கூகுளின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி!

14
gmail ஜிமெயில் தகவல் திருடப்படுகிறதா?!

பாதுகாப்பு விசயத்தில் கூகுள் எப்போதும் முன்னணியில் இருக்கிறது. தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் வசதி இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி! Image credit

இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி

கூகுள் / ஜிமெயில் உள்ளே நுழையும் போது நாம் கடவுச்சொல் (Password) கொடுப்பது வழக்கமான ஒரு விஷயம் ஆனால், இதை எளிதாக உடைத்து நமது கணக்கை ஹேக் செய்து முடக்கி விடுகிறார்கள்.

இதனால் மின்னஞ்சல் சேவை மட்டுமல்ல பல கணக்குகளை இழந்து விடுகிறோம் காரணம் கூகுள் Single Sign on முறையில் இயங்குகிறது.

அதாவது Docs, Analytics, Blogger, Search, gmail, Calendar, You Tube, Google Photos  என்று அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு விடும்.

ஒரு கடவுச்சொல் ஆனால், நாம் இழப்பது எத்தனை பாருங்கள்!

Read : “ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி?” .

இதனால் கூகுள் கணக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதைக் கூகுளும் நன்கு உணர்ந்துள்ளது.  

எனவே தான் அடிக்கடி தனது பாதுகாப்பு முறையில் மாற்றம் செய்து வருகிறது தற்போது செய்து இருப்பது அட்டகாசமான சேவை ஆகும்.

நீங்கள் வழக்கமாகக் கொடுக்கும் கடவுச்சொல்லை கொடுத்த பிறகு உங்களுக்கு SMS ல் இன்னொரு code வரும் அதையும் கொடுத்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.

இதன் மூலம் மற்றவர்கள் நுழைவது தடுக்கப்படும். சுருக்கமாகக் கூறினால் வங்கிக் கணக்கில் நுழைவதற்கு ஒரு சில வங்கிகள் இதைப்போல முறையைப் பயன்படுத்துகின்றன.

கட்டாயமா?

இல்லை. விருப்பமானவர்கள் வைத்துக் கொள்ளலாம், வேண்டாம் என்பவர்கள் பழைய முறையையே தொடரலாம்.

எப்படிச் செயல்படுத்துவது?

கூகுள் கணக்கின் Manage Your Account சென்றால் பின்வரும் படத்தில் உள்ளது போலச் செயல்படுத்த வசதி இருக்கும், க்ளிக் செய்து  செயல்படுத்தலாம்.

மொபைல் தொலைந்து விட்டால் என்ன செய்வது?

இதற்காகவே கூகுள் Backup mobile வசதி கொடுத்துள்ளது.

உங்களுடைய இன்னொரு மொபைல் எண்ணை அல்லது உங்களது நம்பகமான நபரின் மொபைல் எண்ணை இதில் பதிவு செய்து கொள்ளலாம்.

மிகவும் சிறப்பான வசதியாகும். ஒரு மொபைல் இல்லையென்றாலும் இன்னொரு மொபைல் மூலம் நாம் code பெற முடியும்.

இதனுடன் Backup code என்ற வசதியையும் கொடுத்துள்ளது. (10) Code களை நாம் பிரின்ட் செய்து வைத்துக்கொண்டால், இரண்டு மொபைலும்  இல்லாத நேரங்களில் இதைப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் மூன்று  Backup வசதி (2 மொபைல் மற்றும் Print out) நமக்குக் கிடைக்கிறது.

Print out நாம் எத்தனை முறை வேண்டும் என்றாலும் உருவாக்கிக் கொள்ளலாம். தொலைந்து விட்டது என்று கவலைப்பட வேண்டியதில்லை.

ஒவ்வொரு முறையும்  SMS code பெற்று நுழைய வேண்டுமா?

தேவையில்லை. நீங்கள் பயன்படுத்தும் கணிப்பொறியில், திரும்பக் கேட்க வேண்டாம் என்று சேமிக்க முடியும்.

எனவே, அடிக்கடி இதைப்போலச் செய்ய வேண்டுமே என்று கவலைப்பட வேண்டியதில்லை.

இந்த வசதியைக் கூகுள் முதலில் Google Apps பயனாளர்களுக்கு மட்டும் கொடுத்து இருந்தது. தற்போது இதை அனைவருக்கும் விரிவு படுத்தியிருக்கிறது.

இந்த வசதியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

14 COMMENTS

  1. புதுமையான பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணே 🙂

  2. Thanks giri for sharing useful information. After watching VTV, I’ve become die hard fan of Gowtham. Let’s see how’s directed NNN. Hope it won’t be பதேடிக்.

  3. Thanks giri for sharing useful information. After watching VTV, I’ve become die hard fan of Gowtham. Let’s see how’s directed NNN. Hope it won’t be pathetic.

  4. //தொழில்நுட்ப பதிவுகளை எழுதும் போது கூகுளை பாராட்டி எனக்கு சலிப்பே வந்து விட்டது எத்தனை முறை தான் பாராட்டுவது என்று இது எப்படி இருக்கு என்றால் ஒரு சிலர் எது எழுதினாலும் ரொம்ப நல்லா எழுதுவாங்க அவர்களை நாம் எத்தனை முறை தான் நன்றாக எழுதறீங்க என்று பாராட்டுவது அது மாதிரி தான்.//

    unamai .. ungkal itukai arumai. vaalththukkal

  5. ஏற்கனவே செய்து விட்டேன் என்றாலும் நீங்கள் சொல்லியிருக்கும் விதம் ரொம்ப எளிதாக இருக்கு கிரி

  6. சித்ரா, மாணவன், Breeze, மதுரை சரவணன், அருண், லோகன் மற்றும் ஜமால் வருகைக்கு நன்றி

    @சித்ரா 🙂 உஷாரா சொல்லிட்டீங்க! எல்லோரும் நடுநிசி நாய்கள் படத்தை போட்டு காய்ச்சி எடுத்துட்டு இருக்காங்க. ஹி ஹி நாங்க சிங்கம்ல கண்டிப்பா பார்ப்போம்.

    @Breeze நீங்க VTV நினைப்புல இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் 😉 எல்லோரும் கண்டபடி திட்டிட்டு இருக்காங்க. உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியல.. நான் இன்று செல்கிறேன்.

    @ஜமால் நானும் செய்து விட்டேன்.. கொஞ்ச நாள் பயன்படுத்திய பிறகு தான் எப்படி இருக்கிறது என்று கூற முடியும்.

  7. //எல்லோரும் நடுநிசி நாய்கள் படத்தை போட்டு காய்ச்சி எடுத்துட்டு இருக்காங்க. // ஆமா இவங்க தான் சினிமாவ கண்டுபிடிச்ச மாதிரி !!! நீங்க பாத்துட்டு எழுதுங்கண்ணே !!!

  8. ரொம்ப நாள் கழிச்சு உங்க ப்ளாக் பக்கம் வர்றேன். வழக்கம் போல பதிவு அருமை.

    இப்புடியே எழுதிகிட்டே இருந்தா… அப்புறம் கூகுல் நிலைமை தான் உங்களுக்கும்.

    அப்போ அப்போ கொஞ்சம் மொக்கை பதிவும் போடுங்கள்… குறைந்த பட்சம் அஞ்சு மைனஸ் ஒட்டு விழுற மாதிரி…

  9. கிரி அண்ணே …உங்களுடய ரெட்டை அடுக்கு பாதுகாப்பு பற்றி படித்தேன் ரொம்ப அருமை… நடுநிசி நாயகன் பாக்குரங்குவளுக்கு இந்த பாதுகாப்பு கெடைக்குமா…ப்ளீஸ் கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள்…..அன்பு தம்பி சிவா

  10. @தினேஷ் நன்றி 🙂

    @சிவா டேய்! அது நடுநிசி நாய்கள் டா நாயகன் இல்லை.. உன்னை முதல்ல இந்த நாயை விட்டு கடிக்க விடனும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!