தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியதுடன் மேற்கு வங்கத்தில் அரசுத் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் மறைமுகத் தடை விதிக்கப்பட்டு தி மதச்சார்பின்மை ஸ்டோரி கூறியுள்ளது. Image Credit
தடை
இந்துக்கடவுளையும், இந்து மதத்தையும் எவரும் விமர்சிக்கலாம் ஆனால், மற்ற மதங்களில் நடந்தால், உலகப்பிரச்சனையாகி விடும்.
இதுவரை எத்தனை திரைப்படங்களில் இந்து மதத்தை இழிவுபடுத்தியிருப்பார்கள்! இந்துக்கடவுளை என்னென்னவெல்லாம் கருத்துரிமை என்ற பெயரில் இழிவு செய்துகொண்டுள்ளார்கள்? ஆனால், என்ன நடந்துள்ளது?
PK படத்தில் சிவபெருமான் உட்படப் பலரை இழிவுபடுத்தியதால், வழக்கு தொடர்ந்த போது நீதிபதி கூறியது, If you don’t like, don’t watch.
இதைத்தான் இடது சாரிகள் சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்டு சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
தணிக்கை செய்த படத்தைத் தடுக்க முடியாது, நீதிமன்றமும் கூறி விட்டது என்று கருத்துரிமைக்காகப் போராடியவர்கள் தான் இன்று தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வேண்டும் என்கிறார்கள்.
ISIS
இதே நீதி மன்றம் என்ன கூறியது? ‘இப்படம் ISIS தீவிரவாதிகளைத் தான் விமர்சிக்கிறது. வழக்கு தொடுக்க வேண்டும் என்றால், அவர்கள் செய்யட்டும்‘ என்று.
லவ் ஜிகாத் நடந்து இருந்ததை நிரூபித்தால் 1 கோடி தருவதாகக் கேரளா முஸ்லீம் அமைப்பைச் சார்ந்த நபர் ஒருவர் அறிவித்தார்.
அனைவருக்கும் தெரியும் சில முஸ்லீம் இளைஞர்கள் கேரள இந்து மற்றும் கிறித்துவப் பெண்களைக் காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்து ISIS ல் சேர்த்து விட்டார்கள் என்று.
இதற்கு ஏராளமான செய்திகள், காணொளிகள் ஆதாரமாகப் பொதுவெளியிலேயே உள்ளது.
தி கேரளா ஸ்டோரி படத்தில் கூறப்பட்டுள்ள 32,000 என்ற எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் ஆனால், சம்பவங்கள் உண்மையே.
பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளமான பேர் தற்போது ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார்கள். இவர்கள் கூறுவதெல்லாம் பொய்யா?
பெண்ணைப் பெற்ற பெற்றோருக்குத் தான் தெரியும் அதன் வலி. இவ்வாறு சென்ற பெண்கள் சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகளில் தீவிரவாதிகளிடம் பாலியல் அடிமையாகச் சீரழிகிறார்கள்.
சுருக்கமாகக் கேட்கிறேன், உங்கள் குடும்ப பெண்கள் பாதிக்கப்பட்டாலும் இதே மாதிரி தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகப் பேசுவீர்களா?
நீதிமன்ற அனுமதியுள்ள போது ஏன் தடை?
இவர்களைப் பற்றிப் படம் எடுத்து விழிப்புணர்வை கொண்டு வருவதில் என்ன தவறு? தணிக்கை முடிந்து, உச்ச நீதிமன்றமும் அனுமதித்த பிறகே தானே வந்துள்ளது.
எங்கே போனது போராளிகளின் கருத்துரிமை.
தீவிரவாதத்துக்குத் துணை போகிறவர்களை, ஆள் சேர்ப்பவர்களைப் பற்றிப் படம் எடுத்தால், மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை?
தமிழக அரசு வெளிப்படையாகத் தடுக்க முடியாததால் திரையரங்குகளுக்கு மறைமுக மிரட்டல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அரசு, திரையுலகம் அனைத்துமே இவர்கள் கையில் தானே!
இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கூறிய காரணங்கள், கூட்டமில்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை.
கூட்டமில்லையா?! இரண்டே நாட்களில் அதுவும், சனிக்கிழமையே தெரிந்து விட்டதா? எப்படியொரு வடிகட்டிய பொய்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை, உண்மை தான் ஆனால், அதற்கு யார் பொறுப்பு?
யார் அதைச் சரி செய்ய வேண்டும்? பொறுப்பில் உள்ள முதல்வர், அவர் தான் சட்டம் ஒழுங்கு பார்க்கிறார். அப்படியென்றால், இது அவருடைய தோல்வி தானே!
என்ன நடக்குது தமிழ்நாட்டில் ?
தமிழகத்தில் எவன் வேண்டும் என்றாலும் இந்து மதத்தைக் கண்டபடி பேசுகிறான், புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் இல்லை.
தட்டி கேட்பவனையும், மத வெறியன் என்று கூறி, ஏன்டா கேட்குற சங்கி? என்று சொரணையற்ற இந்துக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
இந்நிலையில் தமிழ்நாடு உள்ளது.
ஒரு திரைப்படத்தை மிரட்டி வெளியிடாமல் செய்ய முடிகிறது. இதுவரை இந்துக்களை இழிவு செய்த ஒரு படத்துக்காவது இந்நிலைமை வந்துள்ளதா?
கிடுகு என்ற படம் திராவிடத்தை விமர்சிக்கிறது என்று அப்படத்தை திரையரங்கில் வரவிடாமல் செய்தார்கள். தயாரிப்பாளர் YouTube ல் வெளியிட்டார்.
‘இதுவொரு மதசார்பற்ற நாடா? தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை அனுமதிக்கக் கூடாது‘ என்று கூறுகிறார் ஒருவர்.
மதச்சார்பற்ற நாடு என்பது இளிச்சவாய இந்துக்களுக்கு மட்டும் தானா!
தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி என்று திமுக, கிறித்துவ, முஸ்லீம் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இத்திமுக கூட்டணியின் பெயர் மதச்சார்பற்ற கூட்டணி.
இதை நம்பனும், இல்லைனா பாஜக உள்ளே வந்துடும்.
சமூகதள விமர்சனங்கள்
பூதம் என்ற புனைப்பெயரில் ட்விட்டரில் எதோ புத்தகத்தில் இருந்தது என்று கூறி இந்து மதத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்திப் போடுறான்.
உங்களால என்ன செய்ய முடியும்னு கேட்கிறான்?
ஏன்?
இதற்கு முன்னால் ப்ரூட்டஸ்ன்னு ஒருத்தன், இதே போலப் புத்தகத்தில் இருந்ததுன்னு இழிவுபடுத்தினான். புகார் அளித்தால், விடியா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தத் தைரியம் தான் அடுத்தவனை இப்படி வெளியிட வைக்கிறது. அன்றே கைது செய்து முட்டியை பெயர்த்து இருந்தால், இன்று இவன் அதே போலப் போடுவானா?
யார் கொடுக்கும் தைரியம்? இந்து விரோத அரசு கொடுக்கும் தைரியம்.
அப்படின்னா ஒரு புத்தகத்தில் இருந்தது என்று எதையும் பேசலாமா? இன்னொரு மதத்தை விமர்சித்து எழுதிய ஒரு புத்தகத்தை வைத்து விமர்சித்து, கேட்டால் அதில் இருந்ததைத் தான் கேட்டேன் என்று கூறலாமா?!
நுபுர் ஷர்மா
வடமாநிலத்தில் குர்ஆனில் இருந்ததைக் கூறிய நுபுர் ஷர்மாக்கு இன்று வரை கொலை மிரட்டல் வந்துகொண்டுள்ளது.
நுபுர் ஷர்மாக்கு ஆதரவு தெரிவித்த இருவரை வெட்டிக் கொலை செய்து விட்டார்கள்.
புத்தகத்தில் இருந்ததைத் தானே படித்தார் என்று ஏன் விடவில்லை? அப்படின்னா இவர்களுக்கு வந்தால் ரத்தம் இந்துக்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
ரஞ்சித்
விழாவில் ரஞ்சித் உதவி இயக்குநர் ஒருத்தன் மக்கள் வணங்கும் கடவுள் ராமன், லஷ்மன், அனுமனை இழிவு படுத்திப் பேசுகிறான்.
மலக்குழி அடைப்புக்குக் கவிதை எழுதி, ராமரை சாராயத்தை குடித்துட்டு குழிக்குள் குதித்தான், லக்ஷ்மன் & அனுமன் துண்டு பீடியை இழுத்தானுக என்று படிக்கிறான்.
மலக்குழி சாவைத் தடுக்க இனி இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இனி ஒரு சாவே இருக்காது என்று இயந்திரத்தை வைத்து ஃபோட்டோ ஷூட் வடை சுட்ட திராவிட மாடல் அரசைக் கேள்வி கேட்காமல், கடவுளை விமர்சித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
வேங்கை வயலில் தண்ணீர் தொட்டிக்குள் மலத்தை கலந்தவர்களை இதுவரை கண்டு பிடிக்காததை கேட்க வக்கு இல்லை, போராட்டம் நடத்த துப்பு இல்லை ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததுக்கு சென்று விட்டார்கள்.
ராஜராஜ சோழன் வரை வம்புக்கு இழுக்கும் ரஞ்சித்துக்கு சமகாலத்தில் நடந்த வேங்கை வயல் சம்பவம் எந்தக் கோபத்தையும் ஏற்படுத்தவில்லையா? ஆட்சியாளர்களைத் தொடர் கேள்வி கேட்கத் தோன்றவில்லையா?
கோவிலுக்குள் பட்டியலின சிறுவனை விட மறுத்து ஆபாசமாகப் பேசிய திமுக நபரை ஏன் கேள்வி கேட்கவில்லை? இதற்கு ஏன் கோபம் வரவில்லை?
தொடை நடுங்கிகள்
திரைப்படங்களில் சமூகநீதியை முழங்குவது ஆனால், எதார்த்தத்தில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கேள்விகள் கேட்பது.
திமுக ஆட்சியின் கடந்த இரண்டு வருடங்களில் தான் ஏராளமாக சமூகநீதிக்கு எதிராக செயல்கள் நடைபெற்றன ஆனால், இதுபோல் மேடைகளில் பேசுபவர்கள் வாயைத் திறக்கவே இல்லை.
ராமர் காலத்தில் நடந்த சம்பவத்தைக் கேள்வி கேட்கத் தோன்றுபவர்களுக்கு கண் முன்னே சமகாலத்தில் நடப்பதைக் கேட்க ஏன் தோன்றவில்லை?!
இல்லாத ராமரையும், ராஜ ராஜ சோழனையும் தைரியமாக கேள்வி கேட்டு விமர்சிக்க முடியும் ஆனால், சமகாலத்தில் ஆட்சியில், பொறுப்பில் இருப்பவர்களைக் கேள்வி கேட்க முடியாத தொடை நடுங்கிகள்.
எதற்கு இந்த வெட்டி முற்போக்கு அடையாளம்?
பகுத்தறிவு வேலை செய்யாதா?!
தருமபுரி MP செந்தில், பகுத்தறிவு என்ற பெயரில் இதிகாசங்களையும், ராமர், கிருஷ்ணரையும் விமர்சிக்கிறார். இதே பகுத்தறிவை மற்ற மதங்களில் காட்ட இவருக்கு தைரியம் உள்ளதா?!
ஐந்து நபர்கள் ஒரு பெண்ணை மனைவியாக வைத்துக்கொண்டு இருந்தார்கள் என்று மகாபாரதத்தை விமர்சிக்கிறார். பகுத்தறிவு பேச வேற எதுவுமே கிடைக்கவில்லையா?!
இவர் கட்சி தலைவர் கலைஞர் என்ன செய்தார் என்று இவருக்கு தெரியாதா? இவர் பகுத்தறிவு தலைவர் பெரியார் செய்தது தவறாகத் தோன்றவில்லையா?
இதற்கெல்லாம் பகுத்தறிவு வேலை செய்யாதா?!
இவ்வாறு பேசுபவர்கள் அனைவரையும் கவனித்துப் பாருங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களையே எடுத்துக்காட்டாக கூற முடிகிறது.
சமகாலத்தில் நடக்கும் எதையும் கூற தைரியமில்லை. இவர்கள் எல்லாம் சமூக நீதியையும், பகுத்தறிவையும் பேசுகிறார்கள்.
தற்போது பட்டியலின மக்களுக்கு எதிராக நடப்பதை பற்றிப் பேசுங்கள் என்றால், ராமனையும், ராஜ ராஜ சோழனையும் பேசிட்டு இருக்காங்க.
ராமனை பற்றி எழுதிய கவிதை மாதிரி ஸ்டாலினுக்கு ஒன்று எழுதிப் பேசி இருந்தால் தெரியும், சமூக நீதியும், கருத்துரிமையும் என்னவென்று.
ஏன் பேசுவதில்லை?
மேற்குறிப்பிட்ட அனைவருமே சொல்லி வைத்தது போல ஒரே மாதிரி விமர்சனங்களைப் பேசியிருக்கிறார்கள், இழிவுபடுத்தியுள்ளார்கள்.
இவர்கள் போராட்டங்களின், விமர்சனங்களின் உள்நோக்கம் என்ன?
இப்படி ஆளாளுக்குப் பேசக்காரணம் இந்து விரோத அரசின் முழுமையான மறைமுக, வெளிப்படையான ஆதரவு இருப்பதால் தான். மேற்கூறியதை மற்ற மதத்தின் கடவுளோடு பேசி உயிருடன் நடமாடி விட முடியுமா?
இந்தப் பிரச்சனைகளில் மற்ற மதத்தினரை எப்போதும் குறையே கூற மாட்டேன். ஏனென்றால், சரியோ தவறோ அவர்கள் மதத்துக்கு ஆதரவு தருகிறார்கள், தர வைக்கிறார்கள்.
ஆனால், இந்து மதத்தில்?!
திராவிடன் ஸ்டாக், திராவிட மாடல், பணம் கொடுத்தார்கள் என்று ஏமாற்றினாலும் அவர்களுக்கே வாக்களிப்பார்கள்.
புறக்கணிக்கக் காரணம் என்ன?
எப்படி அசிங்கப்படுத்தினாலும் இந்தப் பைத்தியகாரனுக நமக்குத்தான் வாக்களிப்பானுக என்ற தைரியமே திமுக அரசு இந்துக்களைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கக் காரணம்.
இந்துக்களைத் தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டாம் ஆனால் தவறு யார் செய்தாலும் நடவடிக்கை எடுங்கள்.
உலகில் எங்குமே பெரும்பான்மை சமூகத்துக்கு இது போன்ற அவலநிலை இருக்காது.
எந்த மதத்தை யார் இழிவுபடுத்தினாலும் பாரபட்சமின்றிக் கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்பதே கருத்து ஆனால், இதெல்லாம் நடக்காது.
காரணம், அவர்களுக்குத் தேவை இந்துக்களின் வாக்குகள் மட்டுமே! அதை வைத்து இந்துக்களுக்கே ஆப்பு வைக்கத் தெரியும்.
பாஜக பிடிக்கலைன்னா வேற கட்சிக்கு, சுயேட்சைக்குப் வாக்களி!
துப்புனது போதாது
உலகத்திலேயே தன்னைக் கேவலப்படுத்துவனுக்கு இன்னும் நல்லா காறித்துப்பு என்று வாக்களிப்பவர்களும் உள்ளதை தமிழகம் வந்தால் தெரிந்து கொள்ளலாம்.
எந்த உயிரினமும் தன்னை அவமானப்படுத்தினால் கொஞ்சமாவது எதிர்ப்பைக் காட்டும் ஆனால், வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லாத உயிரினம் என்றால் தமிழக இந்துக்களாகத்தான் இருப்பார்கள்.
அவரவர் வீட்டுல நடக்கும், அப்போது தான் இதன் வலியெல்லாம் புரியும். அதுவரை செக்குலர் கோஷம் போட்டுட்டு இருங்க.
நல்லவரா இருங்க ஆனால், ரொம்ப நல்லவரா இருக்காதீங்க.
முருகன் என் பாட்டன் என்று சீமான் வாயில் வடை சுடுவார் ஆனால், இந்துக்களுக்கு பிரச்சனை வந்தபோது இதுபோல ஒரு போராட்டமாவது நடத்தியிருப்பாரா?
தமிழக அரசியலின், போராளிகளின் மதச்சார்பின்மை என்பது ஒரு கண்ணில் வெண்ணை ஒரு கண்ணில் சுண்ணாம்பு.
இது தான் தமிழக அரசியலின் தி மதச்சார்பின்மை ஸ்டோரி.
மதத்தின் மீது மரியாதை இருந்து, பின்னர் பற்றாகி, அது இனி வெறியாக மாறும் வரை விட மாட்டார்கள் இந்தப் போலி போராளிகள்.
சங்கிகள் உருவாவதில்லை, திக, திமுக, காங், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளால் அவமானப்படுத்தப்பட்டு உருவாக்கப்படுகிறார்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
மதச்சார்பின்மை பற்றியெல்லாம் ஸ்டாலின் பேசலாமா?
இந்து மதத்துக்கு யாரால் ஆபத்து?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி இந்து மதத்தை எந்த முஸ்லிம் விமர்சித்து படம் எடுத்தார். அப்படி விமர்சித்து படம் எடுத்தால் நீங்கள் தாராளமாக கட்டுரை எழுதலாம். தடை கோரி வழக்கு போடலாம். ஆர்ப்பாட்டம் பண்ணலாம். இஸ்லாம் மதத்தை பற்றி குறை சொல்லி படம் எடுக்க நாங்களா சொன்னோம்.
மற்ற மதத் தவறுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?
கருத்து சுதந்திரம் மோடி BBC வீடியோ வீடியோவுக்கு இல்லையா?
அதை ஏன் ஏன் தடை செய்தீர்கள் உண்மை வெளிவந்தது என்று பயமா?
ஏன் தேர்தல் நெருங்கும் போது முஸ்லிம்களை கெட்டவர்கள் என்று காட்டுகிறீர்கள்? தோல்வி பயமா?
ஆட்சியின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க வேண்டியது தானே?
முஸ்லிமாக பிறந்ததுக்கு நீங்கள் எங்களுக்கு மிகப்பெரிய தண்டனை கொடுக்குறீர்கள். பரவாயில்ல.
உலகில் மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் இஸ்லாம் மிகவும் வேகமாக வளர்கின்றது. இனியும் வளரும். இஸ்லாத்துக்கு இல்லாத எதிர்ப்பா?
நீங்கள் எங்களுக்கு அநியாயம் செய்து இன்பம் அடைகிறீர்கள்.
பரவாயில்லை. இறைவன் எங்களோடு இருக்கின்றான்
நல்ல இந்துக்கள் நற்பாக இருக்கிறார்கள். அது போதும்.
இறைவன் சமூகத்தில் அநியாயம் செய்தவர்கள் தப்பிக்க மாட்டார்கள்.
கர்மா வைப்பற்றி சொல்வீர்கள். அது அநியாயத்தை ஆதரிக்கும் உங்களுக்கும் மோடி and Co இற்கும் வெகு விரைவில் வரும். Wait and see
@Fahim
இக்கட்டுரையை முழுதாகப் படித்தீர்களா?
இக்கட்டுரை முழுக்க இந்துக்களையும், தமிழக அரசியல்வாதிகளையும், போலி போராளிகளையும் தான் திட்டியுள்ளேன்.
நான் முஸ்லிம்கள் பற்றிக் குறிப்பிட்டது தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மட்டுமே.
அதையும், இந்து மற்றும் கிறித்துவ பெண்களைக் காதலிப்பதாக நடித்து ஏமாற்றி திருமணம் செய்து ISIS ல் சேர்த்து விட்டவர்களைத்தான்.
இவர்கள் செய்தது உண்மை தானே! இதைக் கூறுவதில் என்ன தவறு? இந்த மாதிரி சம்பவமே நடக்கவில்லை என்று கூறுகிறீர்களா?
இது எப்படி முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுவதாகும்?
சொல்லப்போனால் கட்டுரையில் பின்வருவனவற்றை குறிப்பிட்டுள்ளேன்.
“இந்தப் பிரச்சனைகளில் மற்ற மதத்தினரை எப்போதும் குறையே கூற மாட்டேன். ஏனென்றால், சரியோ தவறோ அவர்கள் மதத்துக்கு ஆதரவு தருகிறார்கள், தர வைக்கிறார்கள்.”
எனக்கு நீங்க எதைக்கூறுகிறீர்கள் என்று புரியலை.
எந்த வரியில் நான் கூறியது தவறு என்பதை குறிப்பிட்டுக் கூறினால், அதை என்னால் தெளிவு படுத்த முடியும்.
என்னவென்றே தெரியாமல் பொதுப்படையான கருத்தைக் கூறினால், எதைச் சொல்கிறீர்கள் என்று எப்படி புரிந்து கொள்வது?
முஸ்லிம்கள் யாரும் இந்து மதத்தை குறை கூறி படம் எடுக்க இல்லை. அப்போது ஏன் நீங்கள் மட்டும்?
ISIS இல் இந்துக்கள் கிறித்தவர்கள் மட்டுமல்ல முஸ்லிம்களும் சேரக்கூடாது. ஏனெனில் அவர்கள் முஸ்லிம்களே அல்ல.
உலகில் எந்த முஸ்லிம் நாடும் அவர்களை அங்கீகரிக்க இல்லை.
உண்மையில் நீங்கள் சொல்வது நடந்து இருந்தால் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கலாம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
முழு முஸ்லிம் சமூகத்தை ஏன் குற்றவாளிகளை போன்று நடத்துகிறீர்கள்?
மாணவர்கள் மாணவிகள் நற்பாக இருப்பார்களா?
முஸ்லிம்களை சந்தேகப்பட மாட்டார்களா?
யாரோ செய்த தவறுக்கு முழு முஸ்லிம் சமூகமும் தண்டனை அனுபவிக்க வேண்டுமா?
சொல்லுங்க நன்பரே?
நீங்கள் முஸ்லிமாக பிறந்து இருந்தால் இந்த அநியாயங்களை ஏற்றுக் கொள்வீர்களா?
அல்லது ஒரு முஸ்லிம் நாட்டில் சில இந்துக்கள் செய்யும் தவறுகளை முழு இந்துக்கள் மீது பழி சுமத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா?
சொல்லுங்க நன்பரே
தமிழ்நாடு மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களை பிரிக்க வேண்டும் அப்போது தான் எங்களால் அரசியல் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள் ஒரு கூட்டம்.
அவர்கள் சேர்ந்து இருந்தால் நாங்கள் அரசியல் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள் ஒரு கூட்டம்.
2 கூட்டமும் சுயநலம் தான்.
எதில் நாட்டுக்கு நன்மை?
நீங்களே முடிவு செய்யுங்கள்.
நன்றி
முஸ்லிம்கள் யாரும் இந்து மதத்தை குறை கூறி படம் எடுக்க இல்லை. அப்போது ஏன் நீங்கள் மட்டும்? – PK film by amir khan
“இந்தப் பிரச்சனைகளில் மற்ற மதத்தினரை எப்போதும் குறையே கூற மாட்டேன். ஏனென்றால், சரியோ தவறோ அவர்கள் மதத்துக்கு ஆதரவு தருகிறார்கள், தர வைக்கிறார்கள்.”
இந்துக்கள் சரியாக இருந்தால் ஆதரவு கொடுங்கள். தவறுகளை கண்டியுங்கள். அது போதும்
முஸ்லிம்கள் தவறு செய்தால் முஸ்லிம்கள் கண்டிப்பார்கள்.
unmai vilambi
Amir khan
உண்மை முஸ்லிமா ?
அவரது மனைவி பிள்ளைகளை பார்த்து இருக்குறீர்களா?
அவர்களது ஆடை முஸ்லிம்கள் அணியும் ஆடை போன்றா இருக்கிறது?
உண்மையில் எனக்கு Amir khan மக்காவுக்கு செல்லும் புகைப்படம் பார்த்த பிறகு தான் அவர் முஸ்லிம் என்று தெரிந்தது.
PK ஐ யார் ஆதரித்தது? யார் வசூல் சாதனை செய்ய வைத்தது?
முஸ்லிம்களா?
@Fahim
“முஸ்லிம்கள் யாரும் இந்து மதத்தை குறை கூறி படம் எடுக்க இல்லை. அப்போது ஏன் நீங்கள் மட்டும்?”
கட்டுரையில் கூறிய விமர்சனத்துக்குள்ளான PK படமே அமீர் நடித்தது தானே!
உங்கள் பிரச்சனையைக் கூற உலக ஊடகங்கள் NYT, BBC, Guardian, Bloomberg, Washingtonpost, Al jazeera, உள்ளூர் ஊடகங்கள் சன் டிவி, கலைஞர் டிவி, புதியதலைமுறை, தந்தி, நியூஸ் 7, நியூஸ் 18 உள்ளன.
இது போதாது என்று fact checkers இருக்காங்க. இவர்கள் நினைத்தால் ஒரு பிரச்சனையை உலகம் முழுக்க கொண்டுசெல்லும் திறன் பெற்றவர்கள்.
எங்க பிரச்சனையை கூற தமிழ்நாட்டில் தினமலர் மட்டும் இருக்கு, வட மாநிலத்தில் யார் என்று தெரியலை.
திரைப்படங்களின் மூலமாவது நடப்பவற்றை கொண்டு செல்லலாம் என்றால், அதையும் தடை செய்யுறாங்க.
எங்க பிரச்சனைகளை யார் கூறுவது? அதற்குத்தான் இத்திரைப்படங்கள்.
“உலகில் எந்த முஸ்லிம் நாடும் அவர்களை அங்கீகரிக்க இல்லை. உண்மையில் நீங்கள் சொல்வது நடந்து இருந்தால் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கலாம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.”
அப்புறம் ஏன் அவர்களுக்காக போராடுகிறீர்கள்? இப்படம் அவர்களுக்கு ஆட்களைத் திரட்டுபவர்களை பற்றித்தானே!
“முழு முஸ்லிம் சமூகத்தை ஏன் குற்றவாளிகளை போன்று நடத்துகிறீர்கள்?”
முஸ்லீம் சமூகத்தை அல்ல ISIS தீவிரவாதிகளை மற்றும் அவர்களுக்கு உதவுபவர்களை.
“மாணவர்கள் மாணவிகள் நற்பாக இருப்பார்களா? முஸ்லிம்களை சந்தேகப்பட மாட்டார்களா? யாரோ செய்த தவறுக்கு முழு முஸ்லிம் சமூகமும் தண்டனை அனுபவிக்க வேண்டுமா?”
நியாயமான கேள்வி.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? ஜமாத்தில் உள்ளவர்கள் இது போன்று நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைத் தடுத்து, அவர்களைக் காவல்துறையிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும்.
இவர்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது. முஸ்லீம் என்பதாலையே ஆதரித்தால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் சந்தித்து தானே ஆக வேண்டும்.
எனவே, இதற்கான தீர்வு உங்களிடமே உள்ளது.
“நீங்கள் முஸ்லிமாக பிறந்து இருந்தால் இந்த அநியாயங்களை ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது ஒரு முஸ்லிம் நாட்டில் சில இந்துக்கள் செய்யும் தவறுகளை முழு இந்துக்கள் மீது பழி சுமத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா?”
இது போன்ற மோசமான காரியத்தை எந்த இந்து செய்தாலும் உறுதியாகக் கண்டிப்பேன், இதுபோல ஆதரிக்க மாட்டேன். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று பெரும்பான்மை சமூகத்தை கேட்க மாட்டேன்.
தவறு யார் செய்தாலும் தவறே!
உங்களுக்கு ஒரு கூடுதல் தகவல்.
உபியில் 100 வழக்குகளுக்கு மேல் உள்ள, ஏராளமான கொலைகளைச் செய்த, பலரின் நிலத்தை அபகரித்த, பல முஸ்லீம் பெண்கள் / குழந்தைகள் (மதரஸாவிலிருந்து தூக்கிச்சென்று) உட்பட பலரை வன்புணர்வு செய்த அடிக் முகம்மது என்கவுன்டர் செய்யப்பட்ட போது முஸ்லிம்கள் அதை எதிர்த்து ஊர்வலம் சென்றார்கள்.
அவருக்காக ஐநா வரை சென்று (ராணா அயூப்) Law Maker யைக்கொன்று விட்டார்கள் என்று கூறினார்.
ஆனால், இதே போல நடந்து கொண்ட இரண்டு இந்து கேங்ஸ்டர்களை (ஒருத்தர் பெயர் எதோ துபே இன்னொருவர் பெயர் நினைவில்லை) என்கவுண்டர் செய்த போது இந்துக்கள் யாருமே இதை எதிர்த்து எதையும் கூறவில்லை.
இவ்வளவு தான் வித்யாசம்.
இது போன்று தன் மதத்தைச் சார்ந்தவர் என்பதாலையே அவர் என்ன குற்றம் செய்தாலும் ஆதரிப்பதே மற்றவர்கள் இஸ்லாம் மதத்தைத் தவறாக நினைக்கக் காரணம்.
எனவே, இதற்கு முஸ்லிம்கள் தான் மாறனுமே தவிர, மற்றவர்களைக் குறை கூறுவது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது போல.
“தமிழ்நாடு மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களை பிரிக்க வேண்டும் அப்போது தான் எங்களால் அரசியல் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள் ஒரு கூட்டம்.”
அந்தக்கூட்டம் வேறுயாருமில்லை, இக்கட்டுரையின் இறுதியில் கூறிய அரசியல் கட்சிகள்.
இவர்கள் உங்கள் வாக்குக்காக ஒருதலைப்பட்சமாக செயல்படும் போது நாங்கள் எங்களைக் காக்க பாஜக பக்கம் போக வேண்டியதாகி விட்டது.
“முஸ்லிம்கள் தவறு செய்தால் முஸ்லிம்கள் கண்டிப்பார்கள்.”
கண்டிக்கவில்லையே! அது தானே பிரச்சனை.
அதற்கு பதிலாக அவர்களுக்கு ஆதரவாக படத்தை தடை செய்யப் போராட்டம் நடத்துகிறார்களே!
கிரி Amir khan, Sharuk Khan, Salman khan
எல்லோருக்கும் பொருந்தும் அவர்கள் உண்மை முஸ்லிம்களா ? முஸ்லிம் பெயர் தாங்கிகளா?
PK ஐ நீங்கள் ஆதரவு கொடுத்து வசூல் சாதனை செய்ய வைக்கும் போது நாங்கள் எப்படி எதிர்ப்பது?
Aljazeera மட்டும் தான் முஸ்லிம்கள் பிரச்சினைகளை பேசும். BBC, Washington post முஸ்லிம்கள் சார்பாக பேசுவது இப்போது தான் இருக்கும். சரியாக தெரியாது. முன்பு BBC, Washington post முஸ்லிம்களுக்கு எதிராக தான் பேசியது. இது உண்மை.
அடிக் அஹ்மத் என்கவுண்டர் செய்யப்பட்டாரா? புதிய கதை விடுறீங்க? அது படுகொலை. போலீசார் சுட்டாங்களா? கொலைகாரர்கள் சுட்டு விட்டு ஜெய் ஸ்ரீராம் சொல்கிறார்கள். கொலைகாரர்கள் மீது இது வரை எந்த நடவடிக்கை எடுத்தார்கள்? சொல்லுங்க? சட்டத்தை கையில் எடுக்க யார் தைரியம் கொடுத்தது?
சட்டத்தை கையில் எடுத்து யாருக்கும் யாரையும் கொல்லலாம் என்கிறீர்கள்.
உங்கள் பார்வையில் அது என்கவுண்டர் 😂.
ஒரு குற்றவாளியை விசாரணை நடத்தி தண்டனை வழங்குவதற்கு தான் நீதிமன்றம். நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டு போகும் போது தான் அவர் கொலை செய்யப்பட்டார். ஏன் அவசரம்? குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் தண்டனை கொடுத்து இருக்குமே?
முஸ்லிம் என்பதற்காக படுகொலை செய்யப்பட்டார். அது என்கவுண்டர் அல்ல. அதற்காக முஸ்லிம்கள் போராடியது சரி. ஏனெனில் நாளைக்கு யாரை வேண்டுமானாலும் யாரும் படுகொலை செய்யலாம் என்றாகி விடும்.
நீங்கள் சொன்ன 2 கேங்ஸ்டர்களை encounter செய்தது போலீசாரா அல்லது ஜெய் ஸ்ரீராம் சொல்லும் கொலைகாரர்களா? எனக்கு தெரியாது.
இப்போது சொல்லுங்கள். முஸ்லிம்கள் அதிக் அஹ்மத் ஐ ஆதரித்தார்கள? அல்லது சட்ட விரோதமான படுகொலையை எதிர்த்தார்களா?
அநீதிக்கு எதிராக நாங்கள் போராடாமல் இருக்க வேண்டுமா?
அது வா நீங்கள் எதிர்ப்பார்க்கும் மாற்றம்? Sorry. அநீதிக்கு எதிராக நாங்கள் போராடுவோம்.
அநீதிக்கு எதிராக நாங்கள் போராடும் போதே இந்த நசுக்கு நசுக்குறீங்களே போராடாமல் இருந்தால்?
உங்கள் முடிவுக்கு விட்டு விட்டேன்.
பசு பாதுகாப்பு பசு பாதுகாப்பு என்று சொல்லி பல அப்பாவி இளைஞர்களை கொலை செய்து விட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து உலகில் no 1 மாட்டிறைச்சி ஏற்றுமதி நாடாக மாற்றிய பாஜக ஐ யா நம்புறீங்க?
ISIS ஆதரவாளர்கள் இருந்தால் ஆதாரங்களுடன் கைது செய்யுங்கள். குற்றத்தை நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுங்கள்.
முழு முஸ்லிம் சமூகத்தை குற்றவாளியாக்காதீர்கள்.
இத்தா , புர்கா எங்கள் பெண்களுக்கே பிரச்சினை இல்லை. நீங்கள் ஏன் கவலைப் படுகிறீர்கள்.
PK ஐ நீங்கள் ஏன் boycott பண்ண இல்லை. சிரித்து ரசித்து வசூல் சாதனை செய்ய வைத்தது நீங்கள் தானே?
இப்போது பழியை எங்கள் மீது போடுகிறீர்கள். நியாயமான கிரி
@Fahim
“கிரி Amir khan, Sharuk Khan, Salman khan எல்லோருக்கும் பொருந்தும் அவர்கள் உண்மை முஸ்லிம்களா ? முஸ்லிம் பெயர் தாங்கிகளா?”
அப்படிப்பார்த்தால், இந்துக்களிலும் இது போல பலர் உள்ளார்கள். அதற்காக அவர்கள் முஸ்லீம் மதத்தை விமர்சித்தால், அவர்கள் இந்து இல்லை என்று விட்டு விடுவீர்களா?
“PK ஐ நீங்கள் ஆதரவு கொடுத்து வசூல் சாதனை செய்ய வைக்கும் போது நாங்கள் எப்படி எதிர்ப்பது?”
இந்து மதத்தை விமர்சித்தால் நீங்கள் எதற்கு எதிர்க்க போகிறீர்கள்?
இந்துக்கள் எதிர்க்கலாம் ஆனால், அதற்காக சிலர் முடிவு செய்து தி கேரளா ஸ்டோரிக்காக போராட்டம் செய்து தடை செய்தது போல செய்ய மாட்டார்கள்.
அமீர் இதே போல தொடர்ந்ததால் தான், அவரது Laal Singh Chaddha படத்தை புறக்கணித்து படு தோல்வி அடைய செய்தார்கள்.
“அடிக் அஹ்மத் என்கவுண்டர் செய்யப்பட்டாரா? புதிய கதை விடுறீங்க? அது படுகொலை.”
உண்மை தான், டிவி நேரலையிலேயே வந்தது. மற்றவர்களை என்கவுன்டர் செய்ததால், அதோடு இதையும் அவ்வாறு கூறி விட்டேன்.
இது Genuine mistake
“கொலைகாரர்கள் மீது இது வரை எந்த நடவடிக்கை எடுத்தார்கள்? சொல்லுங்க? சட்டத்தை கையில் எடுக்க யார் தைரியம் கொடுத்தது?”
கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள்.
சட்டத்தை எல்லா மாநிலங்களிலும் தான் கையில் எடுக்கிறார்கள். தமிழகத்தில் இதுவரை 1900+ கொலைகள் கடந்த இரு வருடங்களில் நடந்துள்ளதாம்.
12 லாக்கப் டெத் நடந்துள்ளது. பல்லைப் பிடுங்கிய விவகாரம் இன்றும் இழுத்துக்கொண்டுள்ளது.
இந்தியாவிலேயே புதிதாக நடந்ததை போல சொல்கிறீர்களே!
“சட்டத்தை கையில் எடுத்து யாருக்கும் யாரையும் கொல்லலாம் என்கிறீர்கள். உங்கள் பார்வையில் அது என்கவுண்டர் ”
ஆமாம், இவர்களைப்போன்ற கேங்ஸ்டர், பொறுக்கிகள், பெண்களை கொடுமை படுத்துகிறவர்களை எல்லாம் கருணையே பார்க்காமல் போட்டு தள்ளுவது தான் சிறந்தது.
இல்லையென்றால், வெளியே வந்து இன்னும் நாலு பேரை இதே போல கொடுமை படுத்துவார்கள்.
“முஸ்லிம் என்பதற்காக படுகொலை செய்யப்பட்டார். அது என்கவுண்டர் அல்ல. அதற்காக முஸ்லிம்கள் போராடியது சரி. ”
உண்மைலேயே இதைப்போன்று என் தளத்திலேயே நேரடியாக கேட்பது அதிர்ச்சியாக உள்ளது.
இந்து கேங்ஸ்டர்கள் பலரும் இதை விட அதிகமாக என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர். இது என்ன கணக்கு? உங்கள் வாதப்படி முஸ்லீம் இல்லையென்றால் எதற்கு என்கவுன்டர் செய்யப்படணும்.
அடிக் அகமது ஒரு கேங்ஸ்டர் பல நூறு பேரை கொலை செய்து இருக்கிறான், பலரின் நிலத்தை அபகரித்து இருக்கிறான். பெண்கள் பலரை வன்புணர்வு செய்து இருக்கிறான்.
மதரஸாவில் இருந்து இரு முஸ்லீம் சிறுமிகளை தூக்கிச்சென்று இரவு முழுவதும் வன்புணர்வு செய்து காலையில் அதே மதரஸா முன்பு உயிரற்ற உடல்களாக போட்டு சென்றுள்ளார்கள்.
இதை நான் கூறவில்லை, உங்களை போல ஒரு முஸ்லீம் மனம் நொந்து ஒரு காணொளியில் கூறினார். ட்விட்டரில் தேடினால் அவர் பேசியது கிடைக்கும்.
இவனை போன்றவர்களை எல்லாம் முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக எப்படி உங்களால் ஆதரிக்க முடிகிறது.
உங்கள் சமூக பெண்கள், சிறுமிகள் அடிக் அகமதுவால் கொடூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள், உங்களுக்கு கோபம் வரவில்லையா?!
உண்மையிலேயே பயமாக உள்ளது.
துவக்கத்தில் இயல்பாக விவாதித்துக் கொண்டு இருந்தீர்கள் ஆனால், இது போன்ற எண்ணங்களை நீங்களும் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை ஜீரணிக்க கடினமாக உள்ளது.
தயவு செய்து இவனை போன்ற மனிதத்தன்மையற்ற ஜென்மங்களை மதத்தை காரணம் கூறி ஆதரிக்காதீர்கள்.
ஒரு கேங்ஸ்டரை கொன்றது யார்? இன்னொரு சின்ன கேங்ஸ்டர். இதில் எவன் செத்தால் யாருக்கு என்ன?
தமிழகத்தில் எத்தனையோ ரவுடிகள் அடித்துக்கொண்டு சாகிறார்கள். அவர்களை யாரவது பாவம் பார்க்கிறார்களா?
அப்பாடா போய் சேர்ந்தான் என்று தான் நினைப்பார்கள்.
ஆனால், நீங்கள் இப்படியொரு கொடூரமான நபரை இஸ்லாம் மதம் என்ற ஒரே காரணத்துக்காக ஆதரிக்கிறீர்கள்.
“முஸ்லிம்கள் அதிக் அஹ்மத் ஐ ஆதரித்தார்கள? அல்லது சட்ட விரோதமான படுகொலையை எதிர்த்தார்களா?”
அப்பாவியைக் கொன்று இருந்தால் படுகொலையை எதிர்த்தார்கள் என்று கூறி இருப்பேன் ஆனால், அடிக் அகமது அப்பாவி கிடையாது. இது நாட்டுக்கே தெரியும்.
எனவே, அடிக் அகமது படுகொலையை எதிர்த்தாலும் அது அடிக் அகமதுவை ஆதரிப்பது போலத்தான்.
“அநீதிக்கு எதிராக நாங்கள் போராடுவோம்.”
நல்லா போராடுங்க.. அது தான் பார்க்கிறேனே!
“அநீதிக்கு எதிராக நாங்கள் போராடும் போதே இந்த நசுக்கு நசுக்குறீங்களே போராடாமல் இருந்தால்?”
உங்கள் போராட்டம் இவனை போன்ற கேங்ஸ்டருக்கும், பெண்களை கடத்தி சென்று ISIS தீவிரவாதத்துக்கு உதவும் நபர்களுக்கும் தான் என்றால் என்றைக்கும் அதற்கு மற்ற மக்களின் ஆதரவு கிடைக்காது.
நான் இக்கட்டுரைக்கான என் வாதத்தை உங்களிடம் இதோடு முடித்துக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.
கிரி
#அப்படிப்பார்த்தால், இந்துக்களிலும் இது போல பலர் உள்ளார்கள். அதற்காக அவர்கள் முஸ்லீம் மதத்தை விமர்சித்தால், அவர்கள் இந்து இல்லை என்று விட்டு விடுவீர்களா?#
விடமாட்டோம்.
Amir khan முஸ்லிம் என்றே வைத்துக் கொள்வோம். அவர் ஒரு PK படம் தான் எடுத்தார். அது குற்றம் தான்.
நீங்கள் மாதத்திற்கு ஒரு படம் வெளியிடுகின்றீகள். சரியா?
#ஆமாம், இவர்களைப்போன்ற கேங்ஸ்டர், பொறுக்கிகள், பெண்களை கொடுமை படுத்துகிறவர்களை எல்லாம் கருணையே பார்க்காமல் போட்டு தள்ளுவது தான் சிறந்தது.
இல்லையென்றால், வெளியே வந்து இன்னும் நாலு பேரை இதே போல கொடுமை படுத்துவார்கள்.#
உண்மை தான். கோயில் கருவறையில் ஆசிபா என்ற சிறுமியை கற்பழித்து கொலை செய்த கயவர்கள் இப்போது எங்கே?
அவர்கள் encounter செய்யப்பட்டார்களா?
#இவனை போன்றவர்களை எல்லாம் முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக எப்படி உங்களால் ஆதரிக்க முடிகிறது.
உங்கள் சமூக பெண்கள், சிறுமிகள் அடிக் அகமதுவால் கொடூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள், உங்களுக்கு கோபம் வரவில்லையா?!
உண்மையிலேயே பயமாக உள்ளது.
துவக்கத்தில் இயல்பாக விவாதித்துக் கொண்டு இருந்தீர்கள் ஆனால், இது போன்ற எண்ணங்களை நீங்களும் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை ஜீரணிக்க கடினமாக உள்ளது.
தயவு செய்து இவனை போன்ற மனிதத்தன்மையற்ற ஜென்மங்களை மதத்தை காரணம் கூறி ஆதரிக்காதீர்கள்.#
நாங்கள் மதத்தை காரணம் கூறி அவனை ஆதரிக்க இல்லை. கொன்றது போலீசார் இல்லை. நடந்தது கொலை.இன்று அவனுக்கு , நாளைக்கு எனக்கும் நாளை மறுநாள் வேறு யாருக்கும் கும் நடக்கலாம். சட்ட விரோதமான செயலுக்கு துணை போக முடியாது.
உங்கள் கருத்துப்படி அவனை கொன்றது சரி என்றே வைத்துக் கொள்வோம்.
இப்போது Delhi ல் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் போராடுகிறார்கள். சந்தேக நபர்கள் பாஜக . இப்போது என்ன செய்வது? நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
Kerala Story எப்படி யோ.
Gujarat இல் 40000 பெண்கள் காணோமாம். Official report சொல்கிறது. இது தொடர்பாக உங்கள் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி. நானும் நிறைவு செய்கிறேன்.