Kappela (2020 மலையாளம்) | காதலும் த்ரில்லரும்

5
Kappela movie review

வறான தொலைபேசி அழைப்பில் தொடங்கும் பேச்சுக் காதலாக மலருகிறது. இறுதியில் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே Kappela கதை.

Kappela

துவக்கத்தில் மிகச்சாதாரணமாக ஒரு நாடகம் போலத் துவங்கும் கதை, காதலாக மாறி பின் த்ரில்லர் படம் போல மாறி விட்டது.

படம் பார்ப்பவர்கள் பாதிப் படம் வரை ஒரு மனநிலையிலும் மீதிக்கு வேறு மனநிலையிலும் இருப்பார்கள் 🙂 . Image Credit

ஜெஸ்ஸி நடுத்தர வர்கத்துக்கும் குறைந்த பொருளாதார நிலையில் உள்ள குடும்பம். எனவே, கட்டுப்பாடுகள் அதிகம். இதனால் இவருக்கு இத்தொலைபேசி காதல் சுவாரசியத்தை அளிக்கிறது.

ஆட்டோ ஓட்டும் விஷ்ணுக்கு அப்பகுதியில் அனைவரிடமும் அன்பாகப் பழகும் குணமும், உதவும் குணமும் நல்ல பெயரைப் பெற்றுத் தருகிறது.

ஜெஸ்ஸிக்கு மாப்பிள்ளை பார்த்ததால், விஷ்ணுவை சந்தித்துப் பேச முடிவெடுக்கிறார்.

இருவருமே முன் பின் பார்த்தது இல்லையென்பதால், அடையாளம் கூறி கோழிக்கோடு பேருந்து நிலையத்தில் சந்திப்பதாக முடிவாகிறது.

தொலைபேசி மட்டுமே தொடர்பு கொள்ளக்கூடிய ஒரே வசதி / வாய்ப்பு. ஜெஸ்ஸி பயன்படுத்தியது ஸ்மார்ட்ஃபோன் அல்லாத சாதாரண தொலைபேசி.

த்ரில்லர்

ஜெஸ்ஸியை சந்திக்க நேரும் நேரத்தில் விஷ்ணு தொலைபேசி ஒரு சண்டையில் தொலைந்து விடுகிறது. இதன் பிறகு த்ரில்லர் படம் போல மாறி விட்டது.

இந்நிலையில் வேறு கதாப்பாத்திரமாக முரட்டுச் சுபாவம் உள்ள ராய், ஜெஸ்ஸி விஷ்ணு கதையில் நுழைகிறார்.

இறுதியில் ஜெஸ்ஸி விஷ்ணு இணைந்தார்களா என்ன ஆனது என்பதைப் பரபரப்பாகக் கூறியுள்ளார்கள்.

நாயகியாக வரும் Anna Ben மிக இயல்பான நடிப்பு. இவர் நடித்த Helen மற்றும் Kumbalangi Nights பார்க்கவில்லை என்றால், அவசியம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

படத்தில் செலவே இல்லை! துவக்கத்தில் வயநாடு அருகே உள்ள கிராமம் தான் முக்கியப்பகுதி. அவ்வளவு அழகாக உள்ளது.

பரபரப்பான பகுதிகளையே பார்த்து, நகரத்தின் எந்தப் பாதிப்பும் இல்லாத இடத்தைப் பார்ப்பதே சுகம்.

மலையாளப்படங்களை அவங்க ஊர் அழகுக்காகவே பார்க்கலாம் போல 🙂 . குறைந்த முதலீட்டில் அட்டகாசமான திரைப்படங்களை எடுக்கிறார்கள்.

படத்தில் ஏராளமான சந்தேகங்கள் உள்ளன ஆனால், அதைக் கூறினால், பார்க்கும் சுவாரசியம் இருக்காது. சிலவற்றைத் திரைக்கதையில் சரி செய்து இருக்கலாம்.

ஏன் தவறவிட்டார்கள் என்று புரியவில்லை.

இதில் உள்ள சில ட்விஸ்ட்களை ஊகிக்க முடிந்து, இது எப்படி என்ற சந்தேகமும் வந்தது. அதோடு மையக்கரு ஏற்கனவே, செய்திகளில் பார்த்துப் பழகியது தான்.

ஒளிப்பதிவு ரொம்ப இயல்பாக, திரைப்படம் போலவே இல்லாமல், நாமே அதில் பயணிப்பது போல இருந்தது.

ரொம்பச் சாதாரணமாக ஆரம்பித்து ஆனால், த்ரில்லராகச் செல்லும் படம். உங்களை ஏமாற்றாது, பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

Netflix ல் உள்ளது.

Directed by Muhammad Musthafa
Produced by Vishnu Venu
Starring Anna Ben, Sreenath Bhasi, Roshan Mathew
Music by Sushin Shyam
Cinematography Jimshi Khalid
Edited by Noufal Abdullah
Release date
6 March 2020 (Theatrical)
22 June 2020 (Netflix)
Running time 113 minutes
Country India
Language Malayalam

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

5 COMMENTS

  1. கிரி, “வேற லெவல்” என்ற வார்த்தையை எப்போதும் பயன்படுத்த கூடாது (வெகு அரிதாக தவிர்த்து) என்ற சுய கட்டுப்பாடு கொண்டவன் நான்.. நண்பர்கள் யாரை பார்த்தலும் இந்த வார்த்தையை பயன்படுத்த கேட்டு, கேட்டு வெறுப்பாகி விட்டேன்.. ஆனால் உண்மையில் மலையாள சினிமா உலகம் “வேற லெவல்” தான் கிரி. தொடர்ச்சியாக மலையாள படங்களை பார்த்து விட்டு மனது அங்கே அலைப்பாயும் போது வேறு எந்த சினிமாவையும் பார்க்க தோன்றுவதில்லை.. தற்போதைய மலையாள படங்களை விட 1980 – 1990 படங்கள் மிக சிறந்தவை என என்னுடன் பணியாற்றும் மலையாள நண்பர்கள் கூற கேட்டுள்ளேன்.. ஆனால் நான் இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதால் அந்த படங்களை தற்போது பார்க்கவில்லை.. நான் ஆரம்பத்தில் பார்த்த மலையாள படம் சூர்யா டிவி ல மட்டும் தான்!!!

    பாலிவுட்டில் தடுக்கி விழுந்தால் கோடிகளில் தான்.. நாமும் அதற்கு சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்து கொண்டு வருகிறோம்.. வெகு சமீபத்தில் தனஞ்செழியன் சாரின் நேர்காணலில் இங்கு படத்தின்மொத்த பட்ஜெட்டில் ஹீரோவின் சம்பளமே 40 % மேல் சென்று விடுகிறது என்றார்.. பின்பு மீதியுள்ள 60% இல் தான் படத்தை முடித்து வெளியிட வேண்டிய இருப்பதாக சொன்னார்.. எதிர்காலத்தில் இதே நிலை தொடர்ந்தால் திரையுலகம் எவ்வாறு செயல்படும் என்று தெரியவில்லை.. நீங்கள் சொன்ன படத்தை இதுவரை பார்க்கவில்லை..ஆனால் கதை களம் எனக்கு விருப்பமானது.. ஏனென்றால் என்னுடைய காதலும் பார்க்காமல் ஆரம்பித்த காதல் தான்.. கடைசியாக பார்த்த படம் ஸுபியும், சுஜாதாவும் படம், அந்த படத்தோட பிரமிப்பிலிருந்தே இன்னும் விலகவில்லை.. இந்த படத்தை பார்த்து விட்டு என் கருத்தை தெரிவிக்கிறேன்..பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின் “தொடர்ச்சியாக மலையாள படங்களை பார்த்து விட்டு மனது அங்கே அலைப்பாயும் போது வேறு எந்த சினிமாவையும் பார்க்க தோன்றுவதில்லை”

    உண்மையே! அவங்க இயல்பான இயக்கமே அனைவரையும் கவர்கிறது.

    “தனஞ்செழியன் சாரின் நேர்காணலில் இங்கு படத்தின்மொத்த பட்ஜெட்டில் ஹீரோவின் சம்பளமே 40 % மேல் சென்று விடுகிறது என்றார்.. பின்பு மீதியுள்ள 60% இல் தான் படத்தை முடித்து வெளியிட வேண்டிய இருப்பதாக சொன்னார்.”

    அவர் பேட்டி அருமை. ரொம்ப சரியாகத் திட்டமிட்டு படம் எடுக்கிறார்.

    “கடைசியாக பார்த்த படம் ஸுபியும், சுஜாதாவும் படம், அந்த படத்தோட பிரமிப்பிலிருந்தே இன்னும் விலகவில்லை”

    இப்படம் என் பட்டியலில் உள்ளது, விரைவில் பார்த்து விடுவேன்.

  3. கிரி, நேற்று தான் Kappela படத்தை பார்த்தேன்.. படம் அருமையாக இருந்தது.. உங்களுக்கு ஏற்பட்டது போல் அதிக அளவில் சந்தேகங்கள் ஏதும் எழவில்லை.. படத்தோட திரைக்கதை அமைப்பும் மிகவும் பிடித்து இருந்தது.. படத்தில் என்னை கவர்ந்த பாத்திரம் ராய் ஓட நடிப்பு.. மிகவும் இயல்பாக அந்த பாத்திரத்தை செய்து இருக்கிறார்.. விஷ்ணுவுக்கும், அவருக்குமான சண்டை காட்சி.. மிகவும் சாதரணமாக, இயல்பாக, நிஜத்தில் நிகழ்வது போல காட்சிபடுத்தியது மிகவும் சிறப்பு!!!! இயக்குனருக்கு முதல் படம் என்று நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்.. ஒரு நல்ல படத்தை அறிமுகப்படுத்தியதற்கு உங்களுக்கு நன்றி..

  4. நண்பர் கிரி, நான் துல்கர் மற்றும் நிவின் பாலீ ஆகியேரின் படங்களைத்தான் சமிபமாக அதிகம் பார்த்துள்ளேன், மலையாளப் படங்களை பார்த்துவிட்டு. நம்முடைய பெரும்பாலான குப்பை படங்களை பார்க்கும் போது “ச்சை” என்றாகிவிடுகின்றது,உங்கள் பதிவைப் பார்த்தவுடன் இப்படம் பார்க்க ஆவல் அதிகமாகின்றது,மலையாள படங்கள் பெரும்பாலும் யதார்த்தமான நடைமுறையில் சாத்தியமான படங்களாகவே உள்ளன.எனக்கு எப்போதுமே எனக்கு ஒரு சந்தேகம் உண்டு நம் அருகிலேயே தான் இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் மட்டும் எப்படி இப்படி வித்தியாசமான எண்ணத்தைக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!