள் என்று எவருமில்லை) இவருக்கு மனைவி போல நடந்து கொள்வதாக மோனிகா கூறி, அதன்படியும் நடந்து கொள்கிறார்.
இருவரும் ரொம்ப ஜாலியாக இருக்கிறார்கள், உடல் உறவும் வைத்துக்கொள்கிறார்கள். Bernard Campan க்கு இது புது அனுபவமாக இருக்கிறது.
மோனிகா, தன்னை பாலியல் தொழிலாளி போல Bernard Campan நடத்தாமல், அன்புடன் இருப்பது ரொம்ப பிடிக்கிறது.
Bernard Campan க்கு இதய நோய் உள்ளது. பதட்டமாக இருந்தாலோ, உடல் உறவு கொண்டாலோ இவருக்கு இதயத் துடிப்பு அதிகரித்து விடும்.
மருத்துவ நண்பர்
இதனால் இவருடைய மருத்துவ நண்பர் அவ்வப்போது வந்து இவரைக் கவனித்துக்கொள்வார்.
மோனிகாவிடமும் அறிவுறுத்தி இருப்பார்… உறவின் போது கவனமாகச் செயல்படவும்.. என்னோட நண்பன் எனக்கு முக்கியம் என்று.
ஒருநாள் மோனிகா பெல்லுச்சிக்கு ஃபுட் பாய்சன் ஆகி விடும் இதனால், Bernard Campan மருத்துவ நண்பரை அழைக்க அவர் வந்து மோனிகா பெல்லுச்சியை சோதனை செய்ய வந்து மாரடைப்பு வந்து இறந்து இடுவார்.
அவர் எப்படி இறக்கிறார் என்று படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் 🙂 .
ஒரு நாள் இவர்கள் இருவரும் உறவில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது மோனிகா சத்தம் போட்டுக் கொண்டு இருப்பார்.
இதனால் பக்கத்து வீட்டுப் பெண் கடுப்பாகி இவர்கள் வீட்டு கதவைத் தட்டி, தான் முக்கிய வேலையாக இருப்பதாகவும் தயவு செய்து மோனிகாவை சத்தம் போட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்வார்.
இதனால் கடுப்பான மோனிகா சத்தம் போடாமல் எப்படி உறவு கொள்ள முடியும்?…. என்று அவரிடம் சண்டைக்குப் போக அதற்கு அவர் கொடுக்கும் பதிலில் வாயடைத்து திரும்பி விடுவார் 🙂 .
இந்தக்காட்சி செம ரகளையாக இருக்கும்.
இந்த நிலையில் மோனிகாவின் முன்னாள் காதலர் மோனிகாவை இவருக்கு விட்டுத் தரவேண்டும் என்றால், தனக்கு லாட்டரியில் வந்த பணத்தில் கொடுக்க வேண்டும் என்று கூறுவார் ஆனால், இதற்கு Bernard Campan மறுத்து விடுவார்.
இதன் காரணமாக மோனிகா அவருடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
மோனிகாவிற்கோ Bernard Campan விட்டுப் பிரிந்து இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கும். இருந்த கொஞ்ச நாளில் அவரின் அன்பு இவரை மாற்றி இருக்கும்.
இதன் பிறகு என்ன நடந்தது என்பதை படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் 🙂 .
ஒரு காட்சியில் தினத்தூது என்ற தமிழ் எழுத்துப் படம் மாட்டப்பட்டு இருக்கும். இதைப் பார்த்து வியப்பாக இருந்தது.
கடைசி ஐந்து நிமிடம் தேவையே இல்லை எதற்கு அதை வைத்தார்கள் என்று தெரியவில்லை.
அந்த ஐந்து நிமிடம் இல்லாமல் இருந்து இருந்தால் ஒரு பாதிப்பும் இல்லை, அனைவரும் கொண்டாட்டமாக இருப்பதுடன் முடித்து இருக்கலாம்.
எப்படி இருந்தாலும் How much do you love me? அருமையாக இருந்தது. வாய்ப்புக் கிடைத்தால் பாருங்க சப்டைட்டிலுடன்.
Disclaimer: படம் பார்த்து உங்களுக்கு இதய வலி வந்தால் நான் பொறுப்பல்ல 😉 .
Directed by Bertrand Blier
Produced by Olivier Delbosc, Marc Missionier
Written by Bertrand Blier
Starring Monica Bellucci, Bernard Campan, Gérard Depardieu
Cinematography François Catonné
Editing by Marion Monestier
Distributed by Pan Européenne
Release date(s) 26 October 2005
Running time 95 minutes
Country France
Language French
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
இந்த படத்தை நான் பார்த்திருக்கேன், வெறும் ‘சீனு’க்காக மட்டும்.
சீனு ‘சீனு’க்காக மட்டும் பார்த்த படமா ? சூப்பர்…
Sooper
@ சீனு 🙂
@ஸ்ரீநிவாசன் 🙂
கிரி,
இந்த படத்துல ஒரு சின்ன cute விஷயம் இருக்கு ….. அது என்னனு கண்டுபிடிங்க parpom….
ராஜேஷ். v
ராஜேஷ் திருப்பதில போய் மொட்டையோட ஒருத்தன் இருப்பான் அவனை கண்டுபிடிங்க என்று சொல்ற மாதிரி இருக்கு 🙂
Giri,
Nan சொல்றது செக்ஸ், மோனிக்கா பத்தி விஷயம் இல்லை. கிரி…….
படத்துல ஒரு cute விஷயம் ஒளிஞ்சிகிட்டு இருக்கு…
ராஜேஷ்.v
நேற்று இந்த படம் பார்த்தேன் கிரி அருமையான உங்கள் விமர்சனத்தைப் படித்த பிறகு 🙂
நீங்கள் கூறியிருப்பது போல் தினத் தூது என்ற தமிழ் எழுத்து படம் ஏன் என்று புரியவில்லை.
மோனிகா பெல்லுச்சி உண்மையிலேயே கொள்ளை அழகு 🙂
வாவ்! சரியா இரண்டு வருடம் 8 மாதம் கழித்து பார்த்து இருக்கிறீர்கள் 🙂 . சிலர் பார்க்கிறேன் என்று கூறுவார்கள் ஆனால், பார்த்தார்களா என்று தெரியாது.. உங்கள் பின்னூட்டம் தாமதமாக வந்தாலும் மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்களை படம் ஏமாற்றி இருக்காது என்று நினைக்கிறேன் 😉