ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு இரகசியம் இருக்கும். அவ்வாறு மறைக்கப்பட்ட இரகசியம் ஒரு நாள் வெளியே வந்தால் என்ன ஆகும் என்பதே Stay Close. Image Credit
Stay Close என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.
Stay Close
குடும்பத்தலைவியான மேகன் தனது 17 வருட திருமண வாழக்கையில் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் கழிப்பவர். 17 வருடங்கள் இல்லற வாழ்க்கையைக் கடப்பதே (அதுவும் வளர்ந்த நாடுகளில்) பெரிய சாதனை தானே!
இயல்பாகச் சென்றுகொண்டு இருக்கும் அவரது வாழ்க்கையில் திடீர் என்று அவர் பழைய வாழ்க்கை குறித்த சர்ச்சை ஏற்படுகிறது.
‘என் பேர் மேகன். எனக்கு இன்னொரு பேர் இருக்கு!‘ என்று கூறி அதன் தொடர்பான பிரச்சனைகளைக் கடக்கிறாரா மாட்டிக்கொள்கிறாரா என்பதே Stay Close.
இரகசியம்
இரகசியம் இல்லாத நபர் குறைவு. ஏதாவது ஒன்றை மற்றவர்களிடம் கூற முடியாத நிலையில், தனக்கு மட்டுமே தெரிந்தவையாக இருக்கும்.
இக்கதையில் வரும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இரகசியமான கதையுள்ளது. அதை எப்படிக் கடக்கிறார்கள் என்பதைச் சுவாரசியமாகக் கூறியுள்ளார்கள்.
குறிப்பிட்ட சில தேதியில் சிலர் காணாமல் போகிறார்கள். எதனால் காணாமல் போகிறார்கள், யார் காரணம்? என்ற விசாரணை துவங்குகிறது.
இது ஒரு குடும்பம் கலந்த புலன் விசாரணை கதை. குடும்பம் சார்ந்த நிகழ்வுகளும் விசாரணை சார்ந்த நிகழ்வுகளும் இணைந்து குழப்பம் இல்லாமல் வருவது சிறப்பு.
மேகன், கணவர், அவரது பெண், நண்பர்கள் என்று ஒவ்வொருவரையும் செமையாக இணைத்துள்ளார்கள். அதாவது திணிப்பாக இல்லாமல் இயல்பாக உள்ளது.
இதில் என்ன நகைச்சுவை என்றால், 17+ வருடங்களைக் கடந்தும் பலர் அதே தோற்றத்திலேயே இருப்பது தான்.
யாரோ ஒருவர் என்றால் பரவாயில்லை ஆனால், பெரும்பாலானவர்கள் எந்தப் பெரிய மாற்றமும் இல்லாமல் இருப்பது உறுத்துகிறது.
அதோடு அனைவரும் பக்கத்திலேயே உள்ளனர் ஆனால், கிட்டத்தட்ட ஒருவருமே சந்திக்காதது போலக் காட்டுகின்றனர்.
இந்தியா போன்ற நாடுகள் என்றால், கூட்டமான மக்களிடையே சந்திக்க வாய்ப்புகள் இல்லை ஆனால், இது போன்ற நகரங்களில் எப்படிச் சாத்தியம்!
மறைந்து / விலகி இருக்க நினைப்பவர் அதே பகுதியிலேயே எப்படிச் சுற்றிக்கொண்டு இருக்க முடியும்?!
இது போன்ற கேள்விகள் இருந்தாலும், திரைக்கதை சுவாரசியமாக உள்ளது.
இங்கிலாந்து
இங்கிலாந்து சீரீஸ் பார்த்து, இங்கிலாந்து சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை கொடுக்கிறது 🙂 .
லண்டன் போன்ற கூட்டம் மிகுந்த இடங்களை மட்டுமே அதிகம் கேள்விப்பட்டு ஆட்கள் குறைவாக உள்ள இடங்களைப் பார்க்கும் போது வியப்பாக உள்ளது.
இங்கிலாந்து சிறிய நாடு ஆனால், இது போன்ற சீரீஸ் பார்க்கும் போது அப்படியொரு எண்ணம் வராது. ஏராளமான பரந்து விரிந்த பசுமையான இடங்கள், காடுகள்.
அதோடு மூலைக்கு ஒரு வீடு கடை என்றுள்ளது. பார்த்தவரை பெரும்பாலான இங்கிலாந்து சீரீஸில் இது போன்ற இடங்களையே காட்டுகிறார்கள்.
கழுகுப்பார்வை ஒளிப்பதிவில் பார்க்கும் போது இன்னும் அழகு. பின்னணி இசை வழக்கமான த்ரில்லர் படங்களுக்குண்டான அளவில் பரபரப்பாக உள்ளது.
த்ரில்லர் கதை என்பதால், பார்க்கும் போது சுவாரசியம் இருக்காது என்று குறிப்பிட நினைத்தவற்றைக் கூறவில்லை.
இறுதியில் வரும் ட்விஸ்ட் ரொம்ப நன்றாக இருந்தது ஆனால், சம்பந்தப்பட்டவருக்கே அந்த ட்விஸ்ட் தெரியாது என்பது ஒரு பெரிய ட்விஸ்ட் 🙂 .
இரகசியம் என்ற மையக்கருத்தை இறுதிக் காட்சி வரை கொண்டு வந்தது சிறப்பு.
யார் பார்க்கலாம்?
த்ரில்லர் படங்களை விரும்பிப்பார்ப்பவர்கள் அவசியம் பார்க்கவும்.
NETFLIX ல் காணலாம். பரிந்துரைத்தது ராம்.
Genre Crime drama, Mystery-thriller
Based on Stay Close by Harlan Coben
Written by Harlan Coben
Directed by Daniel O’Hara
Starring Cush Jumbo, James Nesbitt, Richard Armitage, Eddie IzzardCountry of origin United Kingdom
Composers David Buckley, Luke Richards
Original language English
No. of episodes 8
Producer Juliet Charlesworth
Cinematography Giulio Biccari
Distributor Netflix
Original release 31 December 2021
கொசுறு
இரகசியம் என்று வந்ததால், ஒன்றை கூற விரும்புகிறேன்.
அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகம் படித்த பிறகு, முடிந்தவரை எனக்கென்று எந்த இரகசியமும் வைக்கக் கூடாதென்று முடிவு செய்தேன்.
கண்ணதாசன் கூறியது போல இரகசியமில்லாதவர்கள் எதற்கும் கவலைப்பட, பயப்படத் தேவையில்லை. தெளிவான மனதுடன் இருக்கலாம் என்று கூறி இருந்தார்.
அவர் கூறியது முற்றிலும் உண்மை என்று அனுபவிப்பதால் கூறுகிறேன் 🙂 .
தொடர்புடைய திரை விமர்சனங்கள்
The Stranger | 2020 | British TV Crime series | Season 1
Bodyguard | British TV Crime series | Season 1
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, நீங்க குறிப்பிட்ட வெப் சீரிஸ் எப்போ பார்ப்பேன் என்று தெரியவில்லை.. உலகில் எல்லோரிடமும் ரகசியம் கொட்டி கிடக்கிறது.. ரகசியம் இல்லாத மனிதன் வெகு குறைவாகவே இருப்பார்கள் என நம்புகிறேன்.. கண்ணதாசன், வாலி இவர்கள் குறித்து பல தகவல்களை அவ்வவ்போது படித்ததும், கேட்டும் வருகிறேன்.. ஒவ்வொரு தகவலும் ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது.. அதிலும் கண்ணதாசன் அவர்கள் வாழ்க்கை, திறந்த வெளி புத்தகம். எந்த கவிஞருக்கு இவ்வாறு எழுத தைரியம் இருக்கும்.. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு.. இது போல பல நிகழ்வுகள்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின் கண்ணதாசன் மிகப்பெரிய திறமைசாலி. அவர் பாடல் வரிகள் அனைத்தும் அட்டகாசம்.
இவர் பாடல் எழுதிய சம்பவங்களை இயக்குநர்கள் பகிரும் போது அவற்றை கேட்க, படிக்க வியப்பாக இருக்கும்.