துப்பாக்கி (2012)

19
துப்பாக்கி

கில்லி, போக்கிரிக்குப் பிறகு அனைத்துப் பிரிவினரையும் கவர்ந்த படமாக “துப்பாக்கி” யைத் கூறலாம். விஜயை பிடிக்காதவர்களுக்குக் கூடப் பிடித்துள்ளது.

துப்பாக்கி

40 நாட்கள் விடுமுறையில் வரும் இராணுவ வீரரான விஜய், ஒரு குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஒருவனைப் பிடிக்க, அவனில் இருந்து கிடைக்கும் தொடர்புகளை வைத்துத் தீவிரவாதிகளை அழிப்பது தான் மிச்சம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜயின் அலப்பறை / சேட்டைகள் இல்லாத படம் கில்லிக்கு பிறகு ஆனால், கில்லியோடு ஒப்பிட முடியாது.

முருகதாஸ் சொன்னதை விஜய் செய்து இருக்கிறார் என்று படம் பார்க்கும் பொழுது புரிகிறது.

துவக்கப்பாடல் மற்றும் வெகுசில காட்சிகளை மட்டுமே விஜய்க்காக வைத்து இருக்கிறார் என்று கூறலாம், மற்றபடி தேடினாலும் கிடைக்காது.

விஜய்க்கு மிகப்பெரிய அனுகூலம்அவரது இளமை. 40 ஐ நெருங்கப் போகிறார் என்றாலும் இன்னும் 30 வயதுக்காரர் போலத்தான் இருக்கிறார். செம ஸ்மார்ட்.

விஜய் பதட்டமில்லாத நபராக வருகிறார் அதாவது, எந்த விசயத்தையும் பதட்டப்படாமல் செய்வது. இவருக்குச் சரியாகப் பொருந்துகிறது.

கொஞ்சம் அதிகம் ஆகி இருந்தாலும் அக்காட்சியின்நோக்கம் மாறி நகைச்சுவையாகி இருக்கும்.

முருகதாஸ் சரியாகச் செய்து உள்ளார். உடன் வரும் காவல் துறை அதிகாரி சத்யன், ஒரு சாதாரண நபர் பதட்டப்படும் மன நிலையை நன்கு பிரதிபலித்து இருக்கிறார்.

சத்யன்

சத்யனுக்கு இந்தப்படத்தில் காமெடி அதிகம் இருக்கும் என்று நினைத்தேன் ஆனால், அவ்வளவாக இல்லை.

ஒருவேளை இவர் காவல் துறை அதிகாரியாக இருப்பதால் அது போலக் காட்சிகளைக் கொடுக்க முடியாமல் இருந்து இருக்கலாம்.

சத்யன் சஸ்பென்ஸ் தாங்க மாட்டார் அதனால், இவரை வெறுப்பேற்ற விஜய் அடிக்கடி சஸ்பென்ஸ் வைப்பது நகைச்சுவை 🙂 .

சத்யன் “நீ துணியைத் தவிர மற்றதுக்குத் தான் இதைப் பயன்படுத்துவியா” என்று கேட்பது ரசிக்கும் படி இருக்கும். சத்யன் நகைச்சுவைக்கு அதிகம் வேலை இல்லாததால் ஜெயராமை காமெடிக்கு!! வைத்து இருக்கிறார்கள்.

காட்சியை நகர்த்த மட்டுமே அவரது பகுதி பயன்பட்டது, மற்றபடி எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை.

காஜல்

காஜல் வழக்கமான கிறுக்கு நாயகி கதாப்பாத்திரம். தமிழ் பட இயக்குநர்கள் எதை மாற்றினாலும் இதை மாற்ற மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள்.

பார்க்கக் காஜல் அழகாக இருக்கிறார் அதோடு நல்ல உடலமைப்பையும் கொண்டு இருக்கிறார் ஆனால், பார்த்தால் பேக்கு மாதிரி தான் இருக்கிறார்.

காஜல் பாட்டுப் பாடுவதற்கும், படத்தைக் கொஞ்சம் இறுக்கத்திலிருந்து தளர்த்தவும் பயன்பட்டு இருக்கிறார்.

படம் முழுக்க வருகிற மாதிரி செய்து இருக்கிறார்கள், கொஞ்சம் காட்சிகளிலே வந்தாலும்.

படத்திற்கு எழுந்த முஸ்லிம் எதிர்ப்பிற்கு பகிரங்க மன்னிப்புக் கேட்டு மொத்தக்காட்சிகள் 15 ல் 10 ஐ நீக்குவதாகக் கூறி இருந்தார்கள்.

சர்ச்சையான காட்சிகள் எதையும் காணவில்லை.

பார்க்கும் முன்பே காட்சிகளை நீக்கி விட்டார்களா போல. நிறைய இடங்களில் வரும் ஆங்கில, ஹிந்தி மொழிகளுக்குச் சப்டைட்டில் இல்லாதது ஒரு குறை.

இதனால் சில இடங்களில் வசனங்கள் புரியவில்லை.

இந்தப்படத்தை படத்தைப் பற்றிக் கூறியவர்கள் பெரும்பாலும் படம் லாஜிக்காக இருக்கிறது என்பது தான்.

இந்தப்படத்தில் விஜய் Military Intelligence ல் இருக்கிறார் என்றாலும் இதில் அவர் வைத்ததே முடிவாக இருக்கிறது.

இவரே எப்படி அனைத்தையும் தீர்மானிக்க முடியும்!! என்று தெரியவில்லை.

கிட்டத்தட்ட “கசாப்” மாதிரி ஒரு ஆளைத் தன் வீட்டில் வைத்து யாருக்கும் தெரியாமல் விசாரிக்க முடியும் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்.

இவருக்கும் வில்லனுக்கும் நடைபெறும் சண்டையில், வில்லன் ஒரு வணிகவளாகத்தை வெடிக்க வைக்கிறார் அதில் பலர் கொல்லப்படுகிறார்கள்.

இது மிகப்பெரிய சென்சிடிவ் விஷயம்.

இது போலத் தருணங்களில் அரசாங்கத்திற்கு தெரியாமல் தனி ஒரு ஆளாகத் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுவது / முடிவுகளை எடுப்பது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.

இந்தப்படத்தில் Mac கம்ப்யூட்டர் அடிக்கடி வருகிறது.

இதைப் பார்த்த பொழுது முருகதாஸ் நம்ம கேப்டனை “ரமணா” படத்தில் Windows Media Player ல் டைப் செய்வது போலக் காட்டியது போல இதில் ஏதாவது செய்து விஜயை டேமேஜ் செய்து விடுவாரோ என்று நினைத்தேன்.

நல்ல வேளை விஜய் நல்ல நேரம் அப்படி  எதுவும் நடக்கவில்லை 🙂 .

சண்டைக்காட்சிகள் நன்றாக உள்ளது.

குறிப்பாக, தீவிரவாதிகள் இருப்பிடத்திலிருந்து சிலரை காப்பாற்றும் நேரத்தில். ஸ்டைல் ஆக எடுக்கப்பட்டு இருந்தன, அவை விஜய்க்கு சரியாகப் பொருந்தியும் இருந்தது.

வில்லன் Vidyut Jamwal

வில்லனை அனைவரும் தூக்கி வைத்துப் பேசி இருந்தார்கள், அப்படியொன்றும் இல்லை.

சொல்லப்போனால் அவருக்கு முக்கியக் காட்சிகளே இடைவேளைக்குப் பிறகு தான் வருகிறது, வந்தும் கடைசியில் சப்பை வில்லனாகத் தான் உள்ளார்.

வில்லனிடம் விஜய் கூறும் “சஸ்பென்ஸோட சாவு” என்று கூறுவதை ரொம்ப ரசித்தேன்.

பலரும் ஹாரிஸ் ஜெயராஜை பின்னணி இசைக்குக் காய்ச்சி இருந்தார்கள். அனைவரும் கூறும் அளவிற்கு பின்னணி இசை மோசமாக இல்லை, நன்றாகவே இருந்தது. பாடல்களும் நன்றாக இருந்தது.

ஹாரிஸிடம் உள்ள பிரச்சனையே தன் இசையையே, தோசையை திருப்பிப் போடுறது மாதிரி அனைத்துப் படங்களிலும் போடுவது தான்.

படத்தைக் கொஞ்சம் சென்டிமென்ட்டாக முடித்து இருந்தார்கள், அது போல இல்லாமல் கொஞ்சம் கலகலப்பாக முடித்து இருக்கலாமோ என்று தோன்றியது.

நான் என்ன நினைத்தேன் என்றால் சத்யனுக்கு சஸ்பென்ஸ் தாங்காது அதனால், விஜய் சத்யனிடம் ஏதாவது ஒன்றைக் கூறி அதற்குப் பதில் கூறாமல் கிளம்பிச் சென்று இருந்தால் சத்யன், அது என்னவாக இருக்கும்! என்று மண்டையை பிய்த்துக் கொள்வது போல வந்து இருந்து, கலகலப்பாக இருந்து இருக்குமோ என்று தோன்றியது!

இதுவரை துப்பாக்கி பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாகப் பார்க்கலாம், நிச்சயம் ஏமாற்றாது.

விஜய் சொல்கிற மாதிரி “வாழ்க்கை ஒரு வட்டம் இன்னைக்கு தோற்பவன் நாளைக்கு ஜெயிப்பான்” என்பது மாதிரி, ரொம்ப நாளாகப் பெரிய வெற்றிக்காகக் காத்திருந்து தற்போது துப்பாக்கி மூலம் கொடுத்து உள்ளார்.

Directed by A. R. Murugadoss
Produced by Kalaipuli S. Dhanu
Written by A. R. Murugadoss
Starring Vijay, Kajal Aggarwal, Jayaram, Vidyut Jamwal, Sathyan
Music by Harris Jayaraj
Cinematography Santosh Sivan
Editing by A. Sreekar Prasad
Studio Kalaipuli Films International
Distributed by Gemini Film Circuit, SVR Media (Andhra Pradesh)
Release date(s) 13 November 2012
Running time 165 minutes

Sleeper Cell என்றால் என்ன?

துப்பாக்கி படம் பற்றி பேசும் போது Sleeper Cell என்று கூறுவதைக் கேட்டு இருப்பீர்கள், பலர் படம் பார்த்தும் சிறிது குழப்பத்துடன் இருந்து இருக்கலாம்.

அது என்னவென்று சுருக்கமாகக் கூறுகிறேன்.

Sleeper Cell என்பது தீவிரவாதிகள் இளைஞர்களை (சமூக கோபம் அல்லது வெறுப்பில் உள்ளவர்கள்) மூளைச் சலவை செய்து, தீவிரவாத பயிற்சி கொடுத்து அனுப்பி விடுவார்கள்.

மக்களோடு மக்களாகக் கலந்து சாதாரண மக்களாக இருப்பார்கள்.

இவர்களுக்குக் கட்டளை கொடுப்பார்கள், இந்த இடத்தில் குண்டு வைக்க வேண்டும் / இவரைக் கொல்ல வேண்டும் என்று, கட்டளை வரும் அதை நிறைவேற்றுவார்கள்.

யார் கட்டளை கொடுக்கிறார்கள் என்பதும் இவர்களுக்குத் தெரியாது.

இவர்கள் மாட்டினாலும் யாரையும் காட்டிக்கொடுக்கவும் முடியாது காரணம், கட்டளை இடுவது யார் என்று இவர்களுக்கே தெரியாது.

இது போல இருக்கும் Sleeper Cell பற்றி மற்ற Sleeper Cell நபர்களுக்கும் தெரியாது.

இவர்களை உருவாக்கிய தலைகளைக் கொன்று விட்டால் அவர்களிடம் இருந்து எந்தக் கட்டளையும் வராமல் காலம் முழுக்க காத்திருக்க வேண்டியது தான்.

இல்லை என்றால் புது தீவிரவாதக் குழுவில் சேர வேண்டும்.

Read : வேட்டைக்காரன் பாடல்கள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

19 COMMENTS

 1. Giri

  Write about Bal thackeray people think that he has done something good to Maharashtrians.. I beg to differ on this…. b’cos the way he created the rift between south and North Indians… Hindu – Muslim and Biharis… that fellow if at all he was in TN Jaya would have booked him under Goondas long time..

  Kamesh

 2. விஜய் சொல்கிற மாதிரி “வாழ்க்கை ஒரு வட்டம் இன்னைக்கு தோற்பவன் நாளைக்கு ஜெயிப்பான்” என்பது மாதிரி, ரொம்ப நாளாக பெரிய வெற்றிக்காக காத்திருந்து தற்போது கொடுத்து இருக்கிறார்.

  எஸ்

  கிரி நேற்று படம் பார்த்து விட்டேன் எனக்கு பிடித்திருக்கிறது

 3. எல்லோரும் பார்க்கிற விதத்தில் படம் இருக்கிறது. அதற்கு காரனம் முருகதாஸ். மற்றபடி விஜய்தான் படத்தை தூக்கி நிதுகிறார் என்பதெல்லாம் வெறும் பேத்தல். ஓர் இராணுவ வீரணுக்கு உள்ள மிடுக்கு கூட இல்லை. வழக்கமான ‘சோதா’ ஹீரோவாக வருகிறார். உண்மையை நான் இப்படிச் சொல்வது சிலருக்கு வலிக்கும்.

 4. காஜல் ரசிகர்கள் மன்னிக்க குறிப்பாக ராஜேஷ் 🙂

  —————————————————————————–

  😀 😀 😛

 5. கிரி,

  எனக்கு படம் அவ்வளவா பிடிக்கல…but, its ten times better than matran……..I thought something is missing…….

  Rajesh V

 6. போக்கிரிக்குப் பிறகு அனைத்துப் பிரிவினரையும் கவர்ந்த படம் என்று “துப்பாக்கி”யை தாராளமாகக் கூறலாம். ***

  என்னங்க, காவலன்ல இருந்து இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்கிறீங்க (இருக்காங்க).. ஒவ்வொரு படத்துக்கு விமர்சன்ம் எழுதும்ம்போதும் ..

  * துப்பாக்கி வந்ததும் நண்பன் பெரிய் வெற்றியில்லைனு தெரியுது

  * நண்பன் வந்ததும் வேலாயுதம் (மிகப் பெரிய) வெற்றி இல்லைனு தெரிஞ்சது

  * வேலாயுதம் வந்ததும் காவலன் (பெரிய) வெற்றி இல்லைனு தெரிஞ்சது..

  :))))

 7. நான் ரொம்பவே ரசிச்சேன் தல இந்த படத்த…
  2 டைம் பாத்துட்டேன்..
  படம் நல்லா இருந்துச்சு ஒரு சினிமா ரசிகனா ரொம்பவே ரசிச்சேன் படத்தை
  விஜய், காஜல், வில்லன், சத்யன், ஹாரிஸ் மியூசிக் – எல்லாமே ரசிச்சு பாத்தேன்

  – அருண்

 8. கிரி .. நான் உங்கள் புதிய விசிறி .. இந்த தளத்தையும் பாவோரிட்ஸ்’ல சேத்துட்டேன் .. உங்கள் பழைய பதிவுகளையும் படித்தபின் இனி எல்லா பதிவையும் படிக்கச் சித்தம். உங்கள் நடை , காமெடி எல்லாம் தொடர்ந்து படிக்க வைக்கிறது.. தொடர்ந்து எழுதுங்கள்…வாழ்த்துக்கள் …

 9. அப்படி என்ன முஸ்லீம் பற்றி தப்பா சொல்லீட்டாங்கன்னு தெரியல காட்சி அமைப்புகள் அந்த எண்ணங்களை மனதில் விதைக்கவில்லை – இவர்கள் கண்டனம் தெரிவிக்கும் வரை. அப்படி கூப்பாடு போடுபவர்கள் அதே படத்தில் ஒரு முஸ்லீம் தன் மகனை ஆர்மீக்கு அனுப்புவார்.. இதை ஏன் பார்க்க தவறினார்கள் ? ஒருவேளை எழுத்து போடும்போது எழுந்து சென்றுவிட்டார்களா ?
  யப்பா இந்த கருத்துல ஏதும் உள் குத்து இல்ல போய் கம்ப்ளைன்ட் கிம்ப்லைன்ட் பண்ணிடாதீங்க மக்களே… :-))

 10. யோவ் கிரி…படம் பாட்டாசா இருக்கு…கில்லி மாதிரி…

 11. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @காமேஷ் அவர் பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது. தெரியாத விஷயத்தை எழுதுவதில்லை.

  @வருண்

  காவலன் சுமாரான படம் தான். வேலாயுதம் நல்ல வசூல் நண்பன் அதை விட நல்ல வசூல் தற்போது இவை அனைத்தையும் துப்பாக்கி மிஞ்சி விட்டது என்பதும் உண்மை தான். விஜய் Graph இந்த முறை ஏறுமுகம் 🙂

  @அருண் 🙂

  @தீபக் நன்றி 🙂

  @பாபு இனி இவன் அடங்க மாட்டானே! பேரரசு தான் எங்களை காப்பாத்தனும் 🙂

 12. வாழ்த்துக்கள் தல ஒரு புத்தகம் பரிசு வாங்கி இருக்கீங்க

  – அருண்

 13. Dear Giri,

  Came back to this section after a long time..

  Kaavalan – Kuch Kuch Hota Hai.. konjam mathi sonna mathiri enakku pattathu.. I did not watch the full film.. watched it in bits and pieces..
  Velayutham.. I have seen this movie in Telugu long time back.. Nagarjuna was acting in it Azad was the name of the movie.. appadiye scene by scene copy.. antha padam hittu veraya.. sarithaan.. antha Train Hand break pottu niruthuvaare.. athoda.. ellame ninnuruchu.. *( downloaded the film)
  Nanban… any day any time 3 idiots is best and not this film
  Thuppakki.. downloaded version again.. it was okay b’cos that fellow’s alapparai was not there.. illanna.. romba kashtam thaan… AR Murugadoss needed a hit badly may be things worked out well but for some loop holes I enjoyed the movie..
  Romba Rasichaa.. scene… Oru Mattere unna pudikkalennu sollittale scene.. ha ah ha
  May be his graph is erumugam.. this fellow will never change in his earlier films he used to sing praises on SS and used gain some popularity konjam hit aanathum.. ivanum ivanga appanum adra attam thaan romba kashtam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here