சில மாதங்கள் முன்பு திமுக பாராளுமன்ற உறுப்பினர் ‘ஆர் எஸ் பாரதி’ ஊடகங்களைக் கடுமையாக விமர்சித்து இருந்தார். Image Credit
ஊடகம் தொடர்பாகச் சர்ச்சைகளை எழும் போதெல்லாம் இவர் பேசியதை குறிப்பிட்டு மக்கள் விமர்சிப்பது வழக்கமானது.
ஆர் எஸ் பாரதி திட்டியது தவறே இல்லை
மத்திய அரசு சீனாவின் அடாவடி செயல்களுக்காக 59 செயலிகளுக்குத் தடை விதித்தது. இதில் பிரபலமான செயலியான TikTok மிகவும் பாதிக்கப்பட்டது.
இந்திய ஊழியர்கள் சிரமப்படுகிறார்கள், இதை நம்பியுள்ள பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்து வந்தது. தற்போது ஒருபடி மேலே போய் TikTok சீன செயலியே கிடையாது என்று கூறியுள்ளது.
காரணம், TikTok செயலிக்கு இந்தியா மிகப்பெரிய வியாபார சந்தை. எனவே, தடையால் தினமும் பல ஆயிரம் கோடி நட்டத்தைச் சந்தித்து வருகிறது.
இதனுடைய பங்கு மதிப்பும் குறைந்து வருகிறது.
இதன் மீதான தடை நீக்கம் செய்யப்படும் என்றாலும், எப்போது செய்யப்படும் என்ற உறுதியற்ற நிலை காணப்படுகிறது.
பலர் இத்தடையால் மகிழ்ச்சி அடைந்ததாகச் செய்திகளில் வந்தது.
காரணம், இதற்கு முக்கியத்துவம் கொடுத்து லைக் மற்றும் பாராட்டுகளுக்காகப் பலர் இதில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
இதனால், தற்கொலை, குடும்பங்களில் சச்சரவு, மணமுறிவு என்று மிக மோசமான சூழ்நிலையாக உள்ளது. பெண்களே இச்செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதைவிட முக்கியமாக, TikTok செயலி என்பது ஆபாசத்தளம் போல மாறி வருகிறது. பெண்கள் பிரபலத்துக்காக எல்லை மீறிச் சென்று கொண்டு உள்ளார்கள்.
TikTok தடை நீக்கக் கோரிக்கை
தற்போது TikTok பயன்படுத்தியவர்கள் பலர் TikTok தடையை நீக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்று செய்திகளில் கூறப்பட்டது.
தந்தி தொலைக்காட்சி ஒருபடி மேலே போய் GP முத்து என்பவர் TikTok தடையை நீக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கோரிக்கை வைத்துள்ளார் என்று அதைச் செய்தியாகப் போட்டுள்ளது.
பலரும் கருத்துப்பகுதியில் காறித்துப்பியுள்ளனர். எதை எதைத் தான் செய்தியாகப் போடுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.
காணொளி ஊடகங்கள்
அச்சு ஊடகத்தில் செய்தி ஊடகங்கள் இருந்தவரை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது ஆனால், காணொளி ஊடகமாக என்று மாறியதோ அன்று பிடித்தது மக்களுக்குச் சனி.
TRP க்காகவும், ஹிட்ஸ்காகவும் ஒவ்வொரு தொலைக்காட்சியும் கண்டதையும் செய்தியாகக் கொடுத்து, விவாதித்து மக்களின் மனநிலையையே மாற்றி விட்டார்கள்.
செய்தி நிறுவனங்களுக்குச் செய்தி கிடைக்காததால், எதையாவது கொடுத்து ஆக வேண்டிய கட்டாயத்தில் ஊருல இருக்குற எல்லாத்தையும் ஒளிபரப்பி, பேட்டி எடுத்துப் போட்டு விடுகிறார்கள்.
ஒருமுறை தொலைக்காட்சியில் வந்தால், தங்களைப் பிரபலமாகக் கருதிக்கொள்ளும் இவர்கள் அடிக்கும் கொட்டம் சகிக்க முடியவில்லை.
தன்னை மிகப்பெரிய ஆளாகக் கற்பனை செய்து பேசுவதும், அறிக்கை விடுவதும், சமூக ஊடகங்களில் காணொளி வெளியிடுவதும் என்று நாறடிக்கிறார்கள்.
இதை ஊடகங்களும் பெரிதுபடுத்தி எழுதி மக்களிடையே கொண்டு செல்கிறார்கள்.
தந்தி போன்ற ஊடகங்களும் திருந்தப் போவதில்லை, அந்தச் செய்திகளுக்கு ஆதரவு கொடுக்கும் மக்களும் திருந்தப்போவதில்லை. ச்சை!
தொடர்புடைய கட்டுரைகள்
ஊடகத்துக்கு ஆர் எஸ் பாரதி ‘பொளேர்’
“Tik Tok” ஏற்படுத்தப் போகும் புயல்!