என்னது சிங்கப்பூர்ல விவசாயமா!! என்று குழப்பமாக இருக்கா! எனக்கும் அப்படித்தான் இருந்தது ஆனால், நம்ம ஊர் போலப் பெரியளவில் சிங்கப்பூர் விவசாயம் அல்ல.
சிங்கப்பூர் விவசாயம்
புதிய வழிமுறைகளைப் பயன்படுத்தி சிறிய அளவில் செய்து கொண்டு உள்ளார்கள்.
ஆறு வருடமாகச் சிங்கப்பூரில் இருந்தும் இப்படியொரு விஷயம் இருப்பது தற்போது தான் தெரிய வருகிறது. இது கொஞ்சம் கடுப்பாகவும் இருந்தது.
விவசாயம், இயற்கை, மரங்கள், சுற்றுச் சூழல் போன்றவற்றில் ஆர்வம் இருப்பதால், ஆர்வம் உள்ள நண்பர்களுடன் விவாதித்ததில் கிடைத்த தகவல் தான் இது.
முன் கூட்டியே திட்டமிட்டு கடந்த ஞாயிறு அன்று இரு நண்பர்களுடன் சென்று வந்ததில் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இதில் எனக்கு முழு விவரங்களும் தெரியாது. தெரிந்த வரை & நண்பனிடம் கேட்டுப் பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து இதை எழுதி உள்ளேன்.
Hydroponics Plants
இங்கே குறிப்பிடும் விவசாயம் போல அல்லாமல் வேறுபல வழி முறைகளிலும் செய்கிறார்கள்.
எனவே இங்கே கூறியுள்ளதை வைத்துச் சிங்கப்பூர் முழுவதும் இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது என்று தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.
இந்த முறையில் வளர்க்கப்படும் செடிகளுக்கு Hydroponics Plants என்று பெயர்
பல்வேறு புதிய விவசாய தொழில்நுட்பங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது ரொம்ப மகிழ்ச்சியாகவும் வித்யாசமான அனுபவமாகவும் இருந்தது.
Vermiculite
இவர்களின் இந்த விவசாயத்தில் “மண்” கிடையாது. ஆமாம்! நீங்கள் நம்பித்தான் ஆகணும் இவர்கள் வளர்க்கும் செடிகள் தண்ணீர் மூலம் மட்டும் வளர்கிறது.
மணல் போலச் சட்டிகளில் காணப்படுவதன் பெயர் Vermiculite.
இதைக் கூகுள் Images ல் தேடினால் மேலும் படங்கள் கிடைக்கும். தண்ணீர் என்றால், வெறும் தண்ணீர் அல்ல இதில் அனைத்து சத்துக்களும் கலந்து விடப்பட்டுள்ளன.
உரத்திற்கும் இதற்கும் வித்யாசம் உள்ளது.
ஸ்பான்ஞ்சில் சிறிது கிழித்து அதில் விதையைப் போடுகிறார்கள். இது போல ஒரு பெரிய ஸ்பான்ஞ் முழுக்க சீரான இடைவெளியில் செய்கிறார்கள்.
பின்னர் இதில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுகிறார்கள்.
விதை வளர்ந்து கொஞ்சம் பெரியதானவுடன் இதில் இருந்து எடுத்துத் தெர்மோ கோலில் ஓட்டை போட்டு வைத்து இருக்கும் இடத்தில் செருகி வைத்து விடுகிறார்கள்.
சரியாகப் புரியவில்லையே! என்று தோன்றினால் மிக எளிதான எடுத்துக்காட்டு உள்ளது. நம்ம ஊரில் விதை நெல்லை போட்டு நெற்பயிர் வளர்ப்பார்கள்.
பின்னர் கொஞ்சம் வளர்ந்தவுடன் பிடுங்கி வயலில் நாற்று நடுவார்கள்.
இதே முறை தான் மேலே நான் கூறியது.
சத்துப் பொருட்கள்
இது போல அதிகளவில் செய்து காய்கறி செடிகளை உற்பத்தி செய்கிறார்கள். இதில் சுற்றிலும் வலை போடப்பட்டுள்ளது மேலே மழைக் காகிதம் போடப்பட்டுள்ளது.
இதனால் மழை பெய்தாலும் மழை நீர் உள்ளே இறங்காது, அதோடு வெயிலும் கடுமையாகத் தாக்காது.
சிங்கப்பூரில் அடிக்கடி மழை பெய்யும் என்பது குறிப்பிடத் தக்கது. இதில் உள்ள நீர், சத்துப் பொருட்கள் கலந்து இருப்பதால், மழை நீர் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நாங்கள் சென்ற போது, அங்கே இருந்த மேலாளர் எங்களுக்கு மிகவும் பொறுமையாகவும் விளக்கமாகவும் பல தகவல்களைக் கூறினார்.
படத்தில் நண்பர்களுடன் அங்கே இருந்த மேலாளர்.
இங்கே செடிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் டியூப் மூலம் சத்து நீர் செலுத்தப்படுகிறது.
முதல் முறை அமைப்பது மட்டுமே சிரமமான பணி, அதன் பிறகு பராமரிப்பு பணிகள் மிகக் குறைவானவை.
இங்கே உருவாக்கப்படும் கீரை மற்றும் காய்கறிகள் Pack செய்து சிங்கப்பூரின் பிரபலமான பல்பொருள் அங்காடியான Fairprice போன்ற கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.
காய்கறிகள் / உணவுப் பொருட்கள்
சிங்கப்பூருக்கு வரும் காய்கறிகள் / உணவுப் பொருட்கள் மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வருபவையே.
சிங்கப்பூரில் இவ்வளவு பரந்து விரிந்த விவசாய இடத்தை இங்கு தான் கண்டேன். இங்கே சென்றது மலேசியா பகுதிகளைச் சுற்றியது போல இருந்தது.
இந்த இடங்களில் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் போல நிறுவனங்கள் இவ்விடங்களை வைத்துள்ளன.
ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட இதே போல [அடிப்படை தொழில்நுட்பம்] ஆனால், வெவ்வேறு முறைகளில் விவசாயம் செய்கிறார்கள்.
குழந்தைகள்
அலுவலகம் உள்ளே சென்ற போது, அங்கே குழந்தைகள் உட்காரும் நாற்காழிகள் இருந்தது.
இது எதற்கென்று கேட்ட போது “இங்கே பள்ளிக் குழந்தைகளை அழைத்து வருவார்கள் அவர்கள் அமரத் தான் இவை உள்ளன” என்று கூறினார்கள்.
பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்து அவர்களுக்கு இது பற்றி விவரங்களை விளக்குகிறார்கள்.
சிறு வயதிலேயே இது போன்ற விசயங்களில் குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படுத்துவது சந்தோசமாக இருந்தது. நல்ல முயற்சி.
இந்த நிறுவனத்தின் இணைய தளம் http://www.ohfarms.com.sg. இங்கே சென்று மேலும் பல தகவல்களைக் காணலாம்.
எனக்குப் புரிந்த அளவில் / நண்பன் கூறிய தகவல்களை வைத்துக் குறிப்புகளுடன் எழுதியுள்ளேன்.
மேற்கூறியதை இந்த நிழல் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
இந்த “Vermiculite”-எ எப்படி, எப்போ பயன்படுத்தராங்கனு சொல்லவே இல்லையே?
கிரி நானும் சென்னைதான் . நீங்கள் சென்னை கோவை குறித்து சொன்ன இரண்டு விஷயமும் நானும் உணர்ந்ததுதான்,சென்னை தவிர எனக்கு வேறு எங்கு சென்னையின் மீதான ஈர்ப்பு மாறாது,கோவையில் இருந்தால் பரபரப்பு ஏற்படுவதே இல்லை,எவ்வளவு அவசர வேலை இருந்தாலும் என்னுடைய உணர்வே உங்களுடையதும்.குறித்து மகிழ்ச்சி ….
கிரி,
இனி எந்த விவசாய பண்ணைகளையாவது பார்க்கச் சென்றால் எனக்கும் சொல்லுங்க. நானும் கூட வர்றேன். எல்லா பண்ணைகளும் லிம்சுகாங் ஏரியாவுல தானே இருக்கு ? முன் கூட்டியே சொல்லிடுங்க,. நானும் வந்துடுறேன்.
கிரி, நானும் வளர்ந்தது கோவையில் தான். ஆனால் பெரும்பாலான இடங்கள் மாறி விட்டன. மக்களும் முன்பு போல் இல்லை . பசுமை காண்பது அரிதாகி விட்டது . ஆனாலும் , இன்னமும் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
கிரி.. “விவசாயம்” என்ற வார்த்தை எத்தனை அற்புதமும் / அழகும் கொண்ட வார்த்தை.. என் பாட்டன், முப்பாட்டன், மூதாதையர்களுக்கு ஒரே உலகம் “விவசாய உலகம்”.. தனக்கு உண்டான உணவை தானே உண்டாக்க வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்கு எப்பவும் உண்டு…. அதை நினைத்து இன்றும் பிரமிக்கிறேன்… பகிர்வுக்கு நன்றி கிரி….
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுதானே……
உங்களுக்கு சென்னை பிடிக்கலாம்….எனக்கு சிங்கப்பூரே பிடிக்கும்.
நீங்கள் அறியாத சிங்கப்பூர் இன்னும் நிறைய உள்ளது.
சென்னை போல வருமா தல
marina ல இருந்து மாயாஜால் வரைக்கும் எல்லாம் சூப்பர் தான்
வணக்கம் வாழவைக்கும் சென்னை தான் எனக்கு
விவசாயம் பத்தி நெறைய சொல்லி இருக்கீங்க நன்றி
– அருண்
கிரி, அருமையான பதிவு..
இதை வைத்து அல்லது இதே போல நம்ம கோபி-யிலும் விவசாயம் செய்ய முடியுமா ? தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்..
நண்பர்கள் போட்டோ மட்டும் போட்டு உங்கள் போட்டோ போடாம ஏமாதிடிங்க. அப்புறம் ஒரு டவுட்டு. 14 வருஷம் சென்னை, 6 வருஷம் சிங்கப்பூர். காலேஜ் 21 வயசுல முடிச்சிருந்தாலும் இப்ப உங்க வயசு 41 ஆ? நான் உங்களை ஒரு 35 வயசுக்குள கற்பனை பண்ணி வச்சி இருந்தேன் 🙂
அனைவரின் வருகைக்கும் நன்றி
@கௌரிஷங்கர் மணலுக்கு பதிலாக சட்டியில் இதை பயன்படுத்துகிறார்கள் என்று கூறி இருந்தேனே! அதில் உள்ள லின்க்கில் சென்று பார்த்தாலும் விவரங்கள் இருக்கும்.
@ஜோசப் பால்ராஜ் இது Khatib அருகே உள்ளது. அடுத்த முறை செல்லும் போது கூறுகிறேன்.
@ராவணன் நீங்கள் சொல்வது சரி தான்.. இன்னும் இங்கு அறியாத இடங்கள் தகவல்கள் நிறைய உள்ளன.
@சிவா கோபியிலும் நிச்சயம் வரும்…ஆனால் காலம் எடுக்கும். இது போன்ற யுக்திகள் வரும் காலங்களில் தவிர்க்க முடியாதவையாக இருக்கும்.
@முத்துக்குமார் உங்களின் கற்பனை ஏறக்குறைய சரி தான் ஆனால் சின்ன திருத்தம் நான் கல்லூரி செல்லவில்லை. படிக்காத மேதை 🙂
நான் என்னுடைய படங்களை அதிகம் பகிர்வதில்லை. ஏற்கனவே பகிர்ந்து இருந்தேன்.. ஒருவேளை நீங்கள் கவனிக்காமல் இருந்து இருக்கலாம் அல்லது சமீபமாக என் தளத்தை படிக்க துவங்கி இருக்கலாம்.
வடா தோசா காரங்க
——————————————-
எனக்கு உங்ககிட்ட பிடிகாத விஷயம் ….. 🙂 . உங்களுக்கு ரெண்டு சேட்டு மருமகள் வர vazhthuukkal
நான் உங்களை 2009ல இருந்து படிக்கிறேன்.(சுந்தர்ஜி தளத்தில் உங்க கமெண்ட் பார்த்து வந்தேன்) ஆனால் இதை மிஸ் செய்துவிட்டேன். அப்பறம் உங்க காமெடியான எழுத்து நடையை பார்த்து உங்களை செந்தில் ரூபத்தில கற்பனை பண்ணி வச்சிருந்தேன். ஆனால் நீங்க அழகாவே இருக்கீங்க.