Kumbalangi Nights (2019 மலையாளம்) | God’s Own Country

4
kumbalangi nights

பெற்றோர் துணையில்லாத நான்கு சகோதர்கள். அவர்களுக்குள் நடைபெறும் சண்டை, அன்பு அதோடு இவர்கள் தொடர்புடைய சில கதாப்பாத்திரங்கள். இறுதியில் என்ன ஆகிறது என்பதே Kumbalangi Nights கதை. Image Credit

Kumbalangi Nights

மிகச்சாதாரணக் கதை, ஓரிரு இடங்களிலேயே படத்தை முடித்து விட்டார்கள். படத்தில் வரும் இடங்களே மொத்தமே ஐந்து / ஆறு தான் இருக்கும்.

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள். எந்த மிகை நடிப்பும் இல்லாமல், இயல்பாக வந்து செல்கிறார்கள்.

மூத்த அண்ணனாக வரும் Soubin Shahir (இவரைப் பெரும்பாலான மலையாள படங்களில் காண்கிறேன்) தம்பிக்குக் காரியம் ஆக வேண்டும் என்பதால், தன்னை அண்ணா! என்று அழைக்க நெருக்கடி கொடுக்கும் இடம் சுவாரசியம் 🙂 .

God’s Own Country

படம் பார்த்தால், கேரளாக்கு போய்டலாமா? என்று தோன்றாமல் இருந்தால் வியப்பே!

மிக எளிமையான வாழ்க்கை, சுற்றிலும் தண்ணீர், பசுமை என்று அசத்தலாக உள்ளது.

பசிக்கிறது என்றால், வீட்டை விட்டு வெளியே வந்து ஆற்றில் (Backwater) ஒரு மீனைப் பிடித்துக் குழம்பு வைத்துச் சாப்பிட்டு விடலாம் 🙂 .

படத்தில் காட்டப்படும் இடங்கள் மிகச் சொற்பமே என்றாலும், கேரளாவில் சுற்றிக்கொண்டு இருந்த உணர்வைத்தரும் ஒளிப்பதிவு.

ஏதாவது ஒரு காட்சி என்று இல்லாமல், படமும் முழுக்கக் கேரளாவின் (அப்பகுதியின்) அழகை நமக்கு அள்ளித்தருகிறது. அப்படியொரு பளிச்சென்று, வண்ணமயமாக.

ஃபஹத் பாசில்

படத்தில் குறிப்பிட வேண்டிய கதாப்பாத்திரம் ஃபஹத் பாசில்.

அவருடைய முதல் காட்சியிலேயே நமக்கு ஒரு சந்தேகத்தைக் கொடுத்து, இவர் கொஞ்சம் விவகாரமானவரோ என்ற எண்ணத்தைத் தோன்ற வைத்து விடுகிறார் 🙂 .

கோபமாக வந்து, சட்டென்று சிரிப்புக்கு மாறி நம்மைத் தலை சுற்றலில் விடுகிறார்.

எப்படித்தான் இப்படி அட்டகாசமாக நடிக்கிறாரோ! வியப்பாக உள்ளது. படத்துக்குப் படம் இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் நடிக்கிறார்.

மீசையைச் சரி செய்து கொண்டு, தன்னை பெருமையாக நினைத்துச் சிரித்து ‘ரேமண்ட்’ விளம்பர ஸ்டைலில் ‘I’m a complete man‘ என்று கூறுவது செம.

கதாப்பாத்திரங்கள்

தமிழ் கதாப்பாத்திரமாக வந்து செல்லும் நபராக வருகிறார் ரமேஷ் (காலா படத்தில் கேமராமேனாக, ஓ! மை கடவுளே படத்தில் விஜய்சேதுபதி கூட வருபவர்).

தமிழ் பேசுகிறார், அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.

நான்கு சகோதரர்களில் ஒருவரான Shane Nigam காதலியான Anna Ben (Helen படத்தில் வருபவர்) மிக இயல்பான நடிப்பு.

இவரையெல்லாம் அப்படியே வந்துட்டு போமான்னு சொல்லிடுவாங்க போல.

இவர் Shane Nigam உடன் தீவிலிருந்து கிளம்பும் போது ‘அப்படியே (Plastic) Water Bottle எடுத்துட்டு வந்துடு‘ என்று கூறுவார்.

சாதாரணமான வசனம் ஆனால், இயற்கையை சிதைக்க கூடாது என்ற எண்ணம் இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது.

வாய்பேசாத நபரும், கடைசித் தம்பியும் நடிப்பு என்றே சொல்ல முடியவில்லை, குறிப்பாகக் கடைசி தம்பி அட்டகாசம், முக்கியமாக அவன் சிரிப்பு.

இசை மிகப்பெரிய வெற்றி, மலையாளப்படங்களில் இரைச்சல் இல்லாத இசையாக உள்ளது. இப்படத்திலும் பின்னணி இசை, பாடல்கள் எல்லாமே மிகச்சிறப்பு.

ரசனைக்காரர்கள்

நம்ம ஊருல எடுத்தால், ஒரு வாரம் ஓடுவதே சிரமம் ஆனால், இவர்கள் சர்வ சாதாரணமாக இதுபோலப் படங்களை எடுக்கிறார்கள், வெற்றியும் பெறுகிறார்கள்!

இப்படத்தின் தயாரிப்பாளர் ஃபஹத் பாசில் என்பது குறிப்பிடத்தக்கது. ₹6.5 கோடியில் படத்தை எடுத்து ₹40 கோடி வசூலித்துள்ளார்கள். இயக்குநருக்கு முதல் படமாம்!

Kumbalangi Nights படத்தை நண்பர்கள் பாபு, விஸ்வநாத், யாசின் என்று பலர் பரிந்துரைத்தார்கள்.

அதிலும் இப்படத்தைப் பற்றித் தவறாக எழுதினால், பாபு என்னை ஆள் வைத்து அடிக்கத் திட்டமிட்டு இருந்ததாகச் சிங்கப்பூரில் இருந்து இரகசிய தகவல் கிடைத்ததால், எதுக்கு வம்பு என்று அடக்கி வாசித்துள்ளேன் 😀 .

அனைவரையும் இப்படம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். அழகான, அமைதியான, சுவாரசியமான, இயல்பான படமாக உங்களை நிச்சயம் கவரும் என்று நம்புகிறேன்.

Amazon Prime ல் உள்ளது.

Directed by Madhu C. Narayanan
Produced by Fahadh Faasil, Nazriya Nazim, Dileesh Pothan, Syam Pushkaran
Written by Syam Pushkaran
Starring Shane Nigam, Soubin Shahir, Fahadh Faasil, Sreenath Bhasi, Mathew Thomas, Anna Ben
Music by Sushin Shyam
Cinematography Shyju Khalid
Edited by Saiju Sreedharan
Release date 7 February 2019
Running time 135 minutes
Country India
Language Malayalam

Read : Trance (2020 மலையாளம்) சுவிசேஷ கூட்டங்கள்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. Ji…. kalakuteenga… and mikka nandri for watching tis ji… This movie is in my top 10 favorite movies ever… Ellaa charactersum chumma tharamaana characters ji… best one ofcourse shaaji and ‘The Complete Man’… Its certainly one of the best movies I have seen in recent times ji… Music & BGM is pure dope… neraya sollanum ji, but epdi solrathunnu theriyala ji… but romba nandri ji for watching and writing a review… next waiting for PL ji…

  2. @பாபு கேரளாக்கு போயிடுவோம் ஜி 🙂 . Paatal Lok பரிந்துரைக்கும் மிக்க நன்றி ஜி

  3. ஹலோ சார் நான் உங்கள் எல்லா பதிவுகளையும் விடாமல் படித்துவிடுவேன். அதுவும் சினிமா விமர்சனங்களைப் படித்து நான் பார்த்த சினிமாக்களும், வெப் சீரியல்களும் அதிகம். தயவுசெய்து எம் மெக்ஸ்ஸில் உள்ள மிதுனம் பார்த்து ரசியுங்கள். உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.

  4. சார் கிரி போதும் 🙂 . நீங்கள் பார்க்கும் அளவுக்குப் பரிந்துரைகளைக் கொடுக்கிறேன் என்பது மகிழ்ச்சி 🙂 .

    கண்டிப்பாக மிதுனம் முயற்சிக்கிறேன் சார். இந்தப்படத்தை சொல்றீங்களா? https://en.wikipedia.org/wiki/Mithunam_(2012_film)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!