கலைஞருக்கு தலைவலியாகும் சன் குழுமம்

23
கலைஞருக்கு தலைவலியாகும் சன் குழுமம்

ழகிரி (தி மு க) சன் குழுமம் சண்டை ஆன பிறகு திமுக தரப்புச் செய்திகளுக்கு முக்கியத்துவம் குறைத்து, அரசின் குறைகளைச் சுட்டி காட்டி சன் குழுமம் செய்தி வெளியிட்டது. Image Credit

கலைஞருக்கு தலைவலியாகும் சன் குழுமம்

அதுவரை முக்கியத்துவம் கொடுக்கப்படாத அதிமுக, தேமுதிக, மதிமுக மற்றும் பாமக தரப்புச் செய்திகளுக்குச் சிறப்புக் கவனம் அளிக்கப்பட்டது.

இதில் அதிமுக செய்திகளைப் பார்த்து அதிமுகவினரே வியப்படைந்து இருப்பார்கள்.

அழகிரி மற்றும் திமுக தரப்பு செய்திகளைப் போட்டுத் தாக்கியதால் கடுப்பான கலைஞர் இனி திமுக சம்பந்தபட்ட விளம்பரங்கள் செய்திகள் எதையும் தினகரனுக்குக் கொடுக்கக் கூடாது என்று கூறி விட்டார்.

கலைஞர் தொலைகாட்சி வந்த பிறகு சன் தொலைகாட்சிக்கு அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு விட்டது.

சன் செய்திகள் மற்றும் மற்ற நிகழ்ச்சிகளில் இருந்த தொகுப்பாளர்கள் பலர் கலைஞர் தொலைக்காட்சிக்கு மாறி விட்டனர் அல்லது மாற்றப்பட்டு விட்டனர்.

அனைத்துப் புதுப் படங்கள் உரிமையையும் கலைஞர் தொலைகாட்சி வாங்கிக் கொண்டு இருக்கிறது.

TRP

இசை அருவிக்குச் சன் மியூசிக்கை விட TRP ரேட்டிங் அதிகம் ஆகி விட்டதாகத் தினமணி முன்பு செய்தி போட்டு இருந்தது.

இதனால், ஏற்கனவே காண்டில் இருந்த சன் குழுமம், அரசுக்குப் பிரச்சனை அளிக்கக்கூடிய பல செய்திகளைப் போட்டு வந்தது. தற்போது இது இன்னும் அதிகமாகி விட்டது என்றே தோன்றுகிறது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பெட்ரோல் தட்டுப்பாடு சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட போது அவர்கள் தொடர்ந்து அது பற்றிய செய்திகளைக் கொடுத்த வேகத்தைப் பார்த்தால் நம்ப முடியாததாக இருந்தது.

உண்மையிலேயே பிரச்சனை இருந்தது என்பது வேறு விஷயம் ஆனால், இவர்கள் செய்தி கொடுப்பதில் காட்டிய ஆர்வம் எனக்கு மிக வியப்பு.

அதுவும் பொது மக்கள் ஒவ்வொருத்தராகப் பேட்டி எடுத்த போட்ட போது நம்பவே முடியவில்லை.

பொது மக்களுக்கு இது நல்ல விஷயம் தான் என்றாலும் கலைஞருக்குத் தர்மசங்கடத்தையே அளித்து இருக்கும்.

மின்சாரம் எரிபொருள்

தற்போது மின்சாரத் தட்டுப்பாட்டைத் தினமும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகிறது.

பொது மக்கள் பேட்டிகளை வெளியிட்டு மின்சாரப் பிரச்சனையால் பிரிட்ஜ், மிக்சி உட்படப் பல மின் சாதனங்கள் கெட்டு போய் விட்டதாக அவர்கள் கூறுவதைப் போட்டுத் தாக்கி வருகிறது.

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத் தட்டுப்பாடால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டதாகத் தினமும் செய்தி போட்டு வருகிறது.

அதோடு இல்லாமல் டீ யின் விலை சென்னையில் 4 ரூபாய் ஆகி விட்டதாகக் கொட்டை எழுத்தில் போட்டு இருக்கிறது (இவை அனைத்தும் உண்மை தான் என்பது வேறு விஷயம்).

தனது தொடர் விளம்பரத்தின் மூலம் மற்றும் கவர்ச்சிகரச் செய்திகளால் கிராமம் உட்படப் பல இடங்களைத் தினகரன் சென்றடைந்து இருக்கிறது.

தினகரன் மட்டும் செல்லவில்லை கூடவே திமுக எதிர்ப்பு செய்திகளும் அவர்களை அடைந்து கொண்டு இருக்கிறது.

என்ன தான் பலத்துடன் கலைஞர் தொலைக்காட்சி செய்தி இருந்தாலும் இன்னும் பலர் சன் செய்திகளையே பார்க்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

ஏற்கனவே, கடும் மின்சாரத் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் அதிருப்தியில் இருக்கும் மக்கள், இவர்கள் தொலைக்காட்சி செய்தி மற்றும் பத்திரிகை செய்தியால் இன்னும் கோபம் அடைவார்கள் என்றே கருதுகிறேன்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

23 COMMENTS

  1. //முரளிகண்ணன் said… கிரி நீங்க எந்தப்பக்கம்?//நான் எந்த பக்கமும் கிடையாதுங்க.. :-)//சூப்பர் ஸ்டாரை வறுத்ததால் சன் குழுமம் மீது உங்களுக்கு வருத்தமா?//வருத்தம் இல்லை செம கோபம். இவர்கள் வேண்டும் என்றே பிரச்னையை பெரிதாக்கி விட்டார்கள். இவர்களை மட்டும் கூற முடியாது பெரும்பாலான ஊடகங்கள் இதை தான் செய்தன, இவர்கள் பங்கு அதிகம் என்று வேண்டும் என்றால் கூறலாம். நேற்று குசேலன் பிரச்சனை குறித்து நடந்து கூட்டத்தில் திரை அரங்கு உரிமையாளார்கள் நாங்கள் கூறாததை எல்லாம் செய்தித்தாளில் போட்டு விட்டார்கள் என்று கூறி குசேலன் பிரச்னையை முடித்து விட்டார்கள். இது பற்றி தினத்தந்தி தவிர வேறு எந்த முக்கிய ஊடகத்திலும் வரவில்லை. இது தான் நடுநிலை செய்தி தருகிறோம் என்று கூறி கொண்டு இருக்கும் ஊடகங்கள் செய்வது. உங்கள் வருகைக்கு நன்றி முரளி கண்ணன்.

  2. //புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
    நோ கமெண்ட்ஸ்..ஓன்லி அட்டன்டெண்ஸ் :))//

    அப்துல்லா நீங்க தான் கமெண்ட் சொல்லணும் :-)..இப்படி எல்லாம் எஸ்கேப் ஆக கூடாது

  3. //தீலிபன் said…
    உண்மையில் அழகிரி காரணம் இப்போது இல்லை, கலைஞர் தொலைக்காட்சி பெரும்பாலான நேயர்களை சென்று அடைந்து சன் தரப்பிற்கு அதிர்ச்சி அளித்து உள்ளது. இன்னும் கொஞ்சம் நாட்களில் புது பொலிவுடன் கலைஞர் செய்தி தொலைக்காட்சி வந்தால் சன் தலையில் துண்டு தான்//

    நான் அவ்வாறு நினைக்கவில்லை, சன் டிவி க்கு பிரச்சனை வரலாம் ஆனால் அதற்க்கு சமாளிக்கும் திறன் இருக்கிறது, ஏதாவது பொய்யை போட்டாவது இல்லை ஏதாவது நிகழ்ச்சியை பிரபலபடுத்தி திரும்ப திரும்ப ஒளிபரப்பி மக்களை கவர்ந்து விடும். முன்பு போல தனி ராஜாங்கம் நடத்த முடியாது, கொஞ்சம் பயத்துடன் தான் இருக்க வேண்டும். சன் டிவி க்கு மார்க்கெட்டிங் டெக்னிக் நன்றாக தெரிந்து இருக்கிறது. அதை வைத்தே தற்போது தன்னை ஓரளவு நிலை நிறுத்த முடிகிறது. அது இப்போது ஆட்டம் கண்டு இருப்பது உண்மை தான்.

    உங்கள் வருகைக்கு நன்றி திலீபன்.

  4. சன் டிவியின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி வருவது ஒரு பக்கம். போன பதிவில் நான் சொன்ன ஆக்டிவ் அரசியலில் இதுவும் சேரும்:). நீங்கள் சொன்னா மாதிரி உண்மையில் மக்கள் மேல் உள்ள அக்கறையில் சொல்கிறார்களா அல்லது சொந்த லாபத்துக்கா என்பதெல்லாம் தாண்டி மக்கள் நலனுக்காக எழுப்பப் படும் கேள்விகள் என்கிற வரையில் அரசு வேகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள தூண்டுகோலாக இது இருக்குமேயானால், நல்லது நடக்கட்டும்.

  5. //ராமலக்ஷ்மி said…
    சன் டிவியின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி வருவது ஒரு பக்கம்.//

    சன் டிவி மீது நான் எப்போதும் நம்பக தன்மை வைத்ததில்லை. தனக்கு வேண்டும் என்றால் உயர்த்தி கூறவும் வேண்டாம் என்றால் கீழ்த்தரமான வேலையில் இறங்கவும் தயங்காது

    //மக்கள் நலனுக்காக எழுப்பப் படும் கேள்விகள் என்கிற வரையில் அரசு வேகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள தூண்டுகோலாக இது இருக்குமேயானால், நல்லது நடக்கட்டும்.//

    என்னுடைய கருத்தும் அதுவே. ஆனால் இது தனக்கு பிடிக்காதவர்களை அழிக்கவே இதை பயன்படுத்தி வருகிறது, அதில் இதை போல மக்கள் பிரச்சனைகளும் வருவது நம்மை போன்றவர்களுக்கு நல்லது தான்.

    உங்கள் வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  6. //நல்லதந்தி said…
    🙂 உண்மையைச் சொன்னால் கலைஞர் டிவி,சன்,விஜெய்,ஜெயா,வுக்குப்பின் தான் உள்ளது சொல்லப்போனால் ராஜ் டிவி விட சில நிகழ்ச்சிகளில் பின் தங்கிதான் உள்ளது!.//

    சிங்கையில் சன் மற்றும் விஜய் மட்டுமே வருவதால் எனக்கு அது பற்றி கருத்து கூற முடியவில்லை. நான் பலத்துடன் என்று கூறியது அரசு அவர்கள் பக்கம் இருப்பதை வைத்து. எனென்றால் செய்திகளில் அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் எங்கே வேண்டும் என்றாலும் செல்ல அவர்களால் முடியும் அனுமதியும் எளிதாக கிடைக்கும்.

    உங்கள் வருகைக்கு நன்றி நல்லதந்தி.

  7. உண்மையில் அழகிரி காரணம் இப்போது இல்லை, கலைஞர் தொலைக்காட்சி பெரும்பாலான நேயர்களை சென்று அடைந்து சன் தரப்பிற்கு அதிர்ச்சி அளித்து உள்ளது. இன்னும் கொஞ்சம் நாட்களில் புது பொலிவுடன் கலைஞர் செய்தி தொலைக்காட்சி வந்தால் சன் தலையில் துண்டு தான்.

  8. //tamil cinema said…
    சன் குழுமம் தமிழகத்தில் சேனல் உலகில் வேரூன்றி விட்டது. இதன் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது//

    வளர்ச்சியை தடுக்க முடியாது ஆனால் முன்பு போல வேகமாக நடை போட முடியாது தற்போது விஜய் டிவி யை பலரும் பார்க்க தொடங்கி விட்டார்கள்.

    //இப்படி சேனல் யுத்தத்தில் சன்னுக்கு போட்டியாக ஸ்டார் நிறுவனமே பின் தள்ளப்பட்ட நிலையில் கலைஞர் அன்கோ (நான் சொல்வது ஊடகங்களை) எப்படி அசைத்தாலும் இந்த மரம் விழப்போவதில்லை//

    மரம் விழ வாய்ப்பில்லை என்றாலும் ஆட்டம் காண வாய்ப்புண்டு. யானைக்கும் அடி சறுக்கும், தற்போது முன்பு போல இல்லை, போட்டிகள் அதிகம் ஆகி விட்டது, எனவே முன்பு போல தனிக்காட்டு ராஜாவாக இருக்க முடியாது. முன்பு இருந்த சன் க்கு இருந்த ரசிகர் வட்டம் இல்லை, கொஞ்சம் குறைந்து விட்டது. எனவே இதை தக்க வைக்கவே இது ரொம்ப சிரமப்பட வேண்டும் இந்த போட்டி டிவி உலகத்தில்.

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தமிழ் சினிமா.

  9. //என்ன தான் பலத்துடன் கலைஞர் தொலைக்காட்சி செய்தி இருந்தாலும் //
    🙂 உண்மையைச் சொன்னால் கலைஞர் டிவி,சன்,விஜெய்,ஜெயா,வுக்குப்பின் தான் உள்ளது சொல்லப்போனால் ராஜ் டிவி விட சில நிகழ்ச்சிகளில் பின் தங்கிதான் உள்ளது!.

  10. கிரி நல்ல பதிவு.

    உனக்காகப் பொய் சொல்பவன், உனக்கு எதிராகப் பொய் சொல்லத் தயங்க மாட்டான் னு ஒரு பழமொழி இருக்கு. அது உண்மைதான் போலிருக்கு.

  11. கிரி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. கலைஞர் அன் கோ எத்தனை ஊடகங்கள் வழியாக சன் குழுமத்தை நொறுக்க நினைத்தாலும் விளைவு என்னவோ பூஜ்யம் தான் கிடைக்கும். இப்போது நாளிதழ்களில் பக்கபலமாக தினத்தந்தி மற்றும் தினமலரை வைத்துக்கொண்டு ஏதேதோ மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். சன் குழுமம் தமிழகத்தில் சேனல் உலகில் வேரூன்றி விட்டது. இதன் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அதே நேரத்தில் இன்னொரு கூடுதலான செய்தி என்னவென்றால் நகைச்சுவைக்காகவே சன் குழுமத்தில் இருந்து இன்னொரு சேனலும் விரைவில் உதயமாகிறது. இப்படி சேனல் யுத்தத்தில் சன்னுக்கு போட்டியாக ஸ்டார் நிறுவனமே பின் தள்ளப்பட்ட நிலையில் கலைஞர் அன்கோ (நான் சொல்வது ஊடகங்களை) எப்படி அசைத்தாலும் இந்த மரம் விழப்போவதில்லை.

  12. //வடகரை வேலன் said…
    உனக்காகப் பொய் சொல்பவன், உனக்கு எதிராகப் பொய் சொல்லத் தயங்க மாட்டான் னு ஒரு பழமொழி இருக்கு. அது உண்மைதான் போலிருக்கு.//

    வடகரை வேலன் கலக்கலா சொன்னீங்க 🙂 நமக்கு ஆதரவா கூறவில்லை என்றாலும் பரவாயில்லை (பொய்யாக) எதிராக கூறாமல் இருந்தாலே போதுமானது. உதவி பண்ணவில்லை என்றாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும்.

    உங்கள் வருகைக்கு நன்றி

  13. //ஜோசப் பால்ராஜ் said…
    எஸ்சிவி மூலம் இவர்கள் கேபிள் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் இத்தனை நாட்கள் இவர்கள் ஒரு பொய்யான புள்ளிவிவரத்தை காட்டிக்கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.//

    அப்படியா! இது எனக்கு புதிய செய்தி. ஒருத்தரே எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்க முடியாது. பில் கேட்ஸ் அவர்களே இரண்டாவது இடத்திற்கு வரும் போது மற்றவர்கள் ஏமாத்திரம். மாற்றம் ஒன்று தான் மாறாமல் இருக்கிறது.

    உங்கள் வருகைக்கு நன்றி ஜோசப் பால்ராஜ்.

  14. கேபிள் வழியாக பார்ப்பவர்களை கொண்டு எடுக்கப்பட்ட டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து சன் டிவி நிகழ்ச்சிகளே முண்ணணியில் இருப்பதாக தெரியவந்தது. ஆனால் நேரடியாக வீட்டிற்கு இணைப்பை பெறும் டைரக்ட் டூ ஹோம் முறையை கணக்கில் கொண்டு டிஆர்பி ரேட்டிங்கை கணக்கிடச் சொல்லி தொலைகாட்சிகளை கட்டுபடுத்தும் மத்திய அரசின் அமைப்பு சொல்லி, புதிய முறையில் கணக்கிட்டபோது சன் டிவி நிகழ்ச்சிகளை விட மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிக புள்ளிகளைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. எஸ்சிவி மூலம் இவர்கள் கேபிள் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் இத்தனை நாட்கள் இவர்கள் ஒரு பொய்யான புள்ளிவிவரத்தை காட்டிக்கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

  15. // மங்களூர் சிவா said…
    எதோ நல்லது நடந்தா சரிதான்!!
    :)))//

    🙂 வழிமொழிகிறேன்

    =======================================================

    //இறக்குவானை நிர்ஷன் said…
    தமிழ்த் திரைப்படங்களில் டிவி பற்றிய காட்சி ஒளிபரப்படும்போது அன்று முதல் இன்றுவரை சன் செய்திகள் என்றே குறிப்பிடப்படுவதுடன் இலட்சினையும் காண்பிக்கப்படுகிறது.//

    தற்போது கலைஞர் டிவி தான் காண்பிக்கப்படுகிறது, கவனித்து பாருங்கள். இலட்சினை என்றால் என்ன?

    உங்கள் வருகைக்கு (நீண்ட நாட்களுக்கு பிறகு) நன்றி நிர்ஷன்.

  16. //வந்தியத்தேவன் said…
    நேற்றைய சன் செய்திகளில்(03.09.2008) விநாயகர் சதுர்த்திக்கு வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு அரசு பேருந்துகள் இயங்கவில்லை என்ற செய்தியை சிலரின் பேட்டிகளுடன் ஒளிபரப்பினார்கள். இந்த வார குங்குமத்தில் மின்சாரத் தடைக்கு எதிராக கவர் ஸ்டோரி எழுதியிருக்கிறார்கள். சன் செய்திகளில் தினமும் மின் தடை பற்றிய செய்திகளும் ஜெயா கலைஞருக்கு எதிராக செய்கின்ற கண்டனங்களும் ஒளிபரப்பி தாத்தாவின் முதுகில் மாறன் சகோதரர்கள் மீண்டும் மீண்டும் குத்துகின்றார்கள்.//

    உண்மை தான் வந்தியத்தேவன். அனைவரும் இதை கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு சில நேரம் இது எரிச்சலையும் தருகிறது, தொடர்ந்து ஒன்றையே கூறி கொண்டு இருப்பது. கலைஞர் செம கடுப்பில் இருப்பார்.

    //சன்னில் தற்போது அழுகை சீரியல்களைத் தவிர வேறு எந்த நல்ல நிகழ்ச்சிகளும் இல்லை. //

    சன் ல் சீரியல்கள் இல்லை என்றால் பெரும் திண்டாட்டம் தான். தன்னுடைய் மார்க்கெட்டிங் திறமையாலே இன்றும் நிற்க முடிகிறது.

    //டாப் டென் தங்களுக்குத் தேவையானவர்களை மட்டும் முன்னிற்க்கு விடுவார்கள் உளியின் ஓசை டாப் டென்னில் வரவேயில்லை. குருவி இன்னமும் டாப் டென்னில் இருக்கிறது.//

    சன் டிவி டாப் 10 மாதிரியான கேவலமான டாப் 10 இல்லை. இதில் நடுநிலைமையான விமர்சனம் என்று விளம்பரம் வேறு செய்கிறார்கள். கலைஞர் டிவி யும் இவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று உளியின் ஓசையை தசாவதாரம் படத்தோடு முதல் இடத்தில் காட்டினார்கள். சுப்ரமணியபுரம் படம் எல்லாம் மூன்றாம் நான்காம் இடத்தில் இருந்தது.

    மக்கள் தான் எப்போதும் போல இளிச்சவாயர்களாக இதை வேறு வழி இல்லாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    உங்கள் வருகைக்கும் விரிவான கருத்திற்கும் நன்றி வந்தியத்தேவன்.

  17. தமிழ்த் திரைப்படங்களில் டிவி பற்றிய காட்சி ஒளிபரப்படும்போது அன்று முதல் இன்றுவரை சன் செய்திகள் என்றே குறிப்பிடப்படுவதுடன் இலட்சினையும் காண்பிக்கப்படுகிறது.

    ஒப்பீடுகள் இதனூடாகவும் வெளிக்கொண்டுவரப்படுகி்ன்றனவல்லவா?

  18. நேற்றைய சன் செய்திகளில்(03.09.2008) விநாயகர் சதுர்த்திக்கு வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு அரசு பேருந்துகள் இயங்கவில்லை என்ற செய்தியை சிலரின் பேட்டிகளுடன் ஒளிபரப்பினார்கள். இந்த வார குங்குமத்தில் மின்சாரத் தடைக்கு எதிராக கவர் ஸ்டோரி எழுதியிருக்கிறார்கள். சன் செய்திகளில் தினமும் மின் தடை பற்றிய செய்திகளும் ஜெயா கலைஞருக்கு எதிராக செய்கின்ற கண்டனங்களும் ஒளிபரப்பி தாத்தாவின் முதுகில் மாறன் சகோதரர்கள் மீண்டும் மீண்டும் குத்துகின்றார்கள்.

    கலைஞர் டிவியின் வருகை மாறன் சகோதரர்களின் வருமானத்தை குறைத்தது என்னவோ உண்மைதான். சன்னில் தற்போது அழுகை சீரியல்களைத் தவிர வேறு எந்த நல்ல நிகழ்ச்சிகளும் இல்லை. டாப் டென் தங்களுக்குத் தேவையானவர்களை மட்டும் முன்னிற்க்கு விடுவார்கள் உளியின் ஓசை டாப் டென்னில் வரவேயில்லை. குருவி இன்னமும் டாப் டென்னில் இருக்கிறது.

  19. //Sharepoint the Great said…
    எங்கள் வீட்டிலே ஸ்டெபிலைசர் திடீர் திடீர்னு வேலை செய்யுது. பல நேரங்களில் வேலை செய்ய மறுக்கிறது. – (நான் பெங்களூர்ல கீறேன்). இதுக்கும் கலைஞர் அரசுதான் காரணமோ?
    (சும்மா காமெடிதான்)//

    பாகிஸ்தான் சதியாக இருக்கும் :-))))

  20. எங்கள் வீட்டிலே ஸ்டெபிலைசர் திடீர் திடீர்னு வேலை செய்யுது. பல நேரங்களில் வேலை செய்ய மறுக்கிறது. – (நான் பெங்களூர்ல கீறேன்). இதுக்கும் கலைஞர் அரசுதான் காரணமோ?

    (சும்மா காமெடிதான்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here