மாப்பு வச்சுட்டாங்கய்யா ஆப்பு! இந்த வசனம் வண்டுமுருகன் வடிவேல் பக்கமே திரும்பி இருப்பது காலத்தின் கோலம். Image Credit
தேர்தல் முடிவிற்கு முன்பு ஆடாத ஆட்டம்! பேசாத பேச்சு! என்று கட்டுக்குள் அடங்காத காளையாக இருந்தவர் நிலை தேர்தல் முடிவிற்குப் பிறகு பரிதாபமாகி விட்டது.
வண்டுமுருகன் வடிவேல்
திமுகவை விட பலரின் பார்வை இவரின் மீதே சென்றுள்ளது. எங்கு எதிரொலித்ததோ இல்லையோ facebook ட்விட்டர் போன்ற சமூகத்தளங்களில் அதிகம் எதிரொலித்தது.
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா!…. யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே! கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது.
கவியரசர் எழுதிய பாடல் காலங்கடந்தும் காட்சிகள் மாறியும் இன்றும் பல விஷயங்களுக்குப் பொருந்தி வருவது அதிசயம்.
“கூட்டம் சேர்த்தவன் எல்லாம் ஜெயித்தது கிடையாது” என்பது எவ்வளவு உண்மை.
தனக்குக்கூடிய கூட்டம், சன், கலைஞர் தொலைக்காட்சிகள் கொடுத்த முக்கியத்துவம், அழகிரி கலைஞரின் நெருக்கம் என்று கிடைத்த புகழ் போதை வடிவேலுவின் கண்ணை மறைத்து விட்டது.
இதனால் ஏற்பட்ட போதை எதை வேண்டும் என்றாலும் பேச அவருக்குத் தைரியம் கொடுத்து விட்டது.
கேப்டன் தண்ணி அடிக்கிறார் என்று மேடைக்கு மேடை முழங்கிய இவர் மட்டும் என்ன நன்னாரி சர்பத் குடித்துக்கொண்டு இருப்பவரா!
எந்தத் தைரியத்தில் இவர் இப்படிப்பேசினார்.
என்னமோ கட்சிக்காரர்கள் எல்லோரும் ரோஸ்மில்க் மட்டுமே குடிப்பது போலக் கேப்டனை இஷ்டத்திற்கும், குடிகாரன் லூசு பீசு என்று அநாகரீகமாகப் பேசியதை மக்கள் ரசிக்கிறார்கள் என்று நினைத்து மிகக் கேவலமாக நடந்து கொண்டதிற்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளார்கள்.
தற்போது வடிவேலுக்குப் புரிந்து இருக்கும் தன் பேச்சை மக்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்று.
காட்சிகளும் மாறியது இவரது நிலையும் மாறி விட்டது.
இவர் ஆணவமாக நடந்து கொண்டதையும் ஆபாசமாகப் பேசியதையும் கண்டு எவ்வளவு பேர் கடுப்பில் இருந்து இருக்கிறார்கள் என்பது தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்தவுடன் சமூகத்தளங்களில் தெரிந்தது.
facebook ல் வடிவேலுவை பஞ்சர் ஆக்கி விட்டார்கள்.
தற்போது வடிவேல் காமெடியைப் தொலைக்காட்சிகளில் பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது அந்த அளவிற்கு வெறுப்பாகி விட்டது.
பரிதாபமான வடிவேல் நிலை
தேர்தல் முடிவுக்கு முன்னர் வடிவேலு தான் இந்தத்தேர்தலில் நிஜ ஹீரோ என்று அனைவரும் புகழ்ந்தார்கள். திமுகவின் வெற்றிக்கு வடிவேல் பேசிய பேச்சே முக்கியக்காரணமாக இருக்கும் என்று பலர் கூறினார்கள்.
ஆனால், தேர்தல் முடிவுக்குப் பிற கு ஒரு மாத ஹீரோ மறுபடியும் காமெடியன் பொறுப்பையே ஏற்றுக்கொண்டார்.
இத்தேர்தலில் திமுகவையே காலி செய்து எதிர்க்கட்சி தலைவராக உதவிய கைப்புள்ளை வடிவேலுவிற்கு கேப்டன் நன்றி கூற வேண்டும்.
தற்போது வடிவேலுவை நினைத்தால் சிப்பு சிப்பா வருது. கடைசியாகத் தன்னைப் பற்றி வடிவேல் பேசிய கீழ்த்தரமான பேச்சிற்கு எந்த ஒரு பதிலும் தராமல் தேர்தல் முடிவின் மூலம் பதில் தந்த கேப்டன் தி கிரேட் 🙂 .
வடிவேலுவை மையப்படுத்தி ஏகப்பட்ட மீம்கள் facebook ல் உலா வந்தன. அதில் சில படங்களை இணைத்துள்ளேன். சில படங்களை நாகரீகம் கருதி தவிர்த்துள்ளேன்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
பொருத்தமான தலைப்பு ஒன்றே போதும்:)! நல்ல கலைஞராக மக்கள் மனதில் பிடித்த இடத்தை இழந்து நிற்கிறார் பரிதாபமாக.
தெளிவான அலசல் நண்பா .
டிவியில் காமெடி பார்க்கவே பிடிக்கவில்லை.
வாழ்த்துக்கள்
விஜய்
வணக்கம் கிரி
வடிவேலு: நான் உங்களை (விஜயகாந்த்) பத்தி வெளயாடா பேசினத எல்லாத்தையும் நீங்க சீரிசா எடுத்துகிநிங்கபலக்குது அய்யோ……………. அய்யோ……………………..
யுவராஜ்
பாண்டிச்சேரி
வணக்கம் தலைவா. பதிவு சுருக்கமா இருந்தாலும் சுவாரஸ்யமாகவே உள்ளது.
வடிவேலு.- நாம் இருக்கும் கா.மு.க கட்சி சரியான பாதுகாப்பு இல்லாததால் கொ.மு.காவில் இணையலாம் என இருக்கிறேன். என ஒரு படத்தில் காமெடிக்காக எடுக்கப்பட்டது கடைசியில் அவருக்கே உண்மையிலேயே பயன்படுத்தும்படி ஆகிவிட்டது….. அவ்வ்வ்வ்…..
தலைவர்களி்ன் பேச்சு.-
தமிழ்நாட்டில் நேற்று அடித்தது மாபெரும் அலை..!
அதில் காணாமல் போயிருக்கலாம் பலரது தலை,
மக்களிடம் எடுபடவில்லை எங்கள் பேர விலை..!
இப்ப ஆட்சிய பிடிச்சிருகக்லாம் இலை,
ஆனால் நாங்கள்தான் எப்பவும் மலை,
காணாமல் போகவிருக்கிறது கண்ணகி சிலை
இதுதான் இன்றைய நிலை.
தொண்டர் எந்திரித்து.-
தமிழகம் முழுவதும் வடிவேலுவுக்கு வலை.
இப்படிக்கு டீ.ஆரின் குரு.
சரி,”அந்த”அடி வாங்கியவர்(விஜயகாந்திடம்)வெற்றி பெற்றாரா?ஆசீர்வாதம் என்றாரே?
செம ரிசல்ட் தல. வடிவேலு ஆடின ஆட்டம் என்ன, பேசின பேச்சு என்ன,
இப்போ எங்க பொய் ஒழிய போறனோ தெரியல….
பேசாம மாடு மேய்க்க போகலாம்..
நீங்க சொன்ன போலவே வடிவேலு comedya பார்க்க கூட பிடிக்கல…
தி மு க வின் தோல்விக்கு வடிவேலுவின் நாகரிகமற்ற தனி நபர் தாக்குதலும் ஒரு முக்கிய காரணம்.
அதனை கடைசி வரை சட்டை செய்யாமல் விட்டதுவே வடிவேலுக்கு கிடைத்த பெரிய அடி.
‘சிரிப்பது வேற சிந்திப்பது வேற…’ என்பது இப்போது புரிந்திருக்கும்.
ஒரு காலத்தில் வடிவேலுவின் நகைச்சுவையையும் இயல்பான நடிப்பையும் கண்டு வியந்தவன் நான். ஆனா நீங்க சொன்ன மாதிரி இப்பல்லாம் பிடிக்கவே இல்லை என்பது உண்மை.
//சரி,”அந்த”அடி வாங்கியவர்(விஜயகாந்திடம்)வெற்றி பெற்றாரா?ஆசீர்வாதம் என்றாரே?//
அவரு மகராசனா ஆயிட்டாருங்கோ!
போதைக்கு ஊறுகாய் ஆக்கினாங்க…
இப்போ போதை இறங்கிடுசி ..
. இனி ஊறுகாய் என்னவாகபோகுதோ…
. ஹையோ ஹையோ
ரம்மி மார்டின் இப்போ டம்மி மார்டின் நா ஆய்டுசி
ஆடிய ஆட்டம் என்ன…வடிவேலு…பேசிய வார்த்தை என்ன…
அண்ணே!!! இதே போன்ற நிலைமை ௧௯௯௬ ஆம் ஆண்டில் ஆச்சி மனோரமாவிற்கும் ஏற்பட்டது !!! ரஜினியை கேவலமாக பேசி பின் கருணா ஜெயித்த பிறகு அருணாச்சலம் பட பூஜையில் பரிதாபமாக நின்றிருந்தார் !!!
1996 ஆம் ஆண்டு என்பதே அந்த ௧௯௯௬ ஹி ஹி ஹி !!!
வடிவேலு நீர் சரியான மங்குனி அமைச்சர் என்பதை நொடிக்கொருமுறை நிரூபித்துவிட்டையாட .
நீங்கள் சொல்வதெல்லாம் வாஸ்தவம்தான் ……ஆனால் என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது ……வடிவேலு ஆபாசமா பேசிய முதல் கூட்டம் தொட்டு முடிவு வரை அவரது ஆபாச பேச்சிற்கு தமிழக மக்கள் கொடுத்த வரவேற்பு மட்டும் எந்த விதத்தில் சரி என்பதை யாரவது சொல்லுங்களேன் ! அவரது இரண்டாவது கூட்டத்தில் மக்கள் கூடாமல் இருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வடிவேலுவிற்கு வந்திருக்காது
நீங்கள் ஏற்கனவே ஒரு இடுகையில் வடிவேலுவை பற்றி சொல்லியிருந்தீர்கள் வடிவேலுக்கு நாவடக்கம் வேண்டும் இல்லையேல் பின்னாடி பிரச்னை தான் என்று நீங்கள் சொல்லியது போலவே வடிவேலு நிலைமை இப்போது ஆகி விட்டது
கிரி விஜயகாந்த் அதிர்ஷ்டக்காரர் என்று எழுதினேன். இன்று எதிர்க்கட்சி தலைவர். நீங்க வேணா பாத்துக்கங்க. வடிவேல் விஜயகாந்த போலவே அதிர்ஷ்டக்காரர். இப்போதுள்ள சூழ்நிலையை வைத்து எடை போட்டு விடாதீர்கள். காலம் பதில் சொல்லும். அவர் வாங்கி வந்துள்ள வரம் அப்படி?
அனைவரின் வருகைக்கும் நன்றி
@ராமலக்ஷ்மி நீங்கள் கூறியதே உண்மை.
@யுவராஜ் ஊருல தான் இருக்கீங்களா! ரொம்ப நாளா ஆளையே காணோம்
@பிரவின் குமார் 🙂 செம காமெடி
@யோகா ரீடர் சொல்லிட்டாரு பாருங்க 🙂
@ராஜன் உண்மை தான் சார்!
@ஆனந்த் 🙂 வர கமென்ட் கலக்கறீங்க போங்க!
@ராஜ் 🙂
@ஸ்ரீகாந்த் நீங்கள் கூறுவது சரி தான் ஆனால் நம்ம மக்களுக்கு சினிமா பிரபலம் என்றால் வரிசை கட்டி நின்று விடுவார்கள். அது இயல்பு என்றும் மாறாதது. வந்தது கொஞ்சம் பேரு தானே! தமிழ்நாட்டில் மொத்தம் ஆறு கோடிக்கு பேரு மேல் உள்ளார்கள்.
@சரவணன் இதை பெரும்பாலனவர்கள் நினைத்தார்கள் சரவணன். நீங்களே நிச்சயம் நினைத்து இருப்பீர்கள்.
@ஜோதிஜி நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மை இல்லை என்றால் எப்படியோ இருந்தவர் இன்று இந்த நிலைக்கு வந்து இருக்க முடியாது. அவர் மேலும் பணத்தை சம்பாதிக்கலாம் பதவியை பெறலாம் ஆனால் முன்பு போல அனைவரின் மனதிலும் பிடித்தவராக இருக்க முடியாது அது உறுதி.
வணக்கம் அண்ணே,
வடிவேலுவைப்பற்றிய உங்கள் கருத்து முற்றிலும் உண்மைதான் இப்போதெல்லாம் அவரின் காமெடியைப் பார்க்கவே பிடிக்கவில்லை நீங்கள் சொல்வதுபோல ’அவர் மேலும் பணத்தை சம்பாதிக்கலாம் பதவியை பெறலாம் ஆனால் முன்பு போல அனைவரின் மனதிலும் பிடித்தவராக இருக்க முடியாது அது உறுதி” சரியான கருத்து.
//நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மை இல்லை என்றால் எப்படியோ இருந்தவர் இன்று இந்த நிலைக்கு வந்து இருக்க முடியாது. அவர் மேலும் பணத்தை சம்பாதிக்கலாம் பதவியை பெறலாம் ஆனால் முன்பு போல அனைவரின் மனதிலும் பிடித்தவராக இருக்க முடியாது அது உறுதி.//
100% உண்மை…
//வடிவேலுவைப்பற்றிய உங்கள் கருத்து முற்றிலும் உண்மைதான் இப்போதெல்லாம் அவரின் காமெடியைப் பார்க்கவே பிடிக்கவில்லை நீங்கள் சொல்வதுபோல ’அவர் மேலும் பணத்தை சம்பாதிக்கலாம் பதவியை பெறலாம் ஆனால் முன்பு போல அனைவரின் மனதிலும் பிடித்தவராக இருக்க முடியாது அது உறுதி” சரியான கருத்து.//
Repeat
ரஜினி சொல்லியே கேட்காத மக்கள் வடிவேலு சொல்லியா கேட்க போகிறார்கள். ரஜினியே இதே போன்று 2002 தேர்தலில் ஜெயலலிதாவிடம் பல்பு வாங்கியவர் தானே.
அப்புறம் தைர்யலக்ஷ்மி என்று புகழ்ந்து குடும்பத்துடன் சென்று ஜெயலலிதாவை பார்த்தது எல்லாம் மறந்து விட்டதா? அதே போன்று வடிவேலுவும் செய்து விடுவார். நமக்கு தான் வடீவேலுவுக்கு என்ன ஆகுமோ என்று பெரிய கவலை. நமக்கு என்ன நன்மை என்று பார்பதில்லை. 2002 க்கு அப்பறம் நாம் என்ன ரஜினி படத்தை பர்ர்கவில்லையா?
My dear friend Yuva, Rajani voiced against JJ in 1996 and he never said anything against her in 2002. for the matter of fact, he even went for a function conducted by film industry for JJ and talked about her good administration skills during 1995-96 itself. Rajini never takes grudge against anybody, and always maintains plain talking. Good is good and Bad is Bad for him and thats how he as person.
hai yuva, You are absolutely correct.. But your comparison is so bad. when election committee is
conducted the election in 2002?
During the 1996 election only he voiced against A.D.M.K…At that time all were known very well about
Tamilnadu political condition.. If Rajini has started the political party at that time definitely he came the chie fminister of tamilnadu..
Because he is having so much grace with everyone
till now not be a actor. Everyone knows it including you also..But he didnt do that… In 2004 parliament election also he made wrong decision because of PMK … I am accepted.. but for this ,
dont compare him with silly persons.. He is the evergreen one always.. காயத்ரிநாகா
ஹாய் யுவா, நீங்க சொல்றது வாஸ்தவந்தான் … ஆனா அதுக்காக தலைவர வடிவேலு கூட எல்லாம் ஒப்பிடலாமா? தனிப்பட்ட முறையில் கூட யாரையும் மரியாதைக் குறைவாக பேசாதவர் ரஜினி… சபை நாகரீகம் தெரியாத வடிவேலு தன் சுயநலத்துக்காக தி மு க வை பயன்படுத்திக் கொண்டார்.. கிடைத்த ஆதரவில் மதி மயங்கி வாய்க்கு வந்ததெல்லாம் பேசினார்.. அதற்கு மிகப் பெரிய பலனை விரைவில் அடைவார்.. காயத்ரிநாகா…
மாணவன் சுவாமி ராஜசூரியன் யுவா காயத்ரி நாகா மற்றும் பாலாஜி வருகைக்கு நன்றி
@யுவா நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் வடிவேல் செய்தது தன்னுடைய சுய லாபத்திற்காக ரஜினி அப்படி அல்ல. 2004 ல் தேர்தலில் பாஜக வே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அனைவரும் கருதினார்கள். நிலையான ஆட்சியை தரும் என்று நம்பினார்கள் அதனாலே ரஜினி பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த ஜெ க்கு வாக்கு அளிக்கக்கூறினார் ஆனால் மக்கள் தங்கள் மாநில நிலைமையை கருத்தில் கொண்டு வாக்களித்ததால் காங் வெற்றி பெற்றது. எனவே குற்றம் கூறும் முன் அதற்க்குண்டான சரியான காரணங்களையும் கூறுங்கள்.
ரஜினி தனிப்பட்ட காரணங்களுக்காக கூறியது பாமக விசயத்தில் மட்டுமே அதிலும் அநாகரீகமாக எதையும் கூறவில்லை.
@பாலாஜி காயத்ரி நாகா நன்றி.
எல்லாவற்றையும் விட, ரஜினி ஒரு சிறந்த “மனிதர்” ……..
” கடவுள் நல்லவங்கள சோதிப்பான் , ஆனா கை விட மாட்டான்”
//வடிவேல் காமெடியைப் தொலைக்காட்சிகளில் பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது//
உண்மை உண்மை உண்மை 🙂
அதுவும் ரஜினி படத்தை பற்றி கேலி பேசியது அழிவின் உச்ச கட்டம்.
அப்போதே நினைத்தேன் இன்னொரு மனோரமா ஆகி தனக்கு தானே வடிவேல் வைக்கும் ஆப்பு இது என்று.
இவருக்கும் இன்னொரு அருணாச்சலம் வந்தால் மட்டுமே இனி இவரை திரையில் பார்க்க முடியும் பாருங்கள் 🙂