நேஷனல் ஜியாகரஃபிக் மிரட்டல் படங்கள்

13
நேஷனல் ஜியாகரஃபிக்

நேஷனல் ஜியாகரஃபிக் வருடாவருடம் நிழற்படங்களுக்கான போட்டிகளை நடத்தி வருகிறது.

2011 ம் ஆண்டுக்கான போட்டியில் 200000 படங்கள் போட்டியில் கலந்து கொண்டன அதில் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.

நேஷனல் ஜியாகரஃபிக்

முதல் பரிசாக Shikhei Goh என்பவர் எடுத்த (தட்டான்) படம் தேர்வாகி இருக்கிறது இது இந்தோனேசியாவில் பதாம் என்ற இடத்தில் எடுக்கப்பட்டது.

இதற்குப் பரிசாக 10000 USD யும் அடுத்த வருடம் நேஷனல் ஜியாகரஃபிக் நடத்தும் செமினாரில் கலந்து கொள்ளவும் வாய்ப்பை வழங்கி உள்ளது.

இத்தனை படங்களை எப்படித்தான் தேர்வு செய்தார்களோ!

மலைப்பாக உள்ளது. ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும் ஒருவருக்கு சிறப்பாகத் தோன்றுவது இன்னொருவருக்கு எதுவுமில்லாததாகத் தோன்றும்.

எனக்குப் பிடித்த சில படங்களை இங்கே பகிர்ந்து உள்ளேன்.

இன்னும் பல படங்கள் http://www.theatlantic.com தளத்தில் உள்ளது விளக்கங்களுடன் அதாவது எந்த நேரத்தில் எந்தச் சூழ்நிலையில் எடுக்கப்பட்டது என்ற விளக்கத்துடன் உள்ளது.

வெறும் படங்களைப் பார்ப்பதை விட அது எப்படி எடுக்கப்பட்டது என்ற விளக்கத்துடன் பார்த்தால் அதன் சிறப்பு இன்னும் தெளிவாகப் புரியும்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்கள் இவை.

Image Credit http://www.theatlantic.com Vinod Vydyanathan

முதல் பரிசு (தட்டான்) Shikhei Goh படம்

மூன்று படங்களைப் பெரிதாகப் போடலாம் என்று மூன்றை தேர்வு செய்வதற்குள்ளே மண்டை காய்ந்து விட்டது.

இதில் எப்படி 200000 படங்களைப் பார்த்து அதில் சிறந்தவற்றை தேர்வு செய்வது!!

அசத்தலான படங்களை அடுத்தவர்களுக்கு வாழ்த்துகள்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

13 COMMENTS

  1. எல்லா படங்களும் அருமை, குறிப்பாக புகை பிடிக்கும் பெரியவர் படம் மிகவும் அருமை.
    பெயரை குறிப்பிடதிற்கும் நன்றி 🙂

  2. ஒவ்வொன்றும் அருமை! எழுத வார்த்தைகளே இல்லை!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!

  3. Is it possible to download all the photos in one click, if there is link share it Giri, just to make a daily wall paper

    amazing pictures

    Thanks again Giri for sharing

  4. கலக்கல் கிரி. என்னதான் தொழில்நுட்பம் உதவி செய்தாலும் அதை சரியா பயன் படுத்த தெரிஞ்சா தான் எந்த ஒரு படைப்பும் உன்னதமாகும். நீங்க சொன்ன மாதிரி தேர்ந்தேடுக்கறதும் ஒரு பெரிய வேலை தான்.

  5. படங்கள், மீண்டும் மயக்கம் என்ன? படத்தை நினையூட்டியது….

  6. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @ஜமால் ஒரே க்ளிக்கில் தரவிறக்கம் செய்ய முடியாது.. நான் ஒவ்வொன்றாக தான் செய்தேன். இதில் இன்னொரு சோகம் உள்ளது தரவிறக்கம் செய்யும் போது அதனுடைய விளக்கம் வருவதில்லை. வேண்டும் என்றால் படத்தையே ஸ்க்ரீன் ஷாட் தான் எடுக்க வேண்டும் விளக்கத்துடன் இது பெரிய வேலை என்பதால் விட்டு விட்டேன். வேறு வழி ஏதும் இருந்தால் சொல்கிறேன்.உங்களுக்கு 20 படம் மின்னஞ்சலில் அனுப்பி உள்ளேன்.

    @பாமரன் நீங்க சொன்ன மாதிரி சுமாரான கேமராவை வைத்து கலக்கலாக எடுக்கவும் ஆள் இருக்கிறார்கள் காஸ்ட்லி கேமராவை வைத்து மொக்கையாக எடுப்பவர்களும் இருக்கிறார்கள். அனைத்திற்கும் ஆர்வம் திறமை தான் காரணம்.

    @யாசின் நீங்க நம்பறீங்களோ இல்லையோ இதைப் பார்த்தவுடன் நானும் இதைத் தான் நினைத்தேன் 🙂

  7. கிரி அண்ணா இலங்கை தமிழர்கள் படும் துன்பம் பற்றி நீங்கள் மற்ற நண்பர்களுக்கு உங்கள் மொழியில் எடுத்து சொல்லுமாறு நான் கேட்டு கொள்கிறேன் தமிழனின் அவல நிலை கண்டு அமெரிக்கா கொந்தளிக்கிறது தமிழனாகிய நாம் நம் வேலையை பார்க்கிறோம் இந்தியாவோ மௌனம் ஒன்றை தாரக மந்திரம் போல் ஜெபிக்கிறது வாக்களிப்பில் இந்தியா யாருக்காக துணை நிற்கும் தமிழனுக்காகவா தமிழன் தலை வாங்கிய சிங்களனுக்காகவா தமிழன் என்றும் ஏமாளியோ கேரளாவும் அடிக்கிறது ஆந்திராவும் அடிக்கிறது கர்நாடக நடிக்கிறது காங்கிரஸ் ஒளிந்து கொண்டது பாரதீயின் பாடல் “தமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா” வெறும் பாடலாகி போய் விடுமோ அமெரிக்கா ஒன்றே தமிழனுக்கு ஆதரவு கொடி காட்டுகிறது தமிழன் எப்போது திருப்பி அடிப்பான் காத்து இருக்கறேன் அடி தமிழா இடியை போல் என்று சொல்ல மனம் துடிக்கிறது தமிழன் எழுவான் வீழ்த்துவான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!