Vikrithi (2019 மலையாளம்) | சமூகவலைத்தள தவறுகள்

2
Vikrithi movie

ளைகுடா நாட்டில் இருந்து விடுமுறையில் வரும் Soubin Shahir மொபைல் பயன்பாட்டில் அதிக ஈடுபாடுள்ளவர். இவர் செய்யும் ஒரு செயலால் பேச்சுத்திறன் இல்லாத ஒருவர் எப்படிப் பாதிக்கப்படுகிறார் என்பதே Vikrithi கதை.

Vikrithi

மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் இரு நாட்கள் கண் விழித்து இருந்ததால், அசதியில் மெட்ரோ ரயிலில் சாய்ந்து தூங்கி விடுகிறார் சூரஜ்.

இதை Soubin Shahir படமெடுத்து, குடித்து விட்டுப் படுத்துள்ளார் என்று சமூகத்தளத்தில் போட வைரலாகி விடுகிறது. Image Credit

இதனால் ஏற்படும் பிரச்சனைகள், சந்திக்கும் மன உளைச்சல்கள் தான் படம்.

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இது பற்றி ஒரு விளம்பரம் செய்வார்கள். ஒரு பெண் கை குழந்தையுடன் நின்று கொண்டு இருக்க, அவர்கள் அமர வேண்டிய சிறப்பு இருக்கையில் இன்னொரு ஆண் அமர்ந்து இருப்பார்.

இதைப் படமாக எடுத்துச் சமுகத்தளங்களில் பகிர்ந்தால், பார்ப்பவர்களுக்கு அமர்ந்துள்ளவர் இரக்கமற்றவராகத் தோன்றும் ஆனால், உண்மையில் அவர் கால்களை இழந்தவர்.

எனவே, முழு விவரங்கள் தெரியாமல், எந்த ஒரு செய்தியையும் பகிராதீர்கள் என்று சிங்கப்பூர் அரசாங்கம் விளம்பரம் செய்யும்.

முன்பு தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் என்று எதைப்போட்டாலும் உடனே பகிர்ந்து விடுவார்கள். பின்னர் கிண்டலடிக்கப்பட்டதால், தற்போது இது போலக் கூறி பகிர்வது குறைந்தாலும், தவறான செய்திகள் தொடர்ந்து பகிரப்பட்ட வருகின்றன.

சிறப்பான நடிப்பு

சூரஜ் பேச்சுத் திறன் இல்லையென்றாலும், தன் கருத்துகளைத் தெரிவிப்பதில் அசத்துகிறார். அதிலும் இறுதியில் பேசாமலே பேசிக் கண்கலங்க வைத்து விட்டார்.

இவருக்கு உண்மையிலேயே பேச வராதோ என்று நினைக்கும் அளவு நடிப்புள்ளது.

அவரது மனைவியும் பேச்சுத் திறன் இல்லாதவர், இவர்களின் அன்னியோன்யம் மற்றும் அன்பு படத்துக்கே நேர்மறை சிந்தனையைக் கொடுக்கிறது.

பேசமுடியாததால் தான் அவர்களுக்குள் சண்டையில்லையோ என்னவோ 😀 .

Soubin Shahir பள்ளித்தோழியிடம் காதலை வெளிப்படுத்தும் நேரத்தில் சொதப்புவதும், பின்னர் சமாளிப்பதும் ரசிக்கும்படியுள்ளது.

அவசரப்பட்டதால் விளைந்த சிக்கலால் அடையும் மன உளைச்சல், திருமண நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால் ஏற்படும் பதட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தியது மிக இயல்பு. WhatsApp Group Admin ஒருவரும் பீதியாவது எதார்த்தம் 🙂 .

உறுதிப்படுத்தப்படாத தகவலைப் பரப்பாதீர்

சமூகத்தளங்களில் இது போலப் பல பலர் பாதிக்கப்படுகிறார்கள் ஆனால், சூரஜ் படம் சமூகத்தளங்களில் பகிரப்பட்டதாலையே, பார்க்கும் இடங்களில் எல்லாம் ‘அவர் தானே இவர்‘ என்று சூரஜை மக்கள் பார்ப்பது மிகையாக உள்ளது.

ஊருலே இதைத் தவிர வேறு வேலையே மற்றவர்களுக்கு இல்லையா என்பது போல அனைவரும் இதை விவாதிப்பது செயற்கையாக இருந்தது.

இது போல எத்தனையோ செய்திகள், முகங்கள் பகிரப்படுகிறது. அத்தனையையும் நினைவு வைத்துக்கொள்ள முடியுமா? இதுவே படத்துக்குப் பலவீனமாக இருந்தது.

WhatsApp, ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்பதை மிக அழகாக இப்படம் வலியுறுத்துகிறது.

அனைவரையும் Vikrithi பார்க்கப் பரிந்துரைக்கிறேன். இதுவொரு உண்மைக்கதை.

பரிந்துரைத்தது ராஜா. NETFLIX ல் உள்ளது.

Read: Kumbalangi Nights (2019 மலையாளம்) | God’s Own Country 

Directed by Emcy Joseph
Produced by A. D. Sreekumar, Ganesh Menon, Lakshmi Warrier
Written by Ajeesh P. Thomas
Starring Suraj Venjarammoodu, Soubin Shahir
Music by Bijibal
Cinematography Alby
Edited by Ayoob Khan
Release date 4 October 2019
Running time 123 minutes
Country India
Language Malayalam

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

2 COMMENTS

  1. // பேசமுடியாததால் தான் அவர்களுக்குள் சண்டையில்லையோ என்னவோ ? .//

    super ji

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!