உள்ளூர் (suburban) ரயில்களில் பயணிப்பவரா?

4
Unreserved Ticketing System உள்ளூர் (suburban)

ள்ளூர் (suburban) ரயில்களில் பயணிக்கபய வரிசை காத்துக்கொண்டு இருக்கும். வரிசையைக் கண்டு பயந்தே திட்டத்தை மாற்றுபவர்கள் உண்டு.

இது போன்ற பிரச்சனைகளில் நமக்கு இளைப்பாறுதல் தருகிறது ரயில்வே நிர்வாகத்தின் UTS (உள்ளூர் ரயில்) செயலி (App).

திறன்பேசி (Smart Phone) போதும்

 

இச்செயலி மூலம் உள்ளூர் ரயில்களில் நம்மால் நம் திறன்பேசி மூலமாகவே அனைத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நடைமேடை, மற்ற இடங்களுக்குசன பயணசீட்டு, திரும்ப வருவதற்கான பயணச்சீட்டு (Return ticket) என்று செயலியலியே முன்பதிவு செய்ய முடியும்.

வரிசையில் நின்று அவதிப்பட வேண்டிய அவசியமில்லை. இதில் நடுவில் நுழைந்து நம்மைக் கடுப்படிப்பவர்கள் தனி.

இது குறித்துத் தெரியாதவர்களுக்காக இந்த அறிமுகம்.

இதை எப்படிப் பயன்படுத்துவது?

https://www.utsonmobile.indianrail.gov.in  முகவரியிலோ அல்லது UTS செயலியிலோ பயனர் கணக்கைத் துவங்கி Wallet ல் கட்டணத்தை ஏற்றிக்கொள்ளுங்கள்.

குறைந்த பட்சம் 100₹,  இதற்குச் சேவைக்கட்டணம் 2₹ + . நியாயமாக மத்திய அரசு அறிவிப்பின் படி இவர்கள் சேவைக்கட்டணத்தை வசூலிக்கக் கூடாது.

இதன் பிறகு வரிசையை மறந்து விடுங்கள். எந்த நகருக்கு சென்றாலும் இதைப் பயன்படுத்திப் பயணச்சீட்டு வாங்கிக்கொள்ளலாம்.

பிற்சேர்க்கை

BHIM UPI வழியாகப் பணம் செலுத்தினால், வரி / சேவைக் கட்டணம் வசூலிக்கவில்லை.

பயன்கள் என்ன?

வரிசையில் நிற்க வேண்டியதில்லை, சில்லறை பிரச்சனையில்லை, நேரம் மிச்சமாகிறது, பதட்டம் குறைகிறது, காகிதம் வீணாவதில்லை.

புதிய இடங்களுக்குச் செல்லும் போது பயணச்சீட்டு கொடுக்கும் இடம் தேடி அலைந்து கொண்டு இருக்க வேண்டிய தேவையில்லை.

ஏனென்றால், சில இடங்களில் படி ஏறிச் சென்ற பிறகு “அலுவலகம் இங்கே இல்லைங்க.. அங்கே போங்க” என்று கூறும் போது செம்ம கடுப்பாகும். திரும்ப மலை ஏறி இறங்க வேண்டும்.

குறைகள் என்ன?

இதில் உள்ள குறை என்னவென்றால், GPS வசதி சரியாக வேலை செய்வதில்லை. எனவே, ரயில் நிலையம் அருகில் நின்றால் கூட நிலையத்தைக் காட்டுவதில்லை.

பிற்சேர்க்கை

[பயணிகள் பரிசோதனையின் போது முன்பதிவு செய்து விடக்கூடாது என்பதற்காக நிலையத்தின் அருகே முன்பதிவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது]

எனவே, நாம் வரும் வழியிலேயே எங்காவது நின்று இதை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

எங்கள் அலுவலகத்துக்கு மின்சார ரயிலில் செல்வதால், மிக மிகப் பயனுள்ளதாக உள்ளது. வீட்டில் இருந்து கிளம்பி தெருக்கு வந்தவுடன் முன்பதிவு செய்து விடுவேன்.

முன் பதிவு செய்த நேரத்தில் இருந்து, அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள் பயணிக்க வேண்டும்.

இச்செயலி Android மற்றும் Windows இயங்கு தளங்களுக்கு மட்டுமே உள்ளது.

வசதிகள்

மாதாந்திர பயணச்சீட்டையும் இதிலேயே எடுத்துக் கொள்ளலாம்.

சிலருக்கு மாதாந்திர பயணச்சீட்டை விட தினமும் எடுப்பது குறைவான செலவைக் கொடுக்கலாம் காரணம், அனைத்து நாட்களும் இச்சேவையை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது.

MRTS ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு அலுவலகத்துக்கே ரயிலில் செல்ல வேண்டிய தூரம் இருப்பதால் 🙂 , இச்செயலி மிகப் பயனுள்ளதாக உள்ளது.

GPS பிரச்னையை விரைவில் மேம்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். இப்பிரச்சனையைத் தவிர அசத்தலான செயலி இது.

பிற்சேர்க்கை

[GPS பிரச்சனைகள் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது]

இச்செயலியை அனைவருமே நிறுவி Wallet ல் 100₹ போட்டு வைத்துக் கொள்வது நல்லது. எப்போது தேவைப்படும் என தெரியாது. அவசரமான நேரங்களில் உதவலாம்.

நீங்கள் இதைச் செய்யவில்லையென்றாலும், என்றாவது நீங்கள் ரயில்நிலையம் சென்று கடுப்பாகும் போது இக்கட்டுரை நினைவுக்கு வரும் 😀 .

தொடர்புடைய கட்டுரைகள்

புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல்!

சென்னை மெட்ரோ பயணிகள் அட்ராசிட்டிகள் ?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. நல்ல தகவல், தங்கள் அனுமதியுடன் இப்பதிவை பகிர்கின்றேன்

  2. Comparatively 1star rating is high in number than 5 start rating in play store..
    Really this is app worth to suggest or use?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here