சில மாதங்கள் முன்பு ஃபேஸ்புக்ல ஒருவர், அவரிடம் தொலைபேசியில் யாரோ வங்கி சம்பந்தப்பட்ட நபர் எடுத்தவுடனே இந்தியில் பேசியதாகவும், தானும் தமிழில் பதில் கூறியதால், அவர் பின் ஆங்கிலத்துக்கு வந்ததாகவும் கூறினார். Image Credit
இப்பதிவு அப்போது பரவலாக இந்தி திணிப்பை எதிர்ப்பவர்களால் பகிரப்பட்டது, அதோடு இத்தகவல் எனக்கு ஒரு மாற்றத்தையும் கொடுத்தது.
ஏனென்றால், எனக்கும் இது போல அழைப்பு வரும், நான் அவரிடம் “Can you Pls speak in English?” என்று கூறுவேன், பின்னரும் இந்தியில் எதோ கூறி விட்டுப் பின்னர் ஆங்கிலத்துக்கு வருவார்கள்.
எதிரே இருப்பவருக்கு இந்தி தெரியுமா தெரியாதா? என்று கேட்க வேண்டும் என்ற குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லாமல், அனைவருக்கும் இந்தி தெரியும் என்று கிறுக்கனுக மாதிரி எடுத்தவுடனே இந்தி பேசுவானுக. கோபம் வருமா வராதா?!
மேலே கூறியதை படித்த பிறகு இனி எவனாவது என்கிட்டே இப்படிப் பேசினால் நேரடியாகத் தமிழில் பதில் தர வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் ஆனால், அதன் பிறகு பல மாதங்களாக அப்படியொரு அழைப்பு வரவில்லை 🙂 .
நான் DND யில் இருப்பதால், இதுபோல வரும் அழைப்புகள் மிகக் குறைவு.
க்யாரே!
ஒருமுறை வெட்டியாக இருந்த சமயத்தில், ஒருவர் அழைத்து இந்தியில் பேசினார். “Bank Loan” மட்டும் ஆங்கிலத்தில் சொன்னதால், அது மட்டும் புரிந்தது.
எனக்கு உடனே ஃபேஸ்புக்ல கூறியது நினைவுக்கு வந்தது. மவனே! இன்னைக்குத் தவற விடக் கூடாது என்று, “சிக்குனாண்டா” என்று தயார் ஆகி விட்டேன்.
அவனுக்கு எதுவுமே புரியாக்கூடாதுன்னு ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசினேன் 🙂 .
அவனும் ஆங்கிலத்துக்கு மாறாமல் தொடர்ந்து எதோ இந்தில சொன்னான்.
நானும் அசராமல் தமிழில் பதில்!!
அவனும் விடாம “இந்தி! இந்தி!! இந்தி!!” ன்னு சொல்ல
நானும் “தமிழ் தமிழ் தமிழ்” ன்னு சொன்னேன் (அதே மாதிரி மூன்று முறை)
“இந்தி இந்தி இந்தி போலோ“
“தமிழ் தமிழ் தமிழ் போலோ“
அவன் கடுப்பாகிட்டான், இவன் நம்மைக் கலாயிக்கிறான்னு புரிந்துகிட்டான் 😀 .
உடனே எதோ இந்தியில் திட்ட ஆரம்பித்துட்டான், இவன் திட்டுறான்னு தெரியுது ஆனால், என்னனு புரியல! கடைசில “சோர்” ன்னு வந்துச்சு, உறுதியாகிடுச்சு.
நம்ம தமிழ் படங்கள் பார்த்ததில் எனக்குப் புரிந்த வார்த்தைகளில் இதுவும் ஒன்று 🙂 .
அப்புறம் “த்தா..” ன்னு ஆரம்பிச்சு எனக்குத் தெரிந்த, காதில் கேட்ட அனைத்து கெட்டவார்த்தைகளையும் எடுத்து விட்டேன்.
அவனுக்குத் திட்டுவது புரியாது ஆனால், திட்டுறேன்னு புரிந்துட்டு இன்னும் ஆக்ரோசமாகிட்டான் 😀 . இருடான்னு பொன்மொழிகளாகப் பொழிந்து தள்ளினேன்.
அப்புறம் வடிவேல் சொல்ற மாதிரி “ரொம்ப லென்த்தா போவுது” ன்னு இணைப்பைத் துண்டித்து விட்டேன். ரொம்ப நாளைக்குப் பிறகு பரம திருப்தி 🙂 .
Truecaller ல் பார்த்ததில், எதோ வட இந்திய ஊர். இனி தமிழ்ன்னு எவனாவது இவன்கிட்ட சொன்னான், என்கூடப் பேசியது தான் இவனுக்கு நினைவுக்கு வரும்.
நினைத்து இருப்பான்.. தமிழ்நாட்டுக் காரனுகளுக்குத் திமிர் அதிகம் என்று 🙂 .
இனி எவனாவது “வடா தோசா” பசங்க இந்தியை தூக்கிட்டு வந்தானுக.. இந்த மாதிரி போட்டுத் தாக்குங்க. அப்பத்தான் அடுத்த முறை பேசும் போது யோசிப்பானுக.
இவனுங்க எல்லாம் அமேசான் காட்டுக்குப் போனால் கூட அங்கேயும் “க்யாரே! இந்தி போலோ” ன்னு கூசாம சொல்லுவானுக. இவனுகளை எல்லாம் தமிழ் பேசி அடக்குங்க!
இவனுக கதை என்கிட்டே ஏகப்பட்டது இருக்கு.. அதனால இவனுகளை எல்லாம் ஆதரித்து என்கிட்டே வராதீங்க.. கொலை வெறியாகிடுவேன்.
தொடர்புடைய கட்டுரை
இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்! [FAQ]
கொசுறு
உங்களுக்கு இது போல அனுபவங்கள் உள்ளதா? எப்படி கையாளுகிறீர்கள். இனி இது போல அழைப்புகள் வந்தால், தமிழ் (மட்டும்) பேசி “பதில்” தரும் எண்ணமுள்ளதா?!
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
நான் பல முறை இப்படி பேசி மறுமுனையில் இருப்பவரை நெறய கடுப்பு ஏத்தி இருக்கேன்.. ஹாஹாஹா இதில் ஒரு திருப்தி …. அவன் அவனுடைய மொழிக்கு முக்கியத்துவம் தரும்போது நான் மட்டும் ஏன் என்ன மொழியை தவிர்த்து ஆங்கிலத்தில் பேச வேண்டும் .. நானும் தமிழ் தெலுங்கு என்று அவர்களை பலவாறாக குழப்பி விட்டு இருக்கேன் ஹாஹாஹா…
நான் ஹிந்தி பண்டிட் . இந்த மாதிரி போன் கால் வரும்போது அவங்களை ஹிந்தில திட்டுவேன் எதிர் முனையில் இருப்பவர்க்கு ஹிந்தி தெரியும் என்று எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என்று. அவர்கள் உங்களுக்கு தான் தெரியுதே அப்போ ஹிந்தில பேசலாமே என்பார்கள். எனக்கு ஹிந்தி மட்டும் அல்ல தெலுகு , கன்னடம் மலையாளம் மற்றும் பல மொழிகள் தெரியும் அவையெல்லாம் ஆர்வத்துடனும், அந்த ஊர்களுக்கு செல்லும் பொது அவர்களோடு பேசுவதற்கும் மட்டுமே. ஆனால் இந்த மாதிரி எனக்கு போன் போட்டு பேசும் போது முதலில் ஆங்கிலத்தில் பேசு என்று சொல்வது உண்டு. இதற்க்கு முக்கிய காரணம் கலாச்சார ரீதியாக நாம் வந்தாரை வாழ வைப்பவர்கள் அதனாலேயே ரோட்டில் பிற மொழியாளர்கள் உதவி கேட்டால் நாம் நமக்கு தெரிந்த அந்த ஓட்டை உடைசல் பாஷை அல்லது அரை குறை ஆங்கிலத்திலோ பேசி உதவுபவர்கள். நம்மை போன்றே மராத்தியர்கள், பெங்காலி மற்றும் பஞ்சாபி மக்களும் அவ்வாறே . இது பீகார்,மத்திய பிரதேஷ், உத்தர பிரதேஷ் போன்ற ஹிந்தி மட்டும் பேசும் மாநிலத்தவர்கள் பண்ணுவது
நீங்க அவுங்களிடம் தமிழில் பேசியதில் சந்தோசம். ஆனால் இதன் மூலம் அவர்கள் மற்றவர்களிடம் ஹிந்தியில் எடுத்த உடனே பேசுவது தவறுன்னு உணர வாய்ப்பு இருப்பதாக தோனவில்லை. அவர்கள் ஹிந்தியில் பேசினால் பதில் ஆங்கிலத்தில் தர வேண்டும். பிறகு அவர்கள் ஆங்கிலத்திற்கு வரும் போது எதிரில் இருப்பவருக்கு ஹிந்தி தெரியுமா என அறியாம எப்படி நீங்கள் ஹிந்தியில் துவங்கலாம் என கேட்டல் அவர்கள் தவறை உணர வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு இல்லாமல் அவர் ஹிந்தியில் பேச, நீங்கள் தமிழில் பேச, எதோ ஹிந்தி கூட தெரியாத காட்டு புறத்து ஆட்களிடம் பேசுறோம் போலன்னு நினைக்க வாய்ப்பு இருக்கே தவிர, அவர்கள் செய்யும் தவறை உணர வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. நாம ஹிந்திக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்வது. எனக்கு ஹிந்தி தெரிந்தாலும் பேச மாட்டேன். என்னோட பேசணும்னா என் மொழி காத்துட்டு வா இல்ல பொது மொழி ஆங்கிலம் பேசுனு சொல்றதுதான் கெத்துனு நினைக்கிறன்.
@லீலா பிரசாத் அதிலொரு ஆனந்தம் 🙂 🙂
@aleegnar
“அவர்கள் ஹிந்தியில் பேசினால் பதில் ஆங்கிலத்தில் தர வேண்டும். பிறகு அவர்கள் ஆங்கிலத்திற்கு வரும் போது எதிரில் இருப்பவருக்கு ஹிந்தி தெரியுமா என அறியாம எப்படி நீங்கள் ஹிந்தியில் துவங்கலாம் என கேட்டல் அவர்கள் தவறை உணர வாய்ப்பு இருக்கிறது.”
நான் ஏன் ஆங்கிலத்தில் பதில் தர வேண்டும்? நான் தமிழில் பேசினால், அவர் ஆங்கிலம் தெரியுமா? என்று கேட்க வேண்டியது தானே! நானா அழைத்தேன், அவர் தானே அழைத்தார். தேவை யாருக்கு?!
இதில் கூட நான் தமிழில் பேசியும் அவர் என்னை இந்தியில் பேசத்தான் வலியுறுத்தினாரே தவிர ஆங்கிலம் தெரியுமா? என்று கேட்கவில்லை. இவரை போன்றவரிடம் என்ன எதிர்பார்க்க சொல்கிறீர்கள்?
“அவ்வாறு இல்லாமல் அவர் ஹிந்தியில் பேச, நீங்கள் தமிழில் பேச, எதோ ஹிந்தி கூட தெரியாத காட்டு புறத்து ஆட்களிடம் பேசுறோம் போலன்னு நினைக்க வாய்ப்பு இருக்கே ”
அது என்னங்க “இந்தி கூட தெரியாத காட்டுப்புறத்து ஆளு” ? இந்தி என்பது ஒரு மொழியே தவிர அது திறமைக்கான அளவுகோல் அல்ல.
நீங்க இது மாதிரி உதாரணம் கூறுவதே மிகத்தவறானது. அவன் நினைப்பதை பற்றி எனக்கு என்ன கவலை? அவன் என்ன எனக்கு வேண்டியவனா?! அவன் என்ன நினைத்தால் அது பற்றி எனக்கு என்ன?
இந்த மாதிரி ஒரு இத்துப்போனவன் நினைப்பதை பற்றி எனக்கென்ன கவலை.
“நாம ஹிந்திக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்வது. எனக்கு ஹிந்தி தெரிந்தாலும் பேச மாட்டேன். என்னோட பேசணும்னா என் மொழி காத்துட்டு வா இல்ல பொது மொழி ஆங்கிலம் பேசுனு சொல்றதுதான் கெத்துனு நினைக்கிறன்.”
நீங்க இதை எல்லாம் கூறினால் அவன் எடுத்துப்பான்னு நினைக்கிறீங்களா? இந்தியன் என்றால் இந்தி தெரியணும் என்று முழு கிறுக்கன் மாதிரி பேசுவான்.
உண்மையில் நல்ல நிலையில் உள்ளவன் பேசும் முன்னரே இந்தியா ஆங்கிலமா என்று கேட்பான், அதுவும் இல்லையென்றால் நாம் தமிழ் பேசினால் ஆங்கிலம் தெரியுமா? என்று கேட்பான்.
இந்த இரண்டுமே இல்லாதவனிடம் நீங்கள் எதிர்பார்ப்பது வீண்.
நான் இந்திக்கு எதிரியல்ல அவர்களுடைய “Attitude” க்கு தான் எதிரி. பெரிய்ய புடுங்கியாட்டம் பேசுவானுக..
போடா ***** என்று திட்டி விட்டு போனை வைச்சிடனும்
சூப்பர் கிரி.
நானும் பல வருடங்களாக இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேசும் அழைப்பாளர்களிடம் தமிழில் மட்டுமே பேசி வருகிறேன்.
ஆங்கிலத்தில் பேசும் தமிழ் தெரிந்தோர், நாம் தமிழில் பேசியவுடன் அவர்களும் தமிழுக்கு மாறிவிடுகின்றனர். அல்லது தமிழ் தெரிந்த அழைப்பாளருக்கு மாற்றி விடுவர்.
இந்தி மட்டுமே பேசுவோருக்கு தமிழைக் கேட்கும் வாய்ப்பு நாம் தானே தர வேண்டும். எனவே அவர்களாக வைக்கும் வரையில் தமிழில் பேசுவேன்.
நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் என் அறைக்கு வரும் போது மட்டும் கவனமாக அறைகுறையாவது தமிழில் பேசுவர் அல்லது தமிழ் தெரிந்தவர்களை அழைத்துக் கொண்டு வருவார்கள். காரணம் கொடுத்த அடி இடி போல இருக்கும் என்பதால். அடி என்பது வச்சு செய்வது.
கிரி, சத்தியமா உங்களை போல் என்னால் என்றும் நடக்க முடியாது… ஏன் யோசிக்கவும் முடியவில்லை…!!!! ஆனால் உங்களுக்கு நேர்ந்தது போல அனுபவம் எனக்கு நடைபெறவில்லை.. நடந்து இருந்தாலும் உங்களை போல் நடப்பேனா என்று தெரியவில்லை…
ஒரு பழைய சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன்.. (கொஞ்சம் மட்டும் தான் நினைவில் உள்ளது).. ஒரு முறை காந்தியடிகள் கொஞ்சம் கோவமாக கண்டித்து, பாரதியாருக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதுகிறார்..கடிதத்தை படித்த பாரதியார் கொஞ்சம் நாகரிகமாக வசைகள் சேர்த்து காந்திக்கு மறு கடிதம் ஆங்கிலத்தில் எழுதுகிறார்.. கடிதத்தின் கடைசியில் பாரதியார் (நீங்கள் கடிதத்தை ஒன்று தமிழில் எழுதி இருக்கலாம் , உங்களுக்கு தமிழ் தெரியவில்லை எனில் ஹிந்தியில் எழுதி இருக்கலாம், இந்த இரண்டையும் விட்டு யாரை நாம் எதிர்கிறோமோ அவர்கள் மொழி ஆங்கிலத்தில் நீங்கள் எழுதியது சரியில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்)..
இதற்கு பதிலளித்த காந்தி, இவ்வளவு விவரமாக பேசும் நீங்கள் எனக்கு பதிலளித்த இந்த கடிதத்தை தமிழ் / ஹிந்தி இரண்டில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதியது சரியா??? என்று பதில் அனுப்பியிருந்தார்.. அதற்கு பதில் எழுதிய பாரதியார், தலைசிறந்த என் தமிழ்மொழியை ஒருவரை புகழ்வதென்றால் பயன்படுத்துவேன் …. ஆனால் ஒருவரை இகழவேண்டும் என்றால் என் தாய்மொழியை நான் பயன்படுத்த மாட்டேன் என்றார்…
இந்த சம்பவம், உண்மையா?? கட்டுக்கதையா??? என்ற விவாதத்தில் நான் நுழைய விரும்பவில்லை… பாரதி (நேசித்த / சுவாசித்த) அளவுக்கு நம்மால் மொழியை நேசிக்க முடியுமா??? என்றால் சத்தியம் முடியாது… குறைந்தபட்சம் இதுபோல உரையாடல்களை தவிர்க்கலாமே…. இன்னொரு மக்களின் மீது நமக்கு இருக்கும் வெறுப்பு அவர்களின் மொழியின் மீது கொள்வது சரியா???? என்று தெரியவில்லை…
நிறைய நண்பர்கள் உங்கள் உரையாடலை ஆதரித்தாலும், எனக்கு உடன்பாடு கிடையாது.. (உங்களை போல் அனுபவ ரீதியாக நேரியிடையாக பாதிப்படையவில்லை… பாதிப்படைந்து இருந்தாலும் இதுபோல நடக்க மாட்டேன்) பகிர்வுக்கு நன்றி கிரி.. (கியா கிரி பாய், தும் கியா காம், சை நேயி)
இந்த பதிவு மூலம் அண்ணன் கிரி தெரிவிப்பது என்னவெனில், ரஜினி சாரின் காலா படத்தை அனைவரும் எதிர்க்கவேண்டும். கியாரே கிரி.
நான் இந்த இந்தி எதிர்ப்பினை சிலகாலமாக முகப்புபுத்தகத்தில் பயன்படுத்துகிறேன், தொழில் நுட்ப கோழாறினால் நிறைய இந்தி மற்றும் தெலுங்கு நண்பர்கள் என்னுடய முகப்பு புத்தகத்தில் சேர்ந்துவிட்டார்கள். இந்திக்காரர்கள் இந்தியில் தகவல் அனுப்பும்போது நான் வெறும் தமிழினை மட்டும்தான் பயன்படுதுவேன், எனக்கும் புரியாது அவர்களிற்கும் புரியாது. தெலுங்குக்காரர்கலை மட்டும் ஆங்கிலத்தில் தகவல் அனுப்புவேன். என்னவென்றாலும் அவர்களும் திராவிடர்கள் இல்லையா
நேற்றய தினம் ஒரு பிரான்ஸ்பிரஜையை சந்தித்தேன். அவர் இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் புரிந்து நான் இருக்கும் நாட்டிற்கு வந்துள்ளார். தமிழில்தான் பேசினார். கடினப்பட்டு பேசவில்லை. ஆங்கிலம் கலக்கவில்லை. அவர் தமிழில் பேசும்போது , நான் ஆங்கிலத்தில ஓகே என்று சொல்லிக்கொண்டிருந்தேன். தெலைபேசி இலக்கம் கேட்டபொழுது கூட என்னால் இயல்பாக தமிழில் சொல்லமுடியவில்லை. அதே நேரம் அம்மாவுடன் என்னால் ஆங்கிலத்தில் பேச முடியாது. வெள்லையாய் இருப்பவர்களுடன் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று எங்களின் குரோமோசோன்களில் எழுதப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.
@Sarav இவங்க ஊர்ல இருக்கும் போது இந்தில பேசுவதில் நியாயம் உள்ளது ஆனால், தமிழ்நாட்டிலும் அதே போல பேசி எதிரே இருப்பவரும் பேசணும் என்று எதிர்பார்ப்பது தான் எரிச்சலைக் கூட்டுகிறது.
@சீனிவாசன் 🙂 பல அனுபவம் இருக்கும் போல இருக்கே!
@ஜோதிஜி நான் என்கிட்டே திமிரா பேசுபவர்களிடையே மட்டுமே கடுமையாக நடந்து கொள்வேன். அதாவது இந்தி கூட தெரியாதா? என்று கேட்பான் பாருங்க ஒரு கிறுக்கு கூட்டம்.. அவங்க தான் என்னுடைய குறி. தொழிலாளர்கள் பற்றி கண்டுகொள்வதில்லை. அவர்களிலும் எவரும் கடுப்பை கிளம்பினால் அதற்கான எதிர்வினை வரும்.
@யாசின் நீங்கெல்லாம் ரொம்ப நல்லவர் 🙂 உங்க அளவுக்கு எல்லாம் என்னால் முடியாது. அதுவும் குறிப்பாக இந்த விஷயத்தில் வாய்ப்பே இல்லை.
பொதுவாக பெரிய இவன் மாதிரி பேசினாலே எனக்கு பிடிக்காது, அதுவே மொழியை வைத்து இகழ்ந்தால், குறைத்து பேசினால் என்னால் பொறுமையாக இருக்க முடியாது.
பொதுவாக நான் யாரிடமும் சண்டை போட மாட்டேன் ஆனால், இதில் மட்டும் நான் விதிவிலக்கு 🙂
@ப்ரியா அதானே ரஜினிய எதுவும் சொல்லாம இருக்க முடியாதே! 🙂
ஆங்கிலம் கலக்காமல் தமிழில் எழுத பழக முடிந்த என்னால் ஆங்கிலம் கலக்காமல் பேச முடியவில்லை என்பது மிகக் கடுப்பாக உள்ளது. தற்போது ஓரளவு வித்யாசம் காண முடிகிறது என்றாலும், நான் எதிர்பார்க்கும் நிலையே வேறு.
எப்போது சாத்தியமாகும் என்று தெரியவில்லை.
தற்போது என்னால் ஆங்கிலம் கலக்காமல் எளிதாக எழுத முடிகிறது, துவக்கத்தில் சிரமப்பட்டேன்.
வெள்ளை காரர்களை கண்டால் பல்லை காட்டுவதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அவங்க அடிக்கும் மொக்கை நகைச்சுவைக்கும் கவுண்டமணி வடிவேல் நகைச்சவையை கேட்டது போல சிரிப்பவர்களை கண்டால்.. எனக்கு காதில் புகை போகும். நானும் முன்பு இந்த கேவலத்தை செய்து இருக்கிறேன்.
நம்முடைய அடிமை எண்ணம் மாற சில தலைமுறைகள் ஆகும் என்றே நினைக்கிறேன்.
எனக்கு Icici bank Customer care உடன் ஒரு அனுபவம். எதிர் முனையில் பேசியவருக்கு ஹிந்தி மட்டுமே தெரிகிறது. ஆங்கிலம் தெரியாது என்று கூறினார். நான் இனைப்பை தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்த நபருக்கு மாற்ற சொல்ல அதுவும் அவனுக்கு புரிய வில்லை.
அய்யா கடவுளே என்று நொந்துபோய் இனைப்பை துண்டித்து விட்டேன்.