சற்றே ஓய்ந்து இருந்த கந்தசஷ்டி கவச சர்ச்சை தற்போது நியூஸ் 7 பேட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் ராசா பேசியதால் மறுபடியும் விவாதமாகியிருக்கிறது. ராசாக்கு பதிலடி கொடுத்த பாண்டே என்ன கூறினார் என்று பார்ப்போம்.
ராசா பேச்சுக்குத் திமுக ஆதரவாளர்கள் தரப்பில் பலத்த வரவேற்பு. ராசாவை பாராட்டிப் பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். Image Credit
நியூஸ் 7 தொலைக்காட்சியில் பேட்டி எடுத்தவர், எந்தக் குறுக்கு கேள்விகளையும் கேட்காமல் தேமே என்று அமர்ந்து இருந்தார். இதற்குப் ராசாவை மட்டுமே பேச விட்டு அதை மட்டுமே ஒளிபரப்பியிருக்கலாம்.
பேட்டி எடுத்தவர் ஏன் எந்த எதிர் கேள்வியும் கேட்காமல் அமைதியாக இருக்கிறார் என்று பேட்டி பார்த்த பலருக்கும் தோன்றி இருக்கும்.
இப்பேட்டிக்குப் பதிலடியாக ரங்கராஜ் பாண்டே, காணொளி வெளியிட்டுள்ளார்.
ரங்கராஜ் பாண்டே பதில்
பாண்டே கூறியதில் சிலவற்றை நானும் கூற விரும்புகிறேன், அதே போலப் பாண்டே கூறியதில் உள்ள மாற்றுக்கருத்தையும் குறிப்பிட விரும்புகிறேன்.
‘கந்தசஷ்டி கவசத்தைப் பற்றிக் கூறியது யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை‘ என்று ராசா கூச்சமே இல்லாமல் கூறியுள்ளார்.
இவர்களுக்குக் கடவுளை அசிங்கமாக விமர்சிப்பது மகிழ்ச்சியாக இருக்கலாம், மற்றவர்களுக்கும் அதே போல இருக்கும் என்று நினைத்துக்கொண்டுள்ளார் போல.
‘கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டும்‘ என்று கூறியுள்ளார் ராசா. இதைக் கூறுவது, கருத்துக்கணிப்பு வெளியிட்ட தினகரன் அலுவலகத்தை எரித்தவர்கள்.
ஆபாசமாகப் பேசுவதின் பெயர் கருத்து சுதந்திரமா?
அப்படியென்றால் பெரியாரை, கலைஞரை ஒருவர் ஆபாசமாகப் பேசினால், அதையும் இவர்கள் அதே போலக் கருத்தால் எதிர்கொள்கிறோம் என்று கூறுவார்களா?
நியாயமான நாகரீகமான விமர்சனங்களைக் கருத்தால் எதிர்கொள்ளலாம்! ஆபாசமான விமர்சனங்களை எப்படிக் கருத்தால் எதிர்கொள்ள முடியும்?
வழக்குத்தான் போட முடியும்.
பல கோடி மக்கள் வணங்கும் கடவுளை ஒருவர் ஆபாசமாகப் பேசும் போது ‘கருத்தால் எதிர் கொள்‘ என்று கூறுவது சைக்கோத்தனம்.
இந்து மதமென்றில்லை எந்த மதமாக இருந்தாலும்.
யார் இந்து?
யார் இந்து? இந்து மதம் என்றால் என்ன? அதற்குப் பெயரே இல்லை.. ஆங்கிலேயன் வைத்தது என்பது உட்படப் பல விமர்சனங்களை வைத்துள்ளார்.
இதற்கெல்லாம் பாண்டே சரியாகப் பதில் அளித்துள்ளார். அதுவே என் கருத்தும்.
இதில் வர்ணாசிரமம் குறித்து மாற்றுக்கருத்துள்ளது. இது குறித்து ஏற்கனவே, கட்டுரையில் விளக்கியுள்ளேன்.
எங்களை ஏன் படிக்க விடவில்லை?
‘எங்கள் தாத்தா, அப்பாவை ஏன் படிக்க விடவில்லை?‘ என்று ராசாவின் கேள்விக்கு அம்பேத்கார், இரட்டைமலை சீனிவாசன் உட்படப் பலரை எடுத்துக்காட்டாகக் காட்டி இவர்கள் எல்லாம் படிக்கவில்லையா? என்று பாண்டே கூறி இருந்தார்.
இந்த விஷயத்தில் ராசா கூறியது சரி தான். அதாவது அக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களைப் படிக்க விடவில்லை, அடக்குமுறைகள் இருந்தன.
தங்களுக்கு இணையாக அமருவதா? என் பையனும் பெண்ணும் இவர்களும் ஒன்றா என்று ஆதிக்கச் சாதியினர் பல இன்னல்களை ஏற்படுத்தினர்.
பள்ளி செல்லும் வயதில் வேலைக்குத் தான் செல்ல முடிந்தது. ஆதிக்கச் சாதியினர் தங்கள் பண்ணையத்தில் வேலைக்குச் சேர்த்து விடக் கூறி விடுவார்கள்.
அம்பேத்கர் போன்றவர்கள் எல்லாம் விதிவிலக்கானவர்கள். அனைவரும் அம்பேத்கர் ஆகி விட முடியாது. எனவே, இவர்களை எடுத்துக்காட்டாகக் கூறுவது தவறு. பெரும்பான்மை என்னவோ அதைத்தான் கூற வேண்டும்.
ஆதிக்க சாதியினர் செய்ததற்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்று பாண்டே கூறுகிறார். ஒருவகையில் சரியென்றாலும், ஆதிக்க சாதியினர், தாழ்த்தப்பட்டவர்கள் உருவாகியதே இந்து மதத்தின் வர்ணாசிரம பிரிவுகளை வைத்துத் தானே!
பாண்டே பேசியதில் இதில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை.
வாக்கு வங்கி
இறுதியாகப் பாண்டே கூறியது சிறப்பு.
இந்து மதத்தை இழித்துப் பேசும் திமுக வினருக்கு இந்துக்கள் வாக்கு வங்கி உள்ளது. அதாவது, இந்து மதத்தைக் கேவலப்படுத்தினாலும், அவர்களுக்கு வாக்களிக்கும் இந்துக்கள் உள்ளனர்.
ஏனென்றால், இந்து மதத்தினர் பெரும்பாலனவர்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள், சிலர் சொரணை இல்லாதவர்கள்.
எனவே, எப்படி இருந்தாலும் வாக்கு வந்து விடும் என்ற தைரியம் தான் இவர்களை இந்து மதத்தைக் கேவலமாகத் துணிந்து பேச வைக்கிறது.
ஏன் எங்கள் மதத்தை இழிவாகப் பேசுகிறீர்கள்? என்று இந்துக்கள் கேள்வி கேட்டு வாக்களிக்க மறுத்தால், இதுவரை இந்து மதத்தை விமர்சித்தவர்கள், நிச்சயம் இழிவாகப் பேச மாட்டார்கள்.
காரணம், அரசியல் கட்சிகளுக்கு வாக்கு தான் எல்லாமே! அதில் பாதிப்பு வருகிறது என்றால், எப்படியும் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்வார்கள்.
2026 தேர்தல்
ஸ்டாலினின் இந்து மத எதிர்ப்பு கட்டுரையில், கூறியது போல 2021 தேர்தலில் இது எதிரொலிக்கவில்லையென்றாலும், 2026 தேர்தலில் 100% எதிரொலிக்கும்.
விநாயகர் சதுர்த்திக்கு இதுவரை வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலின் இந்தமுறை வாழ்த்து தெரிவிப்பாரா இல்லையா? என்று பார்ப்போம்.
தற்போது தெரிவிக்கவில்லையென்றாலும் பிற்காலத்தில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அது தான் வாக்கின் சக்தி! நெருக்கடி! பயம்!
பெரும்பான்மை மக்களைப் பகைத்து யாராலும் அரசியல் செய்ய முடியாது.
இந்து அமைப்புகளுக்கு உதவும் திராவிடக் கட்சிகள்
உண்மையில் திராவிட கட்சிகள் தங்களின் பொறுப்பற்ற மத ரீதியான பேச்சுகளால் சாதாரணமான இந்துக்களையும் மத ரீதியாகச் சிந்திக்க வைக்கிறார்கள்.
இதை இந்து அமைப்புகள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
எந்தச் செய்தியும் மக்களிடையே எளிதாகப் பரவும் தற்போதைய மின்னணு காலத்தில் இந்துக்களைத் தொடர்ந்து சீண்டுவது தற்கொலைக்குச் சமமானது.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளலாம் ராசா அவர்களே! ஆனால், விமர்சிக்கப்படும் கருத்து நாகரீகமாக இருக்க வேண்டும் என்பதை முதலில் உணருங்கள்.
விமர்சிக்கப்படுவது கடவுளாக இருந்தாலும், மதமாக இருந்தாலும், தனி நபராக இருந்தாலும். எவருக்கும் இது பொருந்தும்.
தொடர்புடைய கட்டுரைகள்
இந்து கடவுள்களைக் கிண்டலடிக்கும் திக திமுகவினர்
அசுரன் | வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி , அரசியல் வாதிகளை பொறுத்தவரை காண்பது எல்லாம் ஓட்டுக்கள் தான் , கண்ணதாசனை விட வேறு எவரும் அரசியலின் கீழ் தரத்தை விவரித்து நான் படித்ததில்லை .. அவரின் அனுபவம் எந்த கல்லூரி, பல்கலை கழகத்திலும் கிடைக்காத பாடங்கள் .. நான் படித்த பல புத்தகங்களில் அதிகம் விரும்பியது அவரது வாழ்க்கையும் , அர்த்தமுள்ள இந்து மதமும் தான் …
true…
Well said Giri sir. Like you said, I have the same conflict with Pandey and the caste system. At the same time these DMK and DK people make HINDU unity in Tamil Nadu.
@யாசின் சரியா சொன்னீங்க. பலருக்கு இது புரிவதில்லை.
@அருள் நன்றி. சார் எல்லாம் வேண்டாம்.. கிரி போதும்.