Squid Game சீரிஸ் உலகம் முழுக்க மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இந்தச் சீரிஸ் பார்ப்பதாலையே தென் கொரியாவில் இணையம் வழங்கும் நிறுவனம் ஸ்தம்பித்து விட்டது என்று வழக்கே போட்டு விட்டது. Image Credit
அவர்கள் Bandwidth Utilization கன்னாபின்னாவென்று எகிறியதே காரணம்.
Squid Game
அப்படியென்ன இந்தச் சீரீஸில் உள்ளது?!
தென் கொரியாவில் அந்தக்காலத்தில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளை Advance ஆக மாற்றித் திகிலாக்கி விளையாடினால் அதுவே Squid Game.
கடன் அதிகம் வைத்து இருப்பவர்களை, நாங்கள் கூறும் விளையாட்டை விளையாடினால் நிறையப் பணம் தருகிறோம் என்கிறார்கள்.
கடன் ஏராளம் வைத்து இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?
‘சரி முயற்சித்துப்பார்ப்போமே‘ என்று ஒத்துக்கொள்பவர்களை இரகசியமாக ஒரு இடத்துக்குக் கொண்டு செல்கிறார்கள்.
விளையாட்டு என்றால், சாதாரணமாக இருக்கும் என்று நினைத்தால், உயிருக்கே ஆபத்து என்று வரும் போது பலர் பின்வாங்கி எங்களை விட்டு விடுங்கள் என்று கூறுகிறார்கள்.
ஆனால், அவர்கள் கொடுக்கும் பணப்பரிசின் மதிப்பு பில்லியன் கணக்கில்.
எனவே, வெளியே சென்று கடனைக் கட்ட முடியாமல் அசிங்கப்படுவதற்கு இங்கே உயிரைப் பணயம் வைத்து விளையாடப் பலர் தீர்மானிக்கிறார்கள்.
இதன் பிறகு என்ன ஆகிறது என்பதே Squid Game.
சுயநலம்
ஒவ்வொருவரும் தான் வெற்றி பெற குறுக்கு வழிகளை, தவறான வழிகளை முயற்சிப்பது என்று மனிதர்களின் மறு பக்கத்தைக் காட்டியுள்ளார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள். போகிற போக்கில் தென் கொரியாவில் நிலவும் குடும்பச் சிக்கல்களையும் கூறுகிறார்கள்.
நாயகனாக வரும் Lee Jung-jae, New World என்ற படத்தில் டானாக மிரட்டியிருப்பார் இதில் அதற்கு நேர் எதிராக நடித்துள்ளார் 🙂 .
போட்டியாளர்களில் வயதான நபரும் ஒருவர் வருகிறார். இவருடைய நடிப்பு அசத்தல்.
திரைக்கதை & அரங்கு அமைப்பு
கதையென்னவோ எளிமையானது என்றாலும், கொடுத்த விதத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார்கள்.
ஒவ்வொருவருக்கும் வடிவமைக்கப்பட்ட உடை, கட்டுப்பாடுகள், முகமூடி என்று அனைத்துமே தனித்தன்மையுடன் உள்ளது.
ஒவ்வொரு விளையாட்டுக்கும் வடிவமைக்கப்பட்ட அரங்கு பிரம்மாண்டத்தைக் கொடுக்கிறது. பார்க்க எளிமையாக இருந்தாலும் அது தரும் திகில் அசாதாரணமானது.
Saw போன்ற படங்களில் சாதனங்களைப் பார்த்தாலே பயங்கரமாக இருக்கும் ஆனால், இதில் பார்க்கப் பயங்கரமாக இல்லை ஆனால், பயத்தைக் கொடுக்கிறது.
ஒளிப்பதிவு தெளிவான திரைக்கதைக்கு உதவியிருக்கிறது. குறைந்த இடங்களில் சீரீஸ் எடுக்கப்பட்டுள்ளது ஆனால், காட்சிகள் பிரமாண்டமாக உள்ளது.
பின்னணி இசையும் நன்று.
அப்படியென்ன சிறப்பு?
உலகம் முழுக்க இந்தச் சீரீஸ் பிரபலமானதுக்கு என்ன காரணம் என்று எப்படி யோசித்தும் பிடிபடவில்லை.
நிச்சயம் இந்தச் சீரீஸ் நன்றாக உள்ளது, மாற்றுக்கருத்தில்லை ஆனால், அனைவரும் கொண்டாடும் அளவுக்கு என்ன உள்ளது?!
தென் கொரியா மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால், அது அவர்கள் நாட்டின் பாரம்பரிய விளையாட்டு.
எனவே, அதை வைத்துக் கதை எனும் போது அந்நாட்டு மக்களுக்கு இயல்பாகவே ஆர்வம் வருவது இயற்கை.
ஆனால், மற்ற நாட்டினருக்கு இது ஒரு வழக்கமான சீரீஸ். ஏற்கனவே இது போன்ற ஏராளமான சீரீஸ்கள் வந்துள்ளன. எனவே, இது ஒன்றும் புதியதல்ல.
Alice In Borderland என்ற சீரீஸ் கிட்டத்தட்ட இதே போன்று தான். வழிமுறைகள் வேறு ஆனால், கதைக்களம் ஒன்று.
சில நேரங்களில் படமாகட்டும், இது போலச் சீரீஸ் ஆகட்டும் ஏன் பெரிய வெற்றிப் பெறுகிறது என்று கணிக்கவே முடிவதில்லை 🙂 .
Hwang Dong-hyuk
சீரீஸ் இயக்குநர் இக்கதையை வைத்துப் பலரை அணுகியும் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. இப்படியொரு வெற்றியைப் பெற்ற பிறகு தயாரிக்க மறுத்தவர்கள் படத்தில் வரும் காட்சியைவிடத் திகிலாகி இருப்பார்கள் 😀 .
ஆசியா பகுதியில் சந்தையைப் பிடிக்க முயற்சித்துக்கொண்டு இருந்த NETFLIX, இக்கதை வித்யாசமாக இருக்கே! என்று இயக்குநரிடம் பேசிக் கதையை இன்னும் விரிவாக்கி மேம்படுத்தியுள்ளார்கள்.
தற்போது உலகளவில் மிகப்பெரிய வெற்றி. இதை என்னவென்று கூறுவது?!
சில சம்பவங்கள் எப்போதுமே வியப்பை கொடுக்கும். அது போல ஒன்று இயக்குநர் Hwang Dong-hyuk வாழ்க்கை.
போராடி வெற்றியைப் பெறுவது சிறப்பு ஆனால், உலகம் வியக்கும் வெற்றியைப் பெறுவது அசாதாரணம்.
2009 ம் ஆண்டு முதல் முயற்சித்து 10 வருடங்களுக்குப் பிறகு நடந்த அதிசயம்.
Well Deserved!
யார் பார்க்கலாம்?
சில அடல்ட் காட்சிகள், வன்முறைகள் நிறைந்தது. எனவே, இதில் ஒப்புதல் உள்ளவர்கள் பார்க்கலாம்.
இது போன்ற திகில் விளையாட்டுப் படங்களில் ஆர்வமுள்ளவர்கள் ஏற்கனவே பார்த்து இருப்பீர்கள் 🙂 . பார்க்கவில்லையென்றால், அவசியம் பார்க்கவும்.
குழந்தைகள் விளையாடிய விளையாட்டு என்றாலும் குழந்தைகளுடன் பார்க்க ஏற்றதல்ல.
NETFLIX ல் காணலாம்.
Created by Hwang Dong-hyuk
Written by Hwang Dong-hyuk
Directed by Hwang Dong-hyuk
Starring Lee Jung-jae, Park Hae-soo, Wi Ha-joon
Composer Jung Jae-il
Country of origin South Korea
Original language Korean
No. of seasons 1
No. of episodes 9
Camera setup Multi-camera
Running time 32–63 minutes
Distributor Netflix
Budget $21.4 million
Picture format 4K (Ultra HD) Dolby Vision
Audio format Dolby Atmos
Original release September 17, 2021
தொடர்புடைய திரை விமர்சனம்
Alice in Borderland | Japan TV Series | என்ன.. யாரையும் காணோம்!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.