ஊருக்கு ஒரு வாரம் சென்று இருந்தேன். வழக்கம் போல ஒரு வாரம் ஒரு நாள் போல ஓடி விட்டது. நான் என்னுடைய 7 ம் வகுப்பில் இருந்து வெளியில் (ஹாஸ்டலில்) தான் இருக்கிறேன்.
குடும்பத்துடன் இருந்த நாட்களை விட வெளியே இருந்த நாட்களே அதிகம்.
பள்ளியில் படிக்கும் போதும், சென்னையில் இருந்த போதும், தற்போதும் சரி! ஊரில் இருந்து கிளம்பும் நாள் மிகக் கொடுமையான நாளாகவே இருக்கிறது.
எனக்கே இரண்டு பசங்க வந்துட்டானுக இருந்தும்… விடுமுறை முடிந்து அனைவரையும் பிரிந்து திரும்ப வந்து பணியில் மண்டை உடைக்க வேண்டும் என்று நினைக்கும் போதே செம்ம எரிச்சலாக இருக்கிறது.
ஆரம்பமே புலம்பலாக இருக்கே! ன்னு பார்க்கறீங்களா 🙂 .
சரி டாபிக்கை மாற்றுவோம்.
பொங்கல்
நான் பொங்கலுக்கு வராமல் அடுத்த வாரம் தான் வந்தேன் காரணம்.
பொங்கல் சமயத்தில் வந்தால் வீட்டில் அனைவரும் பிசியாக இருப்பார்கள், எனக்கும் சொந்தக்காரங்க வீட்டிற்க்கே செல்லவே நேரம் சரியாக இருக்கும் என்பதால் தள்ளி வந்தேன்.
நான் வரும் நேரத்தில் எங்கள் குல தெய்வம் கோவில் கும்பாபிஷேகம். இதில் இரண்டு நாட்கள் சென்று விட்டது.
கும்பாபிஷேகம் வழக்கம் போலத்தான் என்றாலும் அதில் ஒரு சிறப்பு இருக்கிறது.
கும்பாபிஷேகம் செய்வதற்கு என்றே சில ஐயர் குழுக்கள் இருப்பார்கள். “திருவிளையாடல்” படத்தில் “பாலையா” கூட ஒரு குழு வந்து இருக்குமே!
அது மாதிரித் தலைமை குருக்கள் உடன் ஒரு படையே வந்து இருந்தார்கள்.
இதுவும் வழக்கம் தான் ஆனால், நான் இது வரை பார்த்திராதது தலைமை குருக்கள் அங்கே மத்தளம் அடிப்பவரை அழைத்து என்னென்னமோ ராகம் எல்லாம் கூறி வாசிக்கக் கூறினார், அவரும் சளைக்காமல் அடித்தார்.
எனக்கு ராகம் பேர் மறந்து விட்டது, தெரிந்தாலும் நமக்கு என்ன புரியவா போகுது! சும்மா அடி பின்னி எடுத்தாரு.
இதன் பிறகு தான் மேட்டர்.. அடுத்தது குருக்களோட அசிஸ்டன்ட் ஒருத்தர் வந்தாரு.
எப்படியெப்படியோ எல்லாம் வளைத்து வளைத்து பாடினாரு (கேட்கவும் செமையாக இருந்தது) இதற்கு தகுந்த மாதிரி இவர் அடிக்க வேண்டும்.
மத்தளம் அடிப்பவருக்கே இது புது அனுபவமாக இருந்து இருக்க வேண்டும்.
அவர் பாடியதிற்கு சமமாக அடிப்பது சவாலாக இருந்தாலும் ஓரளவு சமாளித்து விட்டதை பாராட்டித்தான் ஆக வேண்டும்.
இவர்கள் எல்லாம் வழக்கமாக அடிக்கும் டொம் டொம் அடி தான் அடிப்பார்கள், இப்படி திடீர் என்று வேலைய வாங்கியதும் கொஞ்சம் திணறி விட்டார்.
நமக்கு எப்படி சாதா நெட்வொர்க் பார்த்துட்டு இருக்கும் போது பிரச்சனையே வராத நெட்வொர்க் சுவிட்ச் டவுன் ஆனா, ஒரு கலவரம் வருமே! அது மாதிரி 😉 .
டூ வீலர் டிரைவர்
ஐயர் பற்றி பேசியதும் என் நண்பனைப் பற்றி நினைவு வந்து விட்டது. கணேஷ் என்பது இவன் பெயர் எனக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பனாக இருக்கிறான்.
இவனை ஐயர் என்று தான் அழைப்பேன் [இதைப் படிக்கும் என் அலுவலக நண்பர்களுக்கு, நீங்கள் நினைக்கும் அதே ISD கணேஷ் / ஐயர் தான் 🙂 ].
நான் மட்டுமல்ல என் நண்பர்கள் அனைவரும்.
இவன் பெயரைத் திடீர் என்று கேட்டால் நினைவுக்கு வராத அளவிற்கு நிலைமை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நான் ஊருக்கு வரும் போது இவன் தான் எனக்கு டூ வீலர் டிரைவர் 🙂 தற்போது கார் வாங்கி விட்டதால் கார் ட்ரைவர் 🙂 பொதுவாக மதியம் சிங்கப்பூரிலிருந்து சென்னை வருவேன்.
நான், இரவு எங்கள் ஊர் கோபி செல்லும் வரை இவன் கூடத் தான் சுற்றிக்கொண்டு இருப்பேன், அப்படியே செல்லக்கூடிய அனைத்து நண்பர்கள் வீட்டுக்கும் சென்று விடுவேன்.
கொஞ்சம் கூட சலித்துக்கொள்ள மாட்டான்.
நான் குறுகிய நாட்களே வந்ததால் பலரை தொலைபேசியில் அழைக்க முடியவில்லை. மன்னித்தருள்க.
இவன் என்ன மொள்ளமாரித்தனம் செய்தாலும் கண்டு பிடித்து விடுவேன் அதனால், சந்திரமுகி படத்தில் வடிவேல், ரஜினிகிட்ட சொல்வாரே, வாய் விட்டும் சொல்ல முடியல! மனசுலையும் நினைக்க முடியல!! ஒரு மனுஷன் என்னதான்யா பண்ணுறது! என்று புலம்புவாரே அது மாதிரி தான் 🙂 .
டேய்! டகால்ட்டி எனக்கு தெரியும்டா என்றால், கெக்கே பிக்கே என்று சிரித்து எஸ்கேப் ஆகிடுவான். என்ன செய்தாலும் மாட்டிக்குவான்.
இவனைப் பற்றி எழுதினால் ஒரு பதிவே எழுதலாம்.
இவன் கூட ஒரு முறை சண்டை வந்து பின் நட்பாகி தற்போது இன்றுவரை நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா
என் அண்ணன் “கோவைக்குக் காரை சர்வீஸ் செய்ய விட வேண்டும் வா போகலாம்” என்று அழைத்தார். நான் கோபி வந்தால் ஒரு முறையாவது கோவை சென்று விடுவேன்.
காரில் சென்றால் அதிகபட்சம் 1.45 மணி நேரம் ஆகும்.
காலையில் ஜாலியாக கிளம்பி வழியில் டீ குடிக்க நிறுத்தி, பேசிக்கொண்டே விரைவிலேயே சென்று விட்டோம்.
காரை சர்வீஸ் க்கு கொடுத்து விட்டு “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தைச் சத்யம் Brook field மாலில் பார்த்தோம், திரையரங்கம் செமையாக இருக்கிறது.
தற்போது தான் முதல் முறையாக செல்கிறேன்.
பவர் ஸ்டார் வந்தவுடன் திரையரங்கில் ஏகத்துக்கும் கைதட்டல் 🙂 தற்போது பவர் ஸ்டார் ஒரு நாளைக்கு 3 லட்சம் கேட்கிறாராமே…! அப்படியா!! “ஐ” படம் வந்தால் ஐந்து லட்சமாம் 🙂 .
இந்த சந்தானம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் “இன்று போய் நாளை வா” படத்தின் கதையைத் திருடி விட்டுத் தான் சுயமாக யோசித்தது என்று கொளுத்தி போட்டு இருக்கிறார்.
பாக்கியராஜ்க்கு பணமும் தரவில்லை.
தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஆகக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் படத்திற்கு “ஸ்டே” வாங்காமல் இவர் இருந்தால், அதையே தங்களுக்கு சாதமாக எடுத்து இவருக்கு ஹல்வா கொடுத்து விட்டார்கள்.
இதுக்கு தாங்க நல்லவனா மட்டும் இருக்கவே கூடாது!
பாவம் புண்ணியம் பார்த்தால் நம்ம டவுசரை கழட்டிட்டு விட்டுடுவாங்க.
இணையம்
ஊருக்கு எப்போது சென்றாலும் இணையம் பக்கம் செல்ல மாட்டேன். இந்த முறையும் செல்லாததால் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
செய்தித்தாள் முகப்பில் வரும் செய்திகள் மட்டுமே நமக்குத் தெரியும்.
தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விவாதிக்கப்படும் கருத்துகள் எதுவும் பொதுமக்களைப் பாதிப்பதில்லை. தொலைக்காட்சி செய்திகளில் பார்த்து உச்சு கொட்டுவதோடு முடிந்து விடுகிறது.
இங்கே தான் நாம காரசாரமா விவாதித்துட்டு இருக்கிறோம்.
இணையத்தை பயன்படுத்தாதவர்கள் எந்தப் பரபரப்பும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இரு வேறு உலகம்.
இணைய பிரபலங்களே! நீங்கள் இணையத்தில் மட்டுமே ராஜா! வெளியில் வந்தால் கைபுள்ளை ரேஞ்சுக்கு தான் இருப்பீங்க 🙂
அப்போது தான் உங்க கையில் இருக்கும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் உங்க கண்ணுக்குத் தெரிய வரும் 🙂 அவ்வ்வ்வ்
சமர்
நான் சென்னை சத்யம் திரையரங்கில் “விஸ்வரூபம்” படம் பார்க்கலாம் என்று திட்டம் போட்டு வைத்து இருந்தேன், எல்லாமே வேட்டாகி விட்டது.
சத்யம் போலத் திரையரங்கம் சிங்கப்பூரில் கூடக் கிடையாது, இரு திரையரங்கங்கள் உள்ளது இருப்பினும் சத்யத்தில் கிடைக்கும் திருப்தி வரவில்லை.
சரி “விஸ்வரூபம்” தான் பார்க்க முடியவில்லை “சமர்” பார்க்கலாம் என்று இதற்கு போனோம்.
இதற்கு கூட்டம் இருக்காது என்று நினைத்தால் இந்தப்படம் ஹவுஸ்ஃபுல். முன்னாடி இருந்து மூன்றாவது வரிசை.
டென்னிஸ் மேட்ச் பார்க்கிற மாதிரி தலைய அப்படி இப்படி திருப்பிக்கிட்டு பார்த்தோம், ஆனாலும் ரொம்ப மோசமில்லை.
படம் திரைக்கதை இன்னும் கொஞ்சம் வேகமாக செய்து இருக்கலாம். எப்படியோ பல மொக்கை படங்களுக்கு இது எனக்கு ஆயிரம் மடங்கு பெட்டர் தான்.
இதன் கதை பலருக்கு பிடிக்காமல் போல வாய்ப்பிருக்கு.
ஜப்பான் / ஆங்கிலத்தில் இது போல படங்கள் வந்து இருந்தாலும் தமிழுக்கு இது புதியது தான்.
தண்ணீர்
எங்கள் கிராமத்தில் தண்ணீர் சிரமம் கடுமையாக உள்ளது. கிணற்றில் சுத்தமாக தண்ணீர் இல்லை எனவே, அனைவரும் போர் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
கோபியில் இந்தப் பிரச்சனை இல்லை.
விரைவில் மிக மோசமான தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது 1998 1999 வாக்கில் வந்ததைப் போல.
இந்த சமயத்தில் சென்னையில் இருந்தேன், தண்ணீர் கஷ்டம் என்றால் எப்படி இருக்கும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்த வருடம். மிகக்கொடுமை.
இதன் பிறகு தண்ணீரை வீண் செய்வதே இல்லை. இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பாக, என் அறையில் இருந்த ஒரு நண்பன் பல் தேய்க்க அரை பக்கெட் தண்ணியை காலி பண்ணினான்.
எங்கள் ஊரில் வரும் நாட்களில் மழை பெய்யவில்லை என்றால், எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று நினைத்தாலே ரொம்பக் கவலையாக இருக்கிறது.
பனி
எங்கள் கோபியில் கடுமையான பனியாக உள்ளது. அண்டார்டிகா போனால் கூட “தம்பி! ஃபேன் போடுறியான்னு” கேட்குற என் அம்மாவே ஃபேன் போடுறதில்லைனா பார்த்துக்குங்க 🙂 .
குளிர் காலம் என்பதால் யுவனுக்கு (இளையராஜா மகனில்லைங்க என்னோட மகன்) ஒரு நாளைக்கு 30 வாட்டி ஜட்டி மாற்றி விட வேண்டியதா இருக்கு 🙂 .
பேசாம டியூப் கனக்ட் செய்து வாய்க்கால்ல விட்டுடலாமான்னு யோசிக்கிறேன் 😀 .
என்ன சொல்றீங்க! ரொம்ப ஓவரா இருக்கோ!! 😉
விரல் சூப்புனா ஜீரணம் ஆகி நல்லா சாப்பிடுவான் என்று பெரியவங்க கூறியதால், விஸ்வரூபத்திற்கு அரை நாள் தடை விலக்கம் மாதிரி கொஞ்ச நாள் விரல் சூப்ப அனுமதித்து இருந்தோம்.
சொன்ன மாதிரியே இப்ப நல்லா சாப்பிடுறான், ஆளும் கொஞ்சம் தேறிட்டான்.
திரும்ப ஹை கோர்ட் பெஞ்ச் போட்ட மாதிரி தடை போட்டு, விரலை வாயில் இருந்து எடுத்தால், கத்தி ஊரையே கூட்டுறான்.
விரல் சூப்பி பல், உதடு அசிங்கமா போய் விட்டால் என்ன செய்வது என்று தற்போது விரலில் வேப்பில்லையை அரைத்து வைத்த பிறகு, சப்பி விட்டு வாயை அஷ்டகோணலாக்கி மலங்க மலங்க விழிக்கிறான் 🙂 பிம்பிளிக்கி பிளாக்கி.
வினய்
இருந்ததில் மூன்று நாட்கள் என் மகன் வினயை பள்ளியில் சென்று விட்டு வந்தேன். என் கூட வரும் போது ஆயிரம் கதை அடித்துட்டு வருவான்.
வகுப்பு வந்து அவங்க மேம் ஐ (இப்படித்தான் சொல்லனுமாம்) பார்த்ததும், இந்தப் பூனையும் பால் குடிக்குமா! என்கிற ரேஞ்சுக்கு அப்பாவி மாதிரி “குட்மார்னிங் மேம்” என்று கூறி விட்டு சட்டுன்னு மாறிடுவான்.
டேய்! நான் வந்து உன்னோட பக்கத்துல உட்கார்ந்துகிட்டா! என்று கேட்டால் கெக்கே பிக்கேன்னு சிரிப்பான்.
சிரிக்க ஏகப்பட்ட மேட்டர் சொன்னான்.. ஆனால், எனக்குத் தான் மறந்து விட்டது.
படம் பார்க்கும் போது திரைவிமர்சனம் எழுத நினைத்தால் படத்தில் ஒன்ற முடியாது.
அது மாதிரி நம்ம பையன் கிட்ட இருக்க முடியுமா! 🙂 .
இங்க எழுதி வைத்தால்..பெரிய பையனாகி படிக்கும் போது அட! நாம் இத்தனை டகால்டி வேலையெல்லாம் செய்து இருக்கோமா! என்று சிரிப்பான்.
எனக்குத் தான் அந்தக் கொடுப்பினை இல்லாமல் போய் விட்டது.
தவமிருந்து பெற்ற பிள்ளை என்பதால் என்னோட பாட்டி, நிழல் படம் எடுத்தால் ஆயுசு குறைந்து விடும் என்று என்னை நிழல் படமே எடுக்கவே அனுமதிக்கவில்லையாம்.
இதனால் மிகக் குறைவான சிறுவயது படங்களே உள்ளது.
குட்டில கழுதை கூட அழகாக இருக்கும் என்பார்கள், எனக்கு அதைக் காணவும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது!
வட போச்சே!! அந்தக் குட்டிக் கழுதையா என்னையத் தான் சொன்னேன்.
“சோட்டா பீம்” என்று “போகோ” தொலைக்காட்சியில் ஒரு கார்டூன் வருகிறது. அதுல அந்த பையன் லட்டு சாப்பிட்டா பலம் வருகிறதாம்.
இதனால், இவனும் லட்டு விரும்பிச் சாப்பிடுகிறானாம். நல்ல வேளை லட்டோட நிறுத்தினான்!!
விஸ்வரூபம்
என்னது “விஸ்வரூபம்” பற்றி ஒண்ணுமே சொல்லலையா…! படம் இன்னும் பார்க்கலைங்க, பார்த்துட்டு நானும் கருத்து கந்தசாமியாகிறேன் 🙂 .
என்னது… ஆணியே புடுங்க வேண்டாமா! ரைட்டு விடுங்க.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
ஹா ஹா ஹா. குட்டி பையனை ஏன் இப்படி கொடுமை படுத்தறீங்க கில்லாடி 🙂
சந்தோஷ நினைவுகள் ரசிக்க வைத்தது…
நிழல் படம் எடுத்தால் ஆயுசு குறைந்து விடும் என்று பலர் சொல்வதுண்டு… நம்பிக்கை அதிகம் இல்லா விட்டாலும் சில நிகழ்வுகள் உண்மை என்றே எண்ணத் தோன்றுகிறது…
ஈரோடு கடக்கும் போது கோபி சாலையை கண்டதும் உங்கள் நினைவு வந்தது.
உங்க பதிவ பார்த்த உடனே கீழ தான் ஸ்க்ரோல் பண்ணேன் நிச்சயம் கொசுறு விஸ்வரூபம் நு guess பண்ணேன்
பாத்துட்டு சொல்லுங்க தல படம் புடிச்சு இருக்கானு
பயண குறிப்புக்கள் homely யா இருக்கு
வினய் portion நல்லா இருக்கு
– அருண்
விஸ்வரூபம் (உங்க) விமர்ஷனதுக்காக waiting 🙂
Already 2 தடவ பார்த்துட்டேன் 🙂
ஊரில் இருந்து கிளம்பும் நாள் மிகக் கொடுமையான நாளாகவே இருக்கிறது. எனக்கே இரண்டு பசங்க வந்துட்டானுக இருந்தும்… விடுமுறை முடிந்து அனைவரையும் பிரிந்து திரும்ப வந்து பணியில் மண்டை உடைக்க வேண்டும் என்று நினைக்கும் போதே செம்ம எரிச்சலாக இருக்கிறது.
வாரா வாரம் ஞாயிறு ஊரிலிருந்து கிளம்பும் போது எனக்கு இதே பிரச்னை தான் சின்ன குழந்தை ஸ்கூல் செல்ல அடம் பிடிப்பது போல் சிணுங்கி கொண்டே கிளம்புவேன்
சென்னை சத்யம் திரையரங்கில் சரி “விஸ்வரூபம்” தான் பார்க்க முடியவில்லை “சமர்” பார்க்கலாம் என்று இதற்கு போனோம்.
என்ன கிரி சென்னை வந்துட்டு எனக்கு சொல்லவே இல்ல
நான் சிங்கப்பூர் வரும் போது ( ? ) உங்களுக்கு சொல்ல மாட்டேன் 🙂
//இருந்ததில் மூன்று நாட்கள் என் மகன் வினயை பள்ளியில் சென்று விட்டு வந்தேன். என் கூட வரும் போது ஆயிரம் கதை அடித்துட்டு வருவான். வகுப்பு வந்து அவங்க மேம் ஐ (இப்படித்தான் சொல்லனுமாம்) பார்த்ததும், இந்தப் பூனையும் பால் குடிக்குமா! என்கிற ரேஞ்சுக்கு அப்பாவி மாதிரி “குட்மார்னிங் மேம்” என்று கூறி விட்டு சட்டுன்னு மாறிடுவான். டேய்! நான் வந்து உன்னோட பக்கத்துல உட்கார்ந்துகிட்டா! என்று கேட்டால் கெக்கே பிக்கேன்னு சிரிப்பான். சிரிக்க ஏகப்பட்ட மேட்டர் சொன்னான்.. ஆனால், எனக்குத் தான் மறந்து விட்டது. படம் பார்க்கும் போது திரைவிமர்சனம் எழுத நினைத்தால் சில நேரங்களில் படத்தில் ஒன்ற முடியாது. அது மாதிரி நம்ம பையன் கிட்ட இருக்க முடியுமா! icon smile பயணக் குறிப்புகள் [31 01 2013] என்ன… இங்க எழுதி வைத்தால்..பெரிய பையனாகி படிக்கும் போது அட! நாம் இத்தனை டகால்டி வேலையெல்லாம் செய்து இருக்கோமா! என்று சிரிப்பான்..//
செகண்ட் டைம் நீங்க இத எழுதுறீங்க , டீச்சர் மேல உங்களுக்கு ஒரு கண்ணு இருக்குறது கன்பர்ம் ஆகிடுச்சி , உங்க மனைவிக்கிட சொல்லி வைக்கணும் , சிங்கப்பூர் படம் தடை பண்ணிட்டாங்க திருட்டு dvd ,online படம் பார்த்து விமர்சனம் எழுதுன பூரன் புடிச்சி மூச்சில விட்டுடுவோம் – கமல் ரசிகர்கள் .
த்ரிஷாவ பத்தி எதுவும் சொல்லலையே கிரி 🙁 🙁
ஹாய் கிரி ,
hope u seen roopam , will expect your opinion as a ரஜினி fan !!! இது தான் ட்விஸ்ட்
,
கிரி விஸ்வரூபம் பார்த்து அந்த பாதிப்பில் இர்ருந்து இன்னும் மீளவில்லை !!!!
என்ன சொன்னாலும் ஆப்பு மட்டும் உறுதி TN gov க்கு !!!!!
கிரி உங்கள்ளுக்கு இல்லை !!!!!!
அனைவரின் வருகைக்கும் கருத்திற்கு நன்றி
@விஜய் 🙂
@சங்கர் படங்கள் சூப்பர். பின்னர் வருகிறேன்
@அருண் & கௌரிஷங்கர் கிளம்பிட்டே இருக்கிறேன்
@சரவணன் கோவிச்சுக்காதீங்க.. ஒரு வாரம் தான் இருந்தேன்.. அதனால் நிறையப் பேரை அழைக்க முடியவில்லை.
@கமலக்கண்ணன் ஹா ஹா பாருங்க அப்ப நான் எவ்வளோ நல்ல்ல்ல்ல்வன்னு. பொய் சொல்றவங்களுக்கு தான் நினைவு அதிகம் இருக்கணும்னு சொல்வாங்க.. ஹி ஹி அந்த டீச்சர் மேல கண் இல்ல அவங்களப் பார்த்தால் தலைவர் சொல்ற மாதிரி கையெடுத்து கும்பிடுற மாதிரி இருக்காங்க. அதுக்காக படையப்பா சௌந்தர்யா மாதிரி இருக்காங்களான்னு கேட்காதீங்க.. 🙂
பவர் ஸ்டார் படமே DVD ல பார்க்க மாட்டேன்… 🙂 கமல் படம் வாய்ப்பே இல்லை. 3 மணிக்கு போறேன்.
@ராஜேஷ் எல்லோருக்கும் ஒரு கவலை என்றால் உங்களுக்கு இப்படி ஒரு கவலை 🙂 🙂
@பிரபு நான் இன்னும் பார்க்கலை.. இனி தான் செல்கிறேன் 🙂 பார்த்துட்டு சொல்றேன். எந்திரன் படத்திற்கு கூட இத்தனை பேர் என்னை கேட்கலை.. 15 பேருக்கு மேல கேட்டுட்டாங்க.. ஆப்போசிட் அட்ராக்ஸன் இருக்கத்தான் செய்யுது 🙂
@கமல் ரசிகர்கள் இரண்டாவது பாகம் வரும் வரைக்கும் மீள மாட்டீங்க போல இருக்கே 🙂
TN Govt நோ கமெண்ட்ஸ்
எனக்கு ஆப்பு நானா போய் உட்கார்ந்தால் தான் 😉
அருமையா இருக்கு கிரி … உங்க எழுத்து செமையான வளர்ச்சி வீட்ல சொல்லி திஷ்டி சுத்தி
போடசொல்லுங்க