ஆபாசம் அருவருப்பு கலாச்சார சீரழிவு | சாரு

13
ஆபாசம் அருவருப்பு கலாச்சார சீரழிவு

ழுத்தாளர்களில் நான் தொடர்வது சாரு மட்டுமே! இதற்குக் காரணம் இவரது எளிமையான எழுத்து.

இதனால் இவர் அவ்வப்போது ஏடாகூடமாக எதையாவது சொல்வதை தவிர்த்து விட்டு மற்றதை படித்துக்கொண்டு இருக்கிறேன்.

நமக்குப் பிடித்த மாதிரியே எழுத வேண்டும் என்றால் உலகிலேயே எவரும் இருக்க மாட்டார்கள்.

இவர் எழுத்துக்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இவர் Blog படிக்கச் சுவாரசியமாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. Image Credit

குக்கூ

சாரு “குக்கூ” படத்தை “ஆபாசம் அருவருப்பு கலாச்சார சீரழிவு” என்று கூறியதைப் படித்துக் கடுப்பாகி விட்டது. இதற்கு நியாயமான காரணங்கள் இருக்கிறது.

தனது நாவல்களை மற்ற இடங்களில் கொண்டாடுகிறார்கள் ஆனால், தமிழகத்தில் மதிப்பே இல்லை என்று சாரு கூறிக்கொண்டு இருப்பார். என்னுடைய நாவல்களை அனைவரும் கொண்டாட வேண்டும்.

நான் எப்படி இருக்க வேண்டியவன் தெரியுமா? என்று ஒரே பில்டப்பாக இருக்கும்.

ஸீரோ டிகிரி

இந்தியா சென்ற நண்பனிடம் சாருவின் “ஸீரோ டிகிரி” புத்தகம் வாங்கி வரும் படி கூறி இருந்தேன் ஆனால், அங்கு (திருச்சியில்) இல்லை என்று கூறி விட்டான்.

அடுத்த முறை இந்தியா செல்லும் போது சென்னையில் வாங்கிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

ஒருவாரம் முன்பு என் அலுவலக நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்த போது இது பற்றிக் கூறி இருந்தேன். தான், ஸீரோ டிகிரி வைத்து இருப்பதாகவும் தானே எடுத்து வருவதாகவும் கூறினார்.

நானும் இதைப் படித்து விட்டுச் சாருவின் வங்கி கணக்குக்குப் புத்தகப் பணத்தை அனுப்பி விடலாம் என்று முடிவு செய்தேன்.

புத்தகம் வாங்கி என்னால் நான்கு அத்தியாயம் கூடப் படிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு கொடுமையான ஒரு நாவலாக இருந்தது.

நான் லீனியர்

“நான் லீனியர்” (அத்தியாயம் மாறி மாறி இருப்பது) நாவல் என்பதால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

இரண்டாவது, மிகவும் Sick மன நிலையாக எழுதப்பட்டு இருந்தது.

அவருடைய Blog எளிமையான எழுத்தாக இருக்கிறது ஆனால், ஸீரோ டிகிரி அதற்கு நேர் எதிராக இருந்தது. சரி! இது நமக்கான புத்தகமில்லை என்று விட்டு விட்டேன்.

யாராவது இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து இருக்கிறீர்களா? என்று நண்பர்களிடம் ஃபேஸ்புக்கில் கேட்டு இருந்தேன்.

ஒருத்தர் கூட முழுமையாகப் படித்தேன் என்று கூறவில்லை. அனைவருமே என்னைப் போலவே தான் கூறி இருந்தார்கள்.

புத்தகம் கொடுத்தவரே அதைப் படிக்கவில்லை.

பணம் கொடுத்து வாங்கியதற்காகக் கொஞ்சம் படித்ததாகவும் இதற்கு மேல் படித்தால் பைத்தியம் பிடித்து விடும் என்று நிறுத்தி விட்டேன் என்று கூறினார்.

அவர் கொடுக்கும் போதே புத்தகம் புதிதாக இருந்தது அப்பவே நான் உஷாராகி இருக்க வேண்டும். அதோடு “தேகம்” புத்தகமும் கொடுக்கிறேன் என்று கூறினார்.

இரண்டையும் ஒரே சமயத்தில் புத்தக விழாவில் வாங்கி இருக்கிறார் போல.

தேகம்

“ஸீரோ டிகிரி” கொடுமையாக இருந்ததால் “தேகம்” புத்தகம் எப்படி இருக்கு என்று பார்ப்போம், அதுவும் இதே போல இருந்தால், Blog மட்டும் படித்து விட்டுச் சாரு நாவல்கள் பக்கம் ஒரு பெரிய கும்பிடு போட்டு விட வேண்டியது தான் என்று முடிவு செய்தேன்.

ஏனென்றால் இரண்டு புத்தக வெளியீட்டிற்கும் இடைவெளி அதிகம் இருந்தது. எனவே இதில் வேறு மாதிரி இருக்கலாம் என்று நினைத்தேன்.

ஒரு புத்தகம் மட்டும் படித்து விட்டு அதையும் முழுமையாகப் படிக்காமல், முடிவு எடுப்பது தவறாகத் தோன்றியது.

ஸீரோ டிகிரியை ஒப்பிடும் போது, தேகம் புத்தகம் சிறிய புத்தகமாகவும் இருந்தது.

இதுவும் அதே போலத் தான் இருந்தது ஆனால், ஒரே வித்யாசம் ஸீரோ டிகிரி போல ஒரேடியாக நான் லீனியராக இல்லை, ஓரளவு continuity இருந்தது.

பன்றியைக் கொல்வதையும், சிலரை சித்ரவதை செய்வதைப் பற்றியும் விளக்கி இருக்கிறார்.

இதைப் படித்து எனக்கு வாந்தி வராமல் போனதுக்குக் காரணம், நான் ஏற்கனவே ஹாரர் / சைக்கோ படங்களைப் பார்த்து ஓரளவு மனதளவில் தயார் ஆகி இருந்தது தான்.

இல்லையென்றால் நிச்சயம் வாந்தி எடுத்து இருப்பேன்.

இப்படியொரு கன்றாவியான புத்தகத்தை என் வாழ்நாளில் படித்தது இல்லை.

சரோஜா தேவி புத்தகம்

இதில் வரும் செக்ஸ் பற்றிய எழுத்துக்கள் முன்பு, சிறு வயதில் படித்த “சரோஜா தேவி, பருவராகம்” புத்தகங்கள் எல்லாம் தள்ளி நிற்க வேண்டும் என்பது போல இருந்தது.

மிஷ்கின் ஒரு முறை இவரது புத்தகத்தைச் சரோஜா தேவி புத்தகம் என்று மேடையிலேயே கூறி விட்டதால், சாரு அடிக்கடி மிஷ்கினை வாரிக்கொண்டு இருப்பார்.

“சரோஜா தேவி” புத்தகம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு… இது 80 / 90 ஆண்டுகளில் பிரபலமாக இருந்த தமிழ் போர்ன் புத்தகம்.

தற்போது இணையம் வந்த பிறகு கால மாற்றத்தில் இது போன்ற புத்தகங்கள் வழக்கொழிந்து E-Book ஆக மாறி விட்டன.

Read: செக்ஸ் ஒரு விரிவான பார்வை!

சாரு புத்தகம் இதையெல்லாம் தாண்டி Sick மனநிலையாக இருக்கிறது.

இதைச் சாரு எந்தத் தைரியத்தில் “அனைவரும் கொண்டாட வேண்டும்” என்று கூறிக் கொண்டு இருக்கிறார் என்றே சத்தியமாகப் புரியவில்லை.

இப்புத்தகத்தை வாங்கினால் வீட்டில் கூட வைக்க முடியாது. வீட்டில் யாராவது இந்தக் கதையைப் படித்தால், தொலைந்தது நம்ம கதை.

கொஞ்சம் மெச்சூர்டான நபர்கள் என்றால் எதற்கு இது மாதிரிப் புத்தகம் எல்லாம் படிக்கிறாய் என்று கேட்பார்கள்.

“தேகம்” படித்து இரண்டு நாட்கள் எனக்குச் சாப்பிடும் போதெல்லாம் அதில் கூறியது நினைவிற்கு வந்து பெரும் இம்சையாகி விட்டது.

இது தான் இலக்கியமா?

இதை ரசித்துப் படிப்பவர்களை நினைத்தால், திகிலாக இருக்கிறது.

இது போன்ற நாவல்கள் நான்கு முழுதாகப் படித்தால் நான் ஏர்வாடியில் தான் இருக்க வேண்டி வரும்.

இவற்றைப் புகழ்ந்து தான் உலக அறிவையும் இலக்கிய அறிவையும் வளர்த்து, எழுதுவதில் நானும் ஒரு அப்பாடக்கர் என்று காட்டிக்கொள்ள முடியும் என்றால், அப்படிப்பட்ட ஆணியையே பிடுங்க வேண்டாம்.

ரசனைகள் பலவிதம்

ஒரு திரைப்படத்தை அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஒவ்வொருவரின் ரசனை வேறு வேறு. நமக்கு ஒரு திரைப்படம் பிடித்ததாலையே அந்தப் படம் அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்பது கிடையாது.

ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். எனவே சாரு “குக்கூ” படம் பிடிக்கவில்லை என்று கூறினால், இதில் தவறாக நினைக்க ஒன்றுமில்லை.

ஏனென்றால் சிலருக்கு சென்டியான படங்கள் பிடிக்காது.

நம்ம வாழ்க்கையே சோக கீதமாக இருக்கிறது, இதில் பணம் கொடுத்துச் சோகத்தைப் பார்க்க வேண்டுமா! என்று பலர் விரும்பமாட்டார்கள்.

இதன் காரணமாகவே நம் ஊரில் மசாலாப் படங்களுக்கு வரவேற்பு அதிகம். இதில் தவறும் எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

எனவே, சாரு “எனக்கு இந்தப் படம் பிடிக்கவில்லை, தினேஷ் நடிப்பு காக்காய் வலிப்பு வந்தவன் போல இருக்கிறது!!” என்று கூறியதை ஒரு விமர்சனமாகத் தான் எடுத்துக்கொண்டேன்.

இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட பார்வை

ஆனால், “குக்கூவில் அருவருப்பும் ஆபாச உணர்வும் தான் மிஞ்சுகிறதே தவிர நெகிழ்ச்சி வருவதில்லை. குக்கூ போன்ற படங்கள் ஒரு சமூகத்தின் கலாச்சார சீரழிவின் அடையாளம்” என்று கூறி இருக்கிறார்.

இதைப் படித்த பிறகு தான் செம்ம காண்டாகி விட்டது. இதோடு இன்னும் சில எடுத்துக்காட்டுகளைக் கூறினார் அதையெல்லாம் இங்கே எழுத விரும்பவில்லை.

இவர் கூறிய எடுத்துக்காட்டுகள் அனைத்தும் இவர் எழுதிய நாவல்களிலேயே வருகிறது ஆனால், படித்தும் கேள்விப்பட்டும் இருக்கிறாராம். என்ன கொடுமை சார்!

ஆபாசம் வன்முறை அருவருப்பு

கடந்த வாரம் தான் இவரது “தேகம்” படித்து முடித்தேன். “முடித்தேன்” என்றால், முழுதாக இல்லை, சில பக்கங்களை ஸ்கிப் செய்து.

இப்படி ஆபாசமான வன்முறையான அருவருப்பான புத்தகத்தை எழுதி இருக்கும் சாரு, குக்கூ படத்தை “அருவருப்பும் ஆபாச உணர்வும் தான் மிஞ்சுகிறது” என்று கூறியதைக் தான் என்னால் சகிக்க முடியவில்லை.

ஆபாசம் என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வரையறை இருக்கிறது. யாரும் இது தான் ஆபாசம் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

ஆனால், சாரு எல்லாம் ஆபாசம் அருவருப்பு கலாச்சார சீரழிவு பற்றிப் பேசுவது தான் வேடிக்கையாக இருக்கிறது.

ஆபாசம் அருவருப்பு கலாச்சார சீரழிவு என்பதன் அர்த்தம் என்ன?

சாருக்கு எப்படி ராஜு முருகனின் “வட்டியும் முதலும்” புத்தகம் அருவருப்பாகத் தெரிகிறதோ அது போல மற்றவர்களுக்கு இவரது புத்தகங்கள் அருவருப்பாகத் தெரிந்தால் என்ன தவறு?

இவருக்கு மற்றவர்களின் புத்தகத்தை “அருவருப்பு” என்று விமர்சிக்கும் உரிமை இருக்கும் போது மற்றவர்களுக்கு இருக்கக் கூடாதா? விமர்சித்தால் ஏன் பொங்க வேண்டும்?

Read : வட்டியும் முதலும்

ரசனை இல்லை இலக்கிய அறிவு இல்லை என்று ஏன் குதிக்க வேண்டும். இவரைக் கொண்டாட ஒரு கூட்டம் இருக்கும் போது ராஜு முருகனுக்கு ஒரு கூட்டம் இருக்காதா!

சாருவின் புத்தகங்கள் எனக்கானது இல்லை. இது போன்ற புத்தகங்களை ரசிப்பவர்களுக்கானது.

நம் எண்ணங்களுக்கு ஒத்து வராத புத்தகங்களைப் பற்றித் தெரிந்தும் படித்து விட்டு அதுகுறித்து புலம்புவதில் அர்த்தமில்லை.

எடுத்துக்காட்டுக்கு, வன்முறைப் படம் என்று தெரிந்து அதைப் பார்த்து விட்டு “என்னங்க! படம் முழுக்க வெட்டு குத்து ரத்தமா இருக்கு!” என்று கூறுவதைப் போலத்தான் நம் எண்ணங்களுக்குச் சம்பந்தமில்லாத புத்தகங்களைப் படிப்பதும்.

ஆனால், நான் இதெல்லாம் தெரியாமல் தான் இந்தப் புத்தகங்களைப் படித்தேன்.

அதோடு சாரு அவருடைய புத்தகங்களுக்குக் கொடுத்த பில்டப்பைப் பார்த்து, இவ்வளோ சொல்றாரே! அப்படி என்ன தான் இருக்கு என்று பார்ப்போம் என்ற ஒரு இயல்பான ஆர்வமும் காரணம்.

மேற்கூறியது சாருவுக்கும் பொருந்தும்.

சாரு தன்னுடைய நாவல்களில் கலாச்சாரத்தைக் கபடி ஆட வைத்து விட்டு “குக்கூ” படம் கலாச்சார சீரழிவு என்று கூறியதால், கடுப்பாகி எழுதியதே இக்கட்டுரை.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

13 COMMENTS

  1. உண்மை தான் கிரி அவரு ஒரு ஓட்ட வாய், அவரப்பத்தியும் அவர் நாவல் பாத்தியும் தெரியுனும்னா நம்ம கருந்தேள் கிட்ட கேளுங்க அவர் அவரது அபிமானி.

  2. கிரி… நீங்க ரொம்ப சிரமப்பட்டு இந்த பதிவை எழுதி இருப்பீர்கள்.. உண்மையை சொல்ல போன 3 பரா கூட என்னால் முழுமையாக படிக்க முடியல (பிடிக்கல). தங்களுடைய தளத்தில் நான் இதுவரை முழுமையாக படிக்காத பதிவு இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்… (எனக்கு பொதுவாக பில்டப்ம்/பீலாவும் ஒத்துக்காது..)

    நான் இணையத்தில் வாசிக்க ஆரம்பித்த பின் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அ.முத்துலிங்கம்…இவர் பல நாடுகளில் பணியாற்றியதால் அனுபவம் அதிகம். அந்த நிகழ்வுகளை இவர் விவரிக்கும் அழகே தனி தான்.
    தனக்கு நடந்த மோசமான ஒரு அனுபவத்தை கூட நகைசுவையாகவும்/ வேடிக்கையாகவும் விவரிப்பார். நேரம் இருப்பின் இவரது தளத்தை வாசிக்கவும்.. http://amuttu.net/

  3. மிக நாகரீகமான பதிவு கிரி.. 🙂

    சாருவுக்கு ஆபாசம்,அருவருப்பு, கலாச்சார சீரழிவு போன்றவற்றிற்கு அர்த்தம் தெரியாது போலும்..அவரோட புத்தகங்களில் அப்படி எதுவுமே கிடையாது,ஆனால் அவர் பார்க்கிற படங்களில், படிக்கிற புத்தகங்களில் மட்டும் தான் இருக்குதுன்னா….
    ஐயோ நிஜமாவே முடியல சாமி..எங்க இருந்துய்யா வரீங்க நீங்கல்லாம்…

  4. கிரி, நான் அளித்த பின்ணூட்டம் இதில் காணவில்லை கிரி.. நான் மீண்டும் பதிய வேண்டுமா? இல்லை வேண்டாமா???

  5. மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல், வைத்துக் கொள்ளத் தெரியாமல் நான் நினைத்தவற்றை, சொல்ல விரும்புவதை அது எப்பேற்பட்டதாக இருந்தாலும் அப்படியே பட்டவர்த்தனமாக எழுதிவிடுபவர் சாரு என்று என் நண்பர் சொன்ன விமர்சனம் நான் அவரைக் கவனித்த வரையிலும் உண்மையே.

  6. வேர்ட்ப்ரஸ் வைத்து தான் நினைத்தபடி செயல்பட முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கு எப்போதும் உங்கள் தளத்தைத்தான் சிபாரிசு செய்கின்றேன். உங்கள் தள வடிவமைப்பின் காதலன் நான்.

  7. வணக்கம் கிரி.. சாருவின் நாவல்கள் எதையும் நான் படிக்கவில்லை. இவர் இளையராஜாவின் இசையை அடிக்கடி கடுமையாக விமர்சிப்பதை அறிந்திருக்கிறேன். குக்கூ படம் ஆபாசமாக இருக்கிறது என கூறியுள்ள இவர் எழுதியுள்ளதாக தாங்கள் குறிப்பிட்ட அந்த நாவலை யாராவது படமாக எடுத்து அதற்கு இவர் விமர்சனம் எழுதினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கிறேன் ..

  8. சாரு புத்தகங்களை விட (இதுவரை ஒன்றை கூட படித்ததில்லை) அவர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளே (சம்பவங்களே) அதிக பிரபலம் அடைந்திருக்கின்றன..

    எனக்கு நண்பர்களாக இருப்பவர்கள் என் புத்தகத்தை படித்திருக்கவேண்டும் / கல்லூரி அழைப்பில் பணத்திற்கு பதில் தயிர்சாதம் கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் / பேஸ்புக் பெண் பிரச்சினை / ஒரு காலத்தில் நித்தியின் விசிறி / சுஜாதாவோடு கம்பேரிசன் – என்றெல்லாம் ஏகத்துக்கும் இருக்கு. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என்று வியந்திருக்கிறேன்.

    ஒருத்தருக்கு வெளியில் இருந்து நண்பராக இருப்பது பெரியவிஷயமில்லை விசுவாசியாக இருப்பது ரொம்ப கஷ்டம். எப்படி சொல்றேன்னா.. நான் உங்க நண்பர் ஆனா உங்க புத்தகத்தை / எழுத்துக்களை படிக்கவில்லை என்று சொல்லிவிடலாம். ஆனா.. விசுவாசிகள்… பிடிக்காவிட்டாலும் புத்தகத்தை படித்து ஆகா ஓகோ என்று சொல்வதோடு கேட்கிற கேள்விகளுக்கு சரியாக மனம் கோணாதவாறு பதில் சொல்ல வேண்டும். அப்படி விசுவாசிகள் சிலர் இவருக்கு இருக்கின்றனர்.. அவர்களின் சார்பாகத்தான் இந்த கருத்து (இது யாருக்கும் பொருந்தும்)

  9. நண்பர் கிரி, சர்ச்சைகள் மூலமாக பிரபலமடைந்திருப்பார் போல. ஆனால் பெரிய பில்டப் எல்லாம் ரொம்ப நாள் நீடிக்காது என்பதற்கு அவரது எழுத்துக்களைப் படித்து விட்டு நீங்க ஒதுக்கியதே நல்ல உதாரணம். காப்பி குடிக்கிறவன் காளியாகுடி ஹோட்டலுக்கு போறான். குடிகாரன் டாஸ்மாக்-கு போறான். விட்டுத் தள்ளுங்க.

  10. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @யாசின் பில்டப் பீலா 🙂 என்னைய சொல்றீங்களா.. சாருவ சொல்றீங்களா

    நீங்கள் கூறிய அ.முத்துலிங்கம் தளம் படித்துப் பார்க்கிறேன்.

    நீங்க என்னோட பதிவை படிக்கவில்லை என்பதால் என்னோட தளம் கோபித்துக்கொண்டு உங்க கமெண்ட் ஸ்பாம் க்கு அனுப்பி விட்டது 🙂 🙂

    @பிரபு நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க.. நீங்க சொன்னது மாதிரியே இதை எப்படி ஒருவர் அச்சிட்டு இருக்க முடியும் என்று நினைத்தேன்.. அதை எழுதலாம் என்று இருந்தேன்.. ஆனால் அது உயிர்மையை குறிப்பதாக வரும் என்று விட்டு விட்டேன். இதை ப்ரிண்ட் போட்டவர் அதோட வேலையை விட்டுட்டு தொழிலுக்கு முழுக்கு போட்டு இருப்பார் என்று நினைக்கிறேன் :-)

    @ஜோதிஜி அவர் வெளிப்படையா பேசுறது என்னமோ சரி தான்.. ஆனால் மற்றவங்க வெளிப்படையா பேசுனா கொந்தளிக்கிறாரே! 🙂 உண்மையில் அவர் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கூறுவது சில நேரங்களில் ஆச்சர்யமாக இருக்கும் ஆனால், கொஞ்ச நாள் கழித்து பல்டி போட்டு விடுவார் சில விசயங்களில்.

    அப்புறம் உங்க வோர்ட்பிரஸ் பாராட்டிற்கு நன்றி

    @சரத் உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி 🙂 அவர் படமாக எடுத்தால் படம் சென்சாரே ஆகாது 🙂

    @ராஜ்குமார் “இது யாருக்கும் பொருந்தும்” இதில் உள் குத்து எதுவும் இருக்கிறதா 😀

    @நடராஜன் உங்க உதாரணம் ஹி ஹி 🙂

  11. நீங்க சொன்னதையே தான் இங்க சொல்லியிருக்கேன் அவரது புத்தகங்கள் எதுவும் நான் படித்ததில்லை உங்க கட்டுரை படித்த பிறகு எனக்கு தோன்றியது இது தான்

    நம் எண்ணங்களுக்கு ஒத்து வராத புத்தகங்களைப் பற்றி தெரிந்தும் படித்து விட்டு அது குறித்து புலம்புவதில் அர்த்தமில்லை.(நீங்க சொன்னது தான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here