ஏப்ரல் 14 வந்தால், தமிழ்ப் புத்தாண்டு அரசியல் சர்ச்சை கண்டிப்பாக வந்து விடும்.
தமிழ்ப் புத்தாண்டு அரசியல் சர்ச்சை
தமிழ்ப் புத்தாண்டை ஏன் ஏப்ரல் 14 கொண்டாட வேண்டும்? ஏன் தை 1 கொண்டாட வேண்டும்? என்று அவரவர் தரப்பு வாதங்களை வைத்துப் பேசுவார்கள்.
இந்தச் சண்டை சமீபத்தில் ஆரம்பித்தது அல்ல, சுதந்திரம் அடையும் முன்பு இருந்து விவாதம் நடைபெற்று வரும் ஒரு விஷயம். Image Credit
அதி தீவிர விவாதம் மற்றும் சண்டையாக மாறியது கலைஞர் ஆட்சியில் இருந்த போது அதிகாரப்பூர்வமாகத் தை 1 யைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்த பிறகு.
இதன் பிறகு இரு பிரிவுகளாகப் பிரிந்து சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும், பெரும்பான்மை மக்கள் ஏப்ரல் 14 யைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள்.
திமுகவினரும், இடது சாரியினரும் தை முதல் நாளை ஆதரித்து வருகின்றனர்.
இம்மாற்றத்தை கொண்டு வந்த போது கலைஞருக்குச் சாதகமாக இருந்த இன்னொரு விஷயம் ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாளும் கூட.
எனவே, இதற்கு அரசு விடுமுறை விட்டு ஏப்ரல் 14 ம் தேதி புத்தாண்டுக்கு விடுமுறை விட்ட மாதிரி சமாளித்துக் கொள்ள முடிந்தது.
ஒருவேளை இந்த நாளில் இது போல வாய்ப்பில்லை என்றால், கலைஞருக்கு உடனடியாக நெருக்கடி வந்து பெரியளவில் எதிர்ப்பைச் சம்பாதித்து இருப்பார்.
ஆனால், விடுமுறை இருந்ததால், பெரும்பான்மை மக்கள் இந்த மாற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
ஏப்ரல் மாதத்தில் வரும் புத்தாண்டு தமிழர்களுக்கு மட்டுமல்ல, மற்ற திராவிடச் சக மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் கூடப் புத்தாண்டு தான்.
கடுப்பாகுமா ஆகாதா?!
ஒவ்வொருவரும் அவரவர் விருப்ப நாளுக்குக் காரணம் கூறுகிறார்கள், அவரது விருப்பம். எனவே, யார் கூறுவது சரி தவறு என்று போனால் அதற்கு முடிவே இல்லை.
அவரவர் தரப்பு நியாயங்களை வைத்து இருப்பார்கள். நான் ஏப்ரல் 14 யைத் தான் தமிழ்ப்புத்தாண்டு நாளாகக் கொண்டாடுகிறேன், கொண்டாடுவேன்.
தமிழை அதிகம் நேசிக்கிறேன் என்பதால், அது சம்பந்தமாக மட்டும் கேள்விகள்.
தமிழ்ப் புத்தாண்டை தை 1 ஒன்றாகக் கொண்டாடுபவர்கள் கூறும் காரணங்களில் ஒன்று அதில் வரும் வருடங்கள் அனைத்தும் சமஸ்கிருதம்.
வந்தேறிகள் வழிமுறை, தமிழ்ப் புத்தாண்டில் எதற்குச் சமஸ்கிருதம்? என்கிறார்கள்.
நியாயமான கேள்வி.
தமிழ் மீது தான் இவர்களுக்கு என்னே ஆர்வம்?! என்று வியக்க வைக்கிறது.
தமிழ் மீது இவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளவர்கள் அவர்களது பிள்ளைகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளார்கள் என்று பார்த்தால், எல்லாமே வடா தோசா பெயர்கள்!
கடுப்பாகுமா ஆகாதா?! இதுக்கு மட்டும் சமஸ்கிருதம், வந்தேறிகள் பெயர் சரியா?
சரி, தமிழாவது பிழை இல்லாமல் எழுதுகிறார்களா, படிக்கிறார்களா?! என்றால் இல்லை. தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியை முதன்மை பாடமாக வைக்கிறார்களா? அதுவுமில்லை.
தமிழ்ப் புத்தாண்டை மாற்றிய கலைஞர் குடும்பத்தில், சன் டிவி, ரெட் ஜெயண்ட், கிளவுட் நைன், சன் ஷைன் ஸ்கூல் தான் நிறுவன பெயர்கள்.
தமிழ்ப் பெயரில் வைத்து இவர்கள் எடுத்துக்காட்டாக இருக்கலாமே!
தமிழ் தமிழ்ன்னு பொங்குற ஊடகங்களின் தளத்தில் சென்று பாருங்கள், 50% க்கு மேல் எழுத்துப்பிழைகளுடன் இருக்கும், மீதி 50% ஆங்கிலக்கலப்புடன் இருக்கும்.
இவர்களுக்கு எல்லாம் வெட்கமாவே இருக்காதா?!
முதலில் தமிழின் பெருமையை உயர்த்துங்கள், தமிழ் மொழியைச் சிதைக்காதீர்கள், உங்கள் அளவில் தமிழுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள்.
இதையெல்லாம் செய்த பிறகு மனசாட்சி இருந்தால், தமிழ்ப்புத்தாண்டுக்கு ஏன் விளம்பி, குளம்பி ன்னு பெயர் வைக்கிறார்கள் என்று கேளுங்கள்.
முடிவில்லாத சர்ச்சை
திமுக ஆட்சிக்கு வந்தால், தை 1 யைத்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிப்பார்கள். அதிமுக வந்தால் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு.
நம்ம தலையெழுத்தை பாருங்கள்.
ஒரு நல்ல நாளை, வருடத்தின் முதல் நாளை நிம்மதி இல்லாமல் செய்து விட்டார்கள். புத்தாண்டு அன்று சமூகத்தளங்களில் எந்தப் புத்தாண்டு சரி என்று சண்டை.
மற்ற மாநில மக்கள் இதே சமயத்தில் வரும் அவர்கள் புத்தாண்டை மகிழ்சியாகக் கொண்டாட, இங்கேயோ அடிதடி.
எந்தச் சமூகமும் இது போலக் கேவலமாக நடந்து கொள்ளவில்லை ஆனால், தமிழன் அனைத்துக்கும் சண்டை, பிரிவினை. போட்டி, எதிர்ப்பு. எரிச்சலாக உள்ளது.
தமிழ் சமூகம் இருக்கும் வரை தமிழ்ப் புத்தாண்டு சண்டை தொடரும் என்பது கசப்பான உண்மை, இதற்கு முடிவே இல்லை.
தொடர்புடைய கட்டுரைகள்
தமிழ் ஆங்கிலம் எழுத்து இலக்கணப்பிழை தவிர்க்கலாம்
ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுதுவது கடினமா?!
தமிழ் முக்கியத்துவம் குறைய நீங்களும் ஒரு காரணம்!
facebook “முகநூல்” என்றால் Lady Gaga “பெண் காகா” வா?
தமிழ் ஊடகங்களின் தமிழ் அழிப்பு
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
என்னை பொறுத்தவரை எல்லா நாட்களும் சிறப்பான நாட்களே!!! ஏப்ரல் 14 ஐ பொறுத்தவரை என் பையனின் பிறந்தநாள் என்பது மேலும் சிறப்பு.. இதில் அரசியல் செய்ய எனக்கு மனமில்லை.. ஏப்ரல் 14 ஐ கொண்டாடவில்லை என்றாலும் எனக்கு விருப்பமானது ஏப்ரல் 14 தான்..
“ஏப்ரல் 14 ஐ கொண்டாடவில்லை என்றாலும் எனக்கு விருப்பமானது ஏப்ரல் 14 தான்”
நீங்கள் புத்தாண்டை கொண்டாட மாட்டீர்களா யாசின்? உங்களுக்கு வழக்கமில்லையா?
கிரி, புத்தாண்டு என்று கிடையாது, எந்த நாட்களையும் விஷேச நாட்களாக கொண்டாடுவதில்லை.. என் பிறந்த நாள், மனைவி பிறந்த நாள், பையன் பிறந்தநாள், திருமண நாள் உட்பட .. பையனின் சில பிறந்தநாளை மட்டும் அவனின் சந்தோஷத்திற்காக எளிமையாக கொண்டாடி இருக்கிறோம்..எந்த நாளையும் கொண்டாடக்கூடாது என்று குறிப்பிட்ட காரணம் ஏதும் இல்லை.. என்னை பொறுத்தவரை எல்லா நாட்களும் இனிய நாட்கள் தான்…
ஓகே. புத்தாண்டு கொண்டாடுவது என்றால், காலையில் சாமி கும்பிடுவோம் அவ்வளவு தான் 🙂 .
பிறந்த நாளுக்குப் பசங்களுக்கும் கேக் வெட்டிக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டோம். இரவில் பீட்ஸா வாங்குவது வழக்கம்.