காதல், அன்பு, பாசம், குடும்பம், சிக்கல்கள், நேர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை ஒருங்கே பிரதிபலிக்கும் சூழ்நிலையில் இவை எவ்வாறு கடந்து செல்லப்படுகிறது என்பதைக் கூறுவதே Madhuram. Image Credit
Madhuram
கொச்சின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உதவியாளர்களாக (Attendant) உள்ளவர்கள் அங்கேயே ஒரு அறையில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
அவர்களின் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளே கதையின் சம்பவங்களாக வருகின்றன.
இறுதியில் ஒவ்வொருவருக்கும் என்ன ஆனது என்பதே Madhuram.
குடும்பம் இல்லாத ஜோஜூ ஜார்ஜ் கப்பலில் 8 மாதங்கள் பணியும், 4 மாதங்கள் விடுமுறையில் ஊரில் அவருக்குத் தெரிந்தவர் உணவகத்தில் உதவியாக இருப்பதும் வேலை.
இது போல ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்தினர் சிகிச்சைக்காக அங்கே தற்காலிகமாகத் தங்கி இருக்கிறார்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வெவ்வேறு விதமான பிரச்சனைகள்.
ஆனால், அவற்றை மறந்து நல்லது நடக்கும் என்று நம்பிக்கையில் இருப்பவர்கள்.
இயல்பான கதை
Home திரைப்படத்தில் அட்டகாசமாக நடித்த இந்திரன் இதிலும் மிக இயல்பாக நடித்துள்ளார்.
இளம் ஜோடியாகக் கெவின், செர்ரி துவக்கத்தில் புரிந்து கொள்ளாமல் இருப்பதும், பின்னர் சூழ்நிலைகளும் மற்றவர்களின் அனுசரணையான அறிவுரைகளாலும் ஏற்படும் மாற்றங்களும் அழகு.
அனைவருமே ஏதாவது ஒரு விதத்தில் நல்லவர்களாக, மற்றவர்களிடம் அக்கறை கொண்டவர்களாக, உதவி புரிபவர்களாக இருக்கிறார்கள்.
கணவன் மனைவிக்குள்ளே இருக்கும் அன்னியோன்யம், அன்பு, பாசம் என்று அனைத்து உணர்ச்சிகளையும் மிகைப்படுத்தாமல் மிக அழகாகக் காட்டியுள்ளார்கள்.
எந்தப் பிரம்மாண்டமும், ஆர்ப்பாட்டமும் இல்லாத நேர்மறையான எண்ணங்களுடனான கதை.
இப்படத்தில் சமையலும் குறிப்பிடத் தக்க அளவில் வருகிறது. நமக்கு அதனோடு பயணிப்பது சுவாரசியமாக உள்ளது.
தினசரி வாழ்க்கை சம்பவங்களைச் சினிமாத்தனமாக இல்லாமல் ஒளிப்பதிவு காட்டுவதே படத்துக்கு இயல்புத்தன்மையை கொடுக்கிறது.
யார் பார்க்கலாம்?
அனைவரும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன் குறிப்பாகத் திருமணமானவர்கள் அவசியம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
Sony LIV ல் காணலாம். தமிழ் மொழிமாற்றம் (Dubbing) உள்ளது.
Directed by Ahammed Khabeer
Written by Ahammed Khabeer
Screenplay by Ashiq Amir, Fahim Safar
Produced by Joju George, Sijo Vadakkan
Starring Joju George, Shruti Ramachandran, Arjun Ashokan, Nikhila Vimal, Indrans
Cinematography Jithin Stanislaus
Edited by Mahesh Bhuvanend
Music by Hesham Abdul Wahab, Govind Vasantha
Distributed by SonyLIV
Release date 24 December 2021
Running time 122 minutes
Country India
Language Malayalam
தொடர்புடைய திரை விமர்சனங்கள்
Mithunam (தெலுங்கு 2012) | அன்புக்கு இல்லை எல்லை
Home (2021 மலையாளம்) ஐந்து நிமிடம் பேசலாமா?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
அன்பறிவு படம் பாருங்க. செமையா இருக்கு. Family sentiment படம். Hotstar ல இருக்கு.
இருப்பதை பார்த்தேன் ஆனால், இன்னும் படம் பார்க்கவில்லை. வார இறுதியில் பார்க்க முயற்சிக்கிறேன்.
Mudhalnee mudivum nee parunga
Feel good movie. Watched it recently. Excellent review as always…
@கோபி பார்க்கும் பட்டியலில் உள்ளது. விரைவில் பார்ப்பேன்.
@ஸ்ரீனிவாசன் எப்படி இருக்கீங்க? 🙂 நன்றி.