Chromecast பற்றித் தெரியுமா?

10
Chromecast பற்றித் தெரியுமா

கூகுள் பல தயாரிப்புகளை வெளியிட்டு இருந்தாலும் உடனடி ஹிட் என்றால் அது “Chromecast” என்ற சாதனம் தான்.

இது பற்றி சிலர் கேள்விப்பட்டு இருக்கலாம் ஆனால், வழக்கம் போல இது அமெரிக்காவில் மட்டுமே முதலில் வெளியானது.

Chromecast

இதனுடைய விலை 35 USD தான்.USB ஸ்டிக் போல இருக்கும் இதை நாம் தொலைக்காட்சி “HDMI Port” ல் இணைத்து விட வேண்டும். Image Credit

பின் இதை எளிதாக நமது மடிக் கணினியிலும் தொலைபேசியிலும் (Android / iOS ஸ்மார்ட் ஃபோன்), Tablet ல் எளிதாக அதில் கூறியுள்ளதுபடி நிறுவி விடலாம்.

இதைப் பயன்படுத்த Wifi வேண்டும்.

YouTube காணொளிகளை மிக எளிதாகத் தொலைக்காட்சியில் காண முடியும். இதே போல வசதி தற்போது வரும் தொலைக்காட்சிகளில் வருகிறது.

இதற்கான மென்பொருளை நாம் நிறுவிய பிறகு YouTube சென்றால் square box/wifi signal போன்ற ஒரு ஐகான் இருக்கும்.

அதை க்ளிக் செய்தால் இந்தச் சாதனத்தைப் பயன்படுத்த அனுமதி கேட்கும் அதை க்ளிக் செய்தால் போதும் உடனே நம் கணினி / தொலைபேசியில் இருந்தே YouTube காணொளியை நம் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

காணொளியை ஆரம்பிக்கும் வரை மட்டுமே நம் கணினி / ஸ்மார்ட் ஃபோன் தேவை.

ஆரம்பித்து விட்டால் நாம் பார்க்கத் துவங்கிய காணொளியின் Link அந்த USB சாதனத்தில் சேமிக்கப்படும்.

Wifi

இதன் பிறகு நாம் நம் கணினியை / தொலைபேசியை Off செய்தால் கூட Wifi உதவியுடன் தொலைக்காட்சியில் காணொளி தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கும்,

எனவே, இதைத் தொடர்ந்து ஓடவிட்டால் நம்முடைய தொலைபேசி / Tablet ல் பேட்டரி தீர்ந்து விடுமே என்று கவலைப்பட வேண்டியதில்லை.

YouTube Netflix அல்லாது சப்போர்ட் செய்யும் அனைத்துத் தளங்களையும் நம்முடைய க்ரோம் உலவியில் / செயலியில் வரும் எதையும் தொலைக்காட்சியில் காண முடியும்.

தொலைக்காட்சியில் நாம் தேர்வு செய்த காணொளி ஓடிக்கொண்டு இருக்கும் போது நம்முடைய கணினி / தொலைபேசி / Tablet ல் மற்ற வேலைகளை / காணொளிகளைப் பார்க்கலாம்.

தொலைக்காட்சியில் ஓடும் நிகழ்ச்சி / திரைப்படம் தடங்கல் ஏற்படாது.

Screen Mirror செய்து மொபைலை பயன்படுத்தினால், தொலைக்காட்சியிலும் மாறும். எனவே, பார்க்கக் கடுப்பாக இருக்கும். Chromecast ல் இந்தப் பிரச்சனையில்லை.

நான் கூறுவது பலருக்கு புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும் என்று புரிகிறது, நானும் எவ்வளோ முறை எழுத்தை எளிமையாக மாற்றிப் பார்த்தும் தெளிவாக வரவில்லை.

இதைப் பயன்படுத்தும் போது மேற்கூறியது உங்களுக்குப் புரியும்.

படிப்பவர்களுக்கு எளிமையாகக் கூற வேண்டும் என்று தான் நினைக்கிறேன் ஆனால், சில தொழில்நுட்பத் தகவல்களைப் புரியும்படி விளக்குவது சிரமமாக உள்ளது.

பயன்படுத்தத் துவங்கிய பிறகு இதைப்படித்தால், தெளிவாக இருக்கும்.

Read : ஜிமெயில் எப்படி செல்கிறது தெரியுமா?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

10 COMMENTS

  1. ஆமாங்க கிரி, ஆப்பிள் டிவி ல இதைப்போலவே பல வசதிகள் இருக்கு. கடந்த 5 வருஷமா ஆப்பிள் டிவி தான் உபயோகபடுத்துகிறேன். க்ரோம்காஸ்ட் போலவே சோனி கம்பெனி ப்ரோடுக்ட்ஸ் உள்ளன.

    ஆனந்த்,
    சிகாகோ.

  2. கிரி.. இது மாதிரி அறிவுபூர்வமான தொழில்நுட்ப இணையம் சமந்தமான விஷியங்களில் கத்து குட்டியா இருக்குற நான் வேறு எந்த தளத்தையும் / செய்தியையும் பார்பதில்லை… ஒன்லி கிரியோட தளம்…
    கிரி நீங்க சொன்னது செம்ம மேட்டரு.. சூப்பரா இருக்கு… பகிர்தமைக்கு மகிழ்ச்சி..

  3. ஒரே வீடியோவை ஒவ்வோரு முறையும் பாக்கும்போதும் இணையம் செலவாகும்மா..? அல்லது ஒரு முறை டவுன்லோடு பண்ணினால் போதுமானதா அண்ணா ..?

  4. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @ஆனந்த் தகவலுக்கு நன்றி

    @யாசின் நன்றி

    @ஆனந்த் ஆமாம். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் தரவிறக்கம் ஆகும். அது தற்காலிக நினைவகம் தான்.

  5. கிரி அண்ணே ,நல்ல தகவல் நன்றி,
    நான் சோனி இன்டர்நெட் டிவி வைத்திருக்கிறேன் ,ஆனால் என்னால் லைவ் டிவி ஸ்ட்ரீம் தரும் வெப்சைட்கல்லில் வரும் ஸ்ட்ரீம் பார்க்க முடிவதில்லை ,ப்ளுக்க் இன் மிசிங் என்று வருகிறது எனவே நான் இன்டர்நெட் டிவி என்றும் ,அதை கம்ப்யூட்டர் போல லைவ் ஸ்ட்ரீம் பாக்கலாம் என்று இருந்தேன். ஆனaaல் முடியவில்லை.இந்த குரோம் காஸ்ட் கொண்டு லைவ் ஸ்ட்ரீம் சைட் விதேஒஸ் பார்க்க முடியுமா..?
    மேலும் நான் இந்த குரோம் காஸ்ட் கொண்டு என் டிவி உடன் குரோம் வெப் ப்ரௌசெர் முழுமையாக உபயோகபடுத்த முடியுமா..? அதாவது எவ்வாறு நாம் கணினி /லேப்டாப் இல் குரோம் ப்ரௌசெர் இயக்குகிரோமே அதே போல் இயக்க வேண்டும் அன்பது என் தேவை அது இந்த குரோம் காஸ்ட் செய்யுமா ?

  6. ராம் நீங்கள் கேட்பது போல Chromecast மூலம் க்ரோம் உலவியை (மட்டும்) பயன்படுத்த முடியும் ஆனால், நீங்கள் எதிர்பார்க்கும் வேகம் கிடைக்காது. விரைவில் இது மேம்படுத்தப் படலாம்.

    அப்புறம் கமெண்ட் போடும் முன்பு ஒரு முறை சரி பாருங்க.. பாதி ஆங்கிலம் புரியாத சொற்களில் வந்து இருக்கிறது.

  7. ரொம்ப பயனுள்ள தகவல் கிரி. Chromecast பற்றி இப்பொழுதுதான் அரிகிறேன். நன்றி கிரி.

  8. எனக்கு வயிறு எரியுது அண்ணா

    நீங்க மட்டும் நல்லா இனைய வேகத்தை அனுபவிக்கிரிங்க … 100mbps ப்பா கண்ண கட்டுது
    இங்க சென்னையில 4mbps வேகம் கூட ஒழுங்கா வராது.

    அனுபவிங்க …

  9. you tube la neraya rhymes irukku…chinna ponnu tv la rhymes pakkuradhukaga vangalamnu irukken….pudhusa use pannuradhukku munnadi irukkura thayakkam dhan yenakkum irukku… 🙁 🙁

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!