தமிழ் முக்கியத்துவம் குறைய நீங்களும் ஒரு காரணம்!

4
தமிழ் முக்கியத்துவம்

மிழ் தமிழ்” ன்னு வீர ஆவேசமா பேசிட்டு இருக்கும் பலரே, “தமிழுக்கு இழப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள், தமிழ் முக்கியத்துவம் குறைய காரணமாக உள்ளோம் என்பதை உணராமல் இருக்கிறார்கள். Image Credit

தமிழ் முக்கியத்துவம்

கடந்த வருடம் ATM ல் தமிழை நீக்கி விட்டார்கள் என்று பெரும் சர்ச்சையானது. பின்னர் கடும் எதிர்ப்புகளால் திரும்ப வந்தது, இருப்பினும் இன்னும் சில ATM களில் இப்பிரச்சனை உள்ளது.

இச்சமயத்தில் சமூகத்தளத்தில் ஒருவர் “ஏன்டா! தமிழ் இல்லைனு சொல்றவனுக எத்தனை பேர் ATM ல் தமிழைப் பயன்படுத்துறீங்க?” என்று கேட்டு இருந்தார்.

நானும் அந்தச் சமயத்தில் தமிழைப் பயன்படுத்தாமல், ஆங்கிலத்தையே பயன்படுத்தி வந்தேன்.

இதைப் படித்த போது “தமிழ் வளர்ச்சி, இந்தி திணிப்பு குறித்து எழுதுகிறோம், பேசுகிறோம் ஆனால், நாமே தமிழ் பயன்படுத்தவில்லையே” என்று குற்ற உணர்வாக இருந்தது.

அன்றில் இருந்து இன்று வரை எந்த ATM சென்றாலும் தமிழை மட்டுமே பயன்படுத்துகிறேன்.

எங்கெல்லாம் தமிழ் மொழியைப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் தமிழைப் பயன்படுத்த வேண்டும், அப்போது தான் தமிழுக்கான தேவை ஏற்படும்.

விண்ணப்பம் எழுதும் போது, வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைக்கும் போது, ATM பயன்படுத்தும் போது என்று எங்கும் தமிழை தேர்வு செய்தால் மட்டுமே தமிழுக்கான தேவை / முக்கியத்துவம் அதிகரிக்கும், அது தொடர்பான வேலை வாய்ப்புகளுக்கு அவசியம் ஏற்படும்.

தேவை இருந்தால் மட்டுமே, அது தொடர்பான செயல்களும் நடைபெறும். நம் கடமையைச் செய்யாமல், மற்றவர்களைக் குறை கூறிக் கொண்டு இருப்பது சரியல்ல.

அடுத்த முறை ATM சென்றாலோ, ஏர்டெல் போன்ற வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்தாலோ மறக்காமல் தமிழ் தேர்வு செய்யுங்கள்.

பேச்சில் மட்டுமில்லாமல் செயலிலும் காட்டி தமிழின் வளர்ச்சியில் உங்களின் மறைமுகப் பங்களிப்பை அளியுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

facebook “முகநூல்” என்றால் Lady Gaga “பெண் காகா” வா?

தமிழ் ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள்

இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்! [FAQ]

தமிழ்

4 COMMENTS

  1. என்றுமே மொழியையும், நம் இனத்தையும் கண்டு பெருமைப்படுகிறவன் நான்… எவ்வளவு அழகான மொழி, நம் பாட்டன், முப்பாட்டன் சொத்துக்கள் இவைகள்.. அவற்றை பாதுகாப்பது, நம் சந்ததிகளுக்கு கற்று கொடுப்பது நம் கடமை.. எங்கெல்லாம் தமிழ் மொழியைப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் நாம் தமிழைப் பயன்படுத்த வேண்டும், அப்போது தான் தமிழுக்கான தேவை ஏற்படும்…சத்தியமான உண்மை… தமிழ்… தமிழ்.. தமிழ்… உச்சரிக்கும் போதே நாவில் தேன் சொட்டுகிறது…

  2. @யாசின் நீங்க பாட்டன் முப்பாட்டன்னு சொன்னதும் எனக்கு சீமான் தான் நினைவுக்கு வந்தார் 🙂 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here