மரியான் [2013]

13
மரியான்

திகளவில் விளம்பரப்படங்கள் மற்றும் A.R ரகுமானின் “வந்தே மாதரம்” பாடலை இயக்கிய பரத் பாலா, ஒரு திரைப்படத்தின் இயக்குனராக “மரியான்” படத்தில் அறிமுகம் ஆகி இருக்கிறார். Image Credit

இவர் தேசிய விருது தேர்ந்தெடுக்கும் குழுவில் இருக்கும் போது தனுஷ் நடித்த “ஆடுகளம்” படத்தில் அவரின் நடிப்பை பார்த்து மரியான் படம் எடுக்க முடிவு செய்து படத்தை எடுத்து இருக்கிறார்.

மரியான் 

காதலியின் தந்தை கடனை அடைத்துக் காதலியை அடைய பணம் சம்பாதிக்க தனுஷ் சூடான் செல்கிறார்.

அங்குப் பணியை முடித்து இந்தியா திரும்பும் வழியில் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். பின் என்ன ஆகிறது என்பது தான் கதை.

விளம்பரப் படம் எடுப்பதற்கும் ஒரு திரைப்படம் எடுப்பதற்கும் மிகுந்த வித்யாசம் இருக்கிறது என்பதை பரத் பாலாவிற்கு படத்தின் முடிவு தெரிவிக்கும் என்று நினைக்கிறேன்.

2.30 மணி நேரம் படத்தில், படத்தின் உண்மையான கதை என்று பார்த்தால் 1.30 மணி நேரம் மட்டுமே இருக்கும்.

விளம்பரங்களில் குறைவான நேரத்தில் அனைத்தையும் சொல்ல வேண்டும். இவர் திரைப்படத்தில் அதிக நேரத்தில் குறைவான விசயங்களைக் கூறி இருக்கிறார்.

தனுஷ் பார்வதி காதல்

படத்தின் முதல் பாதி வெறும் தனுஷ் பார்வதி காதல் மட்டுமே. நிஜமாகவே வேற ஒண்ணுமே இல்லை.

தனுஷ் முதலில் பார்வதி மீது காதல் இல்லாதது போல இருக்கிறார் பின்னர் எதனால் காதலிக்கிறார் என்று தெரியவில்லை.

இந்த ஒரு விஷயத்தை மட்டுமே மனசாட்சியே இல்லாமல் இடைவேளை வரை கொண்டு செல்கிறார்கள்.

பார்வதி தனுஷ் மீது கொண்டுள்ள காதல் ரசிக்கக் கூடியது என்றாலும் அதையே முதல் பாதி முழுவதும் எந்தத் திருப்பமும் இல்லாமல் கொண்டு செல்வது சலிப்பையே தருகிறது.

தனுஷுடன் மாட்டிக்கொள்ளும் ஒரு நபராக ஜகன் (நண்டு – அயன் படத்தில் தமன்னா அண்ணனாக வருவாரே!).

துவக்கத்தில் உடன் இருக்கும் வடா தோசா காரனை செம்ம ஓட்டு ஓட்டிடுவார். எனக்கு செம சந்தோசமாக இருந்தது 🙂 .

இதை அவனுக பார்த்தானுக டென்ஷன் ஆகிடுவானுக 🙂 .

தனுஷ்

தனுஷ் “எலே எலே” என்று பேசுவதில் அவரிடம் இயல்பான பேச்சு நடை இல்லை. தனுஷ்க்கு வேலையே இரண்டாம் பாதியில் தான்.

தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்டு அவர் படும் பாடு ரொம்பக் கொடுமையாக இருக்கும்.

இது போல மாட்டிக் கொண்டவர்களைச் செய்திகளில் படித்தது, அந்தச் சமயத்தில் நினைவில் வந்து சென்றது. தனுஷை ஒரு வழி ஆக்கி விட்டார்கள்.

ரொம்பக் கஷ்டப்பட்டு இருப்பார் என்று நினைக்கிறேன், அதே சமயம் ஒரு வித்யாசமான அனுபவமாகவும் அவருக்கு இருந்து இருக்கும்.

ஊரே மணல் காடாக இருக்கிறது. மிக மிக வறட்சியான பகுதி. எப்படி இங்கெல்லாம் மக்கள் வசிக்கிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது.

எந்தப் பாதுகாப்பும் இல்லை. நாம் எல்லாம் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்.

பார்வதி நன்றாக நடித்து இருக்கிறார், “பூ” படத்தில் நடித்தவரா இவர் என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

ஆனால், அவர் உடல் மொழி பார்த்தால் மணிரத்னம் கதாநாயகி பேசுவது போலவே இருக்கிறது.

உமா ரியாஸ்

முன்னோட்டத்திலேயே கவனித்தேன் படத்திலும் அதிகம் அப்படித் தான் உள்ளது. தனுஷ் அம்மாவாக உமா ரியாஸ். பரத் பாலாவிற்கு உமா ரியாஸ் மீது என்ன கோபமோ!

எத்தனையோ அம்மாக்கள் இருக்கும் போது இவரை எதுக்கு இப்படி கஷ்டப்பட்டு ஒப்பனை செய்து அம்மா ஆக்கினார்கள் என்று தெரியவில்லை.

படத்தில் திரைக்கதை மற்றும் எடிட்டிங் தான் ரொம்ப மோசம். காட்சியமைப்புகள் பல முன்னரே ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.

படம் சீரியசாக போகும் போது திடீர் என்று பார்வதியை காட்டி ஒரு பாடலைப் போட்டு வேகத்திற்கு தடை போடுகிறார்கள்.

நம்மால் காட்சியோடு ஒன்றவே முடியலை. சூடான் பகுதியில் பரபரப்பாக இருக்கும் போது, நம்ம ஊருக்கு வந்து பார்வதியை காட்டுகிறார்கள் அல்லது சூடான் வந்து பாட்டுப் பாடுகிறார்.

சூடான் என்று காட்டப்படும் இடங்கள் நமீபியா என்று கூறப்பட்டது.

அங்கு நடித்தவர்கள் அரை குறை ஆங்கிலமும் அவர்கள் மொழியும் பேசுவதால் படம் பார்ப்பவர்களுக்கு கடுப்பை தரலாம்.

ஒளிப்பதிவு

தனுஷ் நடிப்பிற்குப் பிறகு ஒளிப்பதிவு அதிகம் எதிர்பார்த்து சென்றேன் காரணம் முன்னோட்டம். ஒளிப்பதிவாளர் பெல்ஜியம் நாட்டைச் சார்ந்தவர்.

இந்தப் படத்தின் முன்னோட்டம் பார்த்துத் தனது அடுத்த படத்திற்கு சூர்யா இந்த ஒளிப்பதிவாளரை கேட்கலாமா என்று இருக்கிறார் என்று ஒரு வதந்தி உலவியது.

சூடான் பகுதியில் உள்ள வித்யாசமான / வறட்சியான இடங்கள் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ரகுமான் பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும் பாடல்கள் சில பொருந்தாத இடங்களில் வருவது பாடலின் ரசிப்புத் தன்மையைக் குறைக்கிறது.

“சோனாபரீயா” (இதுக்கு என்ன அர்த்தம்) பாடல் சரியான துவக்கம்.

பின்னணி இசை நன்றாக இருக்கிறது ஆனால், முந்தைய ரகுமான் படங்களை ஒப்பிடும் போது சில இடங்களைத் தவிர ஓகே ரகம் தான்.

வித்யாசமான கதைக்காக பார்க்கலாம். தமிழ் ரசிகர்களுக்கு இது போன்ற கதை புதிது.

இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மொத்தப் படமே அதிக பட்சம் 1.30 மணி நேரத்தில் முடிக்கக்கூடிய அளவில் தான் இருக்கிறது.

மிக மிகப் பரபரப்பாக எடுத்து இருக்க வேண்டிய படத்தைச் சவசவன்னு எடுத்து இருக்காங்க.

சூடான் பகுதிகளுக்காக மற்றும் அந்தப் பகுதி தனுஷ் நடிப்பிற்க்காக பார்க்க விரும்புவர்கள் இந்தப் படத்திற்கு செல்லலாம்.

Directed by Bharat Bala
Produced by Venu Ravichandran
Written by Bharat Bala
Screenplay by Bharat Bala, Sriram Rajan
Starring Dhanush, Parvathi Menon, Salim Kumar
Music by A. R. Rahman
Cinematography Marc Koninckx
Editing by Vivek Harshan
Studio Aascar Films
Distributed by Venu Ravichandran
Release date(s) 19 July 2013[1]
Country India
Language Tamil

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

13 COMMENTS

  1. வயசாகிட்டா இதுதான் பாஸ் பிரச்சனை படத்துல ரசிக்க வேண்டியது கேரளத்து கிழங்கு பார்வதிதான் நடிப்பு சும்மா சூப்பர் 🙂 நமக்கெல்லாம் அதுமாரி ஒரு காதலி கிடச்சா வாழ்கை சொர்க்கம் தான் 🙂 எப்பா பார்த்தாலும் சைக்கோவா தனுசா காட்டி சாவடிக்கிரங்கா இந்த படத்துல அந்த கொடுமை இல்லை

  2. தனுஷ் – அவருக்கு அவரே மெருகூட்ட ஒரு வாய்ப்பு இந்தப்படம்…!

  3. படம் இன்னும் பார்க்கவில்லை.. இந்த வாரத்தில் பார்ப்பேன். தகவலுக்கு நன்றி கிரி.

  4. நேற்று சத்யம் போனோம். பாதி அரங்கம் தான் நிரம்பி இருந்தது. உக்கார முடியல என்று நெறைய பேரு புலம்புவதை கேட்டோம்

    rahman music சூப்பர் camera work also சூப்பர் )

    துள்ளவதோ இளமை என்ற “A” படத்துல நடிச்சவர இது? மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் 🙂

    சுள்ளான் பார்த்து தான் நீங்க அவரோட ரசிகரா? இல்லை ரஜினி மருமகன் என்பதால?

  5. “சோனாபரீயா” (இதுக்கு என்ன அர்த்தம்) – கடல் ராணி

    • “சோனாபரீயா” (இதுக்கு என்ன அர்த்தம்) – கடல் ராணி

      – “சோனா”-ன தங்கம். அப்போ “சோனாபரீயா”-ன தங்கத்தின் மேல் பிரியம் உள்ளவல்னுதான அர்த்தம்?

  6. “முந்தைய ரகுமான் படங்களை ஒப்பிடும் போது சில இடங்களைத் தவிர ஓகே ரகம் தான்”
    நானும் இதைதான் நினைத்தேன், குறிப்பாக மின்சார கனவு படத்தில் வரும் “அன்பென்ற மழையிலே” சர்ச் பாடல் அனைவர் மனதிலும் இடம் பிடித்தது, இந்த படத்தில் வரும் சர்ச் பாடல் நிறைய பேர் கவனிதுகூட இருக்கமாட்டார்கள்

  7. சூது கவ்வும்ல டாக்டர் தாதா சொல்ற மாதிரி கிளி ஜோசியன் எல்லாம் ரியல் எஸ்டேட் பண்ற மாதிரி கீரை விக்கறவன் எல்லாம் விமர்சனம் எழுதுனா இப்படி தான் இருக்கும்.( 4 வில்லு , 5 வேட்டைக்காரன், 6 குருவி, 7 ஜி , 8 வேலாயுதம் பார்க்க வைக்கணும் )ஒரு நல்ல படம் எடுத்த புடிக்காதா உனக்கு ….கமர்சியால் படமே இன்னும் எத்தன நாள் தான் பார்பிங்க… இந்த மாதிரி நல்ல படமும் பாருங்க…….

  8. இந்த படம் பாக்கணும் நு தோணவே இல்லை தல
    பதிவு நல்லா இருக்கு
    – அருண்

  9. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @கமலக்கண்ணன் நீங்க சொன்னதுக்கு அப்புறம் யோசித்துப் பார்த்தேன் திரையரங்கில் இருந்த பெரும்பாலானோர் வயசானவங்க தான் போல 🙂 ஏனென்றால் எல்லோரும் என்னை மாதிரி நிலை ல தான் இருந்தாங்க 😉

    பைங்கிளிக்காக படத்தையே எல்லாம் சூப்பர் னு என்னால் சொல்ல முடியாது.. பைங்கிளி வேண்டும் என்றால் சூப்பர் என்று சொல்லலாம் 🙂

    @இந்துமதி நீங்க சொல்ற மாதிரி துள்ளுவதோ இளமை க்கும் தற்போதையே நிலைக்கும் சம்பந்தமே இல்லை.

    என்னது சுள்ளான் பார்த்து ரசிகரா! அது சரி! தனுஷ் நடிப்பில் எனக்கு புதுப்பேட்டை தான் பிடித்த முதல் படம் அதன் பிறகு பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன.

    ரஜினியின் மருகன் என்பதால் ரசிகரா!! விட்டா ரஜினிக்கு சிங்கப்பூரின் நவீன தந்தை லீ குவான் யூ பிடிக்கும் என்பதால் தான் நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் என்று சொல்வீங்க போல 🙂 என்னை விட ரஜினியை அதிகம் நீங்க தான் நினைத்துட்டு இருக்கீங்க. ரஜினி எனக்கு பிடிக்கும் அதற்காக அவருக்கு பிடிப்பதெல்லாம் எனக்கும் பிடிக்க வேண்டும் என்பதல்ல.

    இந்துமதி நான் ரஜினி தவிர ஏகப்பட்ட விஷயங்கள் எழுதுகிறேன் ஆனால், நீங்க ரஜினியை வைத்தே என்னை பேசிட்டு இருக்கீங்க. இதில் இருந்து வெளியே வாங்க.

    @சுபாஷ் நன்றி 🙂

    @Nithy உண்மை தான்.

    @ராஜ் – SG உங்களுக்கு பெட்ரோமாக்ஸ் லைட் வைத்து இருக்கிறவங்க தான் விமர்சனம் எழுதணுமா!… இந்த பந்தம் கொளுத்தறவங்க எழுதுனா முடியாதா! 🙂

    இந்த “நல்ல” படம் பார்த்ததால் தாங்க எழுதி இருக்கேன்..! உங்களுக்கு பதில் 2010 லியே கூறி விட்டேன். நேரம் இருந்தால் படிங்க. https://www.giriblog.com/commercial-movies/

    BTW நல்ல படம் எடுத்தா பிடிக்கும் ஆனால், நல்ல படம் என்ற பெயரில் திரைக்கதையும் கதையும் இல்லாத படத்தை பிடிக்காது. படம் பார்கிறவன் தலையில மிளகாய் அரைச்சா சுத்தமா பிடிக்காது.

    @அருண் 🙂

  10. இந்த மாதிரி different ஸ்டோரி இருக்குற கதைனா பிடிக்கும். நீங்க சொல்றதபார்த்தா, படம் அப்படி ஒன்னும் மொக்க மாதிரி தெரியல. போய் பாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!