Aranyak | Series | கொலைகளைச் செய்வது யார்?

2
Aranyak

மாச்சல் பிரதேசத்தில் உள்ள சிரோனா நகரில் நடக்கும் கொலைகள் பற்றிய கதையே Aranyak. Image Credit

Aranyak

சிரோனா நகரில் தொடர் கொலைகள் பல காலமாக நடந்து வருகிறது. குறிப்பாகப் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்படுகின்றனர். இதற்குக் காரணமாக மனிதன் பாதி மிருகம் பாதியாக உள்ள சிறுத்தை மனிதனை கூறுகின்றனர்.

இந்நபர் உண்மையா பொய்யா என்று யாருக்கும் தெரியாது ஆனால், மறுக்கவும் முடியாத வதந்தியாக, நம்பிக்கையாக உள்ளது.

கொலைகளைச் சிறுத்தை மனிதன் செய்யவில்லையென்றால், வேறு யாராக இருக்கும் என்ற கேள்வி வருகிறது. கொலை செய்வது யார் என்று இறுதியில் கண்டுபிடிக்கப்படுகிறதா? என்பதே Aranyak முதல் சீசன்.

ரவீணா டாண்டன்

சிரோனா நகரின் காவல் அதிகாரியான ரவீணா, உள்ளூர் மக்களின் மதிப்பைப் பெற்றவர். இவருக்கும் இக்கொலையை யார் செய்வது என்ற கேள்வி இருக்கும்.

இது போன்ற சம்பவங்கள் 19 வருடங்களாக நடக்கவில்லையென்பதால், இது பற்றிய பேச்சு குறைந்து இருந்த நிலையில் திரும்ப நடந்த சம்பவத்தால் பரபரப்பாகும்.

ரவீணாக்கு இக்கதாப்பாத்திரம், சரியாகப் பொருந்தியுள்ளது. பட்டென்று கோபம் அடையும் இவருக்கும் இவர் உடல் மொழிக்கும் பொருத்தமாக உள்ளது.

ரவீணா காவலர் உடையில் European போல உள்ளார் 🙂 .

முன்னாள் காவலரான இவருடைய மாமனார் Ashutosh Rana, சிறுத்தை மனிதனை பிடிப்பதில் தோல்வியடைந்ததால், ஓய்வு பெற்றும் சிறுத்தை மனிதன் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் இருப்பார்.

தன் மருமகளான ரவீணாவுக்கும் இது தொடர்பான விஷயங்களில் உதவியாக இருப்பார்.

Parambrata Chatterjee

ரவீணா ஒரு வருட விடுமுறையில் செல்வதால் இவருக்குப் பதிலாக Parambrata Chatterjee அதிகாரியாகப் பொறுப்பேற்கும் சமயத்தில் இக்கொலை நடக்கும்.

இந்நிலையில் ரவீணாக்கும் Parambrata Chatterjee க்கும் இடையே சுய கௌரவம் (Ego) பிரச்சனையாக இருக்கும்.

இதைச் சண்டையாகக் கொண்டு சென்று இறுதியில் வேறு மாதிரி முடிப்பது சிறப்பு.

காடு / கதாப்பாத்திரங்கள்

இமயமலை சார்ந்த இடம் என்பதால், சீரிஸ் முழுக்க வித்யாசமான அனுபவம். அதிலும் குறிப்பாக இறுதியில் பனி பெய்துகொண்டு இருக்கும் காட்சிகள் ஹாலிவுட் படம் போல உள்ளது.

கான்க்ரீட் காடுகளாகப் பார்த்துப் பழகிய நமக்கு உண்மையான காட்டின் பகுதியில் நடக்கும் கதை என்பது சுவாரசியமாகவும், மாறுதலாகவும் உள்ளது.

Aranyak என்றால் காடு என்று அர்த்தமாம்.

இதில் வருபவர்கள் அனைவருமே மிகச்சரியாகப் பொருந்தியுள்ளார்கள். ஒருவரை கூட இக்கதாப்பாத்திரத்துக்குப் பொருத்தமில்லை என்று கூற முடியாது.

காவல்துறை பணியால் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கல்களும் கூறப்பட்டுள்ளது.

கொலை சம்பந்தப்பட்ட கதையில் எழுதப்படாத ஒரு விதி என்னவென்றால், யாரை நாம் சந்தேகிக்கிறோமோ அவர் கொலை செய்து இருக்க மாட்டார் 🙂 .

Aranyak க்கும் விதிவிலக்கல்ல.

கொலை கதையோடு பொருத்தமாக அரசியல் அதிகார போட்டியும் இணைந்து வருகிறது.

ஒரு கொலை மட்டும், எப்படிச் சாத்தியம் என்று தோன்றுகிறது. அதெப்படி கொலை செய்தவரை அவ்வளவு பேர் இருந்தும் கவனிக்காமல் இருக்க முடியும் என்று தோன்றுகிறது.

இது போலச் சில தவறுகள் தவிர்த்து மற்றவை நேர்த்தியான திரைக்கதை. அடுத்தச் சீசனுக்கும் வழக்கம் போல ட்விஸ்ட் வைத்து விட்டார்கள்.

ஒளிப்பதிவு / பின்னணி இசை

ஒளிப்பதிவு காட்டின் அழகை நமக்கு அள்ளித்தருகிறது. அதோடு த்ரில்லருக்கு தேவையான பயத்தையும், திகிலையும் கொடுக்கிறது.

காட்டை எப்படிக் காட்டினாலும் அழகாக இருக்கும் என்றாலும், முயற்சித்தால் அதைக் கூடுதல் அழகாகக் காட்டலாம் என்பதே சிறப்பு.

பின்னணி இசையும் த்ரில்லர் படங்களுக்குண்டான அளவில் உள்ளது. பின்னணி இசை இல்லாமல் பார்த்தால், எந்தப் பய உணர்வும் இருக்காது.

ஒளிப்பதிவு பின்னணி இசை இரண்டுமே மிக முக்கியமானதாக உள்ளது. தரமான ஒலிப்பெருக்கியில் கேட்டால் அசத்தலாக இருக்கும்.

யார் பார்க்கலாம்?

பள்ளி பசங்களுடனான சில மேலோட்டமான அடல்ட் காட்சிகள், வசனங்கள் உள்ளது.

த்ரில்லர் படங்களை ரசிப்பவர்கள் தவற விடக் கூடாத சீரீஸ்.

இமயமலை பகுதி என்பதால், காடுகள் மற்றும் அது சார்ந்த வாழ்க்கை முறைகள், வீடுகள் என்று வித்யாசமான காட்சியமைப்புகள்.

எனவே, புதுவிதமான அனுபவத்தைப் பெற முடியும்.

NETFLIX ல் காணலாம். பரிந்துரைத்தது பிரதீப் ஸ்ரீனிவாசன்.

Genre Drama Thriller
Written by Rohan Sippy, Charudutt Acharya
Directed by Vinay Waikul
Starring Raveena Tandon, Parambrata Chatterjee, Ashutosh Rana, Zakir Hussain
Country of origin India
Original language(s) Hindi
No. of seasons 1
Producer(s) Rohan Sippy, Ramesh Sippy, Siddharth Roy Kapur
Cinematography Saurabh Goswami
Editor(s) Yasha Ramchandani
Distributor Netflix
Original release 10 December 2021

தொடர்புடைய திரை விமர்சனங்கள்

கடைசீல பிரியாணி (2021) | காட்டுக்குள் ஒரு துரத்தல்

Sherni (2021 இந்தி) | புலி சிக்கியதா?!

Joji (2021 மலையாளம்) | A Psychological Thriller

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. பார்த்து விட்டேன் கிரி. எனக்கு ரொம்ப பிடித்தது. நீங்கள் சொல்வது போல் அடுத்த சீசனுக்கு காத்திருக்க வைத்து விட்டார்கள்.

    >>கான்க்ரீட் காடுகளாகப் பார்த்துப் பழகிய நமக்கு உண்மையான காட்டின் பகுதியில் நடக்கும் கதை என்பது சுவாரசியமாகவும், மாறுதலாகவும் உள்ளது.

    I agree with you.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here